Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 13

மூர்கனின் காதலி CH 13

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 13 

“ஆதித்யா கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நெனச்சு தான் நான் உன்னைக் கிஸ் பண்ணேன். மத்தபடி எனக்கு வேற எந்தத் தப்பான இன்டென்ஷனும் இல்லை.” என்று மேகா ரொம்ப எமோஷனலா சொல்ல, “ஓஹோ..!!” என்று நக்கலா கேட்ட விஷ்வா, சோஃபால கால் மேல கால் போட்டு கூலா சாய்ஞ்சு உக்காந்தான்.

“ப்ளீஸ் விஷ்வா இப்படியெல்லாம் பண்ணி என்ன இரிடேட் பண்ணாதீங்க. நான் மட்டும் அவன் கிட்ட இருந்து தப்பிச்சு வரலைன்னா இந்த நேரத்துக்கு அவனால என் லைஃப் நாசமாயிருக்கும். அப்புறம், உன்ன பத்தி என்ன நியூஸ் ஸ்பிரெட் ஆகிட்டு இருக்குன்னு உனக்கே தெரியும்ல..!! இந்த டைம்ல நீ எதுக்காக பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணேன்னு எனக்குத் தெரியாது. ஆனா, தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன்னைக் கிஸ் பண்ணதுனால தான் இப்போ பெரிய பிராப்ளம்ல இருந்து நீ வெளிய வந்திருக்க. சோ, நான் உனக்கு ஹெல்ப்தான் பண்ணிருக்கேன். அதுக்கு நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு அவசியம் இல்ல. இப்படியெல்லாம் பண்ணி என்ன ஹர்ட் பண்ணாதீங்க.” என்று மேகா உணர்ச்சிவசப்பட்டு சொல்ல, “நைஸ் பெர்ஃபார்மன்ஸ். அது எப்புடி.. நீயே இப்படி ஒரு பிராப்ளத்தை கிரியேட் பண்ணுவியாம்… கடைசியில நீயும் ஆதித்யாவும் சேர்ந்து டிராமா பண்ணி எனக்கு நீ ஹெல்ப் பண்ற மாதிரி ஆக்ட் பண்ணுவீங்களாம்… வேற வழி இல்லாம நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுவேனாம்… நீங்க நெனச்சதெல்லாமே கரெக்டா நடந்துருச்சுல்ல.. வாவ்.. வாட் எ ப்ளான்..!! இந்த பிளானப் போட்டது நீயா..?? இல்ல அவனா..?? இன்னும் கொஞ்ச நாள்ல என் கம்பெனி புதுசா மொபைல் ஃபோன் லான்ச் பண்ணப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த ப்ராஜெக்ட் உருப்படக் கூடாதுன்னுதானே இப்படி ஒரு மட்டமான ப்ளான்..!!” என்று அப்பவும் அவள் சொல்றதை நம்பாம கேட்டான் விஷ்வா.

அதனால சலிச்சுப் போன மேகா, “இதுக்கு மேல என்ன சொல்லி உன்னை நம்ப வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல சார்.” என்றவள், ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ஒரு நிமிஷம் இருங்க. என் ஃபோன்ல நாங்க எடுத்துக்கிட்ட ஃபோட்டோஸ், பேசுன சாட்ஸ், கால் ரெக்கார்டிங்ஸ் எல்லாமே இருக்கு. அதெல்லாம் நீயே பாரு. அப்பவும் என் மேல நம்பிக்கை வரலைன்னா என்ன பத்தி நீயே உன் சைடுல விசாரிச்சுப் பாரு.” என்று வேகமா சொல்லிட்டு அவளோட ஹேண்ட்பேக்ல இருந்த மொபைல் ஃபோனை எடுத்தா.

இவ்வளவு நேரம் அவளோட ஃபோன் சைலன்ட்ல இருந்ததால அவள் வீட்ல இருக்கிறவங்க அவளுக்குப் பலமுறை கால் செஞ்சிருந்தும் அவளுக்குத் தெரியல. அதனால ஃபோனைப் பார்த்து இப்போ ஷாக்கான மேகா “ஷட்..!! போச்சு.. உன்னால நான் நல்லா மாட்டிகிட்டேன். அவனாவது எங்க ஃபோட்டோஸ் அண்ட் வீடியோஸை என்னோட வீட்ல இருக்குறவங்களுக்கு மட்டும் தான் அனுப்புவேன்னு சொன்னான். அவன் கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நெனச்சு இப்போ தெரியாத்தனமா உன்னைக் கிஸ் பண்ணி.. நான் பண்ணது.. இந்த உலகத்துக்கே இப்போ தெரிஞ்சிருச்சு. அவ்ளோதான் என் கதை முடிஞ்சிருச்சு.” என்று விஷ்வாவப் பார்த்து சொல்லிட்டு, அவளோட பெரிய அண்ணி வசந்திக்குக் கால் செஞ்சா.

டிவியில வந்த லைவ் நியூஸப் பார்த்துட்டு பாட்டிக்குக் கால் பண்ணிப் பேசின சௌபர்ணிகா, விஷ்வாவப் பாக்குறதுக்காக அந்த செவன் ஸ்டார் ஹோட்டலுக்குப் போனா. அவள் ரிசப்ஷன்ல “இங்கத் தங்கியிருக்காரே எம்.வி. டெக் ஓனர் மிஸ்டர் விஷ்வா.. அவரை நான் பாக்கணும்.” என்று சொல்ல, அங்க இருந்த பொண்ணு “விஷ்வா சார் வி.ஐ.பி. ரூம்ல ஸ்டே பண்ணிருக்காரு மேம். எல்லாரையும் அங்கப் போக அலோ பண்ண முடியாது. உங்க நேம் என்னன்னு சொல்லுங்க. நாங்க அவருக்குக் கால் பண்ணி கேட்டு சொல்றோம்.” என்றாள்.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured