Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 14

மூர்கனின் காதலி CH 14

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 14 

“சுத்தம்.. இவங்க என் பேரைச் சொன்னாலே 1 அவன் டென்ஷனாகி உடனே என்னைய உள்ள விட வேணாம்னுதான் சொல்லுவான். நம்ம எதுக்குத் தேவையில்லாம பப்ளிக் பிளேஸ்ல அசிங்கப்பட்டுக்கிட்டு..??” என்று நெனச்ச சௌபர்ணிகா, “நோ தேங்க்ஸ். என் ஃபிரெண்டு இங்கதான் தங்கியிருக்காரு. நான் அவரப் பார்த்துட்டு கிளம்புறேன்.” என்று சொல்லிட்டு மகேஷுக்குக் கால் செஞ்சா. ஃபோனை எடுத்த மகேஷ் “சொல்லுங்க அக்கா.. நீங்க கால் பண்ணுவீங்கன்னு நெனச்சேன். கரெக்டா பண்ணிட்டீங்க..!!” என்று சொல்ல, “நான் நீ இருக்கிற ஹோட்டல் ரிசப்ஷன்லதான் இருக்கேன். என்னைய உள்ள விட மாட்டேங்குறாங்க. நீ கீழ வா.” என்றாள் அவள். “நீங்க அங்கேயே இருங்க நான் வரேன்.” என்ற மகேஷ் கால்ல கட் பண்ணான்.

மேகாவோட கால அட்டென்ட் செஞ்ச வசந்தி, “ஏய் மேகா.. என்னடி பண்ணி வச்சிருக்க.. அறிவில்லையா உனக்கு..?? உன்னை நம்பித்தானே வெளியூருக்கு அனுப்பி வச்சோம்.. அந்த டிவி நியூஸ்ல வந்த கருப்பு ட்ரஸ் போட்டிருந்த புள்ள நீதானே..!! அந்த நியூஸப் பார்த்துட்டு உங்க அண்ணனுங்க, நம்ம ஜாதிக்காரனுங்க சொந்தக்காரங்கன்னு எல்லாரும் கோபத்துல வெறி பிடிச்ச மாதிரி இருக்கானுங்க. உடனே கிளம்பி சென்னைக்குப் போகணும். நியூஸ்ல உனக்குக்கூட இருந்தவனை வெட்டணும் கொல்லணும் புதைக்கணும்னு இங்கப் பேசிகிட்டு இருக்காங்க. எனக்குப் பயமா இருக்கு டி. நீ உடனே கிளம்பி இங்க ஊருக்கு வந்துரு. இங்கயாவது நாங்க பொம்பள ஆளுங்க இருப்போம். உங்க அண்ணன்மாருங்க ஏதாவது பண்ணா நடுவுல பூந்து உனக்காகப் பேசி உன்னைக் காப்பாத்த முடியும். இவங்க கிளம்பி சென்னைக்குப் போய்ப் பிரச்சனை பண்ணா யாராலயும் எதுவும் பண்ண முடியாது.” என்று பயந்த குரல்ல சொன்னா.

“அது தெரியாம நடந்தது அண்ணி. நானே பயத்துல இருக்கேன். இதுல நீ வேற ஏன் என்னைய இன்னும் பயமுறுத்துறீங்க..!! நீங்க சொன்ன மாதிரி எதையும் மறைக்காம நானே ஊருக்கு வந்து எல்லாத்தையும் அண்ணனுங்க கிட்ட சொல்லிடுறேன். அவங்களை இங்க வர வேணாம்னு சொல்லுங்க அண்ணி ப்ளீஸ்..!!” என்று மேகா வசந்திகிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க, வசந்தி மேகாவோட பேரச் சொல்லி ஃபோன்ல பேசிக்கிட்டு இருக்கிறதை கவனிச்ச மேகாவோட ரெண்டாவது அண்ணன் மாரிமுத்து “என்ன மதினி.. அந்த ஓடுகாளி கழுததான் அங்க உக்காந்துகிட்டு ஃபோன்ல பேசுறாளா.. அவகிட்டச் சொல்லி வைங்க.. அவகூடச் சுத்திட்டு இருக்கானே நட்டையன் ஒருத்தன்.. அவன் பேரு என்ன.. ஆஆஆங்ங்.. விஷ்வா.

அவன் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் சரி. அவனை அவன் இடத்திலேயே வெட்டிச் சாச்சுட்டுதான் நம்ம ஊருக்கு நாங்க திரும்ப வருவோம்னு..!!” என்று அவனோட அடித்தொண்டையில இருந்து கோபமா கத்திக் சொன்னான். அவன் அப்படி ஹை பிட்ச்ல பேசினது வசந்தியோட உதவி இல்லாமலேயே லைன்ல இருந்த மேகாவுக்கு கனீர்னு கேக்க, பயத்துல காலைக் கட் பண்ணிட்டா மேகா.

அந்த ஏசி ரூம்லயும் 

அவளுக்கு வியர்த்து கொட்ட, அவளைக் கவனிச்சுக்கிட்டு இருந்த விஷ்வா, “என்ன சொல்றாங்க உங்க வீட்ல..?? நம்ம வீட்டுப் பொண்ணு விஷ்வா மாதிரி நல்லப் பெரியப் பணக்காரனப் புடிச்சிருக்கான்னு சந்தோஷப்பட்டு.. எப்போ மேரேஜ்ன்னு கேட்டாங்களா..??” என்று கேக்க, “ப்ளீஸ் தயவுசெஞ்சு எதுவும் பேசாதீங்க விஷ்வா. அங்க ஊர்ல பெரிய கலவரமே ஆயிருக்கு. எங்க ஊரு கிராமம். இங்க சிட்டில இருக்குறவங்க மாதிரி எங்க ஊர் காரங்க காசுப் பணத்துக்கு ஆசைப்பட்டு வேற ஜாதியில யாருக்கோ எவனுக்கோ எல்லாம் பொண்ணக் கட்டிக் கொடுக்க மாட்டாங்க. 

எங்க அண்ணனுங்க சொந்தக்காரங்க எல்லாரும் சேர்ந்து உன்ன வெட்டிக் கொன்னுட்டு என்னைக் கூட்டிட்டு போறதுக்காக இங்கதான் கோபமா வந்துட்டு இருக்காங்க. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.” என்று சொல்லிட்டு அழுதா.

“ஓஓஓ அப்புடி.. அவங்க இங்க வந்து என்னைய கொல்லப் போறாங்களா..??” என்று கேட்டுட்டு சிரிச்சவன், “நல்ல காமெடி. வரட்டும் வரட்டும். யார் கையில யார் சாகுறாங்கன்னு பார்க்கலாம்.” என்று கூலா சொன்னான் விஷ்வா. அதனால திடுக்கிட்ட மேகா “அப்போ எனக்காக என் ஃபேமிலில இருக்கிறவங்க சண்டைக்கு வந்தா நீ உன் ஆளுங்களை வச்சு அவங்களை கொன்னுருவியா..??” என்று பதட்டமா கேக்க, “நீதானே சொன்ன.. அவங்க என்னையக் கொலை பண்ண வர்றாங்கன்னு.. என்னைக் கொலை பண்ண வர்றவங்களை வெல்கம் பண்ணி கொஞ்சப் பேசிட்டு இருக்கச் சொல்றியா என்னைய..?? இந்த விஷ்வாவுக்குன்னு ஒரு கெத்து இருக்குமா. என்ன எதிர்க்கிறவன் எவனா இருந்தாலும் நான் அவனை விட்டு வைக்க மாட்டேன்.” என்று திமிரா சொன்னான் விஷ்வா.

“ஐயோ.. என்னாலதான் இத்தனை. என் மேல தப்ப வச்சுக்கிட்டு இப்ப என்னால யாரையும் குறை சொல்ல முடியாது.” என்று நெனச்ச மேகா “கரெக்ட்தான் சார். உன்கிட்ட யாராவது பிரச்சனை பண்ண வந்தா நீ ஏன் சும்மா இருக்கப் போற..?? என் மேலதான் தப்பு. ரீசன் அங்க எதுவா இருந்தாலும் இந்த உலகம் லாஸ்ட்ல பொண்ணுங்களைத்தானே எப்பவும் குறை சொல்லும்..!! என்னால என் ஃபேமிலில இருக்கிறவங்க ரொம்ப அசிங்கப்பட்டுருப்பாங்க. இங்கேயும் வந்து அவங்க அசிங்கப்பட வேணாம். நான் ஸ்டார்ட் பண்ண பிரச்சனையை நானே முடிச்சு வைக்கிறேன். இனிமே நான் யாருக்கும் தொந்தரவா இருக்க விரும்பல. உன்னப் பொறுத்த வரைக்கும் நான் ஆதித்யாக் கூட சேர்ந்து உன்னை ஏமாத்திட்டேன்னுதானே நெனைக்கிற..!! அது அப்படியே இருக்கட்டும். பப்ளிக்கா எங்க லவ்வ சொன்னதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணோட வீட்ல எல்லாமே தெரிஞ்சு பிரச்சனை ஆயிடுச்சு. அதனால அவ சூசைட் பண்ணிக்கிட்டான்னு இன்னொரு பிரஸ் மீட் வச்சுச் சொல்லி இந்த பிராப்ளத்தை முடிச்சுரு. குட்பை மிஸ்டர் விஷ்வா. என்னால தேவையில்லாம நீ சஃபர் ஆகுற மாதிரி ஆயிருச்சு. ஐ ஆம் சாரி ஃபார் எவ்ரிதிங். ஐ ஹோப் மை சூசைட் வில் பி சொல்யூஷன் ஃபார் எவ்ரிஒன்ஸ் இஸ்யூஸ். பை.. பை..!!” என்றவள், அந்த ரூம்ல இருந்த பால்கனி வழியா கீழக் குதிச்சு சூசைட் பண்ண முயற்சி செஞ்சா. அவள் அந்த ஒன்பதாவது மாடியில இருந்து கீழக் குதிச்சா கண்டிப்பா அவள் கைலாசத்துக்குப் போறது உறுதியாயிரும். 

தொடரும்..‌ 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured