Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 16

மூர்கனின் காதலி CH 16

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 16 

ரிசப்ஷனில் இருந்த சௌபர்ணிகாவைக் காணப் போனான் மகேஷ். அவனை ஒரு ஓரமா அழைச்சுட்டுப் போன சௌபர்ணிகா மெல்லிய குரல்ல, “என்னடா நடக்குது இங்க? பாட்டி ஒரு மாசத்துல அவனை மேரேஜ் பண்ணிக்கணும்னு சொன்னதுக்கு அவன் ஓகே சொன்னதே எனக்குப் பெரிய ஷாக். இதுல எவளோ ஒருத்திய மேரேஜ் பண்ணிக்கப் போறேன்னு பிரஸ் மீட்லாம் கொடுக்கிறான்! யாரு அந்த மேகா? எப்படி அவ அவன் பக்கத்துல அவ்வளவு நேரம் இருந்தும் அவனுக்கு எதுவும் ஆகல? என் கண்ணால பார்க்குற எதையுமே என்னால நம்ப முடியல மகேஷ்.”ன்னா.

“அக்கா… இதெல்லாம் இங்க வெச்சுப் பேசுறது சரியா இருக்காது. இப்போ எல்லாரும் விஷ்வா சாரைத்தான் Full focus பண்ணிட்டு இருக்காங்க. பாஸ் தங்கி இருக்கிற ரூம் பக்கத்துலதான் நானும் ரூம் போட்டு இருக்கேன். வாங்க அங்க போய்ப் பேசிக்கலாம்.”ன்ன மகேஷ் அவளை அழைச்சுக்கிட்டுத் தன்னோட ரூமுக்குப் போனான்.

“அந்தப் பொண்ணு மேகா எங்க? நான் அவகிட்டப் பேசணும். நிஜமா அவளும் விஷ்வாவும் லவ் பண்றாங்களான்னு எனக்குத் தெரியணும்.”ன்னு சௌபர்ணிகா சொல்ல, “உங்களுக்கு டவுட்டே வேணாம் அக்கா. அந்தப் பொண்ணு யாருன்னு கூடப் பாஸுக்குத் தெரியாது. நாங்களே இன்னைக்குத்தான் அவளை first time பார்த்தோம்.”ன்ன மகேஷ் நடந்த எல்லாத்தையும் மறைக்காம அவ கிட்டச் சொன்னான்.

எல்லாத்தையும் கூர்ந்து கேட்ட சௌபர்ணிகா, “இப்ப அவ எங்க இருக்கா? நான் அவகிட்டப் பேசணும்.”ன்னு சொல்ல, “அந்தப் பொண்ணைப் பாஸ் அவரோட ரூமுக்கு இழுத்துட்டுப் போயிட்டாரு. அவங்க போய்ப் ரொம்ப நேரமாச்சு. உள்ள இருந்து ஒரு சத்தத்தையும் காணோம். ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியல.”ன்னான் மகேஷ்.

அதிர்ந்த சௌபர்ணிகா வேகமா எழுந்து நின்னு, “டேய் என்னடா அவ விஷ்வாகூட இருக்கான்னு கூலா சொல்ற? எதுக்கு இவ்வளவு நேரம் அவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டு வெச்சிருக்க? ஏதாவது தப்பா நடந்துட்டா என்ன பண்றது?”ன்னு அவசரமான குரல்ல கேட்க, “விடுங்க அக்கா. எப்படியும் அவங்க ரெண்டு பேரும்தான் மேரேஜ் பண்ணிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சிருச்சு. அப்புறம் என்ன? நம்ம விஷ்வா சாரைப் பத்தி அந்தப் பொண்ணு நல்லா தெரிஞ்சுக்கட்டும். அப்பத் தான் அவங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்.”ன்னான் மகேஷ்.

“டேய் போடா லூசு. இந்நேரம் அங்க என்ன நடந்துட்டு இருக்கோ தெரியல! நான் போய்ப் பார்க்கிறேன்.”ன்ன சௌபர்ணிகா மகேஷோட ரூம்ல இருந்து வெளியேறினா. “ஐயோ அக்கா நில்லுங்க… நீங்க அங்க போனா உங்களைப் பார்த்த உடனே அவர் டென்ஷன் ஆவாரு. அந்தப் பொண்ணுக்கூட இருக்கும்போது அவர் நார்மலாதான் இருக்காரு. சோ, பிராப்ளம் இல்ல. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம். நான் சொன்னா கேளுங்க அக்கா… அவங்களைப் போய்த் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.”ன்ன மகேஷ் வேகமா அவளைப் பின் தொடர்ந்து போனான்.

விஷ்வாவோட ரூம்ல…

தன் கைக்குக் கிடைச்ச பொருட்களை எல்லாம் தூக்கிப்போட்டு உடைச்சுக்கிட்டு இருந்தான் விஷ்வா. பயத்துல நடுங்கிக்கிட்டு இருந்த மேகா அந்த அறையோட ஒரு மூலையில போய் உட்கார்ந்துக்கிட்டா. கிட்டத்தட்ட புத்தி பேதலிச்சவனைப் போல நடந்துக்கிட்ட விஷ்வா, கீழே உடைஞ்சு கிடந்த கண்ணாடிப் பொருட்களின் மேல தன்னை அறியாம திரும்பத் திரும்பக் கால் வெச்சு நடந்துக்கிட்டே இருந்ததால, அவன் கால்ல இருந்து இரத்தம் அதிக அளவுல வந்துக்கிட்டு இருந்துச்சு. ஆனா, அதைக் கூட உணர முடியாத அளவுக்கு மெண்டலி டிஸ்டர்ப் ஆகி இருந்தான் விஷ்வா.

“ஐயோ… இவருக்குக் கால்ல இப்படி அடிபட்டு இரத்தம் வருதே! ஒரு பக்கம் பார்க்கப் பாவமா இருந்தாலும், இன்னொரு பக்கம் இவர்கிட்ட போறதுக்கே பயமா இருக்கே!”ன்னு நினைச்ச மேகா, “விஷ்வா… ப்ளீஸ் நிறுத்துங்க! ஏன் இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? நான் சூசைட் பண்ணப் போனதுக்கு என் மேல கோபப்பட்டு என்னை அடிச்சுட்டு, இப்ப நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறதும் மட்டும் சரியா? உங்களை நீங்களே எதுக்காக ஹார்ட் பண்ணிக்கிறீங்க?”ன்னு சத்தமா கேட்டா.

தனக்கே தெரியாம “சூசைட்”ங்கிற வார்த்தையை மறுபடியும் ஒரு முறை பயன்படுத்தி விஷ்வாவை வெறி பிடிச்சவனா மாத்திக்கிட்டு இருந்தா மேகா. தன்னோட அடி தொண்டையிலிருந்து விஷ்வா அவளைக் கோபமாப் பார்த்து, “ஏய் வாயை மூடுடி… நீ உன் வாயைத் தொறந்தீன்னா நானே உன்னைக் கொன்னுடுவேன்.”ன்னான். 

அதனால, ரெண்டு கைகளாலயும் தன்னோட வாயைப் பொத்திக்கிட்டு அவன் கண்ணுல இருந்து மறைஞ்சு ஓரமா ஒரு மூலையில உட்கார்ந்துக்கிட்டா மேகா.

தொடரும்… 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured