Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 27

மூர்கனின் காதலி CH 27

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 27

எல்லாரும் விஷ்வாவோட பங்களா உள்ள போனாங்க. வெளியில இருந்து பார்க்கும் போது எவ்ளோ பிரம்மாண்டமா இருந்துச்சோ, அதே மாதிரி உள்ள போய் பார்த்தா, ஒரு நல்ல ரசனை கொண்ட ஓவியனோட கைவண்ணம் போல ஜொலிச்சுது அந்த பெரிய பங்களா.

அங்க இருந்த பெரிய ஹாலுக்குள்ள போன வெற்றி உட்பட, மேகாவோட குடும்பத்துக்காரங்க எல்லாருக்கும், “இவ்ளோ பெரிய மாளிகையில ராணி மாதிரி வாழ நம்ம வீட்டுப் பொண்ணுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு. அத நாமளே தடுக்கணுமா??”ங்கிற எண்ணம் ஒரு நிமிஷமாவது வந்துட்டுப் போகாம இல்ல.

ஆனாலும், “பணக்காரனா இருந்தா உடனே நம்ம வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமா? அப்புறம் நம்ம குடும்பத்தோட மானம் மரியாதை எல்லாம் என்ன ஆகுறது? ஊருக்குள்ள ஒருத்தனும் நம்மள மதிக்க மாட்டான். பணத்துக்காக ஆசைப்பட்டு, வேறொருத்தனுக்கு நிச்சயித்த பொண்ணை இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டான்னு தப்பா பேச மாட்டாங்களா?”ன்னு யோசிச்சு, அந்த எண்ணத்தைக் கைவிட்டாங்க.

நடுவுல இருந்த சோஃபாவுல உக்காந்த விஷ்வா, மேகாவையும் இழுத்துத் தன்ன பக்கத்துல உக்கார வச்சுட்டு, “உட்காருங்க… ஏன் நின்னுட்டு இருக்கீங்க? ஏதாவது பனிஷ்மென்ட்டா?”ன்னு கிண்டலா கேட்டான்.

அவனைப் பார்த்து முறைச்சுட்டே காளீஸ்வரனும், வெற்றியும், முத்துவும் அவனுக்கு எதிர்த்த சோஃபாவுல உக்காந்தாங்க. மேகாவோட முகத்தையே உன்னிப்பா பார்த்த முத்து, “நீ ஏன் ரொம்ப பயந்த மாதிரி இருக்க? எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே! அப்புறம் ஏன் எங்ககிட்ட இருந்து எதையோ மறைக்கிற மாதிரி திருதிருன்னு முழிக்கிற?”ன்னு கரெக்டா கேட்டான்.‌

“நான் என்ன பண்ணாலும் எப்பவும் இந்த முத்து அண்ணன் மட்டும் எப்படித் தான் கரெக்டா கண்டுபிடிக்கிறாரோ தெரியல. இவங்க, நான் பிரஸ் மீட்ல சொன்னதெல்லாம் பொய்னு கண்டுபிடிச்சா என்ன பண்றது?”ன்னு நினைச்ச மேகா, “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா. திடீர்னு மீடியால அப்படி எங்க லவ் ஸ்டோரிய சொல்ல வேண்டிய நிலைமை வரும்னு நான் எதிர்பார்க்கல. இப்போ என்னால நம்ம வீட்ல நிறைய பிரச்னை வந்துடுச்சு. அதான் கஷ்டமா இருக்கு. சாரி அண்ணா”ன்னு சொன்னா.

“பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்போ நீ சாரி கீரின்னு சொன்னா எல்லாம் சரியாயிடுமா? உன்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சு, இங்க வேலைக்கு அனுப்பின நாங்க எல்லாம் பைத்தியக்காரனுங்களா? என்ன படிக்க வச்ச திமிருடி உனக்கு. உன்ன பன்னெண்டாவதோட நிறுத்தி, வீட்டோட கடன்னு போட்டுருக்கனும். சரி… பெத்த அம்மா போனதுக்கு அப்புறம், அம்மா மாதிரி நினைச்சு இந்தப் புள்ளையை ஆசையா வளர்த்தோமேன்னு, உன் சந்தோஷத்துக்காக நாங்க எல்லாமே செஞ்சோம்ல? அதுக்கு எங்களை செருப்பால அடிக்கிற மாதிரி எல்லார் முன்னாடியும் வச்சு அசிங்கப்படுத்திட்டல்ல!”ன்னு காளீஸ்வரன் மேகாவை எரியுற மாதிரி பார்த்துட்டு கோபமா சொன்னார்.

அதனால கலங்கின மேகா, விஷ்வாவோட கைய விட்டுட்டு ஓடிப் போய் அவர் கால்ல விழுந்து, “என்ன மன்னிச்சிடுங்க அண்ணா. இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல. எல்லாமே என்ன மீறி நடந்துருச்சு. இப்போ உங்ககிட்ட மன்னிப்பு கேட்குறதைத் தவிர என்னால வேற எதையும் பண்ண முடியாது. உங்களை ஏமாத்தணும்னு நான் எப்பவும் நினைக்கல. தயவுசெஞ்சு என்னைத் தப்பா நினைக்காதீங்க!”ன்னு அழுது கதறினா.

அமைதியாவே இருந்த காளீஸ்வரன், தன் பக்கத்துல உக்காந்திருந்த வெற்றியோட தோள்ல இடிச்சு, “இன்னும் என்ன டா பார்த்துட்டு இருக்க! சீக்கிரம் கட்டு!”ன்னு சைகை செஞ்சு சொன்னார்.

அதனால, “சாரி மேகா. நான் பண்றது தப்புதான். ஆனா, இனிமே இப்படி ஒரு சான்ஸ் கிடைக்குமானு தெரியல. எதுக்காகவும் நான் உன்ன மிஸ் பண்ண ரெடியா இல்ல!”ன்னு நினைச்ச வெற்றி, தன்னோட சட்டை பாக்கெட்ல ஒளிச்சு வச்சிருந்த தாலியை எடுத்து, மேகாவோட கழுத்துல கட்டப் போனான். அவங்களையே உன்னிப்பா கவனிச்சிட்டு இருந்த விஷ்வா, வேகமா எழுந்து “மேகா!”ன்னு சத்தமா கத்த, வெற்றி தனக்குத் தாலி கட்ட வர்றதை கவனிச்ச மேகா, “ஐயோ… என்ன மாமா பண்ற! வேண்டாம் ப்ளீஸ் இப்படி பண்ணாத!”ன்னு சொல்லிட்டு, அப்படியே தரையில உக்காந்தபடியே நகர்ந்து ரெண்டடி பின்னாடி போனா.

“அப்ப உனக்கு என்னப் பிடிக்காதா மேகா?”ன்னு கண்ணீரோட வெற்றி கேட்க, வேகமா எழுந்துபோய் அவன் கன்னத்துல ‘பளார் பளார்’னு மாறி மாறி அறைஞ்ச விஷ்வா, தொடர்ந்து அவனைத் தன்னோட ஷூவால உதைச்சும் அடிச்சும் தாக்கி, “நீ இப்படி எல்லாம் பண்ணா எப்படிடா அவளுக்கு உன்னப் பிடிக்கும்?”னு கோபமா கேட்டுட்டு, தன் இடுப்புல சொருகி வச்சிருந்த பிஸ்டலை எடுத்து வெற்றியோட நெத்தியில வச்சான்.

“சார் வேணாம் சார்! ஏதோ சின்னப் பையன் தெரியாம பண்ணிட்டான். விட்டுருங்க!”ன்னு முத்து சொல்ல, “எங்க வீட்டுப் பொண்ணுக்கு நாங்க முடிவு பண்ண மாதிரி கல்யாணம் பண்ணி வைக்கிறோம். அதுல உனக்கு என்னடா பிரச்னை? மரியாதையா எங்க வீட்டுப் பொண்ணை எங்க கூட அனுப்பி வச்சிடு”ன்னு விஷ்வாவை மிரட்டினார் காளீஸ்வரன். 

அதனால, “இவன் இருந்தானே இவளை இவனுக்கு மேரேஜ் பண்ணி வைப்பீங்க! நான் இவனை மேல அனுப்பி விட்டுறேன். நீங்க பார்சல் பண்ணிப் போகும்போது உங்க வீட்டுக்குத் தூக்கிட்டுப் போங்க!”ன்னு சொன்ன விஷ்வா, ட்ரிகரை அழுத்தப் போனான்.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured