Home FREE NOVELSபோதையடி நீ எனக்கு CH 17

போதையடி நீ எனக்கு CH 17

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 17 

ரிஷி சொன்னதைக் கேட்டு அதிர்ந்த திலிப் “ஆல்ரெடி இது ஆக்சிடென்ட் கேஸ். உடனே போலீஸ்க்கு இன்பாம் பண்ணுங்க. கேஸ் ஃபைல் பண்ணுங்கன்னு ‌ போட்டு பிரஷர் பண்ணாம இந்த ஹாஸ்பிடல்ல அந்த பொண்ணுக்கு சர்ஜரி பண்ணதே பெரிய விஷயம். 

இதுல உடனே அவளை டிஸ்டார்ஜ் பண்ணி அனுப்புங்கன்னு சொன்னா எல்லாரும் எங்க மேல தான் சந்தேகப்படுவங்க. இங்க இருக்கிற சிசிடிவி கேமராவுல வேற எங்களோட face register ஆகிடுச்சு.. 

இப்ப என்ன பண்ணி அந்த பொண்ண இங்கிருந்து வெளியே கொண்டு போறது?” என்று யோசித்து குழப்பத்தில் ஆழ்ந்தான். 

“என்ன ஆச்சு? ரிஷி சார் என்ன சொன்னாரு?” என்று நிரஞ்சனா கேட்க, அவளிடம் திலீப் விஷயத்தை சொன்னதால் அவளும் தன் பங்கிற்கு அந்த பெண்ணை எப்படி ஹாஸ்பிடலில் இருந்து வெளியே அழைத்துச் செல்வது என்று யோசிக்க தொடங்கினாள். 

பலத்த யோசனைக்கு பிறகு தனது ஆட்களில் சிலரை போலீஸ் கெட்டப்பிலும், மருத்துவர்கள் கெட்டப்பிலும் அந்த ஹாஸ்பிடலுக்கு வர செய்த திலீப் அங்கே இருந்தவர்களிடம் நிதிலாவிற்கு நடந்தது சாதாரண ஆக்சிடென்ட் அல்ல. 

அது ஒரு திட்டமிட்ட கொலை முயற்சி என்று சொல்லி ஒரு டிராமாவை போட்டு, “இதுக்கு மேல நிதிலா  இங்க இருக்கிறது safe இல்ல. உடனே அவங்கள இங்க இருந்து வேற எங்கேயாவது ஒரு பாதுகாப்பான இடத்துக்கு ஷிஃப்ட்  பண்ணி ஆகணும் .” என்று சொல்ல வைத்தான். 

அதை நம்பிய அந்த மருத்துவமனை ஊழியர்களும் போலீஸ்காரருடன் வந்த டாக்டர்களிடம் வேண்டிய தகவல்களை பெற்றுக் கொண்டு லீகளாகவே நித்திலாவை அங்கே இருந்து பாதுகாப்பான முறையில் டாக்டர் கௌதம் அனுப்பிய ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். 

ரிஷி சொன்னதை போல யாருக்கும் தெரியாமல் திலீப்பின் உதவியுடன் ‌அங்கே இருந்து நித்திலாவை அவனுடைய கெஸ்ட் ஹவுஸுற்க்கு பத்திரமாக கொண்டு சென்ற டாக்டர் கௌதமின் குழுவினர், அவளுக்கான ட்ரீட்மென்டை அங்கே தொடர ஆரம்பித்தார்கள். 

தானே நேரில் வந்து அங்கே அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சோதித்து பார்த்த டாக்டர்  கௌதம், “சர்ஜரி முடிஞ்சிட்டதனால இந்த பொண்ண இங்க வச்சு தாராளமா பாத்துக்கலாம். 

ஒன்னும் பிரச்சன இல்ல டா. பட் யார் அந்த பொண்ணு?  அவங்கள யாரோ பெட்டால அடிச்சிருக்கிறாங்க. 

உனக்கு தெரிஞ்ச பொண்ணா? அதான் யாருக்கும் தெரியாம இங்க வச்சு ட்ரீட்மென்ட் குடுத்து இவங்கள பாத்துக்கணும்னு நினைக்கிறியா?” என்று கேட்க, 

ஹாஸ்பிடல் உடையில் மயக்கத்தில் கிடந்த அந்தப் பெண்ணையும் தனது நண்பனையும் மாறி மாறி பார்த்த ரிஷி “அவ என் லவ்வர்.” என்றான். 

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் இருந்த திலீப் கௌதம் அங்கே இருந்ததால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டான். 

“என்ன டா சொல்ற இந்த பொண்ண நீ லவ் பண்றியா? நீயும் தனுவும் தானே லவ் பண்ணிட்டு இருந்தீங்க.. 

இப்ப தானே கொஞ்ச நாளைக்கு முன்னாடி உனக்கு பிரேக் அப் ஆச்சு! 

அதுக்குள்ள எப்படி உனக்கு இந்த பொண்ணு மேல லவ்? என்னால இதை நம்பவே முடியல.” என்று கௌதம் சொல்ல,

“என்னாலயும்‌ தான் ஒரே நாள்ல இதெல்லாம் நடக்கும்னு நம்ப முடியல.” என்று நினைத்த ரிஷி,

“இந்த பொண்ணை எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடில இருந்தே தெரியும். 

இவ என்னை ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருந்து இருக்கா. பட் நான் தனுவ லவ் பண்ணிட்டு இருந்ததுனால இவ அதை பத்தி என் கிட்ட சொல்லலை. 

எனக்கு ஆக்சிடென்ட் ஆகி தனு என்ன விட்டுட்டு போனதுக்கு அப்புறமா தான் இவ அவளோட மனசுல இருக்கிறத என் கிட்ட சொன்னா.

என்னால உடனே இவளை ஏத்துக்க முடியல. எனக்கு டைம் வேணும்னு கேட்டேன். 

எப்படி இருந்தாலும், எனக்கு இந்த மாதிரி ஆனதுக்கப்புறம் என்ன விட்டுட்டு போன தனுவை விட எனக்கு என்ன ஆனாலும் ட்ரு லவ்வோட என்கூட இருக்கணும்னு நினைக்கிற இந்த பொண்ணு பெட்டருன்னு தோணுச்சு. 

அதான் இவளுக்கு ஒரு சான்ஸ் குடுக்கலாமேன்னு நெனச்சு என்ன பாக்க வர சொன்னேன். 

அப்ப தான் இவளுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு. என் ஃபேமில இப்ப சுச்சுவேஷன் சரி இல்லை. 

அதான் யாருக்கும் தெரியாம இவளுக்கு சரியாகிற வரைக்கும் இவளை இங்கேயே வச்சு பாத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்று எதைப் பற்றியும் யோசிக்காமல் சரளமாக ஒரு பொய்யை உடனே தயாரித்து சொன்னான். 

“வாவ் பாஸ்.. உங்களுக்கு இந்த அளவுக்கு தத்ரூபமா நடிக்க தெரியும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியுது. 

உண்மையா நடந்தது மட்டும் என்னனு நான் உங்க பக்கத்துல இருந்து பாக்கலைனா, கண்டிப்பா நீங்களும் அந்த பொண்ணும் லவ்வர்ஸ்னு நானே நம்பி இருப்பேன். 

சூப்பர் உங்க பிளான் சூப்பரோ சூப்பர்.. இந்த பொண்ணு மட்டும் மயக்கம் தெளிஞ்சு நமக்கு cooperate பண்ணா நமக்கு இருக்கிற எல்லா ப்ராப்ளமும் சரி ஆயிடும்.

அந்த மாதிரி ஒரு இடத்துல பிராஸ்டிடியூட்டா இருந்து எவன் எவன் கிட்டயோ போய் கஷ்டப்படறதுக்கு பதிலா, உங்க கேர்ள் ஃபிரண்டா இருக்கிறதுக்கு இந்த பொண்ணு குடுத்து வச்சிருக்கணும்.” என்று நினைத்த திலீப், 

“பாஸ் அப்ப நீங்க டுமாரோ மார்னிங் நம்மளோட லேடி பாஷை பத்தி உங்க ஃபேமில சொல்ற ஐடியால இருக்கீங்களா?” என்று அனைத்தையும் உறுதி செய்து கொள்வதற்காக ரிஷியிடம் கேட்டான். 

“yes of course! அவங்க கிட்ட நித்திலாவை பத்தி சொல்லி தானே ஆகணும்! 

எனக்கு என்னமோ எனக்கும் அவளுக்கும் செட் ஆகும்னு தோணுது.” என்ற ரிஷி கௌதமை பார்த்து “நான் நாளைக்கு நித்திலாவை என் ஃபேமிலில இருக்கிறவங்களுக்கு introduce பண்ணலாம்னு இருக்கேன்.

சோ அதுக்குள்ள எப்படியாவது இவளுக்கு கான்ஷியஸ் வரணும். அதுக்கு நீதான் ஏதாவது பண்ணனும் கௌதம்.” என்றான். 

“கண்டிப்பா மச்சான்! இதெல்லாம் நீ சொல்லனுமா? ஐ வில் டூ மை பெஸ்ட்..

சிஸ்டருக்கு பக்காவா ட்ரீட்மென்ட் கொடுத்து அவங்கள க்யார் பண்ணி உன் கிட்ட கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. 

அவங்க சீக்கிரம் நார்மல் ஆயிடுவாங்க டோன்ட் வரி.” என்ற கௌதம் நித்திலாவுடன் எப்போதும் இருந்து அவளை கவனித்துக் கொள்வதற்காக ஒரு டாக்டரையும், இரண்டு நர்சையும் ஏற்பாடு செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான். 

கௌதம் சென்ற பிறகு ரிஷி, திலீப், நிரஞ்சனா மூவரும் இப்போது மயக்கத்தில் கிடக்கும் அந்தப் பெண்ணிற்கு சுயநினைவு வந்து அவள் யார் என்று அவளாகவே சொல்வதற்காக காத்திருந்தார்கள். 

அவள் கிட்டத்தட்ட நான்கு ஐந்து மணி நேரம் ஆகியும் ‌ கண் விழிப்பதாக தெரியவில்லை. அதனால் அனைவரையும் விட அவளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி சோகமாக இருந்த ரிஷி தனது நண்பன் கௌதமிற்கு கால் செய்து, 

“டேய் எப்படியும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு கான்ஷியஸ் வந்துரும்னு நீ தானே சொல்லிட்டு போன.. 

இப்ப வரைக்கும் அவ அப்படியே தாண்டா இருக்கா. இங்க இருக்க உன் டாக்டர் கிட்ட கேட்டா அவளுக்கு எப்ப கான்ஷியஸ் வரும்னு கரெக்ட்டா சொல்ல முடியாது. 

அதுவா வரும்போது வரும்னு ரீசன் சொல்லிட்டு இருக்காங்க! பேஷண்டுக்கு எப்ப சரியாகும் என்று ஒரு டாக்டரால கண்டுபிடிக்க முடியாதா?” என்று பொறுமை இன்றி கேட்டான். 

“டேய் ரிஷி.. உன் கேர்ள் ஃபிரண்டுக்கு ‌ என்ன ஆச்சோ ஏதாச்சோனு நீ பதட்டத்துல இருக்க. அதான் இப்படி எல்லாம் கேட்கிறேன்னு எனக்கு புரியுது. 

பட் டாக்டர்ஸ் ஒன்னும் கடவுள் இல்லையேடா.. அந்த பொண்ணுக்கு குடுக்க வேண்டிய ட்ரீட்மென்ட் எல்லாத்தையும் ஆல்ரெடி பண்ணியாச்சு.‌

நம்ம இன்னைக்கு ஃபுல்லா வெயிட் பண்ணி பார்க்கலாம். நைட் ஆகியும் அவங்களுக்கு கான்ஷியஸ் வரலனா, அப்ப அவங்களை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ற மாதிரி தான் இருக்கும். 

உடனே அவங்களுக்கு some tests எல்லாம் எடுத்து அவங்களோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்குன்னு செக் பண்ணி பாக்கணும்.‌ அப்ப தான் அவங்களுக்கு ஏன் இன்னும் கான்ஷியஸ் வரலைன்னு நம்மளால கண்டுபிடிக்க முடியும்.” என்று சொல்லி எதார்த்தத்தை அவனுக்கு புரிய வைக்க முயற்சி செய்தான் கௌதம். 

“இல்ல ஹாஸ்பிடலுக்கு எல்லாம் வேண்டாம். நைட்டுக்குள்ள அவ நார்மல் ஆயிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்ற ரிஷி கௌதமிடம் ஃபோனில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நித்திலாவை செக் செய்து கொண்டிருந்த டாக்டர் “சார் பேஷன்ட்க்கு கான்ஷியஸ் வர மாதிரி தெரியுது. நீங்க வந்து அவங்கள பாருங்க!” என்று சொல்லி அவனை அழைத்தாள். 

அதனால் உடனே “நான் உன் கிட்ட அப்புறம் பேசுறேன் கௌதம்.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்த ரிஷி தனது வீழ்ச்சாரை இயக்கி நித்திலா இருந்த அறையை நோக்கி சென்றான். 

அவனுக்கு முன் ஏற்கனவே அங்கே நிரஞ்சனாவும், திலீப்பும் நின்று கொண்டிருந்தார்கள். நித்திலாவின் கன்னத்தில் லேசாக தட்டிய டாக்டர்,

“ஹலோ மேடம்… can you hear me? நான் பேசுறது உங்களுக்கு கேக்குதா? நீங்க கான்ஷியஸ்ல தான் இருக்கீங்க. உங்க கண்ண திறந்து என்னை பாருங்க.” என்று மெல்லிய குரலில் சொன்னாள். 

அவள் குரலைக் கேட்டு லேசாக மூடி இருந்த தன் கண்களை திறந்த நித்திலா அரைகுறையாக டாக்டரை ‌ பார்த்துவிட்டு, “என்ன விட்ருங்க! நான் இங்கிருந்து போகணும்.‌ 

எனக்கு பயமா இருக்கு. என்னை யாரும் அடிக்காதீங்க ப்ளீஸ்! என்ன விடுங்க குண்டு ஆன்ட்டி. நான் போகணும்.” என்று பயந்த கண்களுடன்  பயந்த குரலில் சொன்னாள். 

அவள் சொன்னதை அரைகுறையாக கேட்டு பயந்துபோன டாக்டர் பெண்மணி “குண்டு ஆண்டியா? இவங்க யாரைப் பத்தி சார் பேசிட்டு இருக்காங்க! 

இவங்களுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு தானே சொன்னீங்க.. ஆனா இவங்க என்னமோ யாரோ இவங்களை அடைச்சு வச்சு டார்ச்சர் பண்ண மாதிரி என்னை விடுங்க நான் இங்க இருந்து போகணும்னு பயந்து போய் சொல்லிட்டு இருக்காங்க!” என்று குழப்பமான முகத்துடன் கேட்க, 

“அது ஒன்னும் இல்ல டாக்டர்.. நித்திலாவுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு இல்ல.. அதுல தலையில அடிபட்டு ஏதோ பிராப்ளம் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்.‌ 

அதான் இப்படி இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம அவ உளறிட்டு இருக்கா. நீங்க கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்ணுங்க. 

நிரஞ்சனாவும், ரிஷி சாரும் அவ கிட்ட பேசி பார்க்கட்டும். அவளுக்கு புடிச்சவங்க கிட்ட பேசினா, ஆக்சிடென்ட் ஆன சாப்பிடல ஷாக்கல இருந்து அவ வெளிய வர்றதுக்கு சான்ஸ் இருக்கு.” என்று சொல்லி சமாளித்தான் திலீப். 

“ஆமா ஆமா டாக்டர்.. நீங்களும் மத்த நர்சும் வெளிய போய் வெயிட் பண்ணுங்க. என் தங்கச்சி உங்கள எல்லாம் பாத்து பயப்படுறான்னு நினைக்கிறேன்.” என்று சொன்ன நிரஞ்சனா கையுடன் அவர்கள் அனைவரையும் கூட்டிக் கொண்டு போய் வெளியில் விட்டுவிட்டு வந்து அந்த அறை இன் கதவை உள்ளே இருந்து ‌லாக் செய்து விட்டாள். 

இதற்கிடையில் சிரமப்பட்டு தான் படித்திருந்த கட்டிலில் அப்படியே எழுந்து அமர்ந்த நித்திலா தன் அருகில் வந்த நிரஞ்சனாவை பார்த்து  “ஏய் குண்டு ஆன்ட்டி.. மறுபடியும் வந்துட்டியா நீ? 

இன்னொரு தடவை நீ என் பக்கத்துல வந்தினா, உன்ன நான் கடிச்சு வச்சுருவேன். ஒழுங்கா அந்த பக்கம் போ.. நான் சொல்றேன் இல்ல போ டி.. 

என் பக்கத்துல வராத.. எனக்கு உன்னை பார்த்தாலே பயமா இருக்கு. ஆஆஆ.. இல்ல இல்ல கோவமா வருது.‌ 

நீதானடி என்ன அடிச்ச.. எனக்கு இப்ப கூட வலிக்குது தெரியுமா? புதுசா தல வேற வலிக்குது!” என்று பயந்த குரலில் சொல்லிவிட்டு வலித்துக் கொண்டிருந்த  தன் தலையை  இரு கைகளாலும் பிடித்துக் கொண்டாள். 

“என்ன ஆச்சு இவளுக்கு? தலையில அடிபட்டதுல மூளை குழம்பி மெண்டல் ஆயிட்டாளா? 

ஒரு மாதிரி பேசிட்டு இருக்கா! முதல்ல கௌதமை வரச் சொல்லி இவள செக் பண்ண சொல்லணும்.” என்று நினைத்த ரிஷி அவளை தனது கூர்மையான கண்களால் பார்த்துக் கொண்டிருக்க, 

மீண்டும் தன் தலையை தூக்கி அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்த நித்திலா உடல் நடுங்க அவளுக்கு இருந்த பயத்தில் அப்படியே பின்னோக்கி நகர்ந்து சென்று பல்லியைப் போல அந்த கட்டிலின் ஒரு ஓரத்திற்கு சென்று ஒட்டிக் கொண்டு,

“மறுபடியும் நீங்க எல்லாரும் வந்துட்டீங்களா? இப்போ என்ன அடிக்க போறீங்களா? வேணா என்ன அடிக்காதீங்க! எனக்கு வலிக்கும்.” என்று சொல்லிவிட்டு சின்ன குழந்தை போல அழ தொடங்கி விட்டாள்.‌

“என்ன ஆச்சு இவளுக்கு? இவ லூசா, இல்ல லூசு மாதிரி நடிக்கிறாளா? என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியலையே!” என்று நினைத்து குழம்பிய திலீப் குறுகுறுவென்று நித்திலாவை பார்க்க, 

நிரஞ்சனா ரிஷி இருவரும் ” பாவம் இந்த பொண்ணை யாரோ அடைச்சு வச்சு ரொம்ப டார்ச்சர் பண்ணி இருப்பாங்க போல. 

அதான் கான்ஷியஸ் வந்தவுடனே மறுபடியும் அவங்க கிட்டயே இவ மாட்டிக்கிட்டான்னு நினைச்சு இப்படி எல்லாம் பயத்துல உளறிட்டு இருக்கா!” என நினைத்து அவளுக்காக பரிதாபப்பட்டார்கள்.‌ 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured