Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 19

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 19

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 19 

அர்ஜுனினிடம் தனது அவல நிலையை பற்றி சொல்லி புலம்பிய தேன்மொழி சோர்வாக இருந்ததால் அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்து உறங்கினாள். 

அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, யாரோ ஒருவர் அவளை இறுக்கமாக கட்டி அனைத்ததை போல அவளுக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. 

முதலில் சோர்வாக இருந்த தேன்மொழி அதை கண்டுகொள்ளவில்லை. 

அவள் தன் கண்களை மூடி அவள் பாட்டிற்கு தன் உறக்கத்தை தொடர, அவள் கழுத்தோரம் நீர் துளிகள் வலிந்து ஓடியதை உணர்ந்து திடுக்கிட்டு தன் கண்களை திறந்து பார்த்தாள். 

அவளுக்கு யாரோ தன்னை அணைத்துக் கொண்டு இருப்பதைப் போல இருந்ததால், வழக்கம்போல ஆருத்ரா தான் அவளைத் தேடி இங்கே வந்து உறங்கி இருப்பாள் என்று நினைத்துக் கொண்ட தேன்மொழி 

“ஹே ஆரு.. மறுபடியும் இன்னைக்கு நீ இங்க வந்து படுத்துட்டியா?” என்று சாதாரணமாக கேட்டபடி லேசாக அசைந்து தன் தலையை திருப்பி பார்த்தாள். 

அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய, அவளுக்கு அந்த நொடி பேச்சு வராமல் போய்விட்டது. 

அவளது உடம்பெல்லாம் பயத்தில் நடுங்க தொடங்கிவிட, அங்கே ஏசி ஓடியும் அவளுக்கு வேர்த்து கொட்டியது. 

அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு இருந்த அர்ஜுன், “சியா.‌. சியா.. ஐ அம் சாரி சியா… 

நான் உன்னை கொல்லனும்னு நினைக்கல. 

இது எப்படி நடந்துச்சுன்னே எனக்கே ஒன்னும் புரியல. 

நான் தெரியாம பண்ணிட்டேன் டி.‌

தயவுசெஞ்சு என்ன மன்னிச்சிடு..!!” என்று துக்கம் தொண்டையை அடைக்க கலங்கிய கண்களுடன் சொன்னான்.‌ 

அவன் கண்களில் இருந்து அருவி போல கொட்டிய கண்ணீர் அவள் கழுத்தோரம் வழிந்து ஓடியது.‌ 

ஏற்கனவே பயத்தில் இருந்த தேன்மொழி அவன் ஏதோ கொலை கொலை என்று பேசியதால் இன்னும் பயத்தில் நடுங்க, அவளது ஈரக்குலை எல்லாம் நடுங்கியது.

அவள் அவனை விட்டு விலக முயற்சி செய்ய, தன் ஆருயிர் காதல் மனைவி சியாவை மீண்டும் பிரிந்து விடக் கூடாது என்று நினைத்து பதட்டம் அடைந்த அர்ஜுன், 

அவள் லேசாக அசைந்து தன்னை விட்டு விலக முயற்சிப்பதை உணர்ந்து தன்னுடன் சேர்த்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். 

அவன் பிடி இரும்பு பிடியாக இருக்க, அவளால் ‌ ஒரு இன்ச் கூட அசைய முடியவில்லை. தொடர்ந்து அவளிடம் சியா சியா என்று சொல்லி புலம்பிய அர்ஜூன் “உன்னை நான் கொல்லலை.. 

நான் கொல்லலை.. என்ன தப்பா நினைச்சுராத டி. 

ப்ளீஸ்.. ஐ அம் சாரி…!! நான் தெரியாம பண்ணிட்டேன். 

அதுக்கு நீ என்ன பனிஷ்மென்ட் வேணாலும் எனக்கு குடு. 

பட் ப்ளீஸ் என்ன விட்டு மட்டும் போயிடாத.” என்று உடைந்த குரலில் அழுது கதறி கெஞ்சினான். 

அவனது குரலைக் கேட்டு அவள் தூக்கமெல்லாம் தூரமாக பறந்து ஓடிவிட, அவன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்த சியா என்ற பெயர் அவளுக்கு கொஞ்சம் பரிச்சயமாக இருந்ததால், 

“யார் அந்த சியா? இந்த பெயரை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே! 

இவர் எதுக்கு கண்ணை தொறந்ததும் உடனே நான் உன்னை கொல்லலை சியா கொல்லலை சியான்னு சொல்லி புலம்பிட்டு இருக்காரு..!!” என்று யோசித்த தேன்மொழிக்கு அந்த சியா யார் என்று ஞாபகம் வந்தது. 

உடனே பயத்தில் அவள் முகம் ரத்த சிவப்பாக மாறியது.

அதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அவள் அர்ஜுனை கண்டு பயந்தாள். 

அந்த பயம் அவளை வேறு எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் செய்துவிட, எப்படியாவது அவனிடமிருந்து தப்பித்து எங்கேயாவது ஓடி சென்று விட வேண்டும் என்று நினைத்த தேன்மொழி என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமல் அந்த அதீத பயம் கொடுத்த துணிச்சலில் அவளது ஒட்டுமொத்த பலத்தையும் பயன்படுத்தி அர்ஜுனை தன்னை விட்டு பிடித்து தள்ளினாள். 

கிட்டதட்ட 2 1/2 வருடத்திற்கு மேல் கோமாவில் இருந்த அர்ஜுன் கொஞ்சம் பலவீனமாக இருந்ததால், அவள் தள்ளியதில் உருண்டு கீழே சென்று விழுந்தான்.‌ 

அதைக் கூட கண்டுகொள்ளாமல் அவன் தன்னையும் சியாவை போல கொன்று விடுவானோ என்று நினைத்து பயந்து உடனே எழுந்து கதவை திறந்து வெளியே ஓடினாள் தேன்மொழி. 

கீழே விழுந்த அர்ஜுன் தன் இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயன்றான்.

இப்போது அவன் தேன்மொழி தள்ளிவிட்டதில் கீழே விழுந்ததாலும், இத்தனை நாட்களாக ஒரே இடத்தில் படுத்து கிடந்ததாலும், மூளை உடனே வேலை செய்து அவன் கை கால்களுக்கு கட்டளை அனுப்பி அதை இயக்க மறுத்தது. 

எழுந்து கொள்ள இரண்டு மூன்று முறை ‌ முயற்சி செய்தும் அது பயனளிக்காமல் கீழே விழுந்தான் அர்ஜுன். 

அதனால் அவன் உடல் முழுவதும் ஒரு கூர்மையான வலி ஏற்பட்டது.‌ 

அதைக் கூட பொருட்படுத்தாமல் தேன்மொழி வெளியே ஓடி சென்று விட்டதால், அந்த அறையின் வாசலை பார்த்து தன் ஒற்றை கையை நீட்டி 

“போகாத சியா… நில்லு டி.. 

மறுபடியும் என்ன விட்டு போயிடாத. 

இனிமே உனக்கு எதுவும் ஆகாம நான் பத்திரமா பார்த்துக்கிறேன்.” என்று தனது அடித் தொண்டையில் இருந்து கத்தினான்.‌

அவனுக்கு இப்போதே அவனது சியாவை ‌ அதாவது தனது சியாவாக அவன் நினைத்துக் கொண்டிருக்கும் தேன்மொழியை உடனே சென்று பார்க்க வேண்டும் போல இருந்தது. 

எப்போதும் அவளை தன் கை அனைப்பிற்குள் வைத்து தனது இதயத்திற்குள் பத்திரமாக பதுக்கி கண்ணுக்கு கண்ணாக அவளை காவல் செய்து காக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்ற, அவன் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காததால் அவனுக்கு அவன் மீதே கோபம் வந்தது. 

தரையில் ஊனி எழுந்து கொள்ள கூட உதவாத இந்த கைகள் இருந்து என்ன பயன்? என்று அவனுக்கு தோன்ற, 

வந்த கோபத்தில் தன் அருகில் இருந்த wodden டேபிளின் மீது ஆக்ரோசமாக குத்தினான் அர்ஜுன். 

அதனால் அந்த டேபிளின் மேலே இருந்த பொருட்கள் எல்லாம் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்து உடைந்தது.‌ 

அது இரவு நேரம் என்பதால் அந்த அறைக்குள் உள்ள சிறிய அறையில் வழக்கம் போல படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நான்சி வெளியில் தொடர்ந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், 

தூக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். இப்போது அர்ஜுனின் அருகில் தேன்மொழி இருந்தாலும் கூட, அவனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவளிடம் தான் இருக்கிறது. 

அவனுக்கு என்ன ஆனாலும் நான்சி தான் அர்ஜுனின் குடும்பத்திற்கு பதில் சொல்ல வேண்டும். 

அதனால் அரைகுறையான இரவு உடையில் தூங்கிக் கொண்டிருந்த நான்சி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்படியே எழுந்து வெளியே ஓடி வந்து பார்த்தாள். 

மீண்டும் தனது சியாவை எங்கே தான் இழக்க நேரிடுமோ என்ற பயத்தில் இருந்த அர்ஜூன் “சியா.. ஏய் சியா.. எங்க டி போன.. 

யாராவது வாங்க டா.. அவள புடிங்க.

இன்னைக்கு என்ன ஆனாலும் சரி, நான் அவளை என்னை விட்டுப் போக விட மாட்டேன். 

சியா..‌சியா… நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்.‌ 

ப்ளீஸ்.. என் கிட்ட வா ‌டி.. 

எதுக்கு என்ன பாத்து பயந்து ஓடிப்போன..??

இனிமே நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன். 

என்னை நம்பு மா… ஒரே ஒரு தடவை நம்பு ப்ளீஸ்..!!” என்று  மீண்டும் மீண்டும் சொன்னபடி ஏதோ வெறி பிடித்தவனை போல அவனது இரு கைகளாலும் தரையில் ஆக்ரோஷமாக தட்டிக் கொண்டு இருந்தான். 

‌ அவனை அப்படி பார்த்தவுடன் ஷாக்கான நான்சி “அர்ஜுன் சாரா இது? இவர் ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரும் நம்பிட்டு இருந்த மாதிரி இவரோட பர்த்டே வர்றத்துக்கு முன்னாடியே இவர் நார்மல் ஆயிட்டாரா? 

என்னால இதை நம்பவே முடியல. தேன்மொழி வந்ததுக்கு அப்புறம் இப்படி ஒரு சேஞ்சஸ் வரும்னு நானும் எதிர்பார்த்து வெயிட் பண்ணிட்டு தான் இருந்தேன். 

ஆனா நெஜமா அது நடக்கும்போது எனக்கே ஒரு மாதிரி இருக்கு. 

கண்ணால பாக்குற எதையும் நம்ப முடியல.” என்று நினைத்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். 

பின் அவன் தன்னைத்தானே தாக்கிக் கொண்டு இருப்பதை உணர்ந்து வேகமாக அவன் அருகில் ஓடி சென்று 

“சார். சார்.. ப்ளீஸ் ஸ்டாப் இட்.. 

உங்கள நீங்களே எதுக்காக ஹார்ம் பண்ணிக்கிறீங்க? 

நான் உங்களோட நர்ஸ். உங்கள பாத்துக்கறதுக்காக இங்க ஸ்டே பண்ணி இருக்கேன். 

உங்களுக்கு என்ன தெரியாது. பட் ஸ்டார்டிங்ல இருந்தே நான் தான் உங்களை பாத்துக்குறேன்.

நீங்க இப்பதான் நார்மல் ஆகியிருக்கீங்க.

அதுக்குள்ள இப்படி டென்ஷன் ஆகிறது உங்க ஹெல்த் கண்டிஷனுக்கு நல்லது இல்ல. 

இங்கயே கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. 

நான் போய் டாக்டர் கிட்ட இந்த விஷயத்தை இன்ஃபார்ம் பண்ணி அவர் டீமை இங்க கூட்டிட்டு வரேன். 

மிஸ்ஸஸ் பிரசாத் ஒரு வாரமா உங்க ரூம்ல தான் இருந்தாங்க. 

நீங்க எப்ப நார்மல் ஆவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. 

இந்த விஷயத்தை உடனே அவங்க கிட்டயும் சொல்லணும்.” என்ற நான்சி அர்ஜுனின் கையை பிடித்து அவனை எழுப்பி அவன் கட்டிலில் அமர உதவி செய்தாள். 

அவன் கைகளை வைத்து தரையில் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்ததால், அவனது கைகள் சிவந்திருந்தது. 

அதை கவனித்த நான்சி “ப்ளீஸ் சார்.. மறுபடியும் ஏதாவது பண்ணி உங்கள நீங்களே ஹர்ட் பண்ணிக்காதீங்க.

நான் போயிட்டு ‌ உடனே வந்துடறேன்..!!” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு வெளியில் ஓடினாள். 

அவள் கையைப் பிடித்து தடுத்த அர்ஜுன் “நான் உடனே என் சியாவை பாக்கணும். 

இப்ப அவ எங்க இருக்கான்னு போய் முதல்ல பாரு. 

என்ன பார்த்த உடனே அவ பயந்து வெளிய ஓடிட்டா. அவ கிட்ட நான் அவளை எதுவும் பண்ண மாட்டேன்னு சொல்லி அவளை கூட்டிட்டு வா.” என்று ஆங்கிலத்தில் சொன்னான். 

அவன் சொல்லும் சியா யார் என்று அவளுக்கும் தெரியவில்லை. 

ஆனால் இந்த அறையில் அவளை தவிர அர்ஜூனுடன் இருக்கும் வாய்ப்புடைய ஒரே பெண் கண்டிப்பாக தேன்மொழியாக தான் இருக்க முடியும் என்று நினைத்த நான்சி “ஓகே ஓகே சார் நான் அவங்க எங்க இருக்காங்கன்னு பார்த்து கூட்டிட்டு வரேன். 

நீங்க ஸ்டிரஸ் ஆகாம கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.” என்று சொல்லி அவன் கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே ஓடினாள். 

அப்போதுதான் அவளுக்கு தான் அணிந்திருந்த உடையை பற்றிய ஞாபகம் வர, 

மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட நான்சி “நான் அர்ஜுன் சாரோட ரூம்ல ஸ்டே பண்ணி இருக்கும்போது, இப்படி அரைகுறையா டிரஸ் பண்ணிட்டு இருக்கிறதை யாராவது பாத்தாங்கன்னா அவ்வளவு தான்.” என்று யோசித்தவாறு தனது ரூமிற்கு ஓடிச் சென்று மேலே ஒரு நைட் கவுனை எடுத்து மாட்டிக் கொண்டு நேராக மெடிக்கல் டீம் இருக்கும் இடத்திற்கு சென்றாள். 

அவர்களிடம் அர்ஜுனுக்கு சரியாகிவிட்டது என்ற தகவலை தெரிவித்துவிட்டு அவர்களை அவனது அறைக்கு அனுப்பி விட்டாள். 

பின் அங்கே இருந்த இன்டர்காம் மூலம் ஜானகி மற்றும் ஆகாஷ் இருவருக்கும் கால் செய்து அந்த விஷயத்தை இன்ஃபார்ம் செய்தாள்.

– மீண்டும் வருவாள்.. ❤️அவனின் மஞ்சத்தில் தேன்மொழி

You may also like

Leave a Comment

About Me

Featured