Home FREE NOVELSஅன்புள்ள அரக்கனே CH-8

அன்புள்ள அரக்கனே CH-8

by oviyablessy
அன்புள்ள அரக்கனே CH-53

இங்கே உற‌ங்கிக் கொண்டிருந்த‌ அமீராவின் உற‌க்க‌ம் மெல்ல‌ க‌லைய‌, புருவ‌ங்க‌ளை குறுக்கி  மெதுவாய் இமைக‌ளை பிரித்த‌வ‌ளுக்கு இருள் ம‌ட்டுமே தெரிந்த‌து. அதில் புரிய‌ாது விழிக‌ளை குறுக்கிய‌வ‌ள், த‌லையை பிடித்து மெதுவாய் எழுந்த‌ம‌ர‌, திடீரென்று ப‌ற்றிய‌து ஒரு தீக்குச்சி.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு திரும்ப‌, அந்த‌ தீ அப்ப‌டியே பெரிதாகி ஒரு சிவ‌ப்பு நிற‌ மெழுகுவ‌ர்த்தியில் வ‌ந்த‌ம‌ர, அதில் ஒளிர்ந்த‌ வெளிச்ச‌த்தில் தெரிந்த‌து அவ‌ன் முக‌ம். அப்ப‌டியே மெதுவாய் நிமிர்ந்து அவ‌ளை பார்த்த‌வ‌ன், கையிலிருந்த‌ தீக்குச்சியை அணைக்காம‌ல் சுண்டிவிட‌, அதுவோ இருளில் சுழ‌ன்றுக் கொண்டு சென்று ஒரு இட‌த்தில் விழ, குப்பென்று ப‌த்திய‌து அனைத்து மெழுகுவ‌ர்த்திக‌ளும்.

அதில் திடுக்கிட்டு அதிர்ந்த‌வ‌ள்,  சுற்றியும் பார்க்க‌, அவ‌ளை சுற்றியுமே வ‌ண்ண‌ வ‌ண்ண‌ மெழுகுவ‌ர்த்திக‌ள் அழகாய் எரிந்துக் கொண்டிருந்தது. அதை புரியா ப‌த‌ற்ற‌மாய் பார்த்த‌ப‌டியே அவ‌ள் மெதுவாய் திரும்ப‌, அவ‌ள் உள்ள‌ங்காலில் அழுத்தி ப‌திந்த‌து அவ‌னின் இத‌ழ்க‌ள்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு  த‌ன் காலை உருவ‌ முய‌ல‌, ப‌ட்டென்று அவ‌ள் காலை இழுத்திருந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் பொத்தென்று மெத்தையில் ச‌ரிய‌, சட்டென்று அவ‌ள் மீது பாய்ந்து இரு க‌ர‌த்தால் சிறை செய்தான் அவ‌ன்.

அதில் திடுக்கிட்டு அதிர்ந்த‌வ‌ள்,  அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் அவ‌னை பார்க்க‌, அவ‌ள் ப‌த‌ற்ற‌த்தை மோக‌த்துட‌ன் இர‌சித்த‌ப‌டியே அவ‌ள் கூந்த‌லுள் விர‌ல்க‌ளை நுழைத்து இறுக்கி பிடித்த‌வ‌ன், “முழுசா க‌டிச்சு திண்ணுர‌வா?” என்று மெல்லிய‌ குர‌லில் கேட்க‌, அதில் அவ‌ளின் இத‌ய‌ துடிப்பையே நிறுத்த‌, அவ‌னோ பட்டென்று அவ‌ள் இத‌ழ்க‌ளை க‌டிக்க‌ வ‌ந்த‌ நொடி, ச‌ட்டென்று அவ‌ள் திரும்ப‌வும் அவ‌ள் க‌ன்ன‌த்தை அழுத்தி க‌டித்திருந்தான்.

அதில் இறுக்கி விழி மூடிய‌வ‌ள், வேக‌மாய் அவ‌னை வில‌க்கிவிட்டு ந‌க‌ர‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ள் முக‌த்தின் முன் சொருகிய‌து க‌த்தி. அதில் திடுக்கிட்டு அதிர்ந்த‌வ‌ளின் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, அவ‌ள் முக‌த்தை உர‌சி நின்றிருந்த‌து அவ‌ன் க‌த்தி.

“என்ன‌ மிருக‌மாக்காத டார்லு.” என்று அவ‌ன் அன‌ல் மூச்சாய் அவள் க‌ன்ன‌த்தில் இத‌ழை அழுத்தி தேய்த்து ருசிக்க‌, அவ‌ளோ இறுக்கி விழி மூடி முக‌த்தை சுழித்தாள். அப்ப‌டியே அவ‌ன் இத‌ழ்க‌ள் அவ‌ள் க‌ழுத்திற்கு ந‌க‌ர‌, அவ‌ளின் க‌ன்ன‌ம் முழுதாய் மெத்தைக்குள் புதைய‌, இறுக்கி மூடியிருந்த‌ விழிக‌ளில் வ‌ழிந்த‌ க‌ண்ணீர் அந்த‌ மெத்தையை முழுதாய் ந‌னைத்த‌து.

அப்ப‌டியே அவ‌ள் க‌ழுத்தில் த‌ன் நாசியையும் இத‌ழையும் அழுத்தி உர‌சி அவ‌ள் வாச‌த்தை உறிஞ்செடுத்த‌வ‌னின் க‌ர‌ம் அவ‌ள் இடையை இறுக்கி பிடிக்க‌, அவ‌ளின் க‌ர‌மும் அந்த‌ க‌த்தி பிடியை இறுக்கி பிடித்த‌து. அப்ப‌டியே அவ‌ள் க‌ழுத்தில் முழுதாய் இத‌ழை புதைத்து சுவைத்த‌வ‌ன், அவ‌ள் இடையிலிருந்த‌ சேலையை வேக‌மாய் உருவ‌ முய‌ல‌, ச‌ட்டென்று அவ‌ன் க‌ழுத்தில் இறங்க வந்த கத்தியை அழுத்தி பிடித்தது அவ‌ன் க‌ர‌ம்.

அதில் அவ‌ள் அதிர்வாய் விழி விரிக்க‌, அவ‌ள் ப‌ற்றியிருந்த‌ க‌த்தியின் முனை அவ‌ன் உள்ள‌ங்கைக்குள் புதைந்திருக்க, அதிலிருந்து வ‌ழிந்து வ‌ந்த இரத்தம் மெத்தையில் சொட்டிய‌து. அதில் ச‌ட்டென்று அவ‌ள் க‌ர‌ம் க‌த்தியை விட்டிருக்க‌, ப‌ட்டென்று அதை அவள் க‌ழுத்தில் வைத்திருந்தான் அவ‌ன்.

அதில் திடுக்கிட்டு நிமிர்ந்த‌வ‌ளின் பின்த‌லை மெத்தையில் புதைய‌, அவ‌ள் விழி பார்த்து, “என்ன‌ குத்துற‌துக்கு இந்த‌ க‌த்தியெல்லா எதுக்குடி?” என்ற‌வ‌னின் பார்வை அவ‌ள் விழிக‌ளை இர‌ச‌னையை த‌ழுவ‌, “உன் க‌ண்ணே போதும்.” என்றான் அத்த‌னை இர‌ச‌னையாக‌.

அதில் புரியா ப‌த‌ற்ற‌மாய் அவ‌னை பார்த்த‌ அவ‌ளின் மான் விழிக‌ளில் ப‌ய‌ம் அதிக‌ரிக்க‌, மெதுவாய் அத‌ற்கு முத்த‌மிட்டான் அவ‌ன். அதில் தானாய் மூடிய‌ அவ‌ளின் விழிக‌ளிலிருந்த‌ மிச்ச‌ மீதி க‌ண்ணீரும் வெளியேற‌, அதையும் அழ‌காய் உறிஞ்சிய‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் அவ‌ன் பிடித்திருந்த‌ க‌த்தி ச‌ரிந்து விழ‌, வேக‌மாய் அவ‌னை வில‌க்கி த‌ள்ளினாள். அதில் அவ‌ன் ச‌ரிந்து மெத்தைக்குள் புதைய‌, இவ‌ளோ உருண்டு பொத்தென்று த‌ரையில் விழுந்தாள். அதில் க‌டுப்பாய்  மெத்தையை இறுக்கி பிடித்த‌வ‌னின் விர‌ல்க‌ளில் அந்த‌ க‌த்திதான் சிக்க‌, அதையும் இறுக்கி பிடித்து எழுந்தான்.

அதில் இவ‌ள் ப‌ய‌ந்து ந‌டுங்கி வேக‌மாய் பின்னால் ந‌க‌ர‌, பின்னிருந்த‌ மேசையில் இடித்து சாய்ந்தாள். அதில் திடுக்கிட்டு திரும்பிய‌வ‌ள், அத‌ற்கு மேல் ந‌க‌ர‌ முடியாது ப‌த‌றி அவ‌னை பார்க்க‌,  அவ‌னோ அத்த‌னை க‌டுப்பாய் அந்த‌ க‌த்தியாலே புருவ‌த்தை சொரிந்தப‌டி அவ‌ளை நோக்கி வ‌ர‌, “வ்..வேண்டா ப்ளீஸ்.” என்று  ந‌டுங்கிய‌ப‌டி மெல்ல‌ எழுந்து நின்ற‌வ‌ள் பின்னிருந்த மேசையில் புதைந்து நின்றாள்.

“ப்ளீஸ் என்ன‌ விட்டிரு.” என்று க‌த‌றிய‌ப‌டி அவ‌ள் கையெடுத்து கும்பிட்டாள்.

அதில் மேலும் அவ‌ன் க‌ண்க‌ள் சிவ‌க்க‌ வேக‌மாய் அவ‌ளை நோக்கி வ‌ர‌, ச‌ட்டென்று அங்கிருந்த‌ க‌ண்ணாடி ஜ‌க்கை த‌ள்ளிவிட்டு உடைத்தாள் அவள். அதில் அவ‌ன் திடுக்கிட்டு நின்றுவிட‌, தரையில் சித‌றிய‌ துண்டுக‌ள் அவ‌ன் வெறும் பாத‌ங்க‌ளை மெல்லிய‌தாய் கீறி சென்ற‌து.

அதில் அவ‌ள் அடுத்த‌டுத்து க‌ண்ணாடி ஃப்ள‌ர்வாஷையும் போட்டு உடைக்க‌, அது அவ‌ன் கால‌ருகே உடைந்து சித‌றி ப‌ர‌வ‌, அவ‌னால் அடுத்த‌ அடி எடுத்து வைக்க‌ முடியாது த‌ரை மொத்த‌மும் க‌ண்ணாடி சில்லுக‌ளாய் கிட‌ந்த‌து.

“வ‌ராத‌.” என்று அத்த‌னை ந‌டுக்க‌மாய் அந்த‌ மேசையின் மூலைக்கு ந‌க‌ர்ந்து சுவ‌ரோடு ஒன்றிய‌வ‌ளின் உட‌ல் பயத்தில் வெகுவாய் ந‌டுங்க‌, அவ‌ளையே அழுத்தி பார்த்த‌ப‌டி அந்த‌ க‌ண்ணாடி சில்லுக‌ளில் அடுத்த‌ அடியை எடுத்து வைத்தான் அவ‌ன். அப்போது அவ‌ன் கால‌டியில் அழுந்திய‌ கூர்மையான‌ க‌ண்ணாடி துண்டு அவ‌னின் உள்ள‌ங்காலை கிழித்து  வ‌ழிந்த‌ இர‌த்த‌ம் அந்த‌ க‌ண்ணாடியை மொத்த‌மாய் குளிப்பாட்ட‌, அதில் மேலும் அழுத்தி பாத‌த்தை புதைத்து அடுத்த‌ அடியை எடுத்து வைத்தவ‌னின் க‌ண்க‌ள் தீயாய் சிவ‌ந்திருந்த‌து.

அதில் அவ‌ள் அதிர்வாய் பின்சுவ‌ரில் க‌ர‌த்தை ப‌தித்து மேலும் புதைய‌, அவ‌ளையே அழுத்த‌மாய் பார்த்த‌ப‌டி அடுத்த‌டுத்த‌ அடியை எடுத்து வைத்து அவ‌ன் நெருங்கிவிட்ட நொடி, ப‌ய‌ந்து அங்கிருந்து ஓட‌ போன‌வ‌ளின் கால‌டியில் கூரிய‌ க‌ண்ணாடி ஒன்று கிட‌க்க‌, அதைய‌றியாம‌ல் வேக‌மாய் அவ‌ள் மிதிக்கும் முன், அவ‌ள் கால‌டியில் அவன் பாதம் பதிய, அவன் பