Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 24

சாபமாய் வந்த என் உயிரே CH 24

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 24: 

வெற்றி கொண்டு வந்து கொடுத்த அக்ரீமெண்டில் சைன் போட்டு கொடுத்த அமுதா நன்றி உணர்வுடன் வெற்றியை பார்த்து, “தேங்க்ஸ் வெற்றி.. நீ மட்டும் இல்லைனா, இது எதுவுமே நடந்திருக்காது. எனக்காக இவ்வளவு தூரம் உன்னை தவிர வேற யாரும் யோசிக்க மாட்டாங்க. எனக்காக எல்லாமே பண்ற பெரிய அண்ணா கூட இந்த விஷயத்துல எனக்கு எதிரா தான் இருந்தாரு. உனக்கு அவர் மேல எவ்வளவு மரியாதை இருக்குன்னு எனக்கு தெரியும். 

அப்படி இருந்தும், எனக்காக நீ அவரை எதிர்த்து இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க. எனக்காக இந்த அளவுக்கு நீ யோசிப்பேன்னு நான் இதுவரைக்கும் நினைச்சு கூட பார்த்தது இல்லை வெற்றி. நான் சின்னதா தேங்க்ஸ் சொன்னா கண்டிப்பா அதெல்லாம் பத்தவே பத்தாது. எனக்கு உனக்கு பெருசா ஏதாவது செய்யணும்னு ஆசையா இருக்கு. இப்போ எனக்கு இதுல 20 லட்சம் இந்த படத்துல நடிக்கிறதுக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்காங்க இல்ல.. பேசாம அதுல இருந்து நீ ஒரு பத்து லட்சம் எடுத்துக்கிறியா? நீதான் எனக்கு மேனேஜரா என் கூட இருக்க போறேன்னு எல்லார் கிட்டயும் சொல்லிட்ட. உனக்கு மாத சம்பளம் கொடுக்கிற அளவுக்கு என் கிட்ட காசு இல்ல. அதனால எனக்கு செட்டில்மெண்ட் வந்ததுக்கு அப்புறம் நீ இப்போ இந்த அமௌன்ட் வச்சுக்கோ. போகப்போக நம்ம என்ன பண்றதுன்னு டிஸ்கஸ் பண்ணி டிசைன் பண்ணிக்கலாம்.” என்றாள் அமுதா.

அவள் என்னவோ அவன் வேறு யாரோ ஒருவன் போல இப்படி பணத்தைப் பற்றி எல்லாம் கணக்காக பேசியவுடன் வெற்றியின் முகம் உடனே சுருக்கி விட்டது. 

“எனக்கு பெரிய மாமா மேல எவ்வளவு மரியாதை இருக்குன்னு எல்லாம் உனக்கு நல்லா தெரியுது. அது எல்லாத்தையும் தாண்டி எனக்கு உன் மேல இருக்கிற லவ் உனக்கு தெரியலையா டி? எனக்கு காசு கொடுத்து என்னை தூரமா தள்ளி நிறுத்த பாக்குறியா? உன் மனசுல என்ன தான் இருக்கு அமுதா?  எனக்கு உன்னை பிடிச்ச மாதிரி, உன் மனசுலையும் நான் தான் இருப்பேன் என்று நானே நம்பிட்டு இருக்கேன். ஆனா நீ பேசறத பார்த்தா சில சமயம் எனக்கு பயமா இருக்கு. மாமா சொல்லிட்டு போனது வேற மண்டையிலே ஓடிட்டு இருக்கு. ஒருவேளை எல்லாம் தப்பா நடந்துட்டா நான் என்ன பண்றது?” என்று நினைத்து உள்ளுக்குள் பயந்த வெற்றி, 

“நான் உன் கிட்ட எப்பயாவது எனக்கு சம்பளம் கொடு என்று அதை பத்தி பேசினனா? ஏண்டி இப்படி வெளி ஆள் கிட்ட பேசுற மாதிரி பேசுற? இப்ப நீ இதை கேட்டதுக்கு அப்புறம் தான் அந்த டைரக்டர் உன்னோட சேத்தி என்னையும் விஜய் சார் அவருடைய கம்பெனில வேலைக்கு சேர்த்து இருக்கிறதா சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது.

