Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 43

சாபமாய் வந்த என் உயிரே CH 43

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 43 

ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. தங்களது கேரக்டரையும் மீறி ஒலிக்கும் பேக்ரவுண்ட் மியூசிக்கில் தங்களை மறந்து செட்டிங் மழை கொட்டிக் கொண்டிருக்கும்போது, விஜய் அமுதா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள். 

தங்களை மறந்து அவர்கள் அவர்களுக்கான உலகில் சஞ்சலித்துக் கொண்டிருக்க, கேமரா வழியாக அதை மிஸ் செய்யாமல் படமாக்கிக் கொண்டிருந்தான் டைரக்டர் ஸ்ரீகாந்த். அசிஸ்டன்ட் டைரக்டர் மைக்கில் “சார் அடுத்து டயலாக் பேசுங்க.” என்று சொல்லிவிட்டு அவன் பேச வேண்டிய டயலாக்குகள் அனைத்தையும் பின்னே இருந்து பேசிக் கொண்டு இருந்தான். 

அதை காதில் வாங்கிய விஜய் உடனே ஒரே நொடியில் ப்ரொபஷனல் ஆக்டராக மாறி  அமுதாவை பார்த்து தனது டயலாக்குகளை பேச தொடங்கி விட, அவனது காந்தக் குரலை அத்தனை அருகில் கேட்டவுடன் மெய் மறந்த அமுதா பதிலுக்கு தனது டயலாக்கை சொல்வதற்கு பதிலாக ஒரு அடி எடுத்து வைத்து தன்னையும் மீறி அவன் அருகில் சென்றாள். 

அந்த இடத்தில் இன்னும் செயற்கை மழை கொட்டிக் கொண்டு இருந்ததால், இடம் முழுவதும் சேரும் சக அதிகமாக இருந்த நிலையில், உடனே கால் வழுக்கி அமுதா ‌“ஆஆ..!!” என்று கத்தியபடி கீழே விழப்போக, சட்டென்று சுதாரித்துக் கொண்ட விஜய் அவள் இடுப்பில் கை வைத்து அவளை கீழே விழாமல் பிடித்துக் கொண்டான். 

அவன் அத்துடன் நார்மலாகி இருக்கலாம். ஆனால் அவனையும் மீறி அப்போது தான் ஒரு அழகான சம்பவம் நடந்தது. அமுதாவின் இடுப்பில் கைகளை வைத்து அவளை தடுத்து கீழே விழாமல் பிடித்த விஜய் அவளை சட்டென்று தன் பக்கம் இழுத்தான்.‌ அதில் நிலை தடுமாறிய அமுதா அவன் மீது விழ, நெருங்கி அவனை நோக்கி சென்ற வேகத்தில் அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே ஹைட்டில் இருந்ததால் அவளது இதழ்கள் இரண்டும் அவனுடைய இதழ்களை எதிர்பாராத விதமாக சந்திக்க வேண்டியதாகி விட்டது. 

எத்தனையோ முறை டைரக்டர் ஸ்ரீகாந்த் விஜயை வைத்து ஷூட்டிங் செய்து இருக்கிறான். தன்னை ஒரு ஆக்சன் ஹீரோவாக காட்டிக்கொள்ள விரும்பும் விஜய் ரொமான்ஸ் விஷயத்தில் ஸ்கிரீனில் கொஞ்சம் தனது கஞ்சத்தனத்தை காட்டுவான். அவனிடம் கெஞ்சி சமாதானப்படுத்தி ஒரு ரொமான்ஸ் காட்சி எடுத்து முடிப்பதற்குள் அவனுக்கு உயிரே போய்விடும். 

அப்படி இருக்கும்போது இப்படி ஒரு லட்டு மாதிரியான காட்சி நேச்சுரலாகவே எப்படி அமைந்தது என்று அவனுக்கு எப்படி யோசித்தாலும் புரியவில்லை. அதனால் டைரக்டர் ஸ்ரீகாந்த் தன்னை மறந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அனைத்தையும் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்த கேமராமேன் இந்த காட்சி கண்டிப்பாக படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து தானாகவே பல அங்கில்களில் அவருடைய டீமினருடன் சேர்ந்து வளைத்து வளைத்து ரெக்கார்ட் செய்தார். 

சட்டென்று இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்த்து இருக்காது அமுதா, விழிகள் விரிய, இதயம் படபடக்க பயத்துடன் விஜயை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன நினைக்கிறது என்றும் புரியவில்லை. அடுத்து அவள் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை. அவள் வாழ்க்கையின் முதல் முத்தம் எப்படி இருக்கும், அதுவும் அவளுக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்த பிரபல சினிமா ஸ்டார் உடன் இருக்கும் என அவள் தன் கனவிலும் கூட நினைத்ததில்லை. 

அவளது மையிட்ட கண்களில் என்ன கண்டானோ தெரியவில்லை விஜய் தன்னையும் மறந்து அவளது இடுப்பை இறுகப் பற்றி அவளை தன்னுடன் சேர்த்து அனைத்து கொண்டு தன்னிலை மறந்து பதிலுக்கு அவளுக்கு முத்தம் கொடுக்க தொடங்கினான். ஏற்கனவே ஷாக்காகி இருந்த அமுதா, அவனது அந்த திடீர் முத்தத்தால் அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள். 

அனைவரும் நடப்பதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, கலங்கிய கண்களுடன் வைத்தரிச்சலில் இது சினிமாவில் இருக்கும் ஒரு சீனா, இல்லை என்றால் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மயங்கி தாங்களாகவே முத்தமிட்டு கொண்டிருக்கிறார்களா என்று புரியாமல் தன் அத்தை மகளை இப்படி ஒருவன் தன் கண் முன்னே முத்தமிட்டு கொண்டிருக்கிறானே என நினைத்து வந்த கோபத்தையும், சோகத்தையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று வழி தெரியாமல் அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு கனத்த இதயத்துடன் சென்று விட்டான் வெற்றி. 

ஒரு எக்ஸ்பீரியன்ஸ்ட் சினிமா ஸ்டார் ஆக விஜய் இப்படி நடந்து கொண்டது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. ஆனால் அமுதா அவனுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல், எப்படி அவனுடன் இவ்வளவு க்ளோசாக இருக்கிறாள்? என்று நினைக்க நினைக்க அவனுக்கு இதையெல்லாம் பார்க்க உயிரோடு இருப்பதற்கு பதிலாக தானே ஏதாவது செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன என்று கூட தோன்றியது. 

அமுதா, விஜய் இருவரும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டு இந்த காட்சியை பார்த்து வெந்து புலுங்கி கொண்டிருந்த அபிநயா எதற்கும் இருக்கட்டுமே என்று நினைத்து அதை தனது மொபைல் ஃபோனில் போட்டோ பிடித்து வைத்துக் கொண்டாள். சினிமாவில் நடிக்க நல்ல முறையில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த மோனிஷா சீன் பேப்பரை நன்றாக படித்து இருந்தாள். 

அந்த பேப்பரில் எங்கேயும் இப்படி ஒரு கிஸ் சீன் இருப்பதாக எழுதி இருக்கவே இல்லை. அப்படி என்றால் சினிமா சூட்டிங் தாண்டி இவர்கள் இருவரும் தங்கள் போக்கில் இப்படி செய்கிறார்களா? என்று நினைத்த மோனிஷாவிற்கு அமுதாவை காண பொறாமையாக இருந்தது.  அதனால் உடனே அவள் வேகமாக எழுந்து தன் அப்பாவின் அருகில் சென்று “டாடி இங்க என்ன நடக்குது? அவங்க ரெண்டு பேரும் எல்லார் முன்னாடியும் மாறி மாறி கிஸ் பண்ணிட்டு இருக்காங்க..!! நீங்க இப்படி எல்லாம் சூட்டிங் பண்ணி நீங்களே அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுருவீங்க போல! 

இப்படி எல்லாம் சீன்லையே இல்லையே… ஏதாவது பண்ணி இத முதல்ல ஸ்டாப் பண்ணுங்க. எனக்கு அந்த வில்லேஜ் கேர்ளை விஜய் சார் கூட பார்க்க பார்க்க டென்ஷன் ஆகுது. நான் போனா மட்டும் இவர் என்ன கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேங்குறாரு. அது என்ன இவ மட்டும் இவருக்கு ஸ்பெஷலா?” என்று கோபமாக கேட்டாள். 

தன் மகளின் கோபத்தை கண்ட பிறகு தான் ஷாக்கில் இருந்து வெளியில் வந்த டைரக்டர் ஸ்ரீகாந்த் “அதானே.. இதுவரைக்கும் விஜய் யார் கூடையும் இப்படி எல்லாம் பண்ணதில்லையே.. ஆன் ஸ்கிரீன்ல ரொம்ப ரொமான்ஸ் பண்ணா audience-க்கு அவன் மேல இருக்கிற மரியாதை போயிரும்னு பெட் சீன் வச்சா கூட வேண்டாம்னு சொல்லுவானே.. மோனிஷா கேக்குற மாதிரி அப்படி என்ன இந்த பொண்ணு மட்டும் ஸ்பெஷலா?” என்று நினைத்து எரிச்சல் அடைந்து உடனே தன் கையில் இருந்த மைக்கில் சத்தமாக “கட்.. கட்.. கட்..!!” என்று கத்தினார். 

அவனது குரலில் பயந்து போன அமுதா சட்டென்று விஜயை விட்டு விலகினாள். அதனால் அவன் இவளை இப்போது குறுகுறுவென்று பார்க்க, ராக்கெட் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது அவளுடைய ஹார்ட் பீட். விஜய் தன் வாயை திறந்து அவளிடம் ஏதோ பேச வர, இருந்த பயத்தில் பிளட் பிரஷர் ரைஸ் ஆகி அப்படியே சட்டென்று மயங்கி தரையில் விழுந்தாள் அமுதா.  ‌ 

இப்போது அதைக் கண்டு அதிர்ச்சி அடைவது விஜயின் முறை ஆகிவிட்டது. உடனே அவன் தாமதிக்காமல் குனிந்து அமுதாவின் முகத்தில் தட்டி “ஏய்.. அமுதா என்னடி ஆச்சு? ஒழுங்கா சாப்பிடாம வந்து வெயிலுக்கு மயங்கி விழுந்துட்டியா? ஏய்.. இந்தா டி எந்திரி!” என்றான். அவர்கள் தலை மீது செயற்கை மழை பொழிந்து கொண்டு இருக்கும் போது கூட அமுதாவிற்கு மயக்கம் தெளிந்த பாடில்லை.

அதனால் உடனே விஜய் சிறிதும் யோசிக்காமல் அவளை தூக்கி தன் தோள்களில் போட்டுக் கொண்டு அவனுடைய கேரவனை நோக்கி செல்ல தொடங்கினான். அதைக் கண்ட ஸ்ரீகாந்த்திற்கு “ஏற்கனவே எல்லாம் தப்பு தப்பா நடக்குது. இதுல விஜய் கூட இந்த பொண்ண தனியா விடக் கூடாது. இவன் கூட நானும் இவங்க வீட்டுக்கு போய் தான் உங்க பொண்ணுக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்லி அவங்க வீட்ல இருக்குறவங்கள கன்வின்ஸ் பண்ணி நடிக்க வச்சிருக்கேன். 

ஏதாவது பிரச்சனை நடந்து கிராமத்துக்குள்ள இருக்குறவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சுன்னா, அப்புறம் எல்லாரும் ரவுண்ட் கட்டி வெட்டுறேன் குத்துறேன்னு இறங்கிடுவாங்க. ஏற்கனவே நம்ம மேல காண்டுல இருக்குற பிரசிடெண்ட் இதுதான் சாக்குனு பழி வாங்க நினைச்சு நம்மள காப்பாத்த கூட வர மாட்டான்.” என்று தோன்ற, 

உடனே தனது அசிஸ்டன்டுகளில் ஒருவனை அழைத்து “டேய் உடனே லோக்கல்ல நமக்கு தெரிஞ்ச டாக்டர் யாராவது இருந்தா கால் பண்ணி வர சொல்லு.” என்றான். பின் மற்றொருவனை அழைத்து “டேய் இந்த பொண்ணு நாமதான்வோட மேனேஜர் எங்கடா போய் தொலைஞ்சான்? அவளோட அத்தை பையன் தானே அவன்.. இவ மயங்கி விழுந்து கிடக்கிறா அவன் எங்க போய் தொலைஞ்சான்? போய் அவனை உடனே கூட்டிட்டு வா.” என்று சொல்லி அனுப்பினான். 

பின் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வேகவேகமாக விஜயின் கேரவனை நோக்கி ஓடினான். அங்கே உள்ள பெட்டில் அமுதாவை படுக்க வைத்த விஜய் மீண்டும் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்ப முடிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவளை தூக்கிக் கொண்டு வந்து பெட்டில் போட்ட போது லேசாக அவள் அணிந்து இருந்த தாவனி விலகி அவளுடைய பலிச்சென்ற வெண்ணை போன்ற இடுப்பு வளைவு அழகாக அவனுக்கு தெரிந்தது. 

முதலில் அவன் அதை கவனிக்கவில்லை. டைரக்டர் உள்ளே வந்து “சார் அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு? இன்னும் மயக்கம் தெளியலையா? நான் டாக்டருக்கு கால் பண்ணி வர சொல்லி இருக்கேன்.” என்று சொன்னவுடன், தன்னைத் தவிர அந்த அறையில் வேறு ஒருவன் இருக்கிறான் என்று உணர்ந்த உடனேயே அவன் கண்கள் அவளையும் அறியாமல் அமுதாவின் உடலை ஸ்கேன் செய்தது.. 

மழையில் நன்றாக நினைந்து இருந்ததால் அவளுடைய ஆடை அவள் உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அப்படி அவளை பார்க்க அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது. அதனால் சட்டென்று அங்கே கிடந்த போர்வையை எடுத்து அவள் மீது போட்டு மூடிய விஜய் “பல்ஸ் எல்லாம் நார்மலா தான் இருக்கு. பட் இவ எதுக்கு மயங்கி விழுந்தான்னு தெரியல. டாக்டர் வர்ற வரைக்கும் இவ இங்கே இருக்கட்டும்.‌ டிரஸ் ஈரமா இருக்குறதனால அவளுக்கு உடம்பு சரியில்லாம போயிட போகுது.. ஏற்கனவே இந்த ஷூட்டிங் டிலே ஆகிட்டே இருக்கு. இவளுக்கு உடம்பு சரி இல்லாமல் போயிட்டா இதுக்கும் டிலே ஆகும். Assistant directors-ல‌‌  ஒரு பொண்ணு இருந்தாளே.. அவளையும், அமுதாவோட மேக்கப் பார்த்திட்டயும் கூப்பிட்டு டாக்டர் வர்றதுக்குள்ள ‌ இவளுக்கு டிரஸ் சேஞ்ச் பண்ண சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு திரும்பி அமுதாவின் முகத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியில் சென்றான். 

விஜய் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பான் என்று டைரக்டருக்கு நன்றாக தெரியும். ஆனால் வாய்ப்பு கிடைத்தும் இவன் அமுதாவிடம் நல்ல முறையில் நடந்து கொண்டு அதை பார்த்துவிட்டு “இவன் பாக்குறதுக்கு ஒரு மாதிரி இருந்தாலும், நார்மலான நல்ல பொண்ணுங்க கிட்ட கரெக்டா இருக்கான். என் பொண்ணை இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைத்துல தப்பே இல்ல.” என்று நினைத்த டைரக்டர் ஸ்ரீகாந்த் விஜய்யை பின் தொடர்ந்து வெளியில் சென்று தனது அசிஸ்டன்ட்டாக இருக்கும் ஒரு பெண்ணிடம் விஷயத்தை சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைத்தான். 

வெற்றியை தேடிச் சென்று இருந்த அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருவன் அவனை கண்டு பிடித்து விஷயத்தை சொல்லி அழைத்து வந்தான். ஏற்கனவே மனம் உடைந்து இருந்த வெற்றி இப்போது அவன் சொன்னதை கேட்டு இன்னும் பதட்டப்பட்டு அங்கே ஓடி வந்தான். 

– காதல் மலரும் 🌹 

You may also like

Leave a Comment

About Me

Featured