Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 8

மூர்கனின் காதலி CH 8

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 8 

டாக்டர் கிட்ட ஃபோன்ல பேசிக்கிட்டு இருந்த விஷ்வா உதட்டுல ஒரு சின்னப் பொண்ணு முத்தம் கொடுத்துட, ஷாக் ஆன விஷ்வா அவனோட மொபைல் ஃபோனை கீழ தவற விட்டுட்டான். பயத்துல அவ கண்ணை மூடியிருக்க, விஷ்வா கண்ணு விரிஞ்சு “யாருடா இவ..!! என்ன பண்ணிட்டு இருக்கா..!!”ங்கிற மாதிரி அவளைப் பார்த்துக்கிட்டு இருந்தான்.

அவளைத் துரத்திட்டு வந்த ஆதி குரூப்ஸ் ஓனர் ஆதித்யா அப்படியே ஸ்டன்னாகி “மேகா..!!”ன்னு சத்தமா கத்த, “வாவ்.. இதுதான் விஷ்வா சார் சொன்ன அனௌன்ஸ்மென்ட்டா..!! சூப்பர்.”ன்னு நினைச்சு அங்க வந்திருந்த மீடியா ஆளுங்க எல்லாரும் அந்த முத்தக் காட்சிக்கு க்ளோசப் ஷாட் வெச்சு ரெக்கார்டு செஞ்சு லைவ்ல அந்த காட்சிகளை டெலிகாஸ்ட் செஞ்சாங்க.

ஆதித்யாவோட சத்தத்தால தன்னிலைக்கு வந்த மேகா வேகமா விஷ்வாகிட்ட இருந்து பிரிஞ்சா. ஆனா அப்பவும் இருந்த அவசரத்துல அவ அவனோட முகத்தைப் பார்க்கலை. பிசினஸ் வட்டாரத்துல இருக்கிற ஆதித்யாவுக்கு கண்டிப்பா விஷ்வா யாருன்னு தெரியாம இருக்க வாய்ப்பில்லை. அதனால “இவ எப்படி இவன் கூட..!!”ன்னு நினைச்சு இன்னும் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாம இருந்த ஆதித்யா, “நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு தெரிஞ்சுதான் பண்றியா மேகா..??”ன்னு கோபத்துல சத்தமா கேட்டான்.

“நான் என்ன பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும் மிஸ்டர் ஆதித்யா. என்ன கொஸ்டின் பண்றதுக்கு உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை.”ன்ன மேகா, அவன்கிட்ட இருந்து தன்னைத் தற்காத்துக்கிறதுக்காக தன் பக்கத்துல இருந்த விஷ்வாவோட தோள்கள்ல சாய்ஞ்சுக்கிட்டு “இவர்தான் என் Boy Friend. நாங்க சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்கப் போறோம். சோ என்கிட்ட ஏதாவது பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு பேசு.”ன்னு ஒவ்வொரு வார்த்தையும் அழுத்திச் சொன்னா.

‌“என்ன உளறுற.. விஷ்வா சார், உன் பாய் Friendடா..??”ன்னு நம்ப முடியாம ஆதித்யா கேட்க, “என்னது விஷ்வா சாரா..??”ன்னு நினைச்சு அதிர்ந்த மேகா, அப்போதான் அவ யார் கையைப் பிடிச்சிருக்கான்னு பார்த்தா. அவ அவனோட ஷோல்டர் உயரம் கூட இல்லை. அவ பக்கத்துல கோட் சூட்ல டிப்டாப்பா கம்பீரமா நின்னுக்கிட்டு இருந்த அந்த ஹேண்ட்சமான ஆறடி ஆம்பளையைப் பார்த்தவுடனேயே அவன் யாருன்னு கண்டுக்கிட்ட மேகாவுக்கு “ஐயையோ.. இவரா.. இவர்.. MV டெக் ஓனர் விஷ்வாதானே.. போச்சு.. பேய்கிட்ட இருந்து தப்பிச்சுப் போய் வாலண்டியரா நானே கொள்ளிவாய் பிசாசுகிட்ட மாட்டிக்கிட்டேன்.”ன்னு நினைச்சு ஜெர்க் ஆகி நின்னா.

இவை எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு இருந்த மகேஷுக்கு ஒரு அளவுக்கு என்ன நடந்திருக்கும்னு புரிய “விஷ்வா சார் இதுக்கு ரியாக்ட் பண்றதுக்குள்ள ஏதாவது பண்ணுடா மகேஷ்..!!”ன்னு நினைச்சு வேகமா விஷ்வா பக்கத்துல போனான். கோபத்துல விஷ்வா மேகாவைப் பார்த்து முறைச்சுக்கிட்டு இருக்க, “பாஸ்.. பாஸ்.. அந்தப் பொண்ண எதுவும் சொல்லிடாதீங்க…!! நம்ம ஏற்கனவே போட்டு வெச்ச பிளானுக்கு இந்த சிச்சுவேஷன் கரெக்டா சிங்க் ஆகிடுச்சு. இதை பிராப்பரா யூஸ் பண்ணிக்கிட்டா உங்களோட பிராப்ளம் எல்லாம் ஒரே செகண்ட்ல சால்வ் ஆகிடும். பேசாம நீங்களும் இந்தப் பொண்ணும் லவ் பண்றீங்கன்னு அனௌன்ஸ் பண்ணிடுங்க. அப்புறம் என்னன்னு அப்புறம் பார்த்துக்கலாம்.”ன்னு விஷ்வா காதுகள்ல கிசுகிசுத்தான் மகேஷ்.

“ஆஆஆ.. என்ன தொட்டுட்டாளே.. இவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..!!”ன்னு நினைச்ச விஷ்வாவுக்குப் பத்திக்கிட்டு வர, மகேஷ் சொன்னதை மனசுல வெச்சு “கண்ட்ரோல் யுவர்செல்ஃப் விஷ்வா.”ன்னு தனக்குத்தானே சொல்லி தன்னை நிதானப்படுத்திக்கிட்ட விஷ்வா ஒரு நொடி தன் கண்ணை மூடி திறந்தான். நொடிக்கு நொடி அவனோட ஃபேஷியல் எக்ஸ்பிரஷன்கள் சேஞ்ச் ஆகிக்கிட்டே இருக்கிறதைக் கவனிச்ச மேகா, “OMG.. இவருக்குப் பொண்ணுங்களே பிடிக்காதே.. நான் இவரைப் போய்க் கிஸ் பண்ணித் தொலைஞ்சுட்டேனே.. போச்சு.. இன்னைக்கு இவர் கையால எனக்கு டெத் கன்ஃபார்ம். இவர் பஸ்ட் ஆகுறதுக்குள்ள அப்படியே நைஸா இங்க இருந்து தப்பிச்சு ஓடிடனும்.”ன்னு நினைச்சு தன் கையை அவன்கிட்ட இருந்து மெதுவா உருவப் பார்த்தா.

அதை உணர்ந்து வேகமா அவள் இடுப்புல கைவெச்சு அவளைத் தன் பக்கம் இழுத்த விஷ்வா, அவள் சுதாரிச்சுக்கிறதுக்குள்ள தங்களைப் படம் பிடிச்சுக்கிட்டு இருந்த கேமராக்களோட பக்கம் அவளைத் திருப்பி “She is My girlfriend. இன்னும் ஒரு மாசத்துல எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ். இவளை இங்க சர்ப்ரைஸா வர வெச்சு எல்லாருக்கும் இவளை இன்ட்ரோ பண்ணிட்டு இந்தக் குட் நியூஸ சொல்லலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள மேடம்க்கு என்ன அவசரம்னு தெரியல. இங்க மீடியா இருக்கிறதைக் கூட நோட் பண்ணாம இப்படி பண்ணிட்டாங்க…!!”ன்னு சொல்லிட்டு லேசா சிரிச்சான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured