Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 50

சாபமாய் வந்த என் உயிரே CH 50

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 50 

தனக்கு வந்த கனவில் விஜய் அமுதாவை ஆழமாக முத்தமிட்டு கொண்டு இருந்தான். அவனுக்கு அது போன்ற எண்ணம் துளியும் இல்லை ஏதோ நிஜமாகவே அவளுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை போல உணர்ந்த விஜய் அந்தக் கனவில் தன்னை தொலைத்து இருந்த நிலையில், தூங்கிக் கொண்டு இருந்த அவனை “பாஸ் எந்திரிங்க.. டைம் ஆயிடுச்சு.. இங்கேயே மணி 7 ஆயிடுச்சு. கிளம்பி கோர்ட்டுக்கு போனா கரெக்டா இருக்கும்.” என்று சொல்லி தட்டி எழுப்பினான் தினேஷ். 

அதனால் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்த விஜய் திடீரென்று என்ன நடக்கிறது என புரியாமல் “அமுதா.. டேய் அமுதா எங்க டா?” என்று அவனிடம் கேட்க, “அமுதாவா? அந்த பொண்ணு இந்த நேரத்தில இங்க எதுக்கு பாஸ் இருக்க போறாங்க? அவங்க மதுரையில இருப்பாங்க. 

இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம கோர்ட்டில இருக்கணும். நீங்க விடிஞ்சது கூட தெரியாம தூங்கிட்டு இருக்கீங்க.. உங்களை வந்து நான் எழுப்பினா நீங்க என்னன்னா அமுதாவ தேடிட்டு இருக்கீங்க..!! சீக்கிரம் எந்திரிச்சு கிளம்புங்க பாஸ்.” என்றான் தினேஷ். 

அவன் அப்படி சொன்ன பிறகு தான் இவ்வளவு நேரமாக தான் கனவில் அமுதாவுடன் இருந்திருக்கிறோம் என்று உணர்ந்த விஜய் “அடச்சீ.. எனக்கு ஏன் இந்த மாதிரியெல்லாம் கனவு வருது? அதுவும் போயும் போயும் அந்த லோ க்ளாஸ் பொண்ணு கூட.. அவ எல்லாம் ஒரு ஆளுன்னு.. என் கூட நிக்கிறதுக்கு அவளுக்கு என்ன தகுதி இருக்கு? நிறைய பொண்ணுங்க கூட சுத்தி சுத்தி வர வர என் மூளை கூட ரொம்ப காஜி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். அதான் யாரைப் பார்த்தாலும் ரொமான்ஸ் பண்ணனும்னு தோணுது போல இருக்கு..!! 

வேணாம் டா விஜய்.. ஒரு பிரியாவால நீ பட்டதே போதும். மறுபடியும் உன் லைஃப்ல லவ், ரிலேஷன்ஷிப்னு ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். உன் வேலையை பார்த்தியா, பொண்ணுங்க உனக்கு தேவைப்படும்போது ஜாலியா சுத்தனுமா என்ஜாய் பண்ணியா.. ஒரு நைட்டுக்கு ஒருத்தி.. இன்னொரு நைட்டுக்கு இன்னொருதின்னு இருக்கிற வரைக்கும் ஒரே குஜால்சா இருந்துட்டு போயிடனும். Solidஆ ஒருத்தி கிட்ட போய் சிக்கவே கூடாது. 

அதுவும் உன் ஸ்டேட்டஸ்க்கு அமுதா மாதிரி ஒரு ஆளை எல்லாம் நீ திரும்பி கூட பாக்க கூடாது. ஏதோ அவ கொஞ்சம் அழகா தான் இருக்கா.. அதுக்காக அவ உனக்கு ஏத்த பொண்ணு ஆயிடுவாளா? இனிமே நீ சும்மா கூட அவளை பத்தி யோசிக்க கூடாது. அதுவும் அவ உன்ன விட ரொம்ப சின்ன பொண்ணு. அதை உன் மைண்ட்ல வச்சுக்கோ.” என்று தனக்குத் தானே புத்தி சொல்லி மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டு எழுந்து கிளம்ப சென்றான். 

அங்கே அமுதா நன்றாக தனது அறையில் இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருக்க, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற அன்னபூரணி “அடியே அமுதா.. ஏழு மணிக்கு மேல ஒரு பொம்பள புள்ள தூங்கினா வீடு என்னத்துக்காகிறது? உங்க கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க போலாம்னு உங்க அண்ணன் எல்லாரையும் கிளம்ப சொல்லிட்டு இருக்காரு.. நீ என்ன இன்னும் தூங்கிட்டு இருக்க? சீக்கிரம் எந்திரிச்சு போய் கிளம்பு போ.. 

ஆளுக்கு முன்னாடி உங்க அத்தை எந்திரிச்சு கிளம்பிட்டு இருக்கிறவங்க எல்லாரையும் விரட்டிட்டு இருக்கிறாங்க.. காலங்காத்தாலே அவங்க வாயில விழுகாத.. கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க போறதுனால கோயிலுக்கு போயிட்டு போலாம்னு சொல்லுவாங்க நினைக்கிறேன். எதுக்கும் நீ புடவை கட்டிட்டு வந்துரு சரியா.. கட்ட வரலைன்னா உங்க சின்ன அண்ணியை கூப்பிட்டு கட்டிவிட சொல்லு.  அடுப்புல டீ போட்டு வச்சிருக்கேன். நான் போய் அது என்னாச்சுன்னு பாக்குறேன்.” என்று அவளை எழுப்பி சொல்லிவிட்டு அவசர அவசரமாக இருக்கும் வேலைகளை எல்லாம் பார்க்க வேண்டுமே என்ற எண்ணத்தில் வெளியில் சென்றாள். 

நிதானமாக எழுந்து அமர்ந்த அமுதா சோம்பல் முறித்துவிட்டு “ஆஆஆ.. சப்பா..  சொந்த வீட்டிலேயே என்னை மருமக மாதிரி ட்ரீட் பண்றாங்களே! இந்த கொடுமையை எல்லாம் நான் எங்க போய் சொல்றது? எனக்கு அத்தை மட்டும் மாமியார் இல்லை.. எங்க அண்ணனும் தான். என்ன ஒன்னு கடவுள் புண்ணியத்துல எனக்குன்னு வாச்ச ரெண்டு அண்ணியும் ரொம்ப ஸ்வீட். அந்த ஒரு விஷயத்துல தப்பிச்சுக்கிட்டேன். இல்லேன்னா இந்த வீட்ல ஒரு நாள் கூட நம்மளால ஓட்ட முடியாது.” என்று நினைத்து கிளம்புவதற்காக சென்றாள். 

அவர்கள் வீட்டில் பாத்ரூம் கொள்ளை புறத்தில் தான் இருக்கும் என்பதால், குளிப்பதற்காக தன்னுடைய ஆடைகளை எடுத்து தோள்களில் போட்டுக் கொண்டு ஹாலை கடந்து செல்லும்போது டிவி நியூஸில் “இன்று நடிகர் விக்ரம் குருமூர்த்தி மற்றும் அவருடைய இரண்டாவது மனைவியான அனாமிகாவின் டிவோர்ஸ் கேஸ் கோர்ட்டுக்கு ஃபைனல் ஹியரிங்காக வருகிறது. இந்த கேஸ் இன்றுடன் முடிந்துவிடுமா? தங்களுடைய தலைவன் விஜய் அபிசியல் ஆக மீண்டும் சிங்கிள் ஆகி விடுவாரா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் விஜயின் ரசிகர்கள் இந்த கேசின் முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.” என்று ஒரு பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். 

அதை பார்த்தபடி அப்படியே நின்ற அமுதா “ஓஹோ இன்னிக்கு தானா ஹியரிங்? அதனால தான் விஜய் சார் ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு சென்னை கிளம்பி போயிட்டாரு போல.. அனாமிகா மேடமை அவருக்கு முன்னாடி இருந்தே பிடிக்கல. சோ இந்த தடவை எந்த பிரச்சனையும் ஆகாம அவருக்கு டிவர்ஸ் கிடைச்சா நல்லா இருக்கும் .” என்று நினைத்து கடவுளை வேண்டிக் கொண்டாள். 

அமுதாவிற்கு திருமணத்திற்காக கூரை புடவை எடுப்பதற்கு மற்றும் தாலி வாங்குவதற்கு என சில முக்கியமான செலவுகளை தானே அவளுக்காக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த வெற்றி அவன் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது பார்ட் டைம் ஜாப் சென்று ஆசை ஆசையாக வாங்கி கழுத்தில் மாட்டி இருந்த தங்க செயின் மற்றும் அவனுடைய தங்க பிரேஸ்லெட் என அனைத்தையும் விற்று கையில் அதில் கிடைத்த பணத்துடன் அப்போது தான் உள்ளேன் நுழைந்தான். 

அமுதா நியூஸை பார்த்துக் கொண்டிருக்கும்போது அவனும் சரியாக உள்ளே நுழைந்ததால், அவனுடைய காதுகளிலும் அந்த செய்தி  விழுந்தது. விஜய் அலாமிகாவை டிவஸ் செய்தால் அவனுக்கு என்ன? செய்யாமல் போனால் அவனுக்கு என்ன? வெற்றியின் முக்கியமான பிரச்சினை அமுதா அந்த செய்தியை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பது தான். பொதுவாகவே ஒரு ரசிகையாக அமுதாவிற்கு விஜயை எவ்வளவு பிடிக்கும் என்று அவன் நன்றாக அறிந்து வைத்திருந்தான். 

அதனாலேயோ என்னவோ அவர்கள் இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டு இருந்தால் கூட, அதை பார்க்கும்போது அமுதா அவன் மீது இன்ட்ரஸ்ட் காட்டுகிறாள் என்று தான் அவனுக்கு நினைக்க தோன்றியது. அதனால் இறுக்கிய முகத்துடன் தான் அங்கு இருப்பை அமுதாவிற்கு உணர்த்தும் படி லோக் லோக் என்று இரும்பியபடி அவள் அருகில் சென்றபடி “அம்மா.. அம்மா.‌.!!” என்று தன் அம்மாவை அழைத்தான் வெற்றி. 

உடனே வடிவு அங்கே வந்து விட, அங்கே நின்று கொண்டிருந்த அமுதாவும் அவனை திரும்பி பார்த்தாள். தன் கையில் இருந்த பணப்பையை தன் அம்மாவின் கையில் ஒப்படைத்த வெற்றி “மாமா என்ன தான் இந்த கல்யாண செலவை எல்லாம் அவரே பார்த்துகிறேன்னு சொல்லி இருந்தாலும், என்னால பரவால்லைன்னு அப்படியே விட முடியல. அதான் நான் சம்பாதிச்சு சேர்த்து வச்சு இருந்தது  எல்லாத்தையும் வித்து ஒரு லட்ச ரூபா புரட்டிட்டு வந்து இருக்கேன். 

அமுதாவுக்கு தாலி வாங்கறதுக்கும், கல்யாண புடவை வாங்குறதுக்கும், நிச்சய புடவை வாங்குறதுக்கு வச்சிக்க சொல்லி மாமா கிட்ட இத கொடுத்துட்டு. அவளோட முக்கியமான எல்லா நேரத்திலயும் நான் கூட இருந்திருக்கேன். அது எல்லாத்தையும் விட இந்த கல்யாணம் எனக்கு ரொம்ப முக்கியம். அவளுக்கு செய்ய வேண்டியது எல்லாத்தையும் ஒரு மாமனா இருந்தும், புருஷனா இருந்தும் நான் தான் செய்யணும்னு நினைக்கிறேன். மாமா வேண்டாம்னு சொன்னாலும் நீ அவர் கிட்ட நான் சொன்னதா சொல்லி இத கொடுத்துடு.” என்று அமுதாவை பார்த்தபடியே சொன்னான். 

அவன் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்ட வடிவு “அதெல்லாம் சரி தாண்டா.. அதுக்குன்னு கையில கழுத்துல கடந்ததை எல்லாம் எதுக்கு அவசரப்பட்டு போய் வித்துட்டு வந்த? ஏன் இந்த அம்மாகிட்ட எதுவும் இருக்காதுன்னு நினைச்சிட்டியா? அப்படியெல்லாம் உங்க அப்பா நம்மள ஒன்னு இல்லாம விட்டுட்டு போகல.

நம்ம பசங்களுக்கு ஒரு ஆதரவு வேணும், யாரும் இல்லாம அங்க அனாதை மாதிரி வளரக் கூடாதுன்னு தான் நான் இங்கே வந்து தங்கி இருந்தேனே தவிர.. போக்கிடம் இல்லாம வக்கத்து போய் இங்கே வந்து தங்கல..!! நம்ம கிட்ட இருக்கிற காடு,  களனி எல்லாத்தையும் ஒழுங்கா பராமரிச்சாலே இன்னும் பத்து தலைமுறைக்கு ஒக்காந்து சாப்பிடுற அளவுக்கு நம்மகிட்ட சொத்து இருக்கு. ஒரு லட்சம் ரூபாய்க்கு எதுக்கு டா அடுத்தவன் கிட்ட போய் நகையை வித்து காசு வாங்கிட்டு வர?” என்று கோபமாக கேட்க, 

“நீ சொல்றது எல்லாம் வாஸ்தவம் தான் மா நான் இல்லைன்னு சொல்லல. அப்பா காசை எடுத்து யூஸ் பண்ணனும், இல்ல உன் கிட்ட காசு கேக்கணும்னு நினைச்சிருந்தா, நான் மாமாவே எல்லாத்தையும் பண்ணட்டும்னு விட்டுருப்பனே.. நம்ம பண்ணா என்ன? அவர் பண்ணா என்ன? எல்லாமே நம்ம வீட்டு காசு தான். எனக்கு இது எல்லாம் அவளுக்கு நான் தான் பண்ணனும்னு ஒரு ஆசை. அதுவும் என் காசுல தான் பண்ணனும்னு தோணுச்சு. அதான் நான் சம்பாதிச்சு வாங்குனத வித்துடன். இதுல உனக்கு என்ன பிரச்சனை? நீ போய் மாமா கிட்ட பேசு போ.” என்று சொல்லி தன் அம்மாவை விரட்டினான் வெற்றி. 

“அட போ டா போக்கத்தவனே.. என் அண்ணன் மகளுக்கு நானே 30 பவுன் போடுவேன்‌ டா.. ஒரு லட்சத்தை கொண்டு வந்து குடுத்துட்டு பெரிய இவனாட்டம் இந்த பேச்சு பேசிகிட்டு இருக்கான்..!!” என்று அவனை திட்டியபடி மணிகண்டனை பார்ப்பதற்காக சென்று விட்டாள் வடிவு. 

தான் வெற்றி விஷயத்தில் தாமரையின் இலை மீது ஒட்டி இருக்கும் தண்ணீரை போல இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போலவே இருக்கும் போது, வெற்றி மட்டும் அனைத்தையும் சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டே தன்னை பற்றி யோசித்து மெனக்கிட்டு ‌ இவ்வளவு செய்கிறானே.. என்று நினைக்கவே அமுதாவிற்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. 

அதனால் அவள் அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது. அதை கவனித்த வெற்றி தானும் அவள் கண்களையே பார்த்தபடி அங்கேயே நின்றான்.

-காதல் மலரும்

You may also like

Leave a Comment

About Me

Featured