Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 20

மூர்கனின் காதலி CH 20

by Thenaruvi Tamil Novels
263 views

அத்தியாயம் 20

ஏற்கனவே விஷ்வாவை தன்னால தோற்கடிக்க முடியலைன்னு கோவத்துல இருந்த ஆதித்யா, தன் முன்னாடி இருந்த முழு வோட்கா பாட்டிலையும் ஒரே மூச்சாகக் குடிச்சுக் காலி பண்ணினவன், “இங்கப் பாருங்க டாடி! ஆல்ரெடி நான் செம கோவத்துல இருக்கேன்! இதுல நீங்க வேற என்ன அவனைக்கூட ஒப்பிட்டுப் பேசி இன்னும் எனக்கு வெறி பிடிக்க வைக்காதீங்க!”ன்னு போதை ஏறுன குரல்ல சொன்னான்.

“ஒப்பிடணும் ஆதி. நம்ம எதிரியைக்கூட நம்மள நாம ஒப்பிட்டுப் பார்த்துக்கிட்டே இருக்கணும். அப்போதான் நம்மளோட பலம், பலவீனம் என்னன்னு நமக்குத் தெரியும். இப்பவும் ஒண்ணும் பிரச்சனை இல்ல. மேகா நீ லவ் பண்ணப் பொண்ணுதானே? அவகிட்ட ஏதாவது பேசு. அவளைக் கரெக்ட் பண்ணி எப்படியாவது நம்ம வழிக்குக் கொண்டுவரப் பாரு. இப்போ விஷ்வாக்கூட இருக்குற அவ, நம்ம சைடுல இருந்தா, அவளையே வச்சு அந்த விஷ்வாவை ஈஸியா நம்ம ஒண்ணும் இல்லாமப் பண்ணிடலாம்”னு மரகதமணி ஐடியா கொடுக்க,

“அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது டாடி. அந்த மேகா ஒரு எமோஷனல் ஃபூல். அநியாயத்துக்கு நல்லவ. நான் அவளுக்குப் பணத்தாசை காட்டி எனக்கு சப்போர்ட் பண்ணச் சொன்னா, அவ லூசுத்தனமா நீதி, நேர்மைன்னு பேசி என்ன இரிடேட் பண்ணுவா. அவ எல்லாம் இதுக்குச் சரிப்பட்டு வர மாட்டா. 

எனக்கு அதெல்லாம் கூட பிரச்சனை இல்லை. எனக்கே எனக்குன்னு நான் நெனைச்சுட்டு இருந்தவள ஈஸியா விஷ்வா கொத்திட்டுப் போயிட்டான். என்னால அவளை அவனுக்கெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது டாடி. அவங்க மேரேஜை முதல்ல ஸ்டாப் பண்ணணும்”ன்னான் ஆதித்யா.

“அதான் அவளக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு மீடியாவுல விஷ்வா அறிவிச்சுட்டானே! இதுக்கு மேல அவளே இந்தக் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டுப் போனாலும், அவன் விடமாட்டான். அப்புறம் எப்படி கல்யாணத்தை நிறுத்துவ?”ன்னு மரகதமணி கேட்க,

“மேகா நம்ம கண்ட்ரோல்ல இருந்தா, அவ சாவுற அளவுக்கு நம்ம அவள பிரஷர் பண்ணி அவ செத்துட்டா, மேரேஜ் நின்னுடுமே சார்! அந்தக் பழியைத் தூக்கி ஈஸியா விஷ்வா மேலேயும் போட்டுடலாம். சிங்கிள் ஷாட் டூ மேங்கோஸ்”ன்னு சொல்லிட்டு வில்லத் தனமா சிரிச்சான் ஆதித்யாவோட அசிஸ்டன்ட் பாலா.

“விஷ்வா மாதிரி ஒரு பணக்காரனக் கல்யாணம் பண்ணிக்க சான்ஸ் கிடைச்சிருக்கும்போது, அவ எதுக்குடா சாகப் போறா? அந்த அளவுக்கு நம்மளால என்ன பண்ண முடியும்?”னு குழப்பமா ஆதித்யா கேட்க,

“என்ன பாஸ், அத மறந்துட்டீங்களா? சேஃப்டிக்கு இருக்கட்டுமேன்னு அன்னைக்கு எடுத்து வச்சோமே!”ன்னு பாலா சொல்ல, ஆதித்யாவுக்கு மெல்ல ஏதோ ஞாபகம் வந்துச்சு.

அதனால பைத்தியம் பிடிச்சவனைப் போல “ஹிஹிஹிஹி!…”ன்னு சத்தமாகச் சிரிச்ச ஆதித்யா, “பாரேன்! நானே அத மறந்துட்டேன்! கரெக்டான டைம்ல நீ அத ஞாபகப்படுத்தியிருக்கடா. இனி அந்த மேகாவை அத வச்சு நான் என்னென்ன பண்ணப் போறேன்னு வெயிட் பண்ணிப் பாரு”ன்னு வில்லத்தனமா சொன்னான். 

தொடரும்… 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment