இங்கே அந்த மருத்துவமனை மானிட்டரில் வழக்கமான ஹார்ட் ரேட்டிங் காட்டிக்கொண்டிருக்க, அப்படியே அதனருகே மெத்தையில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட நிலையில், இன்னுமே எந்த ஒரு அசைவும் இல்லாது கோமாவில் இருந்தான் விராஜ்.
அவன் அருகே நின்றிருந்த IV fluid பாட்டிலில் சொட்டு சொட்டாய் சொட்டிக்கொண்டிருந்த திரவம், அந்த சிறிய டியூப் வழியே அவன் கரத்திலுள்ள நரம்புக்குள் ஏறிக்கொண்டிருக்க, அந்த கரத்தை மெதுவாய் பிடித்தார் விக்ரமன்.
அவர் கண்கள் ஏக்கத்தில் கலங்கியிருக்க, “சீக்கிரமா எந்திரிச்சு வந்திருடா. இங்க நடக்க கூடாததெல்லாம் நடந்திட்டிருக்கு.” என்றார்.
அப்போது அவர் தோளில் ஒரு கரம் பதிய, சட்டென்று கண்ணீரை உள்ளிழுத்து நிமிர்ந்து பார்த்தார். அவரின் மனைவிதான் ஆதாரவாய் அவரின் தோளை பிடித்து, “மண்டபத்துல இருந்து சம்மந்திங்க வீட்டுக்கு கெளம்பிட்டாங்கலாம்” என்றார்.
அதில் மெல்லியதாய் தலையசைத்து, “ம்ம்” என்றவரின் பார்வை மீண்டும் திரும்பி தன் மகனை வாடலாய் தழுவ, தான் பற்றியிருந்த அவன் கரத்தை மேலும் அழுத்தி பற்றினார்.
அதேப்போல் இங்கே அமீராவின் கரத்தை அழுத்தி பிடித்திருந்தவன், “இப்ப என்னவிட்டு போயிட்டன்னா, இனி எப்பவுமே என்கிட்ட வர முடியாது.” என்றான்.
அதில் அதிர்ந்து விழி விரித்தவளின் கண்ணீர் கன்னம் தாண்ட, கொஞ்சமாகவே இருந்தாலும் அவனுடன் இருந்த ஒவ்வொரு தருணங்களும் அவள் இதயத்தில் அல்லவா பதிந்திருந்தது. அதில் கண்ணீர் பெருக திரும்பி தன் தாய் தந்தையை பார்க்க, அவர்களோ வாடா என்பதுப்போல் கண்ணீருடன் கைகளை நீட்டினர். அதில் இவள் மனம் தவிக்க, திரும்பி இவனையும் பார்த்தாள். அவனோ எப்போதோ கரத்தை விட்டிருக்க, சட்டென்று இவள் மனம் நின்று துடித்தது.
அதில் அப்படியே நிமிர்ந்து அவனை பார்த்தவள், “உங்களவிட்டு போக மாட்டேன்.” என்று மயக்கத்திலிருந்த அவனின் நெஞ்சில் சாய்ந்து கூறிய தன் வார்த்தைகள் கண்முன் வர, வேகமாய் அவன் மார்புக்குள் புகுந்தாள் அமீரா.
அதில் திடுக்கிட்டு திகைத்து நின்றவன், அப்படியே குனிந்து அவளை பார்க்க, அவளோ அவன் மார்புக்குள் கதறி அழுதபடி, “ஐயம் சாரி. அவங்கதா என் குடும்பம். நா அவங்கக்கூடதா இருக்கணும்.” என்று கூற, சட்டென்று இவன் இதயம் அடி வாங்க, உடல் மொத்தமும் இறுகியது.
“என்ன மன்னிச்சிருங்க” என்றபடி அவள் கதறி அழ, வேகமாய் அவளை விலக்கி தள்ளியவன், “இங்கிருந்து போ.” என்று கத்தினான்.
அதில் திடுக்கிட்டு பின்னெட்டு வைத்தவள், கண்ணீருடன் அவனையே பார்க்க, அவனோ கோபமாய் அங்கிருந்து நகர்ந்தான்.
அதில் இதயம் வலிக்க அப்படியே நின்றவள், திரும்பி தன் தாய் தந்தையை பார்க்க, அவர்களோ அத்தனை தவிப்புடன் எங்கம்மா போன என்றபடி கண்ணீரை ஏந்தி நிற்க, அதில் கண்ணீர் பெருக வேகமாய் அவர்களிடம் ஓடினாள் இவள்.
அவர்களும் வேகமாய் அவளிடம் வர அடியெடுத்து வைக்க, சட்டென்று வெடித்து சிதறியது அந்த வீடு மொத்தமும். அதில் இவள் அதிர்ந்து அப்படியே நின்றுவிட, வெடித்து சிதறிய அந்த நெருப்பின் அனல் மொத்தமும் பாய்ந்து இவளிடமும் வந்த நேரம், தன் கருப்பு மேற்சட்டையை விரித்து அவளை முழுதாய் மூடி தன் மார்புக்குள் கொண்டு வந்தான் அவன்.
அதில் அத்தனை அதிர்வாய் நிமிர்ந்து அவனை பார்த்தவளின் முகத்தில் கிடந்த கூந்தலை, ஒற்றை விரலால் மெல்ல ஒதுக்கியபடியே அவள் விழி பார்த்து, “இனி நா மட்டுந்தா உன் குடும்பம்.” என்றான் அழுத்தமாக.
அதில் அத்தனை அதிர்வாய் அவனை கடந்து பின்னால் பார்த்தவளின் இதயம் எப்போதோ துடிப்பை நிறுத்தியிருக்க, அவள் விழிதிரையில் தெளிவாய் பதிந்தது அந்த நெருப்பு. அதில் அப்படியே அவள் இமைகள் இருட்ட, மயங்கி அவன் மார்பில் சரிந்தாள்.
“வாட்? எப்பிடி?” என்று அத்தனை அதிர்வாய் கேட்டார் விக்ரமன்.
“தெரியலைங்கைய்யா அங்க..” என்று அவன் பதறி கூற வரும் முன், வேகமாய் அவனை விலக்கிவிட்டு ஓடினார் விக்ரமன்.
அதில் அவரின் ஆட்களும் அவசரமாய் அவரின் பின்னால் ஓட, அவரோ வாசலை அடையும் முன்பே மொபைலை எடுத்து, “கார எடுத்துட்டு வா.” என்று அவசரமாய் கூற, அவர் வாசலை தாண்டும் நேரம் கார் அவர் முன்பு வந்து நின்றிருந்தது.
அதில் வேகமாய் ஏறி அமர்ந்தவர், “சீக்கிரம் போ.” என்றார் பதறலாக. அடுத்த நொடியே ட்ரைவரும் காரை திருப்பிக்கொண்டு செல்ல, பதற்றத்தில் அப்படியே இருக்கையில் சாய்ந்து இறுக்கி விழி மூடினார் விக்ரமன்.
அவருக்கு தெரியும். இதை யார் செய்திருப்பார் என்று. அவர் மண்டைக்குள் ஆயிரம் விஷயங்கள் ஓட, “மண்டபத்துக்காய்யா?” என்ற ட்ரவரின் குரலில் திடுக்கிட்டு விழித்தவர், “ஹ?” என்று கேட்க, ட்ரைவரும் திரும்பி, “மண்டபத்துக்கான்னு கேட்டங்கய்யா” என்றான் கனிவாக.
அதில் முன்னிருந்த இருக்கையை இறுக்கி பிடித்து, “சம்மந்தி வீட்டுக்கு போ.” என்றார் பதறலாக. அதில் அவனும் தலையசைத்துவிட்டு நேராய் அங்கு சென்றான்.
அதில் அவரோ மீண்டும் அந்த யோசனையில் ஆழ்ந்தபடி அப்படியே அந்த ஜன்னலில் சாய, அதே ஜன்னலருகே உரசியபடி வந்த ஒரு கருப்பு நிற உயர் ரக காரின் ஜன்னல் கண்ணாடி மெதுவாய் இறங்க, அதனுள் நக்கலாய் வளைந்தது ருதனின் இதழ்கள்.
அதில் ஏதோ தோன்ற இவரும் புருவம் சுழித்து மெதுவாய் திரும்ப, அதற்குள் மெதுவாய் ஏறிய அந்த காரின் கண்ணாடி அவன் முகத்தை மறைத்து கடைசியாய் அவன் கண்கள் மட்டும் தெரியும் நேரம் அழகாய் தன் கூலரை மாட்டியபடி காரை வளைத்திருந்தான் ருதன்.
அதில் இவரும் சாதாரணமாய் பார்வையை திருப்பிவிட்டு பின்னிருக்கையில் சாய்ந்து விழி மூடினார்.
அவரை கடந்து சென்ற அந்த காரின் சைடு மிரர் வழியே அவரையேதான் பார்த்தவனின் இதழ்கள் மேலும் ஏளனமாய் வளைய, அப்படியே தன் முன்னிருந்த பேக் மிரர் வழி தன்னவளை பார்த்தான்.
அவளோ பின்னிருக்கையில் மயங்கிய நிலையில் படுத்து கிடக்க, வாடிய பின்பும் அழகு குறையா பூ ஒன்று உண்டென்றால், அது அவள் முகம் தான். அந்த பூமுகத்தை தன் பக்கம் திருப்பியபடி கண்ணாடியை சரிசெய்தவன், இரசனையின் சாயலாய் அழகாய் இதழ் வளைத்தான்.
நான் தான் நீ தேடும் மாண்பாளன்..
பூவாய் உன்னை ஏந்தும் பூபாலன்..
உன் மடியின் மணவாளன்
என தோன்றுதே…
என்று அந்த காரில் ஓடிக்கொண்டிருந்த பாடலுக்கு ஏற்ப அவளையே இரசித்தபடி காரை ஓட்டினான்.
அதையறியாத அவளோ ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க, அவள் மீது படர்ந்த ஏசி காற்றில் அவளின் பிறை நெற்றியிலிருந்த குறு முடிகள் அழகாய் அசைந்தாட, சிறிது நேரத்தில் அவ்விடமே வியர்வை மொட்டுக்களால் நிறைந்தது. அந்த மொட்டுக்கள் உடைந்து ஒழுகும் அளவிற்கு அவளின் நெற்றி சுருங்கி விரிய, சுவாசம்க்கூட அடைப்பட்டு திணறியபடி அவளின் மயக்கம் கலைய, கடினப்பட்டு இமைகளை பிரித்தாள்.
அடுத்த நொடி அவள் விழிகள் அகல விரிய, அத்தனை நெருக்கத்தில் அவளின் இதழ்களை வன்மையாய் சுவைத்துக்கொண்டிருந்தான் அந்த அரக்கன்.
அதில் அவள் இதயம் அத்தனை பலமாய் துடிக்க, அந்த இதயத்தையே முழுதாய் நசுக்கும் அளவிற்கு அவன் தேகம் மொத்தமாய் அவள் மீது புதைந்திருந்தது. அதில் பதறி அவனை இரு கரம் கொண்டு விலக்க முயல, அதில் மேலும் மிருகத்தனமாய் அவள் இதழின் உதிரத்தையும் சேர்த்து ருசித்தது அவனின் இதழ்கள்.
அதில் வலியோடு கண்களை இறுக்கி மூடியவளின் கண்ணீர் மொத்தமும் வெளியேற, முழு பலமாய் அவனை விலக்கி தள்ளிவிட்டு எழுந்தாள் அவள். அவனோ பொத்தென்று மெத்தையின் மறு முனையில் விழ, இவளோ மூச்சு வாங்க பதற்றமாய் சுற்றியும் பார்த்தாள்.
இது நிச்சயம் அவர்கள் இருந்த அந்த வீடு அல்ல. ஏதோ ஒரு வெள்ளை மெத்தையில் அமர்ந்திருந்தவள், புரியாது தலையை பிடிக்க, அப்போதே சற்று முன் நடந்த அனைத்தும் அவள் கண்முன் வந்து குவிந்தது.
அதில் மெதுவாய் நிமிர்ந்து அவளை தீயாய் முறைத்தவனுக்கோ, கோபம் பற்றிக்கொண்டு வர, மெத்தை விரிப்பை இறுக்கி பிடித்து இழுத்தபடி எழுந்தமரும் முன், அவன் சட்டையை இழுத்து பிடித்தவள், “யாரு நீ?” என்று கத்தி கேட்டாள் ஆதங்க கண்ணீருடன்.
அதில் குனிந்து தன் சட்டையை பார்த்தவன், மெதுவாய் நிமிர்ந்து மேலும் அழுத்தமாய் அவளை முறைக்க, அவளோ அத்தனை ஆதங்கமாய் அவன் சட்டையை உலுக்கி, “எதுக்காக இப்பிடி பண்ண? அவங்க உனக்கு என்ன பாவம் பண்ணாங்க?” என்று கத்தி கேட்க, சட்டென்று அவள் பிடறியை இறுக்கி பிடித்திருந்தான் அவன்.
“ஆ!” என்று அவள் வலியில் விழியை இறுக்கி மூடி நிமிர, அவள் முகத்திற்கு அத்தனை நெருக்கமாய் வந்தவன், “என்ன பாவம் பண்ணாங்களா?” என்று பல்லை கடித்து கேட்டான்.
அவளோ வலியில் அவன் கரத்தை தட்டி விலக்க முயன்றபடி புரியாது அவனை பார்க்க, அவள் நெஞ்சுக்குழியில் அழுந்தியது அவனின் ஒற்றை விரல்.
அதில் அவள் திடுக்கிட்டு குனியும் முன், மேலும் விரலில் அழுத்தம் கொடுத்தவன், “இங்க இருந்தாங்களே அதுதா அவங்க பண்ண பெரிய பாவம்.” என்றான் அழுத்தமாக.
அதில் அவள் கண்ணீருடன் புருவங்களை விரிக்க, மேலும் அழுத்தம் கொடுத்து குத்தி காட்டியவன், “இது எனக்கு சொந்தமான எடம். என்ன தவர எவன் இருந்தாலும் இப்படித்தா பண்ணுவேன்.” என்று பல்லை கடித்து அத்தனை அழுத்தமாகவே கூறினான்.
அதில் அவள் விழி நீர் அதிகரித்து விழி நாளங்கள் சிவக்க, “நா மட்டுந்தா இருக்கணும் புரியுதா?” என்று அத்தனை அழுத்தமாய் அவன் கேட்க, வேகமாய் அவனை விலக்கி தள்ளிவிட்டவள், “பொய்.” என்று ஆதங்கமாய் கத்தினாள்.
அதில் கட்டிலுக்கு கீழ் சென்று விழுந்தவன், அத்தனை கோபமாய் நிமிர்ந்து அவளை பார்க்க, அவளுமே கீழே இறங்கி நின்று, “உனக்கு தேவ அது இல்ல.” என்றபடி வேகமாய் தன் சேலையை உருவி வீசினாள்.
அது அவன் முகத்தின் மீதே வந்து படர, அதை விரல்களால் மெதுவாய் விலக்கியபடியே அவன் விழிகள் அனலாய் அவளை தழுவ, “இதுதா. இது மட்டுந்தா உனக்கு வேணும்.” என்று கதறியபடி தன் உடலை தொட்டு கூறினாள்.
அதில் அவனுக்கோ மேலும் கோபம் பற்ற கண்கள் சிவக்க, அந்த சேலையை சுருட்டி வீசிவிட்டு எழுந்தான்.
“உன் தேவ தீருற வர இப்பிடித்தா ஒவ்வொரு உயிரா போகும்னா, கடைசி உயிர் நானேவே இருந்துட்டு போறேன். வா வந்து எடுத்துக்கோ. எத்தன நேரம் வேணுமோ, எத்தன நாள் வேணுமோவா, உன் தேவ தீந்ததுக்கு அப்றமாவது என்ன கொன்னிரு.” என்று கூறி முடிக்கும் முன் அவள் கழுத்தை பிடித்து சுவரில் தள்ளியிருந்தான் அவன்.
அதில் அவள் திடுக்கிட்டு திணறி விழி விரிக்க, அவனோ தன் சிவந்த விழிகளை அவள் விழிகளுக்குள் திணித்து, “இன்னொரு வார்த்த பேசுன.. நெஜமாவே கொன்னிருவன்டி.” என்று பல்லை கடித்து அழுத்தினான்.
அதில் அவளின் விழியோரம் ஆதங்க கண்ணீர் வழிந்து ஒழுக, கொன்னிரு என்பதுப்போலவே அவனை பார்த்தாள்.
அதில் சட்டென்று கரத்தை விலக்கி அவள் தோளை அழுத்தி பிடித்தவன், “என்னடி சொன்ன? எத்தன நேரம் வேணுமோ எத்தன நாள் வேணுமோவா?” என்று பல்லை கடித்தவன், சட்டென்று அவள் முகவாயை அழுத்தி பிடித்தான். அதில் பயந்து உடல் விரைத்தவளின் கலங்கிய விழி அவன் சிவந்த விழியோடு கலக்க, “லைஃப் லாங் வேணும்.” என்றான் அத்தனை அழுத்தமாக.
அதில் அவளோ சிறு அதிர்வாய் அவன் விழிகளை பார்க்க, “என் கடைசி மூச்சிருக்குற வரைக்கும், ஒவ்வொரு செக்கண்டும் வேணும்.” என்றான் அத்தனை அழுத்தமாக.
அதில் அருவருப்பாய் அவனை விலக்கி தள்ளியவள், “அதுக்கு பேசாம என்ன கொன்னிரு.” என்று கத்தியபடி, “யாரோ ஒருத்தனோட தெனம் தெனம் சித்தரவதைய அனுபவிக்குறதவிட..” என்று கூறும் முன், அவள் குரல்வளையை அழுத்தி பிடித்திருந்தான் அவன்.
அதில் திடுக்கிட்டு சுவரில் புதைந்தவளின் வார்த்தை வலியுடன் தொண்டைக்குள் புதைய, அதை மேலும் அழுத்தி நெறுக்கியவன், “யாரோ ஒருத்தன் இல்ல. உன் புருஷன்.” என்றான் உருமலாக.
அதில் சட்டென்று அவள் இதயம் அடைத்து விழிகள் அகல விரிய, “உன்ன தொட்டு தாலி கட்டுன, உன்னோட புருஷன்.” என்றான் அழுத்தமாக.
அந்த அழுத்தம் அவன் விழியிலும் இருக்க, அவனின் அந்த சிவந்த விழிகளில் கோபத்தையும் தாண்டிய அப்பட்டமான வலி, அதனுள் இவளுடன் சேர்ந்து அக்கினியை வளம் வந்த நொடிகள் இன்னுமே அழியாமல் பதிந்திருந்தது.
– நொடிகள் தொடரும்…