Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 25

சாபமாய் வந்த என் உயிரே CH 25

by Thenaruvi Tamil Novels
312 views

அத்தியாயம் 25: 

யாரோ ஒரு இளம் பெண் போதையில் இருந்த விஜயின் அறைக்கு வந்து அவனுடன் சேர்ந்து இருந்து போட்டோக்கள் எடுத்துவிட்டு அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்ததால், முதலில் அதை கண்டுபிடித்து வந்து அவனிடம் சொன்ன அவனது அசிஸ்டன்ட் தினேஷின் மீதே சந்தேகப்படுகிறான் விஜய். 

விஜய் அவன் கழுத்தை பிடித்து நெறித்து கொண்டு இருக்க, “ஐயோ பாஸ் நான் சொல்றத கேளுங்க.. பிராமிஸா எனக்கும்  இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க உங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொன்னதுனால மட்டும் தான் நான் நம்ம ஆளுங்கள இங்க இருக்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வச்சேன். ஆனா அந்த கேப்பை யூஸ் பண்ணி அனாமிகா மேடம் இங்க வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கல. நீங்க குடிச்சிட்டு போதைல இருந்ததை யூஸ் பண்ணி அவங்க அப்படி பண்ணிட்டாங்க. அதுக்கு நான் என்ன பண்றது? இந்த விஷயத்துல நீங்க என் மேல சந்தேகப்படுறது நியாயமே இல்ல பாஸ்.” என்று மூச்சு வாங்க அவன் கையைப் பிடித்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் சொன்னான் தினேஷ். 

விஜய் கோபத்தில் இருந்தால் அவன் ஒரு உயிரை எடுக்க கூட தயங்க மாட்டான் என்ற உண்மை அவனுக்கும் தெரியும் என்பதால், இந்த விஷயத்தில் தன் மீது எந்த தவறும் இல்லை என்று உடனே அவனுக்கு நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. 

தினேஷின் கண்களை உற்றுப் பார்த்த விஜய் “இவன் மூஞ்சிய பாத்தா இவன் பொய் சொல்ற மாதிரி தெரியல. அதுவும் இத்தனை வருஷமா இவன் என் கூடவே இருக்கானே.. என் கிட்ட பொய் சொல்லி என்னை ஏமாத்த நினைச்சா, இவன் நிலைமை என்ன ஆகும்னு இவனுக்கே நல்லா தெரியுமே.. அப்புறம் இவனுக்கு அப்படி எல்லாம் பண்றதுக்கு எப்படி தைரியம் வரும்?” ‌ என்று நினைத்து அவனை விடுவித்துவிட்டு, 

“உன் மேல தப்பே இல்லைன்னாளும், என்னோட செக்யூரிட்டி உன்னோட ரெஸ்பான்சிபிலிட்டியா இருக்கும்போது, நானே என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லி இருந்தாலும், என்னோட safetyல நீ கரெக்டா இல்லாம இருந்தது உன்னோட தப்பு தான். அதுக்கு நான் உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்கணும்னு நினைச்சா இப்ப எனக்கு இருக்கிற டென்ஷனுக்கு உன்னை போட்டு தான் தள்ளனும். பட் நீ போய் சேர்ந்துட்டா இந்த பிராப்ளமை யாரு சால்வ் பண்றது? 

சோ உன்னோட careless mistakeனால வந்த problemஐ நீ தான் சரி பண்ணனும். ஒழுங்கா அவ எங்க இருக்கான்னு தேடி கண்டுபிடிச்சு அவளை இந்த போட்டோ எல்லாம் நானும் அவளும் ரிலேஷன்ஷிப்ல இருக்கும்போது எடுத்தது. இப்ப எங்களுக்கு நடுவுல எதுவும் இல்லைன்னு அவளே மனசு மாறி சொல்ற மாதிரி சொல்ல வைக்கிற.. 

இப்படி ஒரு fake இன்பர்மேஷன் கொடுத்து மறுபடியும் எனக்கும் அவளுக்கும் நடுவுல ரிலேஷன்ஷிப் இருக்கிற மாதிரி சீன் கிரியேட் பண்ணதுக்கு அவ பப்ளிக்கா சாரி கேக்கணும். அவ கேட்கலை என்றாலும் நீ தான் அவள கேட்க வைக்கணும். என்ன புரிஞ்சுதா?” என்று கேட்டுவிட்டு அவன் கழுத்தில் இருந்து தன் கையை எடுத்தான். 

உடனே தன் தொண்டையைப் பிடித்துக் கொண்டு லொக் லொக் என்று இரும்பிய தினேஷ், “கண்டிப்பா கண்டிப்பா சார்.. இந்த பிராப்ளமை நானே ஹேண்டில் பண்ணி சரி பண்றேன். அனாமிகா மேடம் எங்க இருந்தாலும் நான் அவங் கிட்ட இது பத்தி நேர்ல போய் பேசுறேன். இன்னைக்குள்ள அவங்கள இப்படி பண்ணதுக்கு உங்க கிட்ட சாரி சொல்ல வைக்கிறேன். அந்த போஸ்டை பார்த்து ஒருவேளை நீங்களே மனசு மாறி அவங்கள ஏத்துக்கிட்டிங்களோன்னு எனக்கு ஒரு பயம் இருந்துச்சு. அதான் என் சைடுல இருந்து எதுவும் பண்றதுக்கு முன்னாடி உங்க கிட்ட இத பத்தி கேட்கணும்னு வந்தேன். இதுக்கு மேல இதை நான் பாத்துக்குறேன்.” என்று உறுதியாக சொன்னான். இன்னும் அவன் கண்களில் அப்படி ஒரு மரண பயம் தெரிந்தது‌. 

சரி என்று தலையாட்டிய விஜய் “எப்படியும் இந்நேரத்துக்கு நான் இங்க தான் இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு மீடியா பீப்பிள்ஸ் எல்லாரும் இந்த ஹோட்டலை சுத்து போட்டு இருப்பாங்க. சோ இதுக்கு மேல நான் இங்க இருக்கிறது எனக்கு safe இல்ல. இங்க சீக்ரெட் exit ஏதாவது இருக்கான்னு உடனே விசாரிச்சு பாரு. Immediateஆ இங்க இருந்து கொஞ்சம் தூரமா இருக்கிற ஏதாவது ஒரு luxurious villa-க்கு நான் shift ஆகணும்.” என்று சொல்ல, “ஓகே ஓகே பாஸ்.. நம்ம இந்த ஊர்ல சூட்டிங் ஸ்டார்ட் பண்ணும்போதே எதுக்கும் backupக்கு இருக்கட்டும்னு அந்த மாதிரி பிளேசஸ் லிஸ்ட் எடுத்து வச்சிருந்தேன். நான் உடனே அங்க நீங்க shift ஆகுறதுக்கு அரெஞ்ச் பண்றேன்.” என்ற தினேஷ் இதற்கு மேல் அங்கே இருந்து அவன் கண்களில் படக்கூடாது என்று நினைத்து ஓட்டமும் நடையுமாக அவன் அறையை விட்டு வெளியேறினான். 

இரவு முழுவதும் நாளை சூட்டிங்  நடக்கப் போகிறது என்று நினைத்து தூக்கமின்றி தவித்த அமுதா காலை ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து குளித்து தயாராகி வெற்றி வருவதற்காக தன் அறையில் அமைதியாக காத்திருந்தாள். ஏழு மணி அளவில் தூங்கி எழுந்து அவளை காணச் சென்ற வெற்றி “நாளைக்கு ஷூட்டிங் பத்தி நானே உங்களுக்கு கால் பண்ணி இன்ஃபார்ம் பண்றேன்னு அந்த அசிஸ்டன்ட் டைரக்டர் சொன்னாரு. ஆனா இப்ப வரைக்கும் எனக்கு எந்த காலும் வரல. அப்படின்னா அவங்க இன்னும் இன்னைக்கி ஷூட்டிங் பண்ணலாமா வேணாமான்னு முடிவு பண்ணவில்லை என்று நினைக்கிறேன். 

நான் ஒரு பத்து மணி வரைக்கும் அவர்‌ கிட்ட இருந்து கால் வருதான்னு வெயிட் பண்ணி பாக்குறேன். ஷூட்டிங் பத்தி யாருமே கால் பண்ணி எதுவும் சொல்லலன்னா, நான் அவருக்கு கால் பண்ணி கேட்கிறேன். தேவைப்பட்டா நேர்ல கூட போய் அங்க என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வரேன். நீ பொறுமையாய் இரு நம்ம என்னன்னு பாத்துக்கலாம்.” என்று அவளிடம் சொன்னான். 

“ஓகே வெற்றி, அவங்களாவே கால் பண்ணுவாங்க நம்ம வெயிட் பண்ணலாம்.” என்ற அமுதா நேற்று வெற்றி சொன்னதால் தனது ரூமிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டாம் என நினைத்து வெளியில் சென்று ஹாலில் உள்ள டிவியை ஆன் செய்துவிட்டு சோஃபாவில் அமர்ந்தாள். அப்போது ஸ்கூலிற்க்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்த அவளது அண்ணன் மகள் பிருந்தா “அத்தை நீ நெஜமாவே படத்துல நடிக்க போறியா?” என்று ஓடிச் சென்று அமுதாவிடம் கேட்டாள். 

“ஆமா‌ டி. விஜய் சாரோட படம் ஒன்னு நம்ம ஊர்ல ஷூட்டிங் நடக்குதுல்ல.. அதுல தான் நான் நடிக்க போறேன். நேத்து அவர் நம்ம வீட்டுக்கே வந்து இத பத்தி பேசினாரே! உனக்கு தெரியாதா அது?” என்று அமுதா அவளிடம் கேட்க, “இல்ல அத்த, நான் அப்ப என் ரெக்கார்ட் நோட் ஃபிரண்டு  கிட்ட இருந்துச்சுன்னு அதை வாங்கிட்டு வர்றதுக்கு அவ வீட்டுக்கு போயிட்டேன். நைட்டு தான் அம்மா என்கிட்ட நீ படத்துல நடிக்க போற.. ஹீரோயின் ஆகப்போறேன்னு சொன்னாங்க. என்னால அதை நம்பவே முடியல தெரியுமா!! நான் ஸ்கூலுக்கு போய் எல்லார் கிட்டயும் எங்க அத்தையும் சினிமா ஹீரோயின் தான்னு சொல்லப்போறேன். அப்புறம் எல்லாரும் உன் கிட்ட ஆட்டோகிராப் வேணும் ஃபோட்டோ வேணும்னு இங்க கிளம்பி வந்துடுவாங்க.” என்று உற்சாகமான முகத்துடன் சொன்னாள் பிருந்தா. 

“வெற்றிக்கு அப்புறம் நான் ஹீரோயின் ஆகப்போறத நினைச்சு இந்த வீட்ல சந்தோசப்படுற ஒரே ஆளு நீதான்டி.‌ இப்படி எல்லாம் மத்தவங்க சொல்லி கேட்கிறத பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? என்னமோ இப்பவே நான் ஹீரோயினான மாதிரி ஒரு ஃபீல் வருது.” என்று அமுதா சொல்லிக் கொண்டிருக்கும் போது டிவியில் “பிரபல சினிமா ஸ்டாரான விஜய் குருமூர்த்தி அவர்கள் அவரோட இரண்டாவது மனைவியான அனாமிகா ராஜேந்திரன் கூட திருமண வாழ்வு சுமூகமா செல்லாத காரணத்தால அவங்கள விவாகரத்து செய்ய விரும்புறதா கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னாடி கோர்ட்ல டிவைஸ் கேஸ் ஃபைல் பண்ணாரு. 

அதன் எதிரொலையா அனாமிகா ராஜேந்திரன் அவர்கள் டிவோர்ஸிற்க்கு சம்மதிக்காததுனால  அவங்களோட கேஸ் கடந்த சில மாதங்களாகவே கோர்ட்ல நிலுவையில் இருக்கு. இப்போ தான் பல நாட்களுக்கு அப்புறமா தன்னோட கணவன் விஜய் குருமூர்த்தி ஓட தனிமையில ஹோட்டல்ல இருக்கிறதாகவும், தங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனைகள் எல்லாமே சரியாகிவிட்டதாகவும், இந்த நாள் என் வாழ்க்கையில மறக்கவே முடியாத ஒரு அழகான நாள்.‌ முக்கியமா இந்த இரவை நமக்கு அழகானதா மாத்தி கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்னு caption ஓட அனாமிகா அவர்கள் போட்டு இருக்கிற சோசியல் மீடியா போஸ்ட் இப்ப வைரல் ஆகிட்டு இருக்கு. 

இது உண்மை‌ தானா? பிரிந்து இருந்த கணவன் மனைவி இருவரும் மறுபடியும் சேர்ந்துட்டாங்களா? இல்ல அனாமிகா மிஸ்டர் விஜயோட கவனத்த ஈர்க்குறதுக்காக இப்படி எல்லாம் போஸ்ட் போட்டு இருக்காங்களா ‌ என்னன்னு யாருக்குமே தெரியல. ஒரு சிலர் இதை பார்த்துட்டு மறுபடியும் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் நல்லா இருக்கும்னு சொன்னாலும், ஒரு சிலர் மிஸ்டர் விஜய் எடுத்த முடிவு தான் கரெக்ட். அவர் அனாமிகா அவர்களை விட்டு பிரிஞ்சு இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லதுன்னும் சொல்லிட்டு இருக்காங்க. இதற்கு மிஸ்டர் விஜய் தரப்பிலேயோ, இல்ல அனாமிகா தரப்பில்லையோ ஏதாவது ஒரு விளக்கம் வந்தால் தான் என்ன நடக்குதுன்னு நம்மளால ஒரு முடிவுக்கு வர முடியும் நேயர்களே!” என்று செய்தி வாசிக்கும் பெண்மணி ஒருத்தி லைவில் சொல்லிக் கொண்டிருந்தாள். 

அதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அமுதா “விஜய் சார் ஃபர்ஸ்ட் மேரேஜ் பண்ணும்போது அவருக்கு புடிச்ச பொண்ணு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனா அது ஏதோ செட் ஆகலைன்னு அவங்க டிவோர்ஸ் பண்ணி பிரிஞ்சிட்டாங்க. இரண்டாவது தடவை குருமூர்த்தி சார் அவருக்கு அவர் ஃபிரண்டோட பொண்ணு அனாமிகாவை கல்யாணம் பண்ணி வச்சாரு. இப்ப வரைக்கும் நிறைய பேர் விஜய் சார் அந்த பொண்ணு பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு சொல்றாங்க. 

அப்படி இருக்கும்போது, கோர்ட்ல டிவோர்ஸ் கேஸ் இருக்கிற சமயத்துல விஜய் சார் எப்படி இவங்க கூட இப்ப இவ்வளவு க்ளோசா இருக்க முடியும்? அங்க ஏதோ பிரச்சனை நடந்திருக்கு போல.. அதனால தான் சூட்டிங் கேன்சல் பண்ணி இருப்பாங்களா இருக்கும்.” என்று விஜய்யை பற்றி யோசித்துக் கொண்டு இருக்க, “ஓகே அத்தை சனிக்கிழமை நீ ஷூட்டிங் ஃபோனினா என்னையும் கூட்டிட்டுப்போ.. எனக்கு விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். அவர் கூட சேர்ந்து நான் ஒரு போட்டோ எடுக்கணும். நீதான் அதுக்கு ஏற்பாடு பண்ணனும். இப்ப நான் ஸ்கூல் போகணும் லேட் ஆயிடுச்சு பாய்!” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டால் பிருந்தா.  

விஜய் ஏன் தனது இரண்டாவது மனைவியை இந்த அளவிற்கு வெறுக்கிறான்? மீண்டும் அவனுடன் இணைவளா அனாமிகா? 

– காதல் மலரும்

***

You may also like

Leave a Comment

About Me

Featured