உனக்கு நான் மேனேஜரா வேலை பாக்குறதுக்கு விஜய் சார் கம்பெனியில இருந்தே சம்பளம் குடுத்துருவாங்களாம். நீ ஒன்னும் எனக்கு காசு தர வேண்டாம். அப்புறம் நானும் ஒன்னும் இதையெல்லாம் காசு பணத்துக செய்யல பாத்துக்கோ!” என்று கோபம் கலந்த சோகத்துடன் சொன்னான்.

“ஐயோ வெற்றி ஏன் டென்ஷனாகுற? நான் ஒன்னும் வெளி ஆளுக்கு சம்பளம் கொடுக்கிற மாதிரி உனக்கு கொடுக்கணும்னு நினைக்கல. நாமெல்லாம் ஒரே குடும்பம். நான் எப்படி அப்படி நினைப்பேன்? நீ உன் வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்து இருக்க போற.. அப்ப உன்னை நான் தானே பார்த்துக்கணும்! உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதான் கேட்டேன். நான் எவ்வளவு சம்பாதித்தாலும் அதெல்லாம் இந்த குடும்பத்துக்காக தானே! உங்க எல்லாரையும் விட்டா தனியா எனக்குன்னு என்ன இருக்கு?” என்று உடனே அவளும் தன் பங்கிற்கு அவனிடம் கேட்க, 

“அதெல்லாம் சரி தான். ஆனா ஒன்னு மட்டும் எப்பவும் மனசுல வச்சுக்கோ அம்மு.. நீ எப்பயும் சந்தோசமா இருக்கணும். நீ ஆசைப்பட்டது எதுவா இருந்தாலும் அது நடக்கணும். அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். அதுக்காக மட்டும் தான் எல்லாரையும் மீறி இது எல்லாத்தையும் செஞ்சுட்டு இருக்கேன். நீ இப்படி ரூம்குள்ளயே அடைந்து கிடந்தினா, காலையில ஷூட்டிங் போகும்போது பிரச்சினையாகும். 

யாரையாவது பாத்தினா முன்ன மாதிரி சகஜமா பேச அப்பப்ப ட்ரை பண்ணு. அவங்களே கோபப்பட்டு ஏதாவது பேசினாலும் நீ எதுவும் பேசாத. ஆனா தூங்குற நேரத்துல இப்ப பிரச்சனை வேணாம். ‌ நான் போய் சமயல் கட்டுல யாராவது இருக்கிறாங்களான்னு பார்க்கிறேன். யாரும் இல்லைனா உனக்கு சாப்பாடு போட்டு கொண்டு வந்து கொடுக்கிறேன். முதல்ல சாப்பிடு.” என்ற வெற்றி கிச்சனுக்கு சென்று அவளுக்கான உணவுகளை எடுத்து தட்டில் போட்டுக் கொண்டு அவள் அறைக்கு சென்றான். 

நல்ல பசியில் இருந்த அமுதா வெளியில் சென்று கை கழுவி விட்டு வந்து சாப்பாட்டு தட்டை மடியில் வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்து சாப்பிட்டபடி “ஆமா நீ வெளியே போயிட்டு இப்ப தானே வந்ததா சொன்ன! நீ சாப்பிடலையா?” ஈன்று கேட்க, 

“நீ முதல்ல சாப்பிடு. நான் இந்த தட்ட கொண்டு போய் வச்சுட்டு அப்புறம் சாப்பிட்டுக்குறேன்.” என்ற வெற்றி அவள் அருகிலேயே அமர்ந்து அவள் சாப்பிடும் அழகை அமைதியாக கண்டு ரசித்தான். பின் அவள் சாப்பிட்டு முடித்த பிறகு அந்தத் தட்டை வாங்கிக் கொண்டு கிச்சனை நோக்கி சென்றான்.

அவனுக்கு அவள் சாப்பிட்ட தட்டிலேயே சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அதனால் உடனே அதில் உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டு ஹாலில் சென்று அமர்ந்து சாப்பிட தொடங்கினான் வெற்றி.  

மறுநாள் காலை 10 மணியளவில் விஜய் அவன் தங்கி இருந்த ஹோட்டல் ரூமில் பப்பரக்கா என்று படித்துக் கொண்டிருக்க, அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே ஓடிச் சென்ற அவனுடைய அசிஸ்டன்ட் தினேஷ் “பாஸ் பாஸ் பாஸ்..!! என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க? உங்களுக்கு நடந்ததெல்லாம் தெரியுமா? இதெல்லாம் உண்மையா?” என்று பதட்டமான குரலில் கேட்டான். 

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த விஜய் அவனது குரலால் டிஸ்டர்பாகி தன் கண்களை தேய்த்தவாறு அவன் மீது கிடந்த கனமான போர்வையை எடுத்து கீழே தள்ளிவிட்டு “டேய் எதுக்கு டா இப்ப கத்துற? நான் தனியா இருக்கணும். என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லித் தானே இங்க ரூம் போட்டு ஸ்டே பண்ணேன்! வர வர என் பேச்சை மதிக்க மாட்டேங்குற நீ! உனக்கு ஒரு நாள் இருக்கு டா.. உன்னை படுக்க போட்டு நாலு மிதி மிதிச்சா தான் நீ சரிப்பட்டு வருவ.” என்றபடி எழுந்து அமர்ந்தான்.

விஜய் அப்படி ஆடைகள் இன்றி அமர்ந்து கொண்டு சோம்பல் முறிப்பதை பார்த்தவுடனேயே அவன் என்ன தவறு நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தானோ, அது சரியாக நடந்து விட்டது என்று தினேஷிற்கு புரிந்து விட்டது. 

அதனால் தான் தலையில் கை வைத்துக் கொண்டு சோகமாக விஜய்யை பார்த்த தினேஷ் “என்ன பாஸ் இப்படி பண்ணிட்டீங்க? நீங்க இந்த மாதிரி செய்வீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. உங்களுக்கு தான் அவங்கள பிடிக்காதே! அவங்களை எப்படியாவது உங்க லைஃப்ல இருந்து துரத்தணும்னு தானே நீங்க நினைச்சுட்டு இருந்தீங்க! அப்புறம் எப்படி இந்த சம்பவம் நடந்துச்சு? நான் மத்தவங்க சொல்றதை எல்லாம் கூட நம்பல. இப்ப உங்கள வந்து நேர்ல பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கே அது எல்லாம் உண்மையோன்னு தோணுது.” என்றான். 

அதைக் கேட்டு கடுப்பான விஜய் “டேய் என்ன டா பண்ணிட்டு இருக்க?  இப்ப இங்க என்ன நடந்துச்சு? உன் கிட்ட யாரு என்ன சொன்னது? எதையுமே கிளியரா பேச தெரியாதா உனக்கு?” என்று கேட்டபடி எழுந்து நின்றான். அப்போது தான் எதிரில் இருந்த கண்ணாடியில் தெரிந்த அவன் உருவத்தை கவனித்த விஜய், தன் இரண்டு கைகளையும் கீழே வைத்து அவனுடைய பிரைவேட் பார்ட்டை உடனே மறைத்துவிட்டு “டேய் என்ன டா இங்க ஷோவா நடக்குது? ஜாலியா பாத்துட்டு இருக்க? என் டிரஸ்சை எவன் டா உருவனது?  நான் நேத்து டிவி பார்க்கும்போது ட்ரவுசர் போட்டிருந்தனே!” என்று அவனிடம் கோபமாக கேட்டான்..

நேற்று இரவு விஜய் அந்த பெண்ணுடன் சோபாவில் ரொமான்ஸ் செய்து கொண்டு இருக்கும் போது அவன் கழட்டி தூக்கி தரையில் எரிந்திருந்த அவனுடைய ட்ரவுசரை எடுத்து வந்து அவனிடம் காட்டிய தினேஷ் “நீங்க இத பற்றியா பாஸ் பேசிட்டு இருக்கீங்க? ஆனா இது வேற யாரோ கழட்டின மாதிரி தெரியலையே! எனக்கு என்னமோ நீங்க தான் ஒரு force-ல..!!” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் கையில் இருந்த தன் ட்ரவுசரை பிடுங்கி திரும்பி நின்று அணிந்து கொண்ட விஜய் அவனை எரித்து விடும் பார்வை பார்த்தான். 

“பாஸ் இந்த விஷயத்துல நீங்க என் மேல எதுக்கு கோபப்படுறீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. நான் முதல்ல உங்களுக்கு தெரியாம தான் எல்லாமே நடந்திருக்குமோன்னு நினைச்சேன். ஆனா இப்ப எல்லாமே உங்க விருப்பத்தோட  தான் நடந்த மாதிரி தெரியுது. நான் உங்க ப்ரொடக்ஷன்க்கு வெளிய ஆள அரேஞ்ச் பண்றேன்னு சொன்னேன். நீங்க தான் யாருமே வெளிய இருக்க கூடாதுன்னு சொன்னீங்க. இப்ப உங்க டிரஸ்ஸ யார் கழட்டினதுன்னு என் கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது?” என்று தினேஷ் சோகமாக கேட்க, 

இருந்த கடுப்பில் தன் காதுகள் இரண்டையும் மூடிக் கொண்டு “ஆஆஆ.. டேய் கடுப்பேத்தாத டா.. ஏற்கனவே எனக்கு தல செம்மையா வலிக்குது. இதுல நீ வேற மொக்க போட்டுட்டு இருக்க! என்ன எழவுடா நடந்துச்சு? தெளிவா தான் சொல்லி தொலையேன்!” என்று விஜய் எரிச்சலுடன் கேட்டான். 

“அப்ப நிஜமாவே உங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாதா பாஸ்? இருங்க நான் உங்களுக்கு அதை காட்டுறேன்.” என்ற தினேஷ் உடனே தனது மொபைல் ஃபோனில் எதையோ ஓப்பன் செய்து அதை அவனிடம் காட்டினான். 

அதை கண்டு எரிச்சல் அடைந்த விஜய் தினேஷின் மொபைல் ஃபோனை தரையில் அடித்து உடைத்து விட்டு, “இது எப்படி டா நடந்துச்சு? அந்த தே#### எப்படி இங்க வந்தா? அதுவும் என் கூட நேத்து நைட் அவ இங்க ஸ்டே பண்ணி இருக்கா! அதைக் கூட கவனிக்காம நீங்க என்ன‌ டா புடுங்கிட்டு இருந்தீங்க? என் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டு அவ வந்தா மூடிக்கிட்டு வந்த வேலயை மட்டும் பாத்துட்டு போக வேண்டியது தானே..

எதுக்கு தேவை இல்லாம அதை ஃபோட்டோ எடுத்து சோசியல் மீடியால எல்லாம் போட்டு இருக்கா! அப்படி எல்லாம் பண்ணி மறுபடியும் என் கூட வந்து ஒட்டிக்கலாம்னு பாக்குறாளா அவ? முதல்ல இந்த அளவுக்கு பண்ண அவளுக்கு எப்படி தைரியம் வந்தது?

ஒழுங்கா உண்மையை சொல்லு.. நெஜமாவே அவ இங்க வந்தது யாருக்கும் தெரியாதா? இல்ல நீயே அவளுக்கு இங்க ஈசியா வந்துட்டு போறதுக்கு ஹெல்ப் பண்ணியா? அப்படி மட்டும் ஏதாவது நடந்த இருக்கட்டும், மவனே இங்கயே உன்னை கொன்னு புதச்சிட்டு தான் நான் வெளியே போவேன்.” என்று ஆத்திரம் போக கேட்ட விஜய் தினேஷின் கழுத்தைப் பிடூத்து நெறித்தான். 

அந்த இளம் பெண் யார்? அவளுக்கும் விஜய்க்கும் நடுவில் என்ன இருக்கிறது? அமுதாவை வைத்து விஜய் படம் எடுப்பானா?

– காதல் மலரும் 🌹

***

You may also like

Leave a Comment

About Me

Featured