அடுத்த நாள் காலை, மெல்ல உறக்கம் கலைந்து இமைகளை பிரித்த அமீரா, புரியாது மெத்தையை தடவ, அங்கே அவன் இல்லை. அதில் புரியாது முழுதாய் இமைகளை பிரிக்க முயன்றவளின் விழிகள் மீண்டும் இருட்டிக்கொண்டே வர, சட்டென்று தலையை உலுக்கி விழி திறந்தவள், அப்படியே மெத்தையில் கரத்தை பதித்து மெதுவாய் எழுந்து அமர்ந்தாள்.
அப்போது மெத்தையில் அவள் மட்டுமே கிடக்க, புரியாமல் சுற்றியும் பார்த்தவளின் உடலெல்லாம் அத்தனை சோர்வாய் இருக்க, அவளின் கரம் அன்னிச்சையாய் அவளின் வயிற்றை இறுக்கி பிடித்தது.
மறு கரம் அவளின் தலையை பிடிக்க, தலை சுற்றலாய் அப்படியே பார்வை மங்கி, திடீரென்று வயிற்றை பிரட்டிக்கொண்டு வந்து வாந்தி வந்துவிட, அப்படியே வெளி வந்த வாந்தியை உடனே ஏந்திக்கொண்டது அவன் கரங்கள்.
அதில் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனை பார்க்கும் முன் கண்களெல்லாம் மங்கிக்கொண்டு வந்து, அப்படியே அவன் மீதே சாய்ந்தாள். அதில் அவன் மார்பில் புதைந்தவளுக்கோ தலையே சுற்ற, மீண்டும் குமட்டல் வரவும், வாயில் கை வைத்து கட்டுப்படுத்தினாள்.
“எடு எடு. கன்ட்ரோல் பண்ணாத.” என்று அவன் கூற, அப்படியே அவன் மீதே எடுத்திருந்தாள்.
அதில் பதறி உடனே விலகி, “ஐயம் சாரி” என்று சோர்வாய் கூறி அவளே அதை துடைக்க போக, அதற்குள் எழுந்திருந்தான் அவன்.
அதில் அவள் சோர்வாய் நிமிர்ந்து அவனை பார்க்க, அவன் முதுகு மட்டுமே தெரிய கழிவறைக்குள் சென்றிருந்தான் அவன்.
அதில் அப்படியே தலையை பிடித்தவள், தனக்கு என்னவாயிற்று என்று புரியாமல் பொத்தென்று மெத்தையில் சாய்ந்திருந்தாள்.
அப்படியே அவள் விழிகளும் சோர்வில் மூடியிருக்க, சில நொடிகள் பரவிய அமைதிக்கு பின் மெதுவாய் அவள் செவிகள் திறக்க, “எப்பிடி ஃபீவர் வரும்? நா அல்ட்ரெடி மருந்து போட்டுட்டேன்.” என்றது அவன் குரல்.
அதில் அவள் மெதுவாய் இமைகளை பிரிக்க முயல, அப்போதும் மொபைலை பிடித்தபடி நின்றிருந்த அவனின் முதுகு பக்கம் மட்டுமே தெரிந்தது.
“தேன் எல்லாம் லேயர் மாதிரிதா வேல செய்யும். ஏற்கனவே இரத்தத்துல கலந்த பாக்டீரியாஸ என்ன பண்ணும்? அதா ஃபீவர் வந்திருக்கு. அதுவும் அப்லை பண்ண தேன் காஞ்சுட்டா காயத்துல வலி வரவும் வாய்ப்பிருக்கு.” என்றார் மருத்துவர்.
“இல்ல நா காயறதுக்குள்ள ரிமூவ் பண்ணிட்டேன். இப்போ என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு.” என்று இறுக்கமாய் கேட்டான் ருதன். அப்போதே இவளும் தன் உடலை உணர, அந்த பிசிபிசுப்பான தேன் இப்போது அவள் உடலில் இல்லை.
அந்த காயங்களுக்கு இவன் தேனை மருந்தாய் பூசிவிட்ட பின்னர், இருவரும் இதழ் முத்தத்தில் மூழ்கியிருக்க, அசதியில் அப்படியே அவளும் உறங்கியிருந்தாள். அவளின் ஆடையில்லா வெற்றுடலை தன் மார்புக்குள் புதைத்து தட்டிக்கொடுத்தபடியே உறங்க வைத்தவன், சிறிது நேரத்திலேயே அந்த தேனை ஆராய்ந்துவிட்டு, அது காயும் முன் ஈர துணி கொண்டு துடைத்து சுத்தம் செய்திருந்தான். அதன் பிறகுதான் அவளுக்கு மாற்று சேலையே மாற்றிவிட்டிருந்தான். பிறகு அடுத்த சில நிமிடங்களில் இவள் விழி திறக்க, அவன் கீழே மயங்கி கிடந்திருந்தான்.
இப்போது மருத்துவரோ, “சரி ஓகே. ஒடனே நா குடுத்த மெடிசன மொதல்ல அப்லை பண்ணுங்க. அன்ட் இப்பொதைக்கு வயித்துல எதுவும் நிக்காது. சோ வாமிட்டிங் நிக்குற வர காத்தோட்டமா உக்கார வைங்க. அதுகப்றம் மெதுவா சாப்பட வெச்சு, டேப்ளட் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்தா மட்டும் போதும். அப்பவும் செரியாகலன்னா கால் பண்ணுங்க.” என்று கூற,
“செரியாகலன்னா உன் உயிர் உங்கிட்ட இருக்காது.” என்று அழுத்தி கூறிவிட்டு காலை கட் செய்தவன், வேகமாய் யோகிக்கு கால் செய்தான் ருதன்.
அவனும் அட்டன் செய்து, “சொல்லுங்க பாஸ்” என்றான்.
“நேத்து கொண்டு வந்த மெடிசன்ஸெல்லா எங்க வெச்ச?” என்று இவன் கேட்க, “உங்களோடது மேடமோடது ரெண்டுமே, கீழ் ட்ராயர்லதா வெச்சிருக்கேன் பாஸ்.” என்றான் யோகி.
அடுத்த நொடி இணைப்பை துண்டித்தவன், வேகமாய் சென்று ட்ராயரை திறந்து மருந்துகளை எடுத்தான்.
தன் காதருகில் சத்தம் கேட்கவும் அவள் மீண்டும் இமைகளை பிரிக்க முயல, அதற்குள் அவள் அருகாமையில் வந்தமர்ந்தான் அவன்.
அதில் அவள் முழுவதுமாய் இமையை பிரிக்க முயல, அதற்குள் அவள் சேலையை விலக்கி வீசியிருந்தான் அவன்.
அதில் அவள் திடுக்கிட்டு தன் கரங்களால் தன்னை மறைக்க முயல, அவள் நெற்றியில் பதிந்தது அவன் இதழ்கள்.
அதில் அவள் மெதுவாய் இமை பிரிக்க, பிரிந்த இமைகளின் நடுவே மங்கலாய் தெரிந்த அவன் முகம் மெல்ல தெளிவானது.
தலையில் கட்டுடன் கண்களில் தவிப்புடன் தன் முன் தெரிந்த அவன் முகம், நேற்று வரை அசையாது விழி மூடி படுத்திருந்த அந்த முகத்தையே நினைவூட்ட அவள் இதயம் கனத்து, கண்கள் கலங்கி மெதுவாய் அவன் கன்னம் பற்ற துடித்தது அவள் கரங்கள்.
அதற்குள் அவள் கன்னம் மெல்ல பற்றியது அவன் விரல்கள். அதில் அவள் கரம் துடிப்பை நிறுத்த, “வலிக்காம போட்டு விடுறேன் ம்ம்?” என்றான் அவன்.
அவன் குரலில் இருந்த மென்மை, அவன் வார்த்தையில் தெரிந்த தவிப்பு, அதில் தன்னை மறைத்திருந்த அவள் கரங்கள் தானாய் விலகிவிட, இப்போது அவன் விரல்கள் அவளின் ஜேக்கெட் ஹூக்குகளை மெதுவாய் அவிழ்க்க துவங்கியது. அதில் அவளின் தேகம் கூசியெழ மெதுவாய் குறுகியவள், தன் சோர்ந்த இமைகளை மெதுவாய் பிரித்து அவனை பார்த்தாள்.
என்றுமே தன்னை தாபத்துடன் பார்த்த விழிகளில் இன்று நுண்ணளவும் தாபமின்றி, தவிப்பு மட்டுமே நிறைந்திருக்க, இவள் இதயத்தில் இதமாய் பரவியது ஒரு உணர்வு. அது என்னவென்று அவளால் கூற முடியவில்லை, ஆனால் நேற்று வரை அவன் மீதிருந்த பயம் மொத்தமும் இந்த ஒரு உணர்வில் காணாமல் போனது போன்ற உணர்வு.
அதற்குள் அவளின் ஜேக்கெட்டை முழுதாய் திறந்து விலக்கியவன், அவளுக்காக மருத்துவர் கொடுத்த ஜெல் டப்பாவை திறந்து, மீண்டும் அதனுள் மயிலிறகை முக்கி எடுத்து அவள் மார்பிலிருந்த காயத்தில் பூச வர, அவன் கரத்தை பிடித்து தடுத்தாள் அவள்.
அதில் அவன் நிமிர்ந்து அவளை பார்க்க, அவள் பார்வையோ மயிலிறகை பிடித்திருந்த அவன் கரத்தின் பேண்டேஜை கண்ணீருடன் தழுவியது. மீண்டும் அவனை குத்த கத்தியை இவள் ஓங்கிய நிமிடம் சட்டென்று அவன் பிடித்து குருதி ஒழுகியது கண்முன் வர, அவள் கண்ணீர் அதிகரித்து இதயம் வெகுவாய் வலித்தது.
அவனுக்கு மீண்டும் மீண்டும் வலியை மட்டுமே கொடுத்ததற்கு, தானும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தாலோ என்னவோ அந்த மயிலிறகை வேண்டாம் என விலக்கினாள்.
அதில் அது அவனின் வன் இதழை உரசி செல்ல, அதிலிருந்த மருந்து அவன் மீசையில் பூசியது. அதை கவனியாதவளின் இமைகள் சோர்வில் மீண்டும் மூடிவிட, அதற்குள் அவள் காயத்தில் படர்ந்தது அந்த மருந்து.
அதில் அவள் மார்பு விரிய திடுக்கிட்டு இமைகளை பிரிக்க, அதற்கு காரணமாகாத மயிலிறகோ மெதுவாய் அந்த கட்டிலின் கீழ் சென்று அமர்ந்தது.
அதற்கு பதிலாக இங்கே அவன் மீசை முடிகளே அழகாய் அந்த மருந்தை பூச, அதில் அவள் உடலெங்கும் கூச, அவள் மார்புகள் குறுகி விரிந்தது. விரிந்த மார்புகளின் நடுவே அழகாய் அவன் இதழ்கள் இறங்க, இவள் இதழ்கள் மெல்லியதாய் பிரிந்து அனலை வெளியேற்றியது.
அதில் அவள் மார்பகங்களுமே ஏறி இறங்க, அதை கடந்து வந்த அவனின் இதழ்களோ இப்போது அவள் வயிற்றில் வந்து படர, அவள் உயிர் சுழி குறுகியது. குறுகிய அவ்விடத்தில் வழிந்து வந்த அந்த மருந்தின் துளிகள், அந்த குழியில் வந்து நிறம்ப, அவன்தான் அதை ஊற்றிக்கொண்டிருந்தான்.
அதில் அவள் உடல் சிலிர்த்து இதயம் பலமாய் துடிக்க , மெத்தையை இறுக்கி பிடித்து நெளிந்தவளின் கன்னம் முழுதாய் தலையணையில் புதைத்தது. அதற்குள் அந்த மருந்து மெதுவாய் அவள் இடையெங்கும் பரவி ஒழுக, அங்கிருந்த காயங்களில் பட்டு, “ஸ்ஸ்” என்று அவள் புருவம் குறுக்கும் முன், அவன் மீசை மயிலிறகாய் அங்கு வருடியது.
அதில் மெத்தையை பற்றியிருந்த அவள் விரல்கள் மெதுவாய் தளர, அவன் விரல்களோ அவளின் இடையின் கீழ் இருந்த மடிப்புகளை மெதுவாய் அவிழ்த்தது. அதில் சிலிர்வாய் நெளிந்தவளின் விரல்கள் அவன் கை சட்டை நுனியை இறுக்கி பிடிக்க, அவ்விரல்களை மெதுவாய் பற்றி அதற்கு மென்மையாய் முத்தம் வைத்தது அவன் இதழ்கள். அதில் அவள் விரல்கள் தானாய் அவன் சட்டையை விடுவிக்க, அவன் விரல்களும் மடிப்புகளை அவிழ்த்து சேலையை மெதுவாய் விலக்கியது. அதில் அவள் இடையின் கீழும் காற்று தாரளமாய் படரவும், கூச்சத்தில் அவள் அவனுடன் ஒன்ற, அதற்குள் அவளின் தொடையிலிருந்த காயத்தில் படர்ந்தது அவன் இதழ்கள்.
அதில் அவ்விடம் முழுக்க கூசி தாங்க முடியாது அவன் சட்டையை இறுக்கி பிடித்து திரும்ப முயன்றவளின் அங்கங்களில் எக்கு தப்பாய் உரசியது அவன் இதழ்கள். அதில் அவள் வேகமாய் அவன் சட்டையை விட்டுவிட்டு கால்களை குறுக்க, அவள் முட்டியில் இதழை பதித்து மெதுவாய் கீழ் இறங்கினான்.
அதில் அவள் இதயம் அத்தனை பலமாய் துடிக்க, திறந்த தன் ஜேக்கெட்டினை இறுக்கி பிடித்து குறுகினாள். அதற்குள் அவன் இதழ்கள் அவளின் பாதத்தை வந்தடைய, அங்கு காயமெதுவும் இல்லாமல் இருக்கவும், நிம்மதியாய் அவள் விரல்களுக்கு முத்தமிட்டான்.
அதில் அவள் இறுக்கம் மெல்ல தளர, அவளின் கால்களும் மெதுவாய் சரிந்தது. அதில் அவன் மீசை உரச மெதுவாய் மேலேறியவன் மிச்சமிருந்த இடங்களிலெல்லாம் அவன் தாடியும் சேர்ந்தே அழகாய் மருந்தை தேய்க்க, இவளோ தன் வெற்றுடலை குறுக்கி கூச்சத்தில் சிலிர்த்து நடுங்கினாள்.
அந்த நடுக்கம் உணர்ந்த அவனுமே மெதுவாய் அவள் இடையின் வழி மீசையுரச, மார்பின் குழியை தாண்டி அவள் கழுத்தில் பயணிக்க, கூச்சத்தில் அவள் தொண்டை விரிய, அதில் அழகாய் இதழ் பதித்து அப்படியே மேலேறி அவள் இதழ் நெருங்கினான். அதில் மெதுவாய் தாடையை இறக்கியவளின் இதழ்களுமே இப்போது அவன் இதழ் ருசிக்க ஏங்க, மெதுவாய் அவள் இதழ் நெருங்கியவன், அவளுமே அவன் இதழில் சேரும் நொடி அப்படியே அவளை தூக்கி கையில் ஏந்தியிருந்தான்.
அதில் அவள் திடுக்கிட்டு அவன் மார்புக்குள் குறுகிக்கொள்ள, அப்படியே அவளை தூக்கிக் கொண்டு நடந்தான் அவன். அதில் தன் வெற்றுடலை மறைக்க, அவன் மார்புக்குள் மேலும் ஒன்றியவளின் கண்கள் மீண்டும் மயக்கத்திற்கு இழுக்க, அதற்குள் ஜில்லென்ற காற்று அவளை முழுதாய் போர்த்தியது.
அதில் அவள் திடுக்கிட்டு மெல்ல இமைகளை பிரிக்க முயல, சுற்றி பூக்களும் மரங்களும்தான் தெரிந்தது. அதிலேயே இது கார்டன் என்று அவள் மூளைக்கு ஓரளவு புரிந்துவிட, அதற்குள் கண்ணாடியாய் ஏதோ மின்னியது.
அதில் அவள் தன் மங்கிய விழிகளை உலுக்கிவிட்டு திறக்க முயல, அதற்குள் அதன் மீதிருந்த ஊஞ்சல் படுக்கையில் (Hammock) அவளை மெதுவாய் கிடத்தினான் அவன். அதில் அவள் சட்டென்று அவன் மார்பு சட்டையை இழுத்து அதனுள் தன்னை மறைக்க முயல, அவள் நிலை புரிந்த அவனுமே, அந்த சட்டையை கழற்றி அவளுக்கே மெல்ல அணிவித்தான். அதில் அவளும் அதை இறுக்கி மூடிக்கொண்டு மெதுவாய் நிமிர்ந்து அவனை பார்க்க, அதற்குள் அவளை படுக்க வைத்து சாதாரணமாய் அந்த பட்டன்களையும் பூட்டினான் அவன்.
மீண்டும் அவன் விரல்கள் மேனியை உரசி சிலிர்பூட்டவும், மொத்த கூச்சத்தையும் தன் உள்ளங்கால் விரல்களில் வைத்து குறுக்கி அடக்க போராடினாள். அதற்குள் அவன் விரல்கள் விலகியிருக்க, அவளும் மெதுவாய் விழி திறக்கும் முன், அவள் கன்னத்தில் பதிந்தது அவன் இதழ்கள். அதில் மீண்டும் இமையை மூடி திறந்தவள், சோர்வாய் அவனை பார்க்க, அவனோ அவளின் வாந்திய இதழோரத்தை தன் கட்டை விரலால் அழுத்தி துடைத்தபடியே மென்மையாய் அங்கு முத்தம் வைத்து, “இனி வாந்தி வராது. ரெஸ்ட் எடு.” என்றான் மெல்லிய குரலில்.
அதில் அவள் கரம் மெதுவாய் அவன் முதுகில் படர முயல, அதற்குள் அவள் இமைகள் மூடி உறக்கம் தழுவியிருந்தது.
அதில் அவள் தலையை மெதுவாய் வருடிக்கொடுத்தவன், அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து விலகினான்.
அவன் விலகலில் அவள் திடுக்கிட்டு விழி திறக்க, அவன் அங்கு இல்லை. அதில் அவள் புரியாது வேகமாய் தேட, தன் அருகே இருந்த இன்னொரு ஊஞ்சல் படுக்கையில் அயர்வாய் சாய்ந்தான் அவன்.
அவனின் கருப்பு தடித்த மேற்சட்டை (Jacket) இவளிடமிருக்க, அவனோ உள்ளே அணியும் மெல்லிசான கருப்பு உள் சட்டையோடு மட்டுமே படுத்திருந்தவன், தன் ஒற்றை கரத்தை தலைக்கு பின்னால் வைத்து தலையணையாக்கி அப்படியே கண் அசந்தான். அவளைவிட அவனுக்குதானே காயம் அதிகம்? அந்த அசதியோ, இல்லை அவன் எடுத்துக்கொண்ட மருந்தின் வீரியமோ, அப்படியே அவன் உறங்க ஆரம்பிக்க, இவள் மனமோ அவன் நெருக்கத்தையே கேட்டது.
அவன் தொட்ட அவளின் ஒவ்வொரு அங்கமும் மீண்டும் அவன் அருகாமை கேட்க, அவள் உடல் மொத்தமும் இந்த இடைவெளியை முழுதாய் வெறுத்தது.
அதில் அவள் விரல்கள் மெதுவாய் அவனின் ஊஞ்சலை தன் பக்கம் இழுக்க முயல, அவள் உடல் இருந்த சோர்வில் அவள் விரல்கள் சுத்தமாய் பலனற்று போனது.
இல்லையென்றாலும் அவன் எடையை அவளால் அசைக்க முடியுமா என்ன? எனவே தன்னுடைய ஊஞ்சலை அவன் பக்கம் நகர்த்த முயன்றாள். அதுவும் ஒன்று சேர்ந்த நொடி மெதுவாய் அவன் ஊஞ்சலுக்கு தாவ முயல, அதற்குள் தவறி பொத்தென்று கீழிருந்த குளத்தில் விழுந்தாள்.
அடுத்த நொடி சிதறிய தண்ணீர் அவன் முகத்தில் அடிக்க, திடுக்கிட்டு எழுந்தான் ருதன்.
இங்கே நீருக்குள் மூழ்கியவளுக்கோ, மீண்டும் அந்த மின்னல் இரவு தண்ணீருக்குள் விழுந்து சிதறி, தண்ணீர் இரத்தமானது கண்முன் வர, சிவப்பு புடவையில் மூச்சிரைக்க ஓடியது, தன் பின்னால் துரத்தி வந்த அந்த மிருகம், அந்த சிகப்பு நிலவு என்று அனைத்தும் கண்முன் வர, அதற்குள் அவளை தண்ணீரிலிருந்து தூக்கி நிறுத்தினான் ருதன்.
அதில் அவள் மூச்சை இழுத்துவிட்டு வெளியில் வர, அவள் கரத்தில் ஏதோ சிக்கியிருந்தது. அதில் அவள் மெதுவாய் தன் கரத்தை தூக்கி பிடித்து, மெல்ல விரல்களை திறக்க, அடுத்த நொடி அவள் விழிகள் அகல விரிந்தது.
அன்று அந்த மின்னல் இரவு, இவள் விழுந்து தண்ணீர் சிதறி இரத்தமான பின்பு, மெதுவாய் மேலே வந்து மிதந்த அதே சிவப்பு தாமரை தான் இது.
சிவப்பு தாமரை என்பது மிகவும் அரிதான மலராகும். அது அவ்வளவு எளிதில் அனைத்து இடங்களிலும் கிடைத்துவிடாதே. அதில் அவள் அதிர்வாய் சுற்றி பார்க்க, அந்த குளம் முழுக்க அந்த சிவப்பு தாமரைதான் நிறைந்து இருந்தது.
அதில் அவள் இதயம் துடிப்பை அதிகரிக்க, தனக்கு வரும் கனவிற்கும் இந்த இடத்திற்கும் சம்மந்தம் உள்ளதா என்று அவள் மனம் பலமாய் அடித்துக்கொண்டது.
– நொடிகள் தொடரும்…