Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 21

சாபமாய் வந்த என் உயிரே CH 21

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 21:

விஜய் டைரக்டர் ஸ்ரீகாந்த்தை அழைத்துக் கொண்டு அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று விட்டான்.

பிரசிடெண்டை பார்க்க வேண்டிய இருந்ததால் ஸ்ரீகாந்த் விஜய் இடம் சொல்லிவிட்டு தனது காரை எடுத்துக் கொண்டு பிரசிடெண்ட்டின் பண்ணை வீட்டை நோக்கி பயணித்தான். டைரக்டர் வருவதற்காகவே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பிரசிடெண்ட்டும்,  அவனுடைய மகள் அபிநயாவும் வாசலை பார்த்து ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து காத்திருந்தார்கள். 

ஸ்ரீகாந்த் உள்ளே வந்தவுடன் அவர்கள் இருவரும் கோபத்துடன் எழுந்து நிற்க, “இருக்கிற கடுப்புல இவங்க ரெண்டு பேரும் நம்மள ஏதாவது சொல்றதுக்குள்ள நம்மளே ஆரம்பிச்சுடுவோம்.” என்று நினைத்து “வணக்கம் பிரசிடெண்ட் சார்! நீங்க என் மேல கோவமா இருப்பீங்கன்னு எனக்கு புரியுது. ஆனா உங்களை விட நான் தான் விஜய் சார் மேல கோவமா இருக்கேன். அது உங்களுக்கு தான் புரிய மாட்டேங்குது.” என்று புதிராக பேசி அவர்களை குழப்பினான். 

அவனை பார்த்து முறைத்தபடி நின்று இருந்த அபிநயா “நீங்களும் விஜய் சார் கூட அமுதா வீட்டுக்கு போய் தானே அவங்க வீட்ல இருக்குறவங்கள படத்துல நடிக்கிறதுக்கு கன்வின்ஸ் பண்ணி பேசி இருக்கீங்க! அப்புறம் இங்க வந்து இப்படி பேசி எங்ககிட்ட நடிக்கிறீர்களா? அது சரி நீங்க டைரக்டர் தானே! நடிக்க தெரியாத மத்தவங்களையே நீங்க ஈசியா நடிக்க வச்சிருவீங்க.. உங்களுக்கா நடிக்க சொல்லித் தரணும்?” என்று திமிராக கேட்க, 

“என் பொண்ணு மோனிஷாவை விட இவ சின்ன பொண்ணு. என் கிட்ட எவ்வளவு திமிரா பேசுறா? இதுவரைக்கும் என் படத்தில நடித்த எந்த ஹீரோயினும் என்‌ கிட்ட இப்படி மரியாதை இல்லாம பேசினதே இல்லை! பெரிய ஊர்ல இல்லாத பிரசிடெண்ட் பொண்ணு இவ! என் கிட்டயே சீன் போட்டுட்டு இருக்கா! கேமரா முன்னாடி ஒழுங்கா பெர்ஃபாமன்ஸ் பண்ணுடின்னா அதுக்கு துப்பில்ல! அப்பனும், மகளும் சேர்ந்துகிட்டு என் முன்னாடி பர்பாமன்ஸ் பண்ண வந்துட்டாங்க!” என்று உள்ளுக்குள் எரிச்சலுடன் அவர்களைத் திட்டி தீர்த்த ஸ்ரீகாந்த் வெளியில் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு,  

“சேச்சே.. நீ ஏன் மா அப்படி எல்லாம் நினைக்கிற? இந்த படம் எங்க எல்லாருக்கும் ரொம்ப முக்கியம். என் பொண்ணு இதுல ஹீரோயினா நடிக்கிறா. பிரசிடென்ட் சார் தயவு இல்லாம உங்க ஊர்ல சூட்டிங் பண்ணிட முடியுமா? அது தெரிஞ்சும் நான் இப்படி ஒரு ரிஸ்கை எடுப்பேன்னு உங்களுக்கு எப்படி தோணுது? 

அமுதாவை இந்த படத்துக்குள்ள கொண்டு வந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்ன இருந்தாலும் விஜய் சார் தான் இந்த படத்தோட டைரக்டர். அந்த பொண்ணு சும்மா இல்லாம அவர் முன்னாடி அழகா டான்ஸ் ஆடி காமிச்சிருச்சு! அதனால அவர் அந்த பொண்ண பார்த்து இம்ப்ரஸ் ஆகி அவளுக்கு செகண்ட் ஹீரோயின் சான்சை தூக்கி குடுத்துட்டாரு! இதுல என்னால என்ன பண்ண முடியும் சொல்லுங்க? 

விஜய் சாரை பகச்சிகிட்டு யாராலயும் எதுவும் பண்ண முடியாது. இதுல நான் செகண்ட் ஹீரோயினை மாற்ற மாட்டேன்னு அவர்கிட்ட பிரச்சினை பண்ண, அவர் கொஞ்சம் கூட யோசிக்காம டைரக்டரை மாத்திட்டு போயிருவாரு.” என்று தானும் சோகத்தில் இருப்பவனை போல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னான். 

“போதும் போதும்.. இப்படி பக்கம் பக்கமா டயலாக் பேசறதுக்கா நீ இங்க வந்த? என் பொண்ணு சினிமால நடிப்பானு நம்பி ஆசைப்பட்டு தானே நான் உனக்கு என் தோட்டத்துல ஷூட்டிங் எடுக்குறதுக்கு பர்மிஷன் கொடுத்தேன்! இப்ப என் பொண்ணே அந்த படத்துல நடிக்கலைன்னா, நான் எதுக்காக உங்களுக்கு உதவனும்? இனிமே நீங்க இந்த ஊர்ல எப்படி சூட்டிங் பண்றீங்கன்னு நான் பாக்குறேன். என்ன மீறி உங்களால ஒரு நிமிஷம் கூட ஒன்னும் பண்ண முடியாது.” என்று பிரசிடெண்ட் அவனை மிரட்டும் தோரணையில் பேச, 

“ஐயோ சார் ப்ளீஸ்.. அப்படியெல்லாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீங்க.. முதல்ல நான் சொல்றத முழுசா கேளுங்க. ஒரு டைரக்டரா எனக்கே அந்த அமுதா என் படத்துல நடிக்கிறது பிடிக்கலன்னு தானே நான் சொல்றேன்.. உங்களுக்கும் அது பிடிக்கல! அப்போ அமுதாவை இந்த படத்துல இருந்து எப்படி தூக்குறதுன்னு தான் நம்ம யோசிக்கணும். நீங்க தானே இந்த ஊர் பிரசிடெண்ட்.. நீங்க நினைச்சா எதுவும் பண்ண முடியாதா? எப்படியும் விஜய் சாரிடம் மோதி ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சிருச்சு.

அதுக்கு அடுத்து நம்ம அமுதாவை தானே டார்கெட் பண்ணனும்! ஒருவேளை அந்த பொண்ணால இந்த படத்துல நடிக்க முடியாம போயிடுச்சுன்னா, வேற வழி இல்லாம மறுபடியும் அபிநயா செகண்ட் ஹீரோயின் கேரக்டரில நடிக்க வேண்டியது தான்! இல்லைனா உங்க பொண்ணு ஹீரோயினுக்கு ஃபிரண்டா அமுதா கூட நடிக்க வேண்டியது தான் வேற வழி இல்ல.” என்று சொல்லி தன் பக்கம் வந்த கதையை அமுதாவின் பக்கம் திருப்பி அவர்களை ஏற்றி விட்டான் ஸ்ரீகாந்த். 

அதனால் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த பிரசிடெண்ட் ஏதோ பேச வர, “ஒரு நிமிஷம் இருங்கப்பா. இவர் சொல்றதிலையும் ஒரு பாயிண்ட் இருக்கு. விஜய் சார் எவ்ளோ பெரிய ஆளுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். அவர் கிட்ட போய் நம்ம பிரச்சனை பண்றது நமக்கு நல்லது இல்ல. ஆனா நமக்கு அந்த அமுதாவோ அவ குடும்பத்தில இருக்கிறவங்களோ ஒரு ஆளே இல்ல. இவர் சொன்ன மாதிரி பண்ணா, மறுபடியும் நான் ஹீரோயினாக வாய்ப்பிருக்கு. 

நீங்க கவலையை விடுங்க. அந்த அமுதாவை என்ன பண்ணனும்னு நான் பார்த்துக்கிறேன். அவளை என்ன ஆனாலும் சரி, நான் இந்த படத்துல நடிக்க விட மாட்டேன்.” என்றாள் அபிநயா.‌ அவளது அழகிய முகத்தில் ஒரு வில்லத்தனமான புன்னகை தரித்தது. அதை வைத்து “ஓகே நான் வந்த வேலை முடிஞ்சது. இவ ஏதோ பிளான் பண்ணிட்டா..!! இனிமே நான் இங்க இருக்கணும்னு அவசியம் இல்ல. இனிமே இவங்களே அமுதாவை மோனிஷாவோட வழியிலிருந்து ரிமூவ் பண்ணிடுவாங்க. நடக்கிறதை நம்ம ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்.” என்று நினைத்த ஸ்ரீகாந்த் “ஓகே சார் ஏதோ ஒன்னு பாத்து பண்ணுங்க. அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்.” என்று சொல்லிவிட்டு நைசாக அவர்களது வீட்டை விட்டு வெளியேறினான். 

பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள தனது காஸ்ட்லியான அறையில் அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டு இருந்தான் விஜய். இப்போது அவனே அடங்கி ஒரு இடத்தில் சும்மா அமர்ந்திருந்தாலும் அவனுடைய மூளை அமைதியாக இருக்காமல் இதே போல அவன் பல வருடங்களாக கிரிக்கெட் மேட்ச்களை பிரியாவுடன் நேரடியாக ‌ கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கே சென்று பார்த்து மகிழ்ந்த ஞாபகங்களை எல்லாம் இப்போது அவனுக்கு நினைவூட்டியது. 

அவனும் பிரியாவும் வெறித்தனமான தோனியின் ரசிகர்கள். இப்போது நடக்கும் மேட்ச்சில் சிஎஸ்கே தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டு இருப்பதால், கடுப்புடன் இருந்த விஜய் தன்னையும் அறியாமல் ‌“இந்த மேட்சை மட்டும் பிரியா பார்த்திருந்தா, அவ்ளோ தான் ஃப்பீலிங்ல அழுது அழுது செத்துருப்பா.” என்று நினைக்க, அவனது மனசாட்சி “அதுக்கு முதல்ல அவ உயிரோட இருக்கணும் இல்ல டா? நீதான் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம உன் சொந்த பொண்டாட்டிய இத்தனை வருஷமா யாருக்கும் தெரியாம அடைச்சு வச்சு சித்திரவதை பண்ணி கொன்னுட்டியே! இப்ப என்ன ரொம்ப நல்லவன் மாதிரி அவன பத்தி யோசிச்சு ஃபீல் பண்ற?” என்று அவனிடம் கேட்டது.

உடனே அவனது முகம் கொடூரமாக மாறிவிட, “அடச்சி.. நான் எதுக்காக அந்த தே*** மு***ய பத்தி நெனச்சு ஃபீல் பண்ணனும்? அவளுக்கு எல்லாம் அதுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்ல. நான் அவளை எவ்வளவு சின்சியரா லவ் பண்ணேன்னு இந்த உலகத்தில இருக்கிற எல்லாருக்கும் தெரியும். ஆனா அது அவளுக்கு தெரியலையே..

கேவலமா எனக்கு அப்படி ஒரு துரோகத்தை பண்ணி என்னை ஏமாத்துனவ தானே அவ.. அவளுக்காக நான் என்ன மயிருக்கு உருகனும்? அவ பண்ண தப்புக்கு அதை நான் கண்டுபிடிச்சப்பவே அவளை சுட்டுக் கொன்னு இருக்கணும். உண்மையா லவ் பண்ணி தொலைச்சிட்டேனே.. அதான் கொல்ல மனசு வராம அவளை தனியா அடைச்சு வச்சிருந்தேன். அங்க இருக்க முடியாம அவளா செத்துப் போனதுக்கு நான் என்ன பண்ண முடியும்? இது அவ பண்ண தப்புக்கு அவளுக்கு கிடைச்ச தண்டனை. So she completely deserves every bit of it.” என்று சொல்லி தன் மனசாட்சியின் வாயை அடைத்துவிட்டான் விஜய். 

ஆனால் இப்போது பிரியா வேறு இறந்து விட்டாள் என்று நினைக்கும் போது தன்னை தொடர்ந்து வரும் அவளுடைய ஞாபகங்களில் இருந்து அவனுக்கு எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. அதனால் உடனே டிவியை ஆஃப் செய்து விட்டு ஹோட்டல் ரிசப்ஷனுக்கு கால் செய்து ஒரு குறிப்பிட்ட பிராண்ட் காஸ்ட்லியான மதுவின் பெயரை சொல்லி “எனக்கு அதுல ரெண்டு லார்ஜ் என் ரூமுக்கு இப்பவே அனுப்பி வைங்க.” என்று ஆர்டர் செய்தான். 

அவன் அவர்களுடைய விஐபி கஸ்டமர் என்பதால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவன் கேட்ட மது பாட்டில்களை அரேஞ்ச் செய்து அவனது ரூமிற்கு அனுப்பி வைத்தார்கள். தனது ஆடைகளை மாற்றி விட்டு வெறும் ட்வுசர் மட்டும் அணிந்து கொண்டிருந்த விஜய் பிரியாவின் மீது இருந்த கோபத்தில் அந்த பாட்டிலில் மூடியை தனது பற்களிலேயே கடித்து திறந்து அதை மடமடவென தனது தொண்டைக்குள் சரித்தான். 

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் வாங்கிய இரண்டு மது பாட்டில்களும் காலியாகி விட, “இது என்ன அதுக்குள்ள காலி ஆயிடுச்சு? ச்சே.. எல்லாத்துலயும் கலப்படம் பண்றானுங்க.. அவ்ளோ பெரிய பாட்டில் எப்படி இவ்ளோ சீக்கிரம் காலியாகும்? என்னை ஏமாத்தி கொஞ்சமா குடுத்துட்டானுங்க! இப்படித் தான் எல்லாரும் என்னை ஏமாத்துறாங்க.. இது ஒரு கேவலமான உலகம்.. யுவாக்.. 

அந்த பிரியா அவளாம் நல்லாவே இருக்க மாட்டா.. ஏமாற்றுக்காரி.. என்னை ஏமாத்திட்டா! எதுக்கு அவ என்ன ஏமாத்தின? அப்படி என் கிட்ட இல்லாதது அந்த பரதேசி கிட்ட என்ன இருந்துச்சு? எதுக்காக எனக்கு அவ துரோகம் பண்ணா? ஏய்.. பிரியா சொல்லு டி… ஏன் இப்படி பண்ணேன்னு சொல்லு.. நீ சொல்லாம நான் உன்னை விடமாட்டேன்.

இப்பவே பேயா வந்து என் முன்னாடி நீயே சொல்லு.. இல்லைனா மறுபடியும் உன்னை தேடி கண்டுபிடித்து கொல்லுவேன்.” என்று போதையில் உளறிக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது அறை கதவை திறந்து கொண்டு ஒரு அழகிய இளம் பெண் “விஜய்” என்று அவன் பெயரை சொல்லி அழைத்தபடி உள்ளே வந்தாள்.

-காதல் மலரும் 🌹 

You may also like

Leave a Comment

About Me

Featured