அத்தியாயம் 9: ஹீரோன்னா Mass ஆ இருக்கணும்
போதையின் வீரியத்தால் தலைவலியில் தவித்துக் கொண்டு இருந்த விஜய் தினேஷிடம் மாத்திரையை வாங்கி போட்டு விட்டு படுத்து உறங்கியவன், கிட்டதட்ட மாலை 3 மணிக்கு தான் கண் விழித்தான். அவன் எழுந்து ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அவனுக்கு உணவு பரிமாறிய தினேஷ் “பாஸ்.. ஸ்ரீகாந்த் சார் கால் பண்ணாரு. ஸ்டோரி அண்ட் லொகேஷன் பத்தி உங்க கூட டிஸ்கஸ் பண்ணனும்னு சொன்னாரு. நீங்க ஃப்ரீ ஆனதுக்கப்புறம் உங்க கூட ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணச் சொல்லி கேட்டாரு. மீட்டிங் எப்ப செடியூல் பண்றது?” என்று கேட்டான்.
“அதான் அவன் அரேஞ்ச் பண்ண லாஸ்ட் மீட்டிங்கே தரமா இருந்துச்சே! அதுக்குள்ள அவனுக்கு அடுத்த மீட்டிங்க்கு அவசரமா?” என்று விஜய் நக்கலாக கேட்க, எதை மனதில் வைத்து கொண்டு இப்படி அவன் சொல்கிறான் என்று புரிந்து கொண்ட தினேஷ் “இது ஒரிஜினல் மீட்டிங் தான் பாஸ். அவரோட அசிஸ்டன்ட்ஸ் லொகேஷன் பாத்துட்டு வந்துட்டாங்களாம். அத பத்தி உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணி final பண்ணனும்னு சொன்னாரு.” என்றான்.
“எப்படியோ நேத்து அடிச்ச சரக்கு மறுபடியும் மனச குளுகுளுன்னு ஆகிடுச்சு டா. எந்த மீட்டிங்கா இருந்தாலும் நான் ரெடி தான். அவனை கிளம்பி உடனே இங்க வர சொல்லு.” என்ற விஜய் சாப்பிட்டுவிட்டு தனது ரூமிற்கு சென்றான்.
சில நிமிடங்களில் டைரக்டர் ஸ்ரீகாந்த் அங்கே வந்து சேர்ந்தார். விஜய் வழக்கம் போல கெத்தாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, பவ்வியமாக அவன் முன்னே வந்து நின்றார் டைரக்டர் ஸ்ரீகாந்த். தன் ஒரு கையால் சைகை செய்து அவரை உட்கார சொன்ன விஜய், “அவன் தானே மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்கன்னு கேட்டான்! அவனே பேசட்டும்.” என்று நினைத்து திமிராக அமைதியாகவே இருந்தான்.
விஜய் சாதாரணமாக இருப்பதை வைத்து தன் மீதும், தன் மகள் மோனிஷாவின் மீதும் அவன் கோபமாக இல்லை என்று உறுதி செய்து கொண்ட ஸ்ரீகாந்த் தைரியமாக பேச தொடங்கினார்.
“சார் நம்ம ஆல்ரெடி டிஸ்கஸ் பண்ண மாதிரி ஸ்டோரில நான் கொஞ்சம் ஆல்ட்ரேஷன் பண்ணி இருக்கேன். நீங்க உங்களுக்கு ஓகேவான்னு பாக்கறீங்களா?” என்று கேட்க, ம்ம்.. என்றான் விஜய். “ஆல்ரெடி இருந்த மாதிரி நம்ம கதையோட ஹீரோ ஒரு அனாதை ஆசிரமத்தில வளர்ந்து அப்படியே பெரிய ஆள் ஆகிறான். அவன் பெரிய பிசினஸ்மேன் ஆனதுக்கு அப்புறமா அவனோட பேரண்ட்ஸ் யாருன்னு கண்டுபிடிச்சு அவங்க அப்பா அம்மாவை ஏமாத்தி அவனோட தாய் மாமா தான் எல்லா சொத்தையும் எழுதி வாங்கிட்டு அவனையும் கொண்டு போய் ஆசிரமத்தில விட்டத அவன் கண்டுபிடிக்கிறான். சொத்துகளையும் இழந்து, பையனையும் இழந்து வருத்தத்தில இருந்த ஹீரோவோட அப்பா, அம்மா சூசைட் பண்ணி செத்துடுறாங்க. தன்னோட மாமா ஃபேமிலிய பழிவாங்க நினைச்சு ஹீரோ அவனோட சொந்த ஊருக்கு போறான்.
அங்க போய் அவன் யாருன்னு சொல்லாம அவனோட மாமா ஃபேமிலிய பக்கத்துல இருந்து வாட்ச் பண்ணி அவங்கள அளிக்கிறதுக்கு பிளான் போடுறான். அந்த கேப்ல ஹீரோவோட மாமா பொண்ணுக்கு ஹீரோ மேல லவ் வந்துருது. ஆனா நம்ம ஹீரோ தான் ஆல்ரெடி அவனோட பர்சனல் அசிஸ்டன்ட் நம்ம ஹீரோயினை லவ் பண்ணிட்டு இருக்கானே!
அதனால அவளை கண்டுக்காம இருக்கான். இருந்தாலும் அந்த பொண்ணு விடாம ஹீரோ பின்னாடி சுத்திக்கிட்டே இருக்கு. ஒரு கட்டத்துல ஹீரோவுக்கும் அந்த பொண்ணு மேல இன்ட்ரஸ்ட் வருது. இருந்தாலும் அவ தன் குடும்பத்தை அழிச்சவனோட பொண்ணுன்றதுனால, தன்னோட மனச மாத்திகிட்டு அவள வச்சு மாமா ஃபேமிலிய லாக் பண்ணனும்னு நினைக்கிறேன்.
அங்க நடக்கிறத எல்லாம் தெரிஞ்சுகிட்ட நம்ம ஹீரோயின் ஹீரோ நம்ம கையை விட்டு போய்ட கூடாதுன்னு நினைச்சு பயந்து கிளம்பி அந்த வில்லேஜுக்கு வர்றா. இப்போ ஹீரோயின், தன்னோட மாமா பொண்ணு, அவள வச்சு அவன் போட்ட பிளான் இது மூணுக்கும் நடுவுல சிக்கிக்கிறான் ஹீரோ. ஹீரோவோட மாமாவுக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான். இவளுக்கு சொத்து சேர்த்து வைக்கணும்னு தான் தன்னோட ஃபேமிலியவே ஹீரோவோட மாமா அழிச்சிட்டான்றதால அந்த பொண்ணும், மாமாவோட குடும்பமும் எப்பவும் சந்தோஷமாவே இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன் ஹீரோ. அவங்க எல்லாரையும் கொல்றத விட இது தான் அவங்களுக்கு கரெக்டான பனிஷ்மெண்டா இருக்கும்னு அவனுக்கு தோணுது.
சோ அத்தை பொண்ண கல்யாணம் பண்ணி கொடுமைப்படுத்தலாம்ன்னு ஹீரோ டிசைட் பண்றான். ஆனா ஹீரோயின் அவனோட பிளானை பத்தி ஹீரோ சொல்லியும் கூட அதை ஒத்துக்க மாட்டேங்குறா. அதனால அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை வந்து அவங்க பிரிஞ்சிடறாங்க.
தன்னோட பழிவாங்குற எண்ணத்துக்காக ஹீரோ தன்ன விட்டுட்டு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறத ஏத்துக்க முடியாம ஹீரோயின் சூசைட் அட்டம்ப்ட் பண்ண பாக்குறா. அதுல இருந்து அவளை காப்பாத்துன ஹீரோ, மாமா குடும்பத்தை பழிவாங்குறதுக்கு வேற ஒரு பிளான் யோசிக்கிறதா சொல்லி ஹீரோயினை யாருக்கும் தெரியாம சென்னையில் வச்சு மேரேஜ் பண்ணிக்கிறான்.
அதேசமயம் தனக்கு மேரேஜ் ஆனத மறச்சு மாமா பொண்ணு கூட பழகுறான். அந்த பொண்ணு ஹீரோவை லவ் பண்றேன்னு சொல்லி ப்ரொபோஸ் பண்றா. ஹீரோ என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறான்.
ஹீரோ பெரிய பணக்காரனா இருக்கிறதுனால தன்னோட பொண்ணு அவனை லவ் பண்றது தெரிஞ்சு அவனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சிடனும்ன்னு நினைச்சு ஹீரோவோட மாமா பிளான் பண்றான். இது தான் முன்னாடி ஹீரோவோட பிளானா இருந்துச்சு அப்படின்றதனால அவன் ஓகே சொல்லிவிடுறான். அதேசமயம் ஹீரோயின் கிட்ட பேசி அவளையும் பிரைன் வாஷ் பண்ணி மாமா பொண்ண கல்யாணம் பண்ணிக்கறதுக்கு அவள ஓகே சொல்ல வைக்கிறேன் ஹீரோ.
அவன் நினைச்ச மாதிரியே எல்லாமே நடக்குது. மாமா பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவ கூட சேர்ந்து வாழாம அவன் யாருன்ற உண்மைய சொல்லி டெய்லியும் அவளை கொடுமைப்படுத்திக்கிட்டே இருக்கான். அதனால தன்னுடைய தப்ப உணர்ந்த அந்த மாமா திருந்தி ஹீரோ கிட்ட சாரி கேட்டு தான் பொண்ணு கூட வாழ சொல்லி கேட்கிறான். ஆனா ஹீரோ கேக்கல. அந்த சமயத்துல தான் ஹீரோவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுன்னு அவங்க எல்லாருக்கும் தெரிய வருது.
அதனால மனசு உடைஞ்சு போய், ஹீரோவோட அன்பு கிடைக்காம Vex-ஆன அவனோட மாமா பொண்ணு நெஜமாவே சூசைட் பண்ணி செத்துப் போயிட்டா. அவ செத்துப் போனதுக்கு அப்புறம் தான் அவ மேல தனக்கு எவ்ளோ பாசம் இருந்திருக்குன்னு புரிஞ்சுகிட்ட ஹீரோ இப்ப ஹீரோயின் கூட சேர்ந்து வாழ முடியாம அவளை டிவர்ஸ் பண்ணிட்டு வெளிநாட்டுக்கு போய்டுறான்.
கொஞ்சம் வருஷம் கழிச்சு அவன் இந்தியாவுக்கு வரும்போது, ஹீரோயினிக்கும் அவனுக்கும் ஒரு பையன் இருக்கிறது அவனுக்கு தெரிய வருது. அதனால அந்த பையனுக்காக அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்றாங்க. இது தான் சார் ஸ்டோரி. இதுல நிறைய சீன்ஸ் வில்லேஜ்ல தான் வரும். அதனால முதல்ல அங்க நம்ம ஷூட் பண்ணிடலாம்னு இருக்கேன்.” என்றான் ஸ்ரீகாந்த்.
அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த விஜய் “ஸ்டோரி எல்லாம் ஓகே தான். பட் இதுல ஹீரோ கேரக்டருக்கு மாஸ் கொஞ்சம் கம்மியா இருக்கிற மாதிரி இருக்கே! ஹீரோவை கெத்தா காட்டுற படத்துல மட்டும் தான் நடிப்பேன்னு உங்களுக்கு தெரியாதா?” என்று தன் கம்பீரமான குரலில் கேட்க, “சார் நான் வெறும் அவுட் லைன் ஸ்டோரி மட்டும் தான் உங்க கிட்ட சொல்லி இருக்கேன். ஊர்ல ஹீரோவோட மாமா பொண்ணு மேல ஒரு ரைஸ் மில் ஓனருக்கு கண்ணு இருக்கும். அவனும் பணக்காரன் தான்.
ஆனா கொஞ்சம் கிழவன். அவன் அந்த பொண்ண கல்யாணம் பண்ணி தர சொல்லி ஹீரோவோட மாமா கிட்ட கேப்பான். பட் ஏற்கனவே வசதியா இருக்கிற அந்த மாமா இவன மாதிரி ஒரு ஆளுக்கு எல்லாம் பெண்ணை கல்யாணம் பண்ணி தர மாட்டேன்னு சொல்லிடுவான். சோ ஹீரோவுக்கும் அந்த ரைஸ் மில்காரனுக்கும் நிறைய fight scene இருக்கு. அப்புறம் உங்களோட பிசினஸ் பார்ட்னர் ஒருத்தன் உங்களை ஏமாத்த ட்ரை பண்ணுவான். அவன் கூடயும் நிறைய fight சீன் இருக்கு. உங்களுக்கு ஒரு ஸ்டோரி எழுதும்போது ஹீரோவுக்கு மாஸ் சீன்ஸ் இல்லாத மாதிரி நான் ஸ்டோரி எழுதவனா சார்?” என்று கேட்டான் ஸ்ரீகாந்த்.
“சரி ஓகே, இந்த ஸ்டோரிக்கு இதுக்கு மேல வேற சீன்ஸ் வைத்தாலும் நல்லா இருக்காது. இதையே final பண்ணிக்கலாம். அந்த மாமா பொண்ணு கேரக்டரும் இம்போர்ட்டண்ட் Role தான். அதுக்கு யாரை choose பண்ணி இருக்கீங்க?” என்று விஜய் கேட்க, “சார் இந்த கேரக்டருக்குன்னே செஞ்ச மாதிரி அந்த ஊரோட பிரசிடெண்ட் பொண்ணு இருந்தா. அதான் அவளையே அந்த ரோளுக்கு செலக்ட் பண்ணி இருக்கோம். என்னோட அசிஸ்டன்ஸ் அங்க போய் அந்த பொண்ண ஆடிஷன் பண்ணி எனக்கு வீடியோ சென்ட் பண்ணாங்க. எனக்கு தெரிஞ்சு அவ இந்த கேரக்டருக்கு கரெக்டா இருப்பா. நெஜமாவே அவ கிராமத்து பொண்ணு தான்ன்றதால, நம்ம பெருசா அவளுக்கு எதையும் சொல்லிக் கொடுத்து நடிக்க வைக்க தேவையில்லை.” என்றான் ஸ்ரீகாந்த்.
அதுவும் சரி தான் என்று நினைத்த விஜய் “ஷூட்டிங் எங்க?” என்று கேட்க, “மதுரையில பிளான் பண்ணி இருக்கோம் சார். நான் சொன்ன அந்த பொண்ணோட ஊரு சோழவந்தான் தான். சூப்பரான வில்லேஜ். அங்க லொகேஷன் பார்க்க சொல்லி ஆள் அனுப்பி இருக்கேன். அவங்க வீடியோஸ் எல்லாம் எடுத்து அனுப்பி இருக்காங்க. அதையெல்லாம் பார்த்து நீங்க ஓகே பண்ணிட்டா, இந்த வீக்கே நம்ம சூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்.” என்றான் ஸ்ரீகாந்த்.
“ப்ரொடியூசருன்னா எல்லாத்தையும் சும்மா சும்மா நான் தான் பார்த்து final பண்ணனுமா? மீட்டிங் பிளான் பண்றதுக்கெல்லாம் எவ்ளோ யோசிக்கிறீங்க! ஒரு லொகேஷன் பார்த்து உங்களுக்கு fix பண்ண தெரியாதா? அதெல்லாம் நீங்களே பார்த்து பண்ணுங்க.
என்னோட ஆஃபீஸ் வொர்க் வேற எனக்கு நிறைய இருக்கு. நான் சூட்டிங்க்கு டேட் குடுக்கிறதே பெரிய விஷயம். சும்மா ஒவ்வொன்னுக்கும் என்ன பண்றதுன்னு கேட்டுகிட்டு வந்து என் கிட்ட நிக்காதீங்க.” என்று கடுமையான குரலில் விஜய் சொல்ல, “ஓகே சார்… ஓகே சார்.. டென்ஷன் ஆகாதீங்க. நீங்க உங்களோட schedule-லை ரெடி பண்ணி எனக்கு forward பண்ணீங்கன்னா, நான் shooting dates final பண்ணிடுவேன்.” என்றான் ஸ்ரீகாந்த். “அத பத்தி எல்லாம் நீங்க தினேஷ் கிட்ட பேசிக்கோங்க.” என்ற விஜய் அதற்கு மேல் ஸ்ரீகாந்திடம் பேச பிடிக்காமல் எழுந்து சென்று விட்டான்.
– காதல் மலரும் 🌹