Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 21

மூர்கனின் காதலி CH 21

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 21 ‌

விஷ்வா கூட அவனோட பிரம்மாண்டமான பங்களாவுக்குப் போனா மேகா. ஆதித்யா கூட கடந்த ரெண்டு வருஷமாப் பழகியிருந்த மேகாவுக்கு இந்த ஆடம்பரங்கள் எல்லாம் ஒரு பெரிய விஷயமா தெரியல. நேராப் போயி ஹால்ல இருந்த சோஃபாவுல உக்காந்த மேகா, அவளோட ஹேண்ட் பேக்ல இருந்த மேக்கப் சாமான்களை எல்லாம் காஃபி டேபிள்ல வெச்சுட்டு, தன் ஃபோன்ல இருக்க செல்பி கேமராவை ஆன் பண்ணி மேக்கப் போட ஆரம்பிச்சா.

அவளைக் குறுகுறுன்னு பார்த்த விஷ்வா, “என்ன பண்ணிட்டு இருக்க நீ??” என்று கேட்க, “ம்ம்… பார்த்தா தெரியலையா? வரைஞ்சுட்டு இருக்கேன்”னு நக்கலா சொன்னா அவள். “ஓஹோ, இதுதான் Face Paintingஆ? இப்படித்தானே 10 கோட்டிங் பெயிண்ட் அடிச்சு உன்னை மாதிரி பொண்ணுங்க எல்லாம் அப்பாவிப் பசங்களை ஏமாத்துறீங்க!”ன்னு தானும் பதிலுக்கு விஷ்வா கேட்க, வேகமா எழுந்து நின்ன மேகா, “என்னைப்பத்தி பேசும்போது, என்னைப் பத்தி மட்டும் பேசுங்க. எல்லாப் பொண்ணுங்களையும் பத்தி உங்களுக்கு ரொம்பத் தெரிஞ்ச மாதிரி பொதுவா பேச வேண்டாம்.

எனக்கு மேக்கப் போடவே சுத்தமா பிடிக்காது. கார்ப்பரேட் கம்பெனில வேலை பார்க்கும்போது, presentableஆ இல்லைன்னா நல்லா இருக்காதேன்னு எப்பவுமே நான் லைட்டாதான் மேக்கப் போடுவேன். இன்னைக்கு நீங்க என் கன்னத்துல வரைஞ்சு வச்ச டிராயிங்கை யாரும் பார்த்துடக் கூடாதுல்ல? அதான் நீங்க சொன்ன மாதிரி எக்ஸ்ட்ரா கோட்டிங் அடிச்சு கவர் பண்ணிட்டு இருக்கேன்”னு கோபமாச் சொன்னா.

அவ கிட்ட பதில் பேச முடியாம வாயடைச்சுப் போன விஷ்வா, லிஃப்ட்டை யூஸ் பண்ணாமப் படிக்கட்டுல ஏறி மூணாவது தளத்துல இருந்த தன்னோட ரூமுக்குப் போனான். அவனை கவனிச்சிட்டு இருந்த மேகா, “என்ன இவரு… வீட்டுக்குள்ள லிஃப்ட்டை வெச்சுக்கிட்டு ஸ்டெப்ஸ்ல ஏறி போயிட்டு இருக்காரு! இவர் என்ன பண்ணாலும் டிஃபரண்டாதான்யா பண்றாரு!”ன்னு நினைச்சவள், ஃபோனைப் பார்த்து மறுபடியும் மேக்கப் போட ஆரம்பிச்சா.

அப்ப அவளோட ஃபோனுக்கு ஏதோ ஒரு தெரியாத நம்பர்ல இருந்து தொடர்ந்து மெசேஜ் வந்துகிட்டே இருந்தது. “ச்ச்ச்… என்ன இத்தனை மெசேஜ் வருது! அந்த நியூஸைப் பார்த்துட்டு இது உண்மையா உண்மையான்னு தெரிஞ்சவன் தெரியாதவன்னு எல்லாரும் கால், மெசேஜ்ன்னு பண்ணி சாகடிக்கிறாங்க!”ன்னு நினைச்ச மேகா, கேஷுவலா அந்த மெசேஜ்களை ஓபன் பண்ணிப் பார்த்தா. ஆனா அதைப் பார்த்தவுடனே அவள் கலவையான உணர்ச்சிகளுடன் காணப்பட்டாள்.

அதே நேரம் சரியா ஹால்லுக்குள்ள நுழைஞ்ச மகேஷ், “Welcome home மேகா மேம். பாட்டிக்குப் அப்புறமா எனக்குத் தெரிஞ்சு இந்த வீட்டுக்குள்ள வந்த ஒரே ஒரு பொண்ணு நீங்க மட்டும்தான். நீங்க உள்ள வரும்போது உங்களை ஸ்பெஷலா வெல்கம் பண்ணலாம்னு நினைச்சேன். பட் பாஸ் எனக்கு வேலை கொடுத்து என்னை அனுப்பி வெச்சுட்டாரு. இங்க நீங்க யூஸ் பண்றதுக்கு உங்களுக்குத் தேவையான ஒரு ஐட்டம் கூட இருக்காது. சோ, உங்களுக்கு என்னென்ன வேணும்னு லிஸ்ட் எழுதி கொடுங்க. நான் பசங்களை அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்றேன்” என்றான். 

அவன் பேசுறதை கவனிக்காம மேகா தொடர்ந்து தன்னோட மொபைல் ஸ்க்ரீனையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்க, “ஹலோ மேடம்! என்ன அவ்ளோ இன்ட்ரஸ்ட்டா ஃபோனைப் பார்த்துட்டு இருக்கீங்க? உங்க இன்டர்வியூ வீடியோவா?”ன்னு கிண்டலா கேட்டான். 

அவன் சத்தமாப் பேசுனதால நிதானம் அடைஞ்ச மேகா, “என்ன சொன்னீங்க?”ன்னு கேட்க, “சரியாப் போச்சு போம்மா. உனக்கு என்னென்ன வேணும்னு லிஸ்ட் போட்டு எனக்கு மெசேஜ் பண்ணு. நான் அரேஞ்ச் பண்றேன்” என்ற மகேஷ் தன்னோட மொபைல் நம்பரை அவ கிட்ட கொடுத்துட்டு அவள் தங்குறதுக்கான ரூமையும் காட்டினான். தன்னோட அறைக்குள்ள நுழைஞ்ச மேகா கதவை அறைஞ்சு சாத்திட்டு அதுல சாய்ஞ்சு தரையில உக்காந்து “ச்ச்ச்… ஐயோ கடவுளே… ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?”ன்னு கத்திக் கேட்டுட்டு தன் முகத்தை மூடிக்கிட்டு கதறி அழுதாள்.

இரவு 9:00 மணி…

டைனிங் டேபிள்ல வந்து உக்காந்த விஷ்வா, மேகா அங்கே இல்லாததைப் பார்த்துட்டு “அவ வரலையா?”ன்னு மகேஷ்கிட்ட கேட்டான். 

“நான் போய்க் கூப்பிட்டேன். அவங்க தலை வலிக்குதுன்னு வரலைன்னு சொல்லிட்டாங்க” என்றான் அவன். “ம்ம்… அவ ரூம்லயே கொண்டு போய்க் கொடுத்துடுங்க”ன்னு விஷ்வா சொல்ல, “நானே நேரா கொண்டு போய்க் கொடுத்தேன் சார். மேகா மேடம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்றார் செஃப் சாமுவேல் தாத்தா.

“நம்ம வீட்டுக்கு வரும்போதெல்லாம் நார்மலாத்தானே பேசிட்டு இருந்தா இவ! அதுக்குள்ள இவளுக்கு என்னாச்சு? ஒருவேளை அவ ஃபேமிலி இங்க வர்றதை நினைச்சுப் பயந்து மறுபடியும் feel ஆகி suicide attempt பண்ணப் போறாளா? ஷிட்… இவளை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே தெரியல!”ன்னு நினைச்ச விஷ்வா சாப்பிடாம வேகமா எழுந்து மேகா தங்கி இருக்கிற அறைக்குப் போயி கதவைத் தட்டி “ஹே மேகா! open the door!”ன்னு சத்தமா சொன்னான்.

உள்ளே இருந்து அவள் பதில் சொல்லல. அதனால கதவை வேகமா தட்டினவன், “ஏய் கதவைத் திறடி. ஏதாவது லூசுத்தனமா பண்ணேன்னு எனக்குத் தெரிஞ்சது, உன்னையும் நான் சும்மா விடமாட்டேன். உன் ஃபேமிலில இருக்கிறவங்களையும் சும்மா விடமாட்டேன். கதவைத் திறடி மேகா!”ன்னு பற்களைக் கடிச்சுக்கிட்டு அடித் தொண்டையில இருந்து கத்தினான். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured