Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 25

மூர்கனின் காதலி CH 25

by Thenaruvi Tamil Novels
205 views

அத்தியாயம் 25 

திபுதிபுன்னு கையில அருவாளோட கொலைவெறியில 200 பேருக்கும் மேல வர்ற வழியில இருந்த எல்லாத்தையும் உடைச்சுக்கிட்டு மெயின் கேட்ல இருந்து என்ட்ரன்ஸ நோக்கி வந்துக்கிட்டு இருந்ததுனால, அந்த இடமே குலுங்குச்சு. இதுவரைக்கும் விஷ்வா அவங்களை ஏதாவது செஞ்சுடுவானோன்னு நினைச்சு பயந்துக்கிட்டு இருந்த மேகா, இப்போ அவங்க வெறிகொண்டு விஷ்வாவை நோக்கி வர்றத பார்த்து பயத்துல அவளுக்கே தெரியாம அவன் கைகளைப் பிடிச்சுக்கிட்டா.

ஓரக்கண்ணால பயத்துல நடுங்கிக்கிட்டு இருந்த மேகாவ பார்த்த விஷ்வா, தானும் ஆதரவா அவ கையப் பிடிச்சுக்கிட்டு, “எல்லாரும் உள்ள வந்துட்டாங்கன்னா, மெயின் கேட்ட க்ளோஸ் பண்ணிடுங்க”ன்னு ரகுநாத் கிட்ட சொன்னான். 

அத ரகுநாத் தன்னோட ஆளுங்க கிட்ட சொல்ல, அவங்க உள்ள நுழைஞ்சதும் மெயின் கேட் மூடப்பட்டுச்சு. அத கடைசியா வந்துக்கிட்டு இருந்த மேகாவோட அண்ணன் முத்து கவனிச்சுட்டு, “என்னமோ இவங்க எல்லாம் இப்படி கும்பலா போனா விஷ்வாவ ஈசியா காலி பண்ணிடலாம்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா நாமதான் வாலண்டியரா போய் சிங்கத்தோட குகையில சிக்கிருக்கோம்னு இவங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குதுன்னு தெரியல”ன்னு நினைச்சு கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு உள்ள போனான்.

வேகமா உள்ள ஓடி வந்த மேகாவோட அண்ணனோட ஆளுங்க எல்லாரும் இன்னும் கொஞ்ச மீட்டர் தூரத்த கடந்தா விஷ்வாவ நெருங்கிடுவாங்கங்கிற நிலையில, “நம்ம பசங்கள பொசிஷன்ல வந்து நிக்க சொல்லு”ன்னு தயாளனப் பார்த்து சொன்னான் விஷ்வா. தன் காதுல மாட்டிருந்த ப்ளூடூத் வழியா, “கம் ஆன் பாய்ஸ்… டேக் பொசிஷன்”ன்னு ஒரு கமாண்டருக்கே உரித்தான தோரணையில சொன்னான் தயாளன். அவன் சொல்லி தன் வாய மூடறதுக்குள்ள விஷ்வா உட்கார்ந்திருந்த இடத்தோட லெஃப்ட் அண்ட் ரைட் சைடுல இருந்து கருப்பு யூனிஃபார்ம்ல கையில மெஷின் கன்னோட வந்த ட்ரெயின்ட் புரொபஷனல் பாடிகார்ட்களோட கூட்டம் அவங்களைச் சுத்தி பாதுகாப்பு வளையம் மாதிரி நின்னுச்சு.

அவங்களுக்கு நடுவுல கையில தானும் ஒரு gun-ஐ வச்சுக்கிட்டு, அவங்களுக்கு முன்னால நின்னுக்கிட்டு இருந்தான் அரவிந்த்.

தன்னோட ப்ளூடூத் வழியா தயாளன்ட்ட, “மச்சான்… பாஸ் ஃபயர்ன்னு ஒரு வார்த்தை சொன்னா, அத்தனை பேரையும் சுட்டுத்தள்ள நாங்க ரெடியா இருக்கோம்”னு சொன்ன அரவிந்த் வானத்தைப் பார்த்து சுட்டான். அந்த டமால் டுமீல்ங்கிற துப்பாக்கி சுடும் சத்தத்த கேட்டும், தங்களுக்கு முன்னால ஆர்மி ஆபீஸர்ஸ் மாதிரி கையில துப்பாக்கியோட காவலுக்கு நிக்கிறவங்களப் பார்த்து பயந்து தொடர்ந்து முன்னாடி போக தைரியம் இல்லாம வந்த ஊர்க்காரங்க எல்லாரும் ஒரு நிமிஷம் ஸ்தம்பிச்சுப் போய் அப்படியே நின்னுட்டாங்க.

“அவனுங்க என்னடா பண்றாங்க?”ன்னு தயாளன் கேட்க, “பயத்துல ஸ்டன் ஆகி அப்படியே நின்னுட்டு இருக்காங்க!” என்றான் அரவிந்த்.

