Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 23

மூர்கனின் காதலி CH 23

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 23 

வேகமா பாத்ரூம்க்குள்ள போன மேகா, “ஐயோ இந்த ஆளுக்கு அறிவே இல்லையா..!! ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது பர்மிஷன் கேட்காம இப்படித்தான் ரூமுக்குள்ள வருவானா..?? நான் இருக்கிற டென்ஷன்ல இவன் வேற..!! இதே வேற நாளா இருந்து இவன் இப்படி எல்லாம் பண்ணியிருந்தா, இவன் யாரு, என்னன்னு எல்லாம் பார்க்காம வர கோபத்துக்கு அப்படியே அடிச்சு கைய காலை உடைச்சு விட்டிருப்பேன். இன்னைக்கு நான் சோகமா இருக்கிறதுனால அவன் தப்பிச்சிட்டான்.”ன்னு கண்ணாடிய பார்த்து புலம்பிக்கிட்டு இருந்தா.

அப்ப அவளுக்கு அந்தக் கண்ணாடில அவனும் அவளும் க்ளோஸா இருந்த நேரம் அப்படியே படமா ஓடுற மாதிரி இருக்க, “ச்சீ‌.‌..ச்சீ‌‌..ச்சீ‌‌..ச்சீ.. கருமம் கருமம். நான் அதெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்கக் கூடாது.”ன்னு சொல்லிட்டுத் தன் தலையை இடவலமா ஆட்டுனா. பின்னாடி, அவள் ரெடியாகிச் சின்ன தயக்கத்தோட தன் ரூமைவிட்டு வெளியே வந்தா. அப்போ அவளுக்கு ஃபோன் பண்ண மகேஷ், “கீழ வாங்க. சார் உங்களைச் சாப்பிடக் கூப்பிடுறாரு.”ன்னாரு.

“ஆமாம்.. இப்போ சாப்பாடு ஒண்ணுதான் குறைச்சல். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு நறுக்குன்னு அந்த ஆள நாலு கொஸ்டின் கேட்டா தான் எனக்கு மனசு ஆறும்.”ன்னு நினைச்ச மேகா, “வரேன் ப்ரோ.”ன்னு சொல்லி அந்த அழைப்பைத் துண்டிச்சிட்டு கீழ போனா. அங்க மத்தவங்களோட சேர்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்த விஷ்வா அவளைப் பார்த்துட்டு, “வந்து ஒக்காரு.”ன்னு கேஷுவலா சொன்னான்.

“அடப்பாவி.. திமிரு புடிச்ச நண்டு மண்டக்காரா..!! பண்றத எல்லாம் பண்ணிட்டு இப்ப ஒண்ணுமே நடக்காத மாதிரி என்ன சாப்பிடக் கூப்பிடுறியா..??”ன்னு நினைச்ச மேகா வேகமாப் போயி டைனிங் டேபிள்ல ஒக்காந்து, அதுல கமுத்தி வச்சிருந்த தட்டை ‘டங்’னு சத்தத்தோட நேரா வச்சா.

வேலை ஆட்கள் அவளுக்குச் சாப்பாடு பரிமாறுனாங்க. “ஓஹோ.. மேடமுக்குக் கோவம் வந்திருச்சோ..!!”ன்னு நினைச்ச விஷ்வா அவள்கிட்ட எதுவும் கேட்கல. “அவரே எதுவும் சொல்லாம இருக்கும்போது, நம்ம பேசினா நல்லா இருக்காது.”ன்னு நினைச்சு மத்தவங்களும் அவகிட்ட வாய் கொடுக்கல.

தன் கையில இருந்த சப்பாத்தியை விஷ்வான்னு நினைச்சு, புரோட்டோவப் பிசைற மாதிரி துண்டு துண்டாப் பிய்ச்சுப் போட்ட மேகா, அதுல ஒரு பிசை எடுத்துத் தன் வாயில போட்டு, நல்லா வெறி கொண்டு மென்னுட்டு, “ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது, அவ பெர்மிஷன் இல்லாம அவ ரூமுக்குள்ள போகக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா..??”ன்னு கோபமா கேட்டா. 

திமிரா “தெரியாது.”ன்னு ஒத்த வார்த்தையில பதில் சொன்னான் விஷ்வா.

அதனால எரிச்சலான மேகா சாப்பிடாம வேகமா எழுந்து நின்னுட, “யம்மா யம்மா கோச்சுக்காதம்மா. அவர் தெரியாதுன்னு சொன்னதை நீ தப்பா நினைச்சுக்காத. அவர் சொன்னது நிஜமாவே உண்மைதான். முன்ன பின்ன பொண்ணுங்ககூடப் பழகியிருந்தா தானே இதெல்லாம் அவருக்குத் தெரியும்..!! அவர் சாப்பிடக் கீழே வரும்போது, நீ இங்க இல்ல. நாங்க உன் ரூமுக்கு வந்து வெளியில நின்னு உன்னைக் கூப்பிட்டுப் பார்த்தோம். நீ எதுவுமே சொல்லல. அதனால மறுபடியும் நீ சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டியோன்னு நினைச்சுப் பயந்து தான் எங்ககிட்ட இருக்க கீயை வச்சு சார் உன் ரூமை ஓப்பன் பண்ணாரு. நோ பேட் இன்டென்ஷன்ஸ்.”ன்னு விஷ்வாவோட தரப்பு நியாயத்தை வேகமாச் சொன்னான் மகேஷ்.

“நான் பாத்ரூம்ல இருந்ததுனால இவங்க கூப்பிட்டது எனக்குக் கேட்கலை போல. எனக்காகத் தான் அவர் உள்ள வந்திருக்காரு. ச்சே.. அவர போயித் தப்பா நினைச்சுட்டோமே..!!”ன்னு நினைச்ச மேகா, அப்போதும் அவன் முகத்தைப் பார்க்க முடியாம அமைதியா மறுபடியும் டைனிங் டேபிள்ல ஒக்காந்து சாப்பிட ஆரம்பிச்சா.

இங்க நடக்குற எதுக்குமே தனக்கும் சம்பந்தமே இல்லைங்கிற மாதிரி இருந்தான் விஷ்வா.

எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டு இருக்க, அப்போ வேகமா உள்ள ஓடி வந்த செக்யூரிட்டி டீம் ஹெட் ரகுநாத், “சார்.. சார்.. மெயின் கேட் முன்னாடி கும்பல் கும்பலா கையில அரிவாளோட நாலஞ்சு லாரியில வந்து இறங்கி கும்பலா நின்னுக்கிட்டு உள்ள விடச் சொல்லிப் பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க சார். நம்ம ஆளுங்க அவங்களைக் கண்ட்ரோல் பண்ண முடியாம திணறிக்கிட்டு இருக்காங்க. வந்திருக்குறவனுங்க எல்லாம் சரியான காட்டுப் பயலுகளா இருக்கானுங்க சார். யாராலயும் அவனுங்களை கண்ட்ரோல் பண்ண முடியல.”ன்னு பதட்டத்தோட சொன்னான்.

அதைக் கேட்டுச் சாப்பிட்டுக்கிட்டு இருந்த மேகாவுக்கு பொரை ஏறிச்சு.

அதனால அவள் தன் நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டுச் சத்தமா ‘லொக் லொக்’னு இரும, அவள் தலையில லேசாத் தட்டுன விஷ்வா, “இத நான் பார்த்துக்கிறேன். நீ இங்கயே ஒக்காந்து சாப்பிடு.”ன்னு சொல்லிட்டுத் தன் தட்டுலேயே சாப்பாட்டோட கை கழுவினபடியே, “நான் அரேஞ்ச் பண்ணச் சொன்னதெல்லாம் ரெடியா இருக்கா..??”ன்னு கேட்டான்.

“அதெல்லாம் எப்பவோ ரெடி பாஸ். நம்ம எக்ஸ்பெக்ட் பண்ணதை விட இவங்க லேட்டாதான் வந்திருக்காங்க.”ன்னு மகேஷ் சொல்ல, நடக்கப் போற ஆக்‌ஷன் காட்சிக்கு எல்லாரும் ரெடியாகி வெளியில போனாங்க.

தானும் அரைகுறையா கை கழுவிட்டு வேகமா அவங்களைப் பின்னாடிப் போன மேகா, “என்ன அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணி இருக்கீங்க நீங்க..?? ப்ளீஸ் அவங்களை எதுவும் பண்ணிடாதீங்க விஷ்வா..!! வந்திருக்குறவங்க எல்லாரும் பார்க்கத் தான் ஒரு மாதிரி பயங்கரமா இருப்பாங்க. பட் எல்லாரும் ரொம்ப நல்லவங்க. அண்ட் அவங்க என்னோட சொந்தக்காரங்க.

பாதி பேர் என்னோட பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி, மாமா பசங்கன்னுதான் இருப்பாங்க. நான் அவங்ககிட்ட பேசுறேன். நீங்க கோபப்பட்டு அவங்களை எதுவும் பண்ணிடாதீங்க..!!”ன்னு அவசரமாச் சொன்னா.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured