அத்தியாயம் 45
“அவ என் படத்துல நடிக்க கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாரு டா?” என விஜய் திமிராக கேட்க, பதிலுக்கு தானும் அவனை கோபமாக பார்த்த வெற்றி “நான் அவளோட ஹஸ்பண்ட். எனக்கு அவ விசியத்துல எல்லா உரிமையும் இருக்கு.” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு ஷாக்கான விஜய் “இவளுக்கு எப்போ மேரேஜ் ஆச்சு? இத பத்தி இதுக்கு முன்னாடி அமுதா என் கிட்ட எதுவுமே சொல்லலையே..!!” என்று நினைத்துவிட்டு “என்ன டா உளர்ற? அவளுக்கு எப்ப மேரேஜ் ஆச்சு? இதுவரைக்கும் யாரும் அவளுக்கும் உனக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே! வேணும்னே பொய் சொல்றியா நீ? அப்படி உனக்கும் அவளுக்கும் மேரேஜ் ஆகி இருந்தா, நான் காண்ட்ராக்ட் வரும்போது சொல்லி இருக்கணும்ல?” என்று கோபமாக கேட்டான்.
அவன் கேட்ட பிறகு தான் தான் தேவையில்லாமல் வார்த்தையை விட்டு விட்டோம் என்று வெற்றியின் மூளைக்கு உரைக்க, “நான் தான் அவளோட ஹஸ்பண்ட் என்ன சொன்னேன். அதுக்காக எங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சுன்னு நான் சொல்லலையே..!!” என்று சொல்லி சமாளிக்க பார்த்தான். “யாரு டா இவன் பைத்தியமா?” என்பதைப் போல அவனை மேலும் கீழும் பார்த்த விஜய் “உன் இஷ்டத்துக்கு நீ உளர்றதை எல்லாம் கேக்குறதுக்கு எனக்கு டைம் இல்ல. இது என்னோட படம். எனக்கு எப்படி பிடிக்குதோ நான் அப்படித் தான் இருப்பேன். உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ.” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர பார்த்தான்.
உடனே வேகமாக அவனைப் பின் தொடர்ந்து சென்று வழிமறித்த வெற்றி “எனக்கும் அமுதாவுக்கும் தான் கல்யாணம் பண்ணனும்னு எங்க வீட்டு ஆளுங்க நாங்க சின்ன புள்ளைங்களா இருக்கும்போதே முடிவு பண்ணிட்டாங்க. எப்ப வேணாலும் எனக்கும் அவளுக்கும் கல்யாணம் நடக்கும். அதனால என்னைக்கா இருந்தாலும் அவ என் பொண்டாட்டி தான்.
அந்த உரிமையிலயும், தைரியத்திலயும் தான் சொல்றேன். அவ மேல எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. அவ பண்றது எனக்கு பிடிக்கலைன்னா யார் நடுவுல வந்தாலும் நான் தடுப்பேன். அதனால என்ன ஆகுதுன்னு எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். என் அம்முவுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.” என்று தைரியமாக சொன்னான்.
அவன் குரலில் இருந்த உறுதி விஜயை கொஞ்சம் கொஞ்சமாக கோபப்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு சின்ன பையன் தன் முன்னே நின்று இப்படி குரலை உயர்த்தி பேசுவது மட்டுமல்லாமல், அமுதாவின் விஷயத்தில் தன்னையே எதிர்க்கும் நிலை வந்தாலும் கூட அதற்கு தயாராக இருப்பதாக அவன் சிம்பாலிக்காக சொல்வதும் அவனுக்கு புரிந்ததால் “யார் இவன்? ஒரு சாதாரண பொடி பையன். மேக்ஸிமம் இப்ப தான் காலேஜ்ல படிச்சு முடிச்சிருப்பான்..
அப்படி என்ன இவனுக்கு இவ்ளோ தைரியம்? என் கிட்டயே இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கான்! இவன் பேசல.. அமுதா மேல இவனுக்கு இருக்கிற ஆசை தான் இப்படி எல்லாம் இவன பேச வைக்குது. இவன் அத்த பொண்ண இவன் முன்னாடியே நான் கிச் அடிச்சதை இவனால பார்க்க முடியல. அதான் இப்படி வயிற்று எரிச்சல்ல வந்து பொங்கிட்டு இருக்கான். ஏற்கனவே இந்த படம் சூட் தள்ளி போயிட்டே இருக்கு. இப்ப இவன் கிட்டயும் சண்டை போட்டு இன்னொரு பிராப்ளம் ஆச்சுன்னா, இருக்கிற பிரச்சனைல இத வேற சமாளிக்கணும்.” என்று நினைத்து பரிமுற்று பட்ட விஜய்,
அப்போதும் கூட தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் அவனைப் பார்த்து முறைத்து “நீ அவளுக்கு எவனா இருந்துட்டு போ.. எனக்கென்ன? இது என்னோட செட். இங்க நான் சொல்றது தான் நடக்கும். இனிமே இப்படி எல்லாம் என் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க கூடாது.. உன்ன மாதிரி கோபம் வந்தா சும்மா இப்படி வாயில பேசிட்டு இருக்குற ஆள் நான் கிடையாது. ஒரே செகண்ட்ல யோசிக்காம பிஸ்டலை எடுத்து உன்னை பட்டுனு போட்டா நீ பொட்டுன்னு போயிடுவ.. அப்புறம் அமுதா மேல உரிமை கொண்டாடுறதுக்கு இங்க எவனும் இருக்க மாட்டான்.” என்று தனது கனீர் குரலில் சொல்லி தன் ஒற்றை விரலை அவன் முன்னே நீட்டி எச்சரித்துவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றான்.
அவன் அக்னி பிளம்பாக நடந்து வருவது தெரியாமல் அவனைப் பார்த்தவுடன் அவன் அருகில் சென்ற டைரக்டர் ஸ்ரீகாந்த் “அந்த பொண்ணுக்கு தான் எதுவும் இல்லைன்னு தெரிஞ்சிடுச்சே சார்.. சீன் எடுக்கிறதுக்கு தேவையான எல்லாமே ரெடியா இருக்கு. ஒரு அரை மணி நேரத்துல அந்த பொண்ணு ரெடியாகி வந்துட்டா ஷூட்டிங் கண்டினியூ பண்ணலாம். மறுபடியும் நாளைக்கு இது எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணனும்னா ரொம்ப கஷ்டம்.” என்று சொல்ல, வெற்றியின் மீது இருந்த கோபத்தில் விஜய் அவரை குறித்து பார்த்தான்.
அதனால் பயந்த டைரக்டர் “என்னை இவன் இப்படி முறைக்கிறான்? ஒருவேளை பேக்கப் பண்ற ஐடியாவுல இருந்து இருப்பானோ? நம்ம தான் தேவை இல்லாம முந்திரிக்கொட்டை மாதிரி வந்து வாயை விட்டுட்டோம் போல!” என்று நினைத்து அவசரமான குரலில் “உங்களுக்கு ஷூட்டிங் கண்டினியூ பண்ற மூட் இல்லைனா பரவால்ல சார். நம்ப நாளைக்கு கூட பாத்துக்கலாம்.” என்றான்.
அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரு பெருமூச்சு விட்ட விஜய் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கே அனைத்தும் தயாராக இருப்பதை மனதில் வைத்து “கேன்சல் எல்லாம் பண்ண வேண்டாம். ஒரு மணி நேரம் கழிச்சு அகைன் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க. விட்ட சின்ல இருந்து எடுப்போம். ஆல்ரெடி எடுத்த சீன் எல்லாம் எப்படி வந்திருக்குன்னு செக் பண்ணிக்கோங்க. இன்னைக்கு அந்த சாங் சூட் முடிக்காம யாரும் வீட்டுக்கு போக கூடாது. அப்புறம் அமுதாவோட மேனேஜர் ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்கான்.
இன்னொரு தடவை அவன் வந்து என் கிட்ட இப்படி எல்லாம் பேசிட்டு இருந்தா, நான் அவனை வேற மாதிரி டீல் பண்ண வேண்டியது இருக்கும். அந்த பொண்ணு கிட்ட சொல்லி அவனை அடக்கி வைக்க சொல்லு. நான் ஒரு டிரைவ் போயிட்டு வரேன்.” என்று டைரக்டரிடம் சொல்லிவிட்டு ஒரு ஓரமாக நின்று அவனை இங்கே பார்த்துக் கொண்டிருந்த தன் assistant தினேஷை பார்த்தான்.
உடனே சிட்டாக பறந்து அவன் அருகில் வந்து நின்ற தினேஷ் “சொல்லுங்க பாஸ்! உங்களுக்கு ஏதாவது வேணுமா? நான் போய் கொண்டு வரட்டுமா?” என்று கேட்க, “நான் ஒரு குட்டி டிரைவ் போயிட்டு வரலாம்னு இருக்கேன். நீ போய் என் கார எடுத்துட்டு வா.” என்றிறான் விஜய். உடனே “ஓகே பாஸ்” என்ற தினேஷ் வேகமாக விஜயின் கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தை நோக்கி சென்றான்.
அவனை பின் தொடர்ந்து சென்ற விஜய்க்கு திடீரென ஏனோ அமுதாவின் ஞாபகம் வந்தது. அவள் இப்போது அவனது கேரவனில் இருப்பதால் திரும்பி அதை பார்த்தான். அப்போது அமுதா அசிஸ்டன்ட் டைரக்டர் பெண்ணுடன் பேசியபடி அந்த கேரவனில் இருந்து கீழே இறங்கினாள். அவளைப் பார்க்க கொஞ்சம் சோர்வாக இருப்பதைப் போல தெரிந்தாள்.
இருப்பினும் கூட அவன் கண்களுக்கு அவள் அழகாகவே தெரிய, “என் லைஃப்ல நான் எத்தனையோ பொண்ணுங்கள பாத்திருக்கேன். பட் இவ கிட்ட யார் கிட்டயும் இல்லாத ஏதோ ஒன்னு ஸ்பெஷலா இருக்கு. எப்படி பார்த்தாலும் என் கண்ணுக்கு இத மட்டும் ரொம்ப இன்னசென்ட்டா அழகா தெரியுறா.. அமுதா ஒரு போயம் மாதிரி இருக்கா.” என்று அவளைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போது அவனையும் மீறி அவன் இதழோறும் சிறு புன்னகை தவழ்ந்தது.
காரை கொண்டுவந்து அவன் அருகில் நிறுத்திய தினேஷ் “சார் கிளம்பலாமா?” என்று கேட்க, அவனை அருகில் இருந்த சீட்டில் அமர சொல்லிவிட்டு டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்த விஜய் காரில் அங்கிருந்து கிளம்பினான். விஜய் வருவதற்குள் மீண்டும் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும் என்று நினைத்த டைரக்டர் ஸ்ரீகாந்த் அனைவரையும் அவசர படுத்தி வேலை வாங்க தொடங்கினார். மீண்டும் சூட்டிங் தொடங்க போகிறது என்பதால் அமுதா தயாராக சென்று விட்டாள்.
அவளிடம் இந்த முத்தக் காட்சியை பற்றி பேச வேண்டும் என நினைத்த வெற்றி அவளது கேரவனிற்கு செல்ல, அவளுக்கு பிசியாக மேக்கப் போட்டுக் கொண்டிருந்த மேக்கப் ஆர்டிஸ்ட் “சார் மேடம் ரொம்ப பிசியா இருக்காங்க. விஜய் சார் வர்றத்துக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கணும். இல்லன்னா அவர் ரொம்ப கோவப்படுவாரு. ஷூட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறமா நீங்க அமுதா மேடமை பாருங்களேன்! அவங்க இப்ப டிரஸ் சேஞ்ச் பண்ணனும்.” என்று சொல்லி அவனை வெளியில் அனுப்பி விட்டாள்.
அவள் பேசியதை பார்த்தும் கூட அமுதா எதுவும் சொல்லி வெற்றியை தடுக்கவில்லை. அவனிடம் இரண்டு நிமிடம் தான் பேச விரும்புவதாக கூட அவள் அவனுக்காக எதுவும் சொல்லாததால், சோகமே உருவாக அந்த கேரவனில் இருந்து கீழ இறங்கிய வெற்றி “அமுதா படத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்டவுடனே நானும் அவளுக்காக சரின்னு சொல்லி தப்பு பண்ணிட்டேன் போல.. நான் அவளுக்கு மேனேஜராக இருந்தா அவ கூட இருந்து எல்லாத்தையும் பாத்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா அப்படியெல்லாம் நடக்க மாட்டேங்குது..
நான் இங்க பேருக்கு தான் மேனேஜர். மத்தபடி எல்லாமே இங்க விஜய் சார் நினைக்கிற மாதிரி தான் நடக்குது. அவர் வச்சது தான் சட்டென்ற மாதிரி அவர் பேசுறாரு. இப்படியே போயிட்டு இருந்துச்சுன்னா, எல்லாமே நாசமா போய்டும். அம்மா பயப்படுற மாதிரி மாமா சொன்ன மாதிரி அமுதா டோட்டலா மாறிடுவா. அப்புறம் எங்களுக்கு மேரேஜே ஆனாலும் கூட அவ என்ன டிவர்ஸ் பண்ணிட்டு போனாலும் போயிடுவா.. அப்படி நடந்தா நான் என்ன பண்றது? இல்ல.. அப்படியெல்லாம் நடக்க விடக்கூடாது. ஏதாவது பண்ணி அமுதா இந்த படத்துல நடிக்கிறதை ஸ்டாப் பண்ணனும்.
ஸ்டார்டிங்ல இருந்து அவளுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசிட்டு இப்ப நானே இது வேண்டாம்னு சொன்னா அவ என்ன தப்பா நினைப்பா. ஏற்கனவே அவளுக்கு என் மேல எந்த ஃபீலிங்ஸும் இல்ல. கடைசி வரைக்கும் நான் அவளுக்கு சப்போர்ட்டிவா இருக்கிற மாதிரி தான் காமிக்கணும். பட் அமுதாவை நடிக்க விடக் கூடாது. அது தான் எல்லாருக்கும் நல்லது. இப்ப என்ன பண்ணி இதை ஸ்டாப் பண்றது?” என்று யோசித்தவாறு ஒரு மரத்தடியில் இருந்த சேரில் சென்று அமர்ந்தான்.
-காதல் மலரும்