அத்தியாயம் 15: மிஸ் பண்ண கூடாது
தன்னை தானே அவள் ஸ்கிரீனில் பார்க்கும்போது அவளது கண்களில் தெரியும் ஆர்வத்தையும் ஆசையையும் கண்டு கொண்ட விஜய் “ஹே அமுதா பேசாம இந்த ரோல்ல நீயே நடிக்கிறியா?” என்று பட்டென கேட்டு விட, தன் கையில் இருந்த போனை கீழே போட்டுவிட்ட அமுதா தன் குடும்பத்தின் மீது இருக்கும் பயத்தில் தன் முன்னே யார் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்காமல் “ஐயோ எங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா என்ன கொன்னே போட்டுடுவாங்க. ஆள விடுங்க டா சாமி.” என்று தன்னை அறியாமல் சத்தமாக சொல்லி விட்டாள்.
மரத்திற்கு பின்னே மறைந்து நின்று கொண்டு இருந்த கலைச்செல்வி வெற்றி அமுதாவை தேடாமல் கையில் ஒரு ட்ரேவை வைத்து கொண்டு அனைவருக்கும் காபி குடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து கடுப்பானவள் அவன் தன் பக்கம் வரும் வரை காத்திருந்து அவன் தன் அருகில் வந்தவுடன் அவன் சட்டை காலரை பிடித்து அவனை அந்த மரத்திற்கு பின்னே இழுத்தவள் “டேய் லூசு பயலே அமுதா எங்க டா? தான் விஜய் சார பார்க்க போறேன்னு அவ பாட்டுக்கு எங்கேயோ போயிட்டா. அவ போய் ரொம்ப நேரம் ஆகுது ஆளையே காணோம். நீ என்னை அவளை தேடுறத விட்டுட்டு இங்க வந்து வேலைக்காரனாட்டம் எல்லாருக்கும் எடுபிடி வேலை பாத்துட்டு இருக்க!” என்று கோபமாக கேட்டாள்.
அவளது பிடியில் இருந்து தன் சட்டை கலரை விடுவித்த வெற்றி “ஏய் நான் அமுதாவை தேடலன்னு உனக்கு யாரு டி சொன்னா? நானும் காப்பி தண்ணி குடுக்கிற மாதிரி எல்லா பக்கமும் போய் அவ இருக்கிறாளான்னு பார்த்துட்டு வந்துட்டு தான் இருக்கேன். ஆனா அவ எங்க போய் தொலைஞ்சான்னு தெரியல. ஆளே கண்ணுல சிக்க மாட்டேங்குறா. எப்படியும் அவ இங்க இருக்கிற செக்யூரிட்டிய மீறி வெளிய போய் இருக்கவும் முடியாது. அவ எங்கயோ இங்க தான் இருக்கா. ஆனா நம்ம கண்ணுக்கு தெரியாத மாதிரி இருக்கா. நீ இங்க தேவை இல்லாம ஒளிஞ்சு நின்னு நேரத்தை கடத்தாம போய் அவளை தேடு போ.” என்று1 கலைச்செல்வியிடம் வெற்றி அமுதாவை தேட சொல்லி விரட்டி விட்டான்.
அமுதா தங்கள் வீட்டில் இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று சத்தமாக சொல்லி விட்டதால், அதை தனக்கு அவமரியாதை என்று நினைத்தன் விஜய். இதுவரை அவன் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என்று நினைத்தால் அனைவரும் அவன் மீது இருக்கும் மரியாதையிலும் பயத்திலும் அவனது ஒரு கண் அசைவிற்கு அவனுக்கு அடி பணிந்து வேலை செய்வார்கள். ஆனால் தன் காரியத்திற்காக தான் இவ்வளவு தூரம் இறங்கி பேசியும் அமுதா சட்டென இப்படி சொல்லி விட்டதால் விஜய்க்கு கோபம் வந்தது. 😡 🔥
ஆனால் இப்போது அவன் அமுதாவின் மீது கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்பதால் அவளுக்கு நிலைமையை புரிய வைக்க நினைத்து மீண்டும் பொறுமையாக பேச தொடங்கினான். அமுதா பயத்துடன் அவனையும் ஸ்ரீகாந்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருக்க, “உனக்கு கிடைச்சிருக்கிற சான்ஸ் எவ்வளவு பெருசுன்னு உனக்கு ஏதாவது புரியுதா இல்லையா? இதுக்காக எத்தனை பேர் ஏங்கிட்டு இருக்காங்க தெரியுமா! உனக்கு ஆடிஷன் அட்டென்ட் பண்ணாம, நடிக்க கத்துக்காம, யார் கால்லையும் விழுகாம, எந்த கஷ்டமும் படாம ஈஸியா லட்டு மாதிரி இந்த ஆப்பர்சுனிட்டி கிடைச்சிருக்கு.
ஏன் உங்க ப்ரெசிடெண்ட் கூட அவர் பொண்ண இந்த ரோல்ல நடிக்க வைக்கிறதுக்கு எவ்ளோ மெனக்கிடுறாருன்னு நீயே பாக்குறீள்ல..!! இப்போ அந்த ரோல் உனக்கு கிடைக்கப் போகுது அமுதா. சோ யோசிச்சு பாரு.” என்றான் விஜய். அவன் சொல்வதைப் போல தனக்கு இந்த படத்தில் விஜய் உடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது எவ்வளவு பெரிய விஷயம், இந்த ஒரே ஒரு படம் அவள் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்டு விடும் என்று அமுதாவிற்கு நன்றாக தெரியும்.
ஆனால் கிராம சூழலில் இப்படி ஒரு கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அவளுக்கே முதலில் சினிமாவில் நடிக்க எல்லாம் பெரிய அளவிற்கு ஆசையெல்லாம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்கும்போது அவளது குடும்பத்தினர் இதற்கு எப்படி சம்மதிப்பார்கள்? அவள் படிக்க வேண்டும் என்று சொன்ன போதே வெற்றி அவளுக்கு உதவவில்லை என்றால், இந்நேரம் வெற்றிக்கும் அவளுக்கும் திருமண ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும். அதனால் அதை எல்லாம் யோசித்துப் பார்த்த அமுதா தனது குடும்பத்திற்கு இது சரிப்பட்டு வராது என்று சொல்ல தன் வாயை திறந்தாள்.
ஆனால் அவளைப் பேசவிடாமல் முந்தி கொண்ட ஸ்ரீகாந்த் கீழே கிடந்த தன் மொபைல் போனை எடுத்து அவள் முன்னே நீட்டி “முதல்ல இந்த வீடியோவை நீ நல்லா பாரு அமுதா. இதுல இருக்கிறது நீ தான். ஆனா நீ முன்ன இந்த மாதிரி ஒரு ஹீரோயினா எப்பயாவது பாத்திருக்கியா? இது நாங்க செக்யூரிட்டி ரீசனுக்காக வச்ச கேமராவுல ரெக்கார்ட் ஆனது.
இது ஜஸ்ட் ஒரே கேமராவுல சேம் ஆங்கில்ல ஜஸ்ட் அப்படியே எடுத்த வீடியோ. இதிலேயே நீ எவ்ளோ அழகா இருக்கேனு பாரு! நேச்சுரலாவே மத்தவங்கள உன் அழகால கட்டி இழுக்குற திறமையை உனக்கு கடவுள் கொடுத்திருக்கிறாரு. அதை யூஸ் பண்ணிக்கறதுக்கான சான்ஸ் ம் உன்னோட ஊர் தேடி வந்திருக்கு. அப்ப அதை யூஸ் பண்ணிக்கிறது தானே புத்திசாலித்தனம்! இன்னும் நீ ஆட இதே சீன் ஐ வேற வேற ஆங்கில்ல கேமரா வச்சு பக்காவா லைட்டிங்ஸ் போட்டு சூட் பண்ணா, அந்த சீன்ல நீ எப்படி இருப்ப தெரியுமா?” என்று கேட்டு அவளது ஆசைகளை தூண்ட முயற்சித்தான் ஸ்ரீகாந்த்.
உண்மையில் அவனது திட்டம் சரியாக வேலை செய்தது. தானாக கீழே கிடந்த போனை எடுத்து அதில் தான் ஹீரோயின் போல மழையில் ஆடும் காட்சியை மீண்டும் மீண்டும் போட்டு பார்த்த அமுதா விற்கும்போது அந்த ஒரு நொடி “நான் நெஜமாவே ஹீரோயின் ஆ? விஜய் சார் கூட என்னால நடிக்க முடியுமா? அது நடந்தா நல்லா தானே இருக்கும்! பெரிய பெரிய ஹீரோயின்ஸ் கூட விஜய் சார் கூட நடிக்க ஆசைப்படறாங்க. அவர் கூட நடிக்கறதுக்காக என்ன வேணாலும் பண்ண ரெடியா இருக்காங்க. புதுசா வர்றவங்க எல்லாம் சான்ஸ்காக எவ்ளோ அலையுவாங்க! ஆனா இப்படி ஒரு ஆப்பர்சூனிட்டி எனக்கு ஈசியா கிடைக்கும் போது, நான் ஏன் அதை மிஸ் பண்ணனும்?” என்று யோசிக்க தொடங்கினாள் அமுதா.
அவளது கண்களில் மின்னிக் கொண்டு இருந்த ஆசை தீயை கண்டு கொண்ட ஸ்ரீகாந்த் “நீ கிராமத்தில பிறந்து வளர்ந்ததுனால உனக்கு சினிமான்னா பயமா இருக்கலாம். உங்க வீட்ல இருக்கிறவங்க என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்கலாம். ஆனா முதல்ல உனக்கு ஓகே வா என்று நீ சொல்லு மா. உனக்கு இந்த படத்துல நடிக்க இன்ட்ரஸ்ட் இருந்துச்சுன்னா, நானே நேர்ல உங்க வீட்டுக்கு போய் பேசுறேன். அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறேன்.
ஷூட்டிங் கூட உங்க ஊரிலேயே தானே நடக்க போகுது! உன்ன தனியா அனுப்புவதற்கு பயமா இருந்துச்சுன்னா உங்க வீட்ல இருந்து கூட யாராவது ஒருத்தர் இரண்டு பேர் கூட எப்பவுமே இருக்கட்டும். மதுரைக்குள்ள தான் ஷூட்டிங். அப்புறம் என்ன பிரச்சனை?” என்று கேட்க, அதே கேள்வியை தானும் தன் மனதிற்குள் கேட்டுப் பார்த்த அமுதா “அதானே என்ன பிரச்சனை? இப்படி ஒரு ஆப்பர்சூனிட்டி எல்லாருக்கும் கிடைக்காது. இத வேஸ்ட் பண்ணிட்டா என்ன விட பெரிய முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க.” என்று நினைத்தவள், “சார்..!! எனக்கு விஜய் சார் நேர்ல பார்க்கிறதே பெரிய கனவு. இப்போ எனக்கு அவர் கூட நடிக்க ஒரு சான்ஸ் கிடைச்சா அதெல்லாம் வர பிரசாதம் மாதிரி. இத வேண்டாம்னு சொல்ல யாருக்கு மனசு வரும்?” என்று நினைத்தவள் தயக்கத்துடன் விஜய்யையும் ஸ்ரீகாந்தையும் பார்த்து “சார் எனக்கு நடிக்க தெரியாது. இப்படி ஒரு ஆப்பர்சூனிட்டி கிடைக்கும்போது ட்ரை பண்ணி பாக்கணும்னு ஆசையா தான் இருக்கு. But நான் என்ன நெனச்சாலும் எங்க வீட்ல இதுக்கெல்லாம் Allow பண்ண மாட்டாங்க. அவங்கள மீறி என்னால எதுவும் செய்ய முடியாது. அப்படி செய்யறதுலையும் எனக்கு விருப்பம் இல்ல.” என்றாள்.
அவள் தனக்கு விருப்பம் இருக்கிறது என்று சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த விஜய் இந்த படம் கண்டிப்பாக அமுதாவை வைத்து எடுத்தால் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் தனக்குள் இருக்கும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக அவளை கட்டி அணைத்த விஜய் “நீ ஓகே சொல்லிட்ட இல்ல..!! இதுக்கு மேல எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். நாளைக்கு மார்னிங் ஏ நானும் ஸ்ரீகாந்த் சாரும் உங்க வீட்ல வந்து பேசுறோம்.” என்று சொல்ல, அவனது அந்த எதிர்பாராத அணைப்பால் திக்குமுக்கு ஆடி போயிருந்த அமுதா, அப்படியே திக் திக் இதயத்துடன் சிலையாய் சமைந்து நின்றாள். ♥️ ♥️
அவளுக்கு பேச்சே வரவில்லை. அவளது வாழ்நாளில் இன்று தான் முதன் முதலில் ஒரு ஆணின் ஸ்பரிசத்தை அவள் உணர்கிறாள் என்பதாலும், அந்த ஆண் உலகமே வியந்து பார்க்கும் ஒரு சூப்பர் சைனிங் ஸ்டார் விஜய் குரு மூர்த்தியாக இருக்கும்போது அந்த சாதாரண பெண்ணால் எப்படி சாதாரணமாக இருக்க முடியும்? அதனால் அவள் ஸ்டன் ஆகி அப்படியே விழிகள் விரிய நின்று கொண்டு இருக்க, அவளிடம் இருந்து பிரிந்த விஜய் “உன்னோட வீடு எங்க இருக்குன்னு சொல்லு.” என்று கேட்க, பேச நா எழாமல் இன்னும் திகைப்புடனே அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அமுதா.
அதை புரிந்து கொண்டு சத்தமாக சிரித்த விஜய் “ஆஃப்டர் ஆல் ஒரு ஹக்! இதுக்கு இப்படியா? இந்த சினி ஃபீல்டுல இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு.” என்று சொல்ல, “என்னது இன்னும் நிறைய இருக்கா? இதுக்கு எனக்கு வயிறு எல்லாம் கலக்குற மாதிரி இருக்கே?” என்று நினைத்து விஜய் பாவமாக பார்த்து வைத்தாள். தான் என்ன கேட்டாலும் அமுதா அதற்கு ஒழுங்காக பதில் சொல்ல மாட்டாள் என்று நினைத்த விஜய் “ஓகே நீ கிளம்பு. உன் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. உன்ன பத்தி பிரசிடெண்ட் எல்லா டீடைல்ஸ் ஐயும் சொன்னாரு. நான் அவர்கிட்டயே உன் வீடு எங்க இருக்குன்னு கேட்டுக்குறேன்.” என்றான்.
இப்போது அவன் பிரசிடெண்ட்டை பற்றி பேசிய பின்பு தான் அவர் தனது மகள் அபிநயாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் ஆசையில் இருக்கும் போது, அதை தான் ஏற்று நடித்தால் இதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்? கண்டிப்பாக ஏதேனும் பிரச்சினை செய்வாரே..!! என்று நினைத்து பயந்தவள் “சார் பிரசிடெண்ட் ஓட பொண்ணு அபிநயாவ தான் நீங்க இந்த கேரக்டருக்கு செலக்ட் பண்ணி இருக்கீங்க. இப்போ இதுல நான் நடிச்சா நல்லா இருக்குமா?” என்று கேட்டாள் அமுதா.
– காதல் மலரும் 🌹