அத்தியாயம் 26
விஷ்வா
முன்னாடி கேட் பூட்டி இருந்ததால, காளீஸ்வரனோட குடும்பத்தைத் தவிர, பயந்து ஓடிப்போனவங்க எல்லாம் தங்க உயிரைக் கையில பிடிச்சுகிட்டு, எந்தக் கேட்ல ஏறி உள்ள போகணும்னு ஆசைப்பட்டாங்களோ, அதே கேட் முன்னாடி, “டேய் பெரிய மனசு பண்ணி எங்களை விட்டுடுடா. இனிமே இந்தப் பக்கமே தெரியாமக்கூட வர மாட்டோம்.”ங்குற மாதிரி, விட்டாப் போதும்னு எல்லாரும் ஓடத் தயாரா நின்னுகிட்டு இருந்தாங்க.
“இங்க பாருங்க… இது எங்க குடும்பப் பஞ்சாயத்து. இதுக்குள்ள தேவையில்லாம அடுத்தவங்க தலையிடுறது எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. எங்களுக்குள்ள பேச வேண்டியத நாங்களே பேசித் தீர்த்துக்குறோம். அதனால, நீங்க எல்லாரும் எப்படி வந்தீங்களோ, அதே மாதிரி ஒழுங்கா வெளிய ஓடிப் போயிருங்க. இப்ப கேட் திறக்கும். நான் கரெக்டா பத்து எண்ணுவேன். நான் எண்ணி முடிக்கிறதுக்குள்ள எல்லாரும் இடத்தை காலி பண்ணிருக்கணும்.
நான் எண்ணி முடிக்கும்போது உள்ள எவன் இருந்தாலும், அவன் உயிரோட வெளிய போக முடியாது.”ன்னு மைக்கில சொன்ன விஷ்வா,
ரகுநாத்தைப் பார்த்து, “Open the gate..!!”ன்னு தன்னோட ஆட்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தான். அதனால கேட் திறக்கப்பட, “1… 2… 3… 4…!!”ன்னு அவன் எண்ண ஆரம்பிச்சுட்டான்.
பயந்துபோன எல்லாரும் பின்னங்கால் பிடரியடிக்க, தலைதெறிக்க வெளிய ஓடிப் போனாங்க.
அந்தக் கூட்டத்தோட கூட்டமா, உயிருக்குப் பயந்து மணிகண்டனும் ஓடிப் போயிருந்தான். அதனால, “நான் சொன்னதக் கேட்காம இவங்கள்லாம் நம்பிக் கூட்டிக்கிட்டு இங்க வந்தீங்கள்ல.. இப்ப என்னாச்சுன்னு பாருங்க… உங்க ஆருயிர்த் தம்பியே உங்கள விட்டுட்டு ஓடிட்டான்.
இவ்வளவு தான் அண்ணா இவங்க எல்லாம். நம்ம தங்கச்சி நமக்குத் தெரியாம இவரை லவ் பண்ணது தப்புதான். ஆனா, அதுக்காக உடனே அருவாவைத் தூக்கிக்கிட்டு, வெட்டுவேன் குத்துவேன்னு நம்மளும் இங்க வந்து நிக்கிறது மட்டும் சரியா..? நீங்க பெரியவரு அண்ணா. எதப் பண்ணாலும் நல்லது கெட்டதுன்னு யோசிச்சு நிதானமாப் பண்ணுங்க. நம்ம மேகாவோட வாழ்க்கையும் நல்லா இருக்கணும்ல..!”ன்னு காளீஸ்வரன் கிட்ட சொன்னான் முத்து.
நடக்குற எல்லாத்தையும் ஏதோ சினிமாவுல வர்ற சீனைப் பார்க்குற மாதிரி அப்படியே சிலையா உறைஞ்சுபோய் பார்த்துகிட்டு இருந்தா மேகா. ஆனா, அப்பவும் அவ விஷ்வாவோட கைய விடவே இல்லை. அவனும்தான். அதைக் கவனிச்ச காளீஸ்வரன் தன்னோட அத்த மகனான வெற்றிச்செல்வனைப் பாவமாப் பார்க்க, அவன் கண்களில் கண்ணீரோட சோகமா மேகாவையே பார்த்துக்கிட்டு இருந்தான்.
“டேய் வெற்றி… நீ என்ன டா சொல்ற..? இந்தச் சனியனை இங்கயே தலைமு ழுகிட்டுப் போயிரலாமா? இல்லை நம்மகூட வருதான்னு கேட்டுப் பார்க்கலாமா?”ன்னு காளீஸ்வரன் கேட்க, “என்ன மாமா இப்படிச் சாதாரணமாக் கேக்குற? அவ என் உசுரு மாமா. சின்ன வயசுல இருந்து, அவதான் எனக்குன்னு சொல்லிச் சொல்லித்தான் வளர்த்துவிட்டீங்க. இப்ப அவள விட்டுட்டு வரியான்னு கேட்டா… என்னால எப்படி முடியும்?”ன்னு அழுதுகிட்டே கேட்டான் வெற்றி.
அவனும் மேகாவைப் போலவே, அவரு தன் வீட்டுல வச்சு வளர்த்த பையன்ங்கிறதால, அவனை நினைச்சுக் கவலைப்பட்ட காளீஸ்வரன், ஏதோ ஒரு முடிவெடுத்தவரா, விஷ்வாவைத் தீர்க்கமாப் பார்த்தார். சேர்ல இருந்து எழுந்த விஷ்வா, “உள்ள வாங்க..!”ன்னு அவங்களைப் பார்த்துச் சொல்லிட்டு, அப்பவும் மேகாவோட கைய விடாம அவள இழுத்துக்கிட்டு உள்ள போனான். தன் குடும்பத்தாரைத் திரும்பிப் பார்த்தபடியே அவனோட போனா மேகா.
“வாங்க போலாம்..!”ன்னு சொன்ன காளீஸ்வரன், உள்ள போகும்போது, தன் பக்கத்துல வந்துகிட்டு இருந்த வெற்றிகிட்ட, யாருக்கும் தெரியாம ஒரு பொருளைக் கொடுத்து, “பத்திரமா வச்சுக்கோ..!”ன்னு மெல்லிய குரல்ல சொன்னார்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)