Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 17

மூர்கனின் காதலி CH 17

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 17 

விஷ்வா பைத்தியம் பிடிச்சவன் மாதிரி நடந்துக்கிட்டதால பயந்து, ஒரு ஓரமா தன் வாயைப் பொத்திக்கிட்டு மேகா உட்கார்ந்திருக்க, “பொண்ணுங்கள நம்பாத. பொண்ணுங்கள நம்பாத. இவ உனக்கு வேண்டாம்.” னு திரும்பத் திரும்ப தன்னோட தலைக்குள்ள ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருந்ததால, ஒரு அளவுக்கு மேல அதைப் பொறுத்துக்க முடியாம தன் தலையைப் பிடிச்சிக்கிட்டு மயங்கி கீழே விழுந்தான் விஷ்வா.

அதனால பதறிப்போன மேகா வேகமா எழுந்து அவன் கிட்ட ஓடிப்போய் அவன் கன்னத்துல தட்டி, “விஷ்வா.. உங்களுக்கு என்னாச்சு..?? கண்ணத் தொறங்க விஷ்வா..!! யாராவது வாங்கப்பா.. somebody please help…!!” னு கத்திக்கிட்டு இருக்க, மகேஷோட பேச்சைக் கேட்காம நேரடியா விஷ்வாவோட அறைக்கு முன்னாடி போய் நின்ன சௌபர்ணிகா அந்த ரூம் கதவைத் தட்டி, “விஷ்வா.. மேகா.. யாராவது சீக்கிரம் வந்து கதவத் திறங்க. இன்னைக்கு நீ என்ன அவாய்ட் பண்ண முடியாது விஷ்வா. நீ என்ன திட்டினாலும் இல்ல அடிச்சே கொன்னாலும் கூடப் பரவாயில்லை. இன்னைக்கு நான் உன் கிட்ட பேசாம இங்க இருந்து போகவே மாட்டேன்.” னு கத்திக்கிட்டே சொன்னா.

உள்ள இருந்த மேகாவுக்கு அந்த ரூம்ல sound proof இருந்ததுனால வெளியில இருந்து சௌபர்ணிகா கத்துறது கேட்கல. ஆனாலும் விஷ்வாவுக்காக உதவி கேட்க வேண்டி அவ போய் கதவைத் திறந்தா. ஏற்கனவே ரொம்ப டென்ஷன்ல இருந்த சௌபர்ணிகா, கண்ணுல தண்ணியோட, விஷ்வாவோட விரல்கள் கன்னத்துல பதிஞ்சிருந்த நிலையில இருந்த மேகாவைப் பார்த்ததும் இன்னும் ஷாக்காகி, “உனக்கு என்னம்மா ஆச்சு..!! நீ ஓகேவா..?? விஷ்வா உன்ன என்ன பண்ணான்..??” னு அவசரமா கேட்டா.

“I am ok மேடம். அவருக்குத்தான்..” னு மேகா ஏதோ சொல்ல வர, மகேஷுக்கு என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சுபோச்சு. அதனால “எதா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம் நீங்க போங்க…!!” னு சௌபர்ணிகாவை உள்ள தள்ளி தானும் உள்ளே போய் வேகமா அந்த ரூம் கதவை லாக் பண்ணான். 

அலங்கோலமா கிடந்த அந்த ரூமையும், பரிதாபமான நிலையில இருந்த விஷ்வாவையும் பார்த்து மனசு உடைஞ்சு போன சௌபர்ணிகா வேகமா அவன் கிட்ட ஓட, தானும் அவன் கிட்ட போன மகேஷ் அவளுக்கு உதவியா கீழே விழுந்து கிடந்த விஷ்வாவை bedல படுக்க வெச்சான்.

இன்னும் மேகாவோட உடம்பு பயத்துல நடுங்கிக்கிட்டிருக்க, “பயப்படாதீங்க மேகா. முதல்ல என்ன நடந்துச்சுன்னு எங்ககிட்ட சொல்லுங்க.” னு மகேஷ் கேட்க, “நீங்க இவரோட அசிஸ்டன்ட் தானே..!! உங்கள நான் அவர் கூட நிறைய தடவை பார்த்திருக்கேன். இவங்க யாரு..??” னு கேட்டா அவ. 

“விஷ்வா என் கூடப் பொறந்த தம்பி.” னு கலங்கின கண்களோட சொன்னா சௌபர்ணிகா.

“What..?? நீங்க விஷ்வா சாரோட அக்காவா..?? அவருக்கு அக்கா இருக்கிற மாதிரி நான் கேட்டதே இல்லையே..!!” னு மேகா கேட்க, “அவனுக்கு அக்கான்னு ஒருத்தி நான் இருக்கேன்னு அவனே மறந்துட்டான். அப்புறம் எப்படி வெளியுலகத்துக்குத் தெரியும்…?? எங்களோட அக்கா தம்பி ரிலேஷன்ஷிப் எல்லாம் அவனப் பொறுத்தவரைக்கும் நாங்க சின்னப் பிள்ளைங்களா இருந்தப்பவே முடிஞ்சு போச்சு. பட் என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது. எனக்கு என் தம்பி வேணும். அவன் என் கிட்ட முன்னாடி மாதிரி பேசணும், என்க்கூட சேர்ந்து சிரிக்கணும், விளையாடணும், சண்டை போடணும்னு நான் எத்தனையோ நாள் ஏங்கித் தவிச்சிருக்கேன். என்னைக்காவது இவன இப்படிப் பக்கத்துல வந்து பாத்துர முடியாதான்னு தூரத்துல இருந்தே இவனைப் பார்த்து வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு சுச்சுவேஷன்ல இவனப் பக்கத்துல பார்க்க எனக்கு சான்ஸ் கிடைக்கும்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” னு கண்ணீரோட சொன்ன சௌபர்ணிகா விஷ்வாவோட பாதத்துல குத்தியிருந்த கண்ணாடித் துண்டுகளை ஒவ்வொண்ணா எடுத்துட்டு இருந்தா.

அவள் கிட்ட போய் உட்கார்ந்த மேகா அவளோட தோள்ல கை வெச்சு, “நானே heart break ஆகி ரொம்ப நொந்துபோய்தான் இருக்கேன். ஆனா இவர் என்னைவிட ரொம்ப மோசமான நிலைமையில இருக்காரு. இவருக்கு என்னாச்சு மேடம்..?? ஏன் இப்படி இருக்காரு..?? திடீர்னு wierdஆ பிஹேவ் பண்றாரு..!! தனியா பேசறாரு. ரொம்ப கோபப்படுறாரு. என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்காரு. Totally he is out of control. அவருக்கு ஏதாவது சைக்காலஜிக்கல் ப்ராப்ளம் இருக்கா..??” னு கேட்டா.

“சொல்றேன்.” ன்ன சௌபர்ணிகா, “மகேஷ் நீ போய் ரிசப்ஷன்ல ஃபர்ஸ்ட் aid kit வாங்கிட்டு வா.” ன்னா. “இது விஐபி ரூம் தானே.. இங்கயே இருக்கும் அக்கா.” ன்ன மகேஷ் ஃபர்ஸ்ட் aid kitஐத் தேடி எடுத்து அவ கிட்ட கொடுத்தான். அத வாங்கி விஷ்வாவோட பாதத்துல இருந்த காயத்துக்கு மருந்து போட்டபடி “நடந்தத எல்லாத்தையும் மகேஷ் என்கிட்ட சொல்லிட்டான். இப்போ நீ சொல்லு.. நீ எதுக்கு இவன கிஸ் பண்ண..??” னு விஷ்வா அவகிட்ட கேட்ட மாதிரியே கேட்டா.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured