அத்தியாயம் 27
ஏற்கனவே டென்ஷனில் இருந்த விஜய்க்கு கால் செய்து அவனை இன்னும் கடுப்பேற்றிக் கொண்டு இருந்தாள் அனாமிகா. அவளிடம் பேசிக் கொண்டே சைடில் அவளது லொகேஷனை தன் அசிஸ்டன்ட் தினேஷை வைத்து கண்டு பிடித்த விஜய் இதற்கு மேல் இவள் போடும் மொக்கையை எல்லாம் எதற்கு கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும்? என நினைத்து “உனக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கிறத பத்தி எல்லாம் என்னால உடனே டிசைட் பண்ண முடியாது.
நீ டிசைன் டிசைனா எப்படி பேசினாலும் இப்ப நீ பண்ணது தப்பு தான். சோ என்ன பண்ணி அந்த தப்பை சரி பண்றதுன்னு முதல்ல யோசி. நீ கிரியேட் பண்ண ப்ராப்ளம் எப்ப சால்வ் ஆகுதோ, அப்ப தான் நான் உன்ன பத்தி யோசிப்பேன். இப்போ நீ திருந்துறதுக்கு லாஸ்ட்டா நான் உனக்கு ஒரு ஆப்பர்சுனிட்டி கொடுக்கிறேன்னு நினைச்சுக்கோ.” என்று அவளிடம் சொன்ன விஜய் தனது வாட்சில் டைம் என்னவென்று பார்த்தான்.
அனாமிகா தங்கி இருக்கும் லொகேஷனிற்க்கு செல்ல அவன் இருக்கும் இடத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆவது ஆகும். அதனால் “உனக்கு நான் 2 ஹார்ஸ் டைம் கொடுக்கிறேன். நம்மளோட ரிலேஷன்ஷிப்பை பற்றி நான் அகைன் கண்சிடர் பண்ணனும்னு நீ நெஜமாவே ஆசைப்பட்டா, அந்த ஃபோட்டோவ போட்டதுக்கு பப்ளிக்கா நீ சாரி என்கிட்ட கேக்கணும். அந்த போட்டோ இதுக்கு முன்னாடி எடுத்ததுன்னு சொல்லணும். நீ இந்த தடவையாவது என் பேச்சைக் கேட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிறியான்னு பார்க்கலாம். And remember one more thing, this is my last warning.” என்று சொல்லிவிட்டு அவள் அழைப்பை துண்டித்தான்.
இதற்கு மேல் யாரிடமும் பேசும் அளவிற்கு அவனுக்கு பொறுமை இல்லை என்பதால் விஜய் மீண்டும் தன் மொபைல் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து வைத்து விட்டான். அங்கே தனது தோழி ஒருத்திக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் தனியாக தங்கி இருந்த அனாமிகா “இப்ப நம்ம என்ன பண்றது? அவன் சொன்னதை கேட்கலாமா? ஆனா அப்படி பண்ணிட்டா நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டது எல்லாம் வீணா போயிடுமே! விஜயை hold பண்றதுக்கு எனக்கு இருக்கிற ஒரே option இதுதான். இப்ப நானே போய் நான் பண்ணது தப்புன்னு எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்டுட்டா, again எல்லாரும் என்ன தான் தப்பா நினைப்பாங்க. அப்புறம் விஜய்.. அவனும் எனக்கு கிடைக்காம போயிருவான்.” என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினாள்.
அமைதியாக அமுதா வெளியில் எங்கும் செல்லாமல் தன் வீட்டிலேயே அமர்ந்து இருந்ததால் அவள் ஏதோ மனம் மாறிவிட்டாள் போல என்று நினைத்த அவளுடைய இரண்டாவது அண்ணி சுமதி அவள் அருகில் சென்று,
“என்ன டி வீராப்பா உங்க அண்ணன்மாறுங்க கூட எல்லாம் சண்டை போட்டு நான் கண்டிப்பா சினிமாவில நடிக்க போறேன் அப்படி இப்படின்னு பேசிட்டு இருந்த.. கம்பி மத்தாப்பு மாதிரி படபடன்னு வெடிச்சிட்டு இப்ப என்ன அப்படியே அமைதியா இருக்க? வீட்ல இருக்குற ஆம்பளைங்க தடுக்குறாங்களேன்னு பயந்துட்டியோ?” என்று நக்கலாக கேட்க,
“சேச்சே.. அப்படி எல்லாம் இல்ல அண்ணி. வெற்றி எனக்கு சப்போர்ட் பண்ற வரைக்கும் எனக்கு என்ன கவலை? இன்னைக்கு சூட்டிங் இல்ல. அதான் நான் எங்கயும் போகாம இங்கயே உட்கார்ந்து இருக்கேன்.” என்றாள் அமுதா.
“ஓஹோ அப்படியா? சரி சரி, நான் கூட அதுக்குள்ள மனசு மாறிட்டியோன்னு நினைச்சேன். இந்த ஆம்பளைங்க எப்பயுமே அவனுகள பத்தி மட்டும் தாண்டி யோசிப்பானுங்க. சரியான சுயநலவாதிங்க. அவங்களை விட நம்ம ஒரு படி மேல போனாலும் அவனுங்களுக்கு பிடிக்காது. என்னமோ பாதுகாப்பு அது இதுன்னு பேசினாங்களே.. வீட்டுக்குள்ள இருந்தா மட்டும் இந்த காலத்துல பாதுகாப்பு இருக்குதா? எந்த வேலைக்கு போனாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வரத்தான் செய்யும்.
அத பாத்து பயந்து எங்கேயும் போகாம அடைஞ்சு கிடக்க முடியுமா? ஏதோ எங்க பொழப்பு தான் இந்த சமயக்கட்டுக்குளே முடிஞ்சு போச்சு. உன்ன வெச்சாவது நான் வெளி உலகத்தை பார்க்கலாம்னு கனவு கண்டுட்டு இருக்கேன். இவனுங்க எல்லாம் கண்டத சொல்லி பயமுறுத்துறாங்கன்னு நீ பயப்படாத கண்ணு. எது நடந்தாலும் ஒரு கை பார்த்துடலாம். நீ ரொம்ப தைரியமா இருக்கணும். என்ன நான் சொல்றது புரியுதா?” என்று சுமதி அவளிடம் கேட்க,
அவளை கட்டிப்பிடித்துக் கொண்ட அமுதா “நீங்க எல்லாரும் என் கூட இருக்கும்போது நான் எதுக்காக அண்ணி பயப்பட போறேன்? என் ஆசைக்கு நம்ம வீட்ல இருக்குறவங்களே குறுக்க நினைக்கிறாங்களேன்னு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்ப நீங்க வெற்றி எல்லாம் எனக்கு சப்போர்ட் பண்றத பார்த்த உடனே அதுவும் சரியாயிடுச்சு. நான் முன்னேறுனதுக்கு அப்புறம் கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ஏதாவது பெருசா செய்வேன். உங்க யாரையும் சாகுற வரைக்கும் மறக்கவே மாட்டேன்.” என்று அன்புடன் சொன்னாள்.
அனாமிகாவின் லொகேஷனிற்க்கு செல்ல இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் தன் காரில் உள்ள ரேடியோவை ஆன் செய்த விஜய் அப்படியே சீட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டு தன் கண்களை மூடினான். அதில் நீ கவிதைகளா கனவுகளா கயல் விழியே! என்ற பாடல் பிளே ஆக, அப்படியே கண்களை மூடி படுத்து கிடந்த விஜயின் ஞாபகங்கள் பல வருடங்கள் முன்னோக்கி சென்றது.
இந்த பாடலை அவன் பிரியாவை நினைத்து அவளுக்காக பல முறை பாடி இருக்கிறான். அவனுக்கு நல்ல குரல் வளம் உண்டு. அவன் முதன் முதலில் நன்றாக பாட கற்றுக் கொண்டு பிரியாவிற்காக தான் இந்த பாடலை அவளுக்கு மட்டும் பர்சனலாக பாடிக் காட்டினான். அதை கேட்டு ரசித்த பிரியா “வாவ் விஜய்.. உன் வாய்ஸ் என்ன அப்படியே வெயில்ல வச்ச ஐஸ்கிரீம் மாதிரி உனக்காக உருகி கரைய வைக்குது! என்னால அந்த மொமென்ட்ல இருந்து இன்னும் வெளிய வரவே முடியல. நீ பாடுற விதம், உன் வாய்ஸ் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த பாட்டு என் காதுல திரும்பத் திரும்ப கேட்டுகிட்டே இருக்கு.
அந்த பாட்டை எழுதின ரைட்டரும், பாடின சிங்கரும் யார நெனச்சு அந்த மாஸ்டர் பீஸை கிரியேட் பண்ணி இருப்பாங்களோ தெரியல! பட் நீ இந்த பாட்ட எனக்காக பாடும்போது, இத கேக்குற ஒரே அதிர்ஷ்டசாலி நான் மட்டும் தானேன்னு நினைச்சாலே எனக்கு ஒரு மாதிரி செம்மையா feel ஆகுது. I feel so blessed to have you!” என்று சொல்லிவிட்டு அவனை கட்டியணைத்து அழுத்தமாக அவன் இதழ்களில் முத்தமிட்டாள்.
அவனும் அவளது இடுப்பை பிடித்து அவளை தன் பக்கம் இழுத்து இன்னும் ஆழமாக அவளை முத்தமிட தொடங்கினான். அவர்கள் இருவரும் தங்கள் இதழ் முத்தத்தின் நீளத்தை கூட்டிக் கொண்டே செல்ல, ஒரு கட்டத்திற்கு பிறகு மூச்சு வாங்கியதால் இருவரும் பிரிந்தார்கள்.
அப்போது அவளது தோள்களில் முகம் புதைத்து இருந்த விஜய் தனது இதழ்களை அவளுடைய சிவந்த காது மாடல்களில் உரசியவாறு “நீ சொன்னியே.. எவனோ ஒருத்தன் யாருக்காகவோ எழுதின பாட்டுன்னு.. இந்த செகண்ட் என் மனசுல உனக்காக ஒரு பாட்டு தோணுது. இது நானே உனக்காக எழுதினது. பாடவா?” என்று தனது இனிமையான காந்த குரலில் கேட்டான்.
ஏற்கனவே அவனது செயல்களால் அதிக எக்சைட்மெண்டில் இருந்த பிரியா இன்னும் பரவசமடைந்து அவன் முகத்தை ஆச்சரியம் கலந்த காதலுடன் பார்த்து “வாவ்.. on spot-ல எனக்காக ஒரு பாட்டு எழுதி நீ பாட போறியா? ப்ளீஸ் ப்ளீஸ் விஜய் சீக்கிரம் பாடு.. I am so excited.” என்று சொல்லிவிட்டு துள்ளி குதிக்க,
உடனே அவளை விட்டு விலகி நின்ற விஜய் ஓரமாக இருந்த கிட்டாரை கையில் எடுத்துக் கொண்டு அவனுடைய பிரைவேட் மியூசிக் ரூமில் இருந்த மைக் முன்னே சென்று நின்று அதை வாசித்தவாறு,
“துளி துளி மழையாய் என் மனதில் விழுந்தாய்..
உன் அருகில் மீண்டும் மழலையாகிறேன் மெதுவாய்..
என் தேவதை நீதானடி..
உன் காதலால் உருகுகிறேன் நானடி..
என் ஆனவம் உன்னால் கரைந்தே போனதே..
தினம் தினம் ஆயிரம் மாற்றங்கள் தொடருதே..
எல்லா உன்னாலே.. என் பெண்ணே..
நீ வந்ததால் என்னானது?
என் சோகம்தான் எங்கேயோ போனது…
நீ சென்றால் நான் என்னாகுவேன்?
நினைக்கவே வலிக்குதே.. நெஞ்சமே..
என் உயிரே.. நீதானே..
டப்..டப்.. இதயத்துடிப்பில் கேக்குதே உன் பெயர்..
உன் பெயருடன் என் பெயரை இணைக்கவே துடிக்கிதே என் மனம்..
காதலால் தள்ளாடுறேன்..
உன் முன்னே கொஞ்சம் வழியுறேன்..
என்ன பாத்துக்கோடி..
உன் கூட சேர்த்துக்கோடி..
நம் இதயங்கள் இணைந்து ஒன்றாக துடிக்குமே..
துளி துளி மழையாய் என் மனதில் விழுந்தாய்..
உன் அருகில் மீண்டும் மழலையாகிறேன் மெதுவாய்..
என் தேவதை நீதானடி..
உன் காதலால் உருகுகிறேன் நானடி..!!” (இந்த பாடலை எழுதியது நான்தான். யாராவது எழுத்தாளர்கள் படித்தால் புதிய பாடலாக இருக்கிறது என்று நினைத்து ஆட்டைய போட்டு விட வேண்டாம். நான் காப்பிரைட்ஸ் வாங்கி இருக்கிறேன்.)
என்று சில நொடிகளிலேயே தன் மனதில் அவளை நினைக்கும் போது தோன்றிய அனைத்தையும் விஜய் அவளுக்காக ஒரு அழகிய பாடலாய் பாடினான். அவன் பாட பாடப் கலங்கிய கண்களுடன் அவன் தன்னை எந்த அளவிற்கு காதலிக்கிறான் என்று உணர்ந்து அப்படியே அவன் அன்பில் திளைத்து போய் நின்று இருந்த பிரியா ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டு எதுவும் பேசக் கூட முடியாமல் கதறி கதறி அழுதாள்.
“ஏய் ஏண்டி.. எதுக்கு இப்ப இப்படி அழுகிற? என் சாங் என்ன அந்த அளவுக்கு கேவலமா இருக்கா என்ன? இப்ப தானே டி என் வாய்ஸ் நல்லா இருக்குன்னு சொன்ன!” என்று விஜய் ஒன்றும் புரியாமல் அவளிடம் கேட்க, “இந்த பாட்டு நிஜமாவே ரொம்ப நல்லா இருந்துச்சு. எனக்கு ஹார்ட் டச்சிங்கா இருக்கு டா. நான் செத்தாலும் இந்த பாட்ட மட்டும் மறக்கவே மாட்டேன். ப்ளீஸ் விஜய் இந்த பாட்ட நீ எந்த படத்துலையும் யூஸ் பண்ணிடாத. இந்த பாட்டு உன் குரல்ல எனக்கே எனக்குன்னு மட்டும் எப்பயும் சொந்தமா இருக்கணும்னு ஆசையா இருக்கு.” என்று அவள் கண்களில் காதல் ஏக்கங்களை தேக்கி வைத்து அவனிடம் தன் ஆசையை கோரிக்கையாக வைத்தாள்.
உடனே எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் கன்னங்களை தன் இரு கைகளிலும் ஏந்திய விஜய், அவன் குரலில் பாடல்கள் வந்தால் கண்டிப்பாக அந்த படம் இன்னும் ஹிட் ஆகும். அவனுடைய நல்ல குரல் வளத்தை பாடல்கள் பாட பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சொன்னதால் தான் அவன் இப்படி பாடவே கற்றுக் கொண்டான். ஆனால் பிரியா அப்படி சொன்னவுடன் அவன் மனம் ஒரு நொடியில் மாறிவிட்டது.
உடனே “இங்க பாரு.. இப்ப நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ… உனக்காக இதுவரைக்கும் நான் ஸ்பெஷலா ஏதாவது பண்ணி உன்னை இம்ப்ரஸ் பண்ணி இருக்கேனான்னு எனக்கு தெரியல. பட் நான் இதை உன்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக சொல்லல. உனக்கே உனக்குன்னு என் கிட்ட இருந்து ஏதாவது ஸ்பெஷலா கொடுக்கணும்னு நினைக்கிறேன். அதுக்காக மட்டும் நான் இதை டிசைட் பண்ணி இருக்கேன். இனிமே என் பாட்டு உனக்கு மட்டும் தான். என் வாய்ஸ்ல நானே எழுதுன பாட்டா இருந்தாலும் சரி, வேற சினிமா பாட்டா இருந்தாலும் சரி, உன்னை தவிர வேற யாருக்காகவும் எப்பயும் நான் பாடவே மாட்டேன். இது நான் உனக்கு பண்ற ப்ராமிஸ்.” என்றான் விஜய்.
அவன் தான் சொன்னதை கேட்டு இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பான் என்று எதிர்பார்த்து இருக்காத பிரியா “ஏய் லூசா டா நீ..என்ன பேசுற? இதுக்காகவா நீ கஷ்டப்பட்டு மியூசிக் கத்துக்கிட்ட? நான் உன்ன இனிமே பாடவே கூடாதுன்னு சொல்லல. இது நீ எனக்காக பாடின சாங். சோ உன் மேல இருக்கிற possessiveness-ல இந்த பாட்டை எப்பவும் நான் மட்டும் தான் கேட்கணும்னு நினைச்சேன். அதுக்காக நீ ஏன் எப்பயும் பாடவே கூடாதுன்னு லூசு மாதிரி ப்ராமிஸ் பண்ற? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ ஒரு ஆக்டர் விஜய். நீ இப்படி எல்லாம் ரொம்ப பர்சனலா யோசிச்சு உன் கரியர்ல டிஸிசன் எடுக்க கூடாது.” என்று சொல்லி அவன் மனதை மாற்ற பார்க்க, “அதெல்லாம் முடியாது. நான் ஒன்ஸ் டிசைட் பண்ணா பண்ணது தான். நான் வேற யாராவது ஒருத்தருக்கு ப்ராமிஸ் பண்ணா கூட அதை பிரேக் பண்ண மாட்டேன். இது நான் உனக்கு பண்ணிருக்க ஃபர்ஸ்ட் ப்ராமிஸ் டி. இத போய் எப்படி நான் பிரேக் பண்ணுவேன்? நீயே சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.” என்று உறுதியாக சொல்லி விட்டான் விஜய்.
– காதல் மலரும்
***