அந்த கூட்டத்துல இருந்த 40 வயசு மதிக்கத்தக்க ஆள் ஒருத்தன் “யோவ் என்னய்யா இது! படத்துல வர்ற மாதிரி ஒவ்வொருத்தனும் கையில பெரிய பெரிய துப்பாக்கியா வச்சுக்கிட்டு இப்படி நிக்கிறானுங்க! இப்படியெல்லாம் ஆளுங்க இருப்பாங்கன்னு நம்மள கூட்டிட்டு வரும்போது யாருமே சொல்லலையே!”ன்னு தன் பக்கத்துல இருந்தவன் கிட்ட சொல்ல, “அதான் பாரேன் சித்தப்பா! நம்மள வெளியூருக்கு கூட்டிட்டு வந்து மொத்தமா இவனுங்க கையில காவு கொடுக்க காளீஸ்வரன் ஐயா முடிவு பண்ணிட்டாரு போல! எனக்கு வேற அடுத்த மாசம் கல்யாணம். இவனுங்க துப்பாக்கில சுட்டு குண்டு படாத இடத்துல பட்டு அப்புறம் முதல்லக்கே மோசமா போயிடுச்சுன்னா, என் வாழ்க்கைதான் நாசமாப் போகும். இவங்க குடும்பப் பிரச்சினைக்கு நடுவுல நம்ம உசுரு போயிடும் போல…”ன்னு பயத்தோட சொன்னான் அந்த இளைஞன்.

அவங்களைப் போலவே அங்க இருந்த எல்லாரும் மரண பயத்துல கால் நடுங்க நின்னுக்கிட்டு இருக்க, காளீஸ்வரன் தன் குடும்பத்தினரோட அந்த கூட்டத்துக்குள்ள புகுந்து முன்னாடி போனார். அப்பவும் நிலவரத்தோட தீவிரத்த உணராம “டேய் இப்படி நீங்க எல்லாரும் கையில துப்பாக்கிய வச்சுக்கிட்டு வந்து நின்னா, நாங்க எல்லாரும் பயந்து அப்படியே ஓடிப் போயிடுவோமா? நாங்க எல்லாம் ரோஷக்காரனுங்கடா. செத்தாலும் சாவோமே தவிர உங்கள மாதிரி அசலுருக்காரனுங்களுக்கெல்லாம் நாங்க பயந்து ஓடற அளவுக்கு கூரில்லாத ஆம்பளைங்க இல்லடா”ன்னு தன் வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு மீசைய முறுக்கிச் சொன்னான்.

அவன் பக்கத்துல ஒரே எட்டுல போன அரவிந்த் தன் கையில இருந்த மெஷின் கன்ன மணியோட நெத்திப் பொட்டுல வச்சு, “அப்படியாண்ணே! அப்போ இத ஒரு அழுத்து அழுத்தி நான் உங்கள சுட்டுக் கொன்னாக்கூட நீங்க கவலைப்பட மாட்டீங்களா!”ன்னு நக்கலா கேட்டான். 

“என்ன டா பயமுறுத்திப் பாக்குறியா? இதுக்கெல்லாம் பயப்படறவன் இல்ல இந்த மணி. சுடுடா சுடு. இங்க சுடு… ஆனா இங்கே சுடு… இல்லனா இங்க சுடு… எங்க வேணாலும் சுடு. சுட்டுக் கொல்லுடா. எங்க கூடப் பொறந்தவ எங்க மொத்த மானத்தையும் வாங்கிட்டா. இதுக்கு மேல இந்த உசுர மட்டும் வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேன்? சுட்டுக் கொல்லு!”ன்ன மணி அந்த துப்பாக்கிய கையில பிடிச்சுக்கிட்டு தன்னோட கைகள்லயும் கால்கள்லயும் சுடச் சொல்லி அங்கும் இங்கும் அத ஆட்டினான்.

அதனால கடுப்பாகி “அண்ணன் ஆசைப்படும்போது… தம்பி செய்ய மாட்டேனா?”ன்ன அரவிந்த் படக்குன்னு அவன்கிட்ட இருந்து தன் துப்பாக்கியப் பிடுங்கி அவன் கால்களுக்கு நடுவுல தரையில சுட்டான். அதனால மணி, “டேய் இவன் நிஜமாவே சுடுறாண்டா!”ன்னு சத்தமா கத்திக்கிட்டு ஓட, எல்லாரும் பயந்து மெயின் கேட்ட நோக்கி ஓடுனாங்க. நடக்கிற எல்லாத்தையும் தன் போன்ல வர்ற லைவ் சிசிடிவி ஃபுட்டேஜ்ல பார்த்துக்கிட்டு இருந்த விஷ்வா, தன் முன்னாடி இருந்த பாடிகார்டுகளை ஓரமா விலகிப் போகச் சொன்னான்.

தொடரும்… 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured