Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 22

மூர்கனின் காதலி CH 22

by Thenaruvi Tamil Novels
263 views

அத்தியாயம் 22 

மேகா அப்பவும் அவனுக்குப் பதில் சொல்லல. அதனால எரிச்சலடைஞ்ச விஷ்வா, “இந்த ரூமோட கீயை எடுத்துட்டு வாங்கடா”ன்னு எரிஞ்சு விழ, “நான் போயி எடுத்துட்டு வரேன் பாஸ்” என்ற அரவிந்த் அங்கிருந்து வேகமா ஓடிப் போயி ரெண்டே நிமிஷத்துல கையில சாவியோட வந்தான்.

அதை வெச்சு கதவைத் திறந்த விஷ்வா உள்ளே போக, “ஒரு பொண்ணு தனியா இருக்கிற ரூமுக்கு நம்ம போனா நல்லா இருக்காது”ன்னு நினைச்சு மத்த ஆண்கள் எல்லாம் வாசலிலேயே நின்னுக்கிட்டாங்க. உள்ளே போன விஷ்வா அந்த விசாலமான அறை முழுவதும் அவளைத் தேடினான். மேகாவைக் காணல. பதட்டப்பட்ட விஷ்வா “எங்கே போய்த் தொலைஞ்சா இவ? என்ன மேரேஜ் பண்ணிக்க விருப்பமில்லாம தப்பிச்சு எங்கேயாவது ஓடிப்போயிட்டாளா? இல்ல, ஏதாவது தப்பா…”ன்னு யோசிச்சவனுக்கு, அந்த யோசனைக்கூட அவன் இதயத்தைக் கனக்கச் செஞ்சுச்சு.

அதனால அவன் மறுபடியும் ஒரு தடவை அந்த அறை முழுவதும் மேகாவைத் தேட, அழுது அழுது சோர்ந்து போயிருந்த மேகா தன்னை refresh பண்ணுறதுக்காகக் குளிச்சிட்டு பாத்ரூம்ல இருந்து ஒற்றைத் துண்டுடன் வெளியில வந்தா. அங்கே அவளோட அறையில விஷ்வாவை எதிர்பார்த்திருக்காத மேகா பயந்துபோய் “ஆஆஆ!!!”ன்னு கத்திக்கிட்டு எங்கேயாவது ஓடிச்சென்று தன்னை மறைச்சுக்க விரும்பி வேகமா அங்க இருந்து நகர்ந்தா.

அவளோட பாதங்கள் ஈரமாக இருந்ததால டைல்ஸ் தரையில அவளுக்குக் கால் வழுக்கிவிட, கீழே விழப் போனாள். அதைக் கவனிச்ச விஷ்வா ஓடிச்சென்று அவளைத் தாங்கிப் பிடிக்கிற பேர்ல, அவள் மேல மோதி அவளை இறுக்கமா அணைச்சுக்கிட்டு அவளுடன் சேர்ந்து தரையில விழுந்தான். அதனால மறுபடியும் மேகா “ஆஆஆ!!”ன்னு தன் இடுப்பைப் பிடிச்சுக்கிட்டு கத்த, அவள் உடலை மறைச்சுக்கிட்டு இருந்த ஒற்றைத் துண்டும் அவங்க ஆடுன ஆட்டத்துல கழண்டு விழுந்திருந்தது.

அதனால ஷாக் ஆன மேகா மறுபடியும் ஆஆஆன்னு கத்த தன் வாயைத் திறக்க, 

“ஏய் கத்தித் தொலைக்காதடி” என்ற விஷ்வா அவள் வாயைப் பொத்தினான். தொடர்ந்து மேகா அலறிக்கிட்டே இருந்ததால என்னானதோ ஏதானதோன்னு நினைச்சுப் பதறிப் போன வெளியில இருந்த ஆண்களின் கூட்டம் கோரசாக “என்ன பாஸ் அங்க சத்தம்!” என்று கேட்க, “ஒரு வெங்காயமும் இல்ல. முதல்ல போய்த் தொலைங்கடா இங்க இருந்து”ன்னு சத்தமா உள்ளே இருந்து கத்தின விஷ்வா மேகாவின் சிறிய ஆடையற்ற உடலை தன்னோட உடலுக்குள்ள மறைச்சுட்டான்.

“டேய் உள்ள ஒருவேளை ஏதாவது ரொமான்ஸ் சீன் நடக்குமோ! அதான் பாஸ் நம்மளைத் துரத்தி விடுறாருன்னு நினைக்கிறேன்”னு தயாளன் சொல்ல, “எது? நம்ம பாஸ்… அந்தப் பொண்ணு கூட ரொமான்ஸ் பண்றாரு! அதுவும் கல்யாணம்கூட ஆகாம! போடா லூசுப் பயலே… அவர் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு. நம்ப பாஸ் ஒரு பச்சக் குழந்தைடா”ன்னு விஷ்வாவுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தான் மகேஷ். 

“பச்சக் குழந்தை… You mean green baby!”ன்னு கிண்டலா அரவிந்த் கேட்க, “நீங்க எல்லாம் இப்படியே பேசிட்டு இருங்கடா. நீங்க வேணா பாருங்க… கரெக்டா இன்னும் ஒரு வருஷத்துல நம்ம ஜூனியர் விஷ்வா சார கண்டிப்பா பார்ப்போம்”னு உறுதியா சொன்னான் தயாளன்.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ நம்ம இங்க நின்னுட்டு இருக்குறதைப் பார்த்தா, அவர் நம்மளை அடிச்சே கொன்னுடுவாரு. அவர் வர்றதுக்குள்ள வாங்க ஓடிப் போயிரலாம்” என்ற மகேஷ் எல்லாரையும் அழைச்சுக்கிட்டுப் போய் இடத்தை காலி செஞ்சான்.

விஷ்வா கூட அத்தனை நெருக்கத்துல ஆடையின்றி இருக்கிறதுனால அசோகர்யமா ஃபீல் பண்ண மேகா வேகமா விஷ்வாவைத் தன்னிடமிருந்து விலக்கித் தள்ளிவிட்டு கீழே கிடந்த துண்டை எடுத்து தன் மேல சுத்திக்கிட்டவள், என்ன செய்யறதுன்னே தெரியாம அவனை ஒரு தடவை முறைச்சுட்டு மறுபடியும் வேகமா பாத்ரூம்க்குள்ளேயே போயிட்டா. அவள் இங்கே இருக்கும் வரை மத்தவங்க அவளை அப்படிப் பார்த்துடக் கூடாதுன்ற சிந்தனையில இருந்த விஷ்வா இப்போ அவள் போனதுக்கு அப்புறம் நடந்ததை நினைச்சுப் பார்த்து வெட்கப்பட்டான்.

ஆனால் அதெல்லாம் ஒரு செகண்ட்தான். அடுத்த கணமே “ச்சீ… அவசரப்பட்டு என்னடா பண்ணி வெச்சிருக்க விஷ்வா! இன்னொரு அஞ்சு நிமிஷம் வெளியேவே வெயிட் பண்ணிருந்தா, அவளே டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து டோர ஓப்பன் பண்ணி இருப்பா. அந்தக் கன்றாவிக் காட்சியை எல்லாம் பார்க்காம இருந்திருக்கலாம். நீ தேவையில்லாம ஹீரோவா மாறி அவளை எதுக்கு காப்பாத்த வந்த? இந்த ஸ்டோரில நீ அவளுக்கு ஹீரோவும் இல்ல வில்லனும் இல்ல. Just X or Y. So stay in your limits”ன்னு அவன் தனக்குத்தானே சொல்லிக்கிட்டு இருக்க, “இருந்தாலும்… இந்த ஃபீலும் ஒரு மாதிரி டிஃபரண்ட்டா நல்லாதான் இருக்கு”ன்னு நினைச்சு தனக்குள்ள சிரிச்சுக்கிட்டு அங்கிருந்து வெளியேறினான். 

தொடரும்… 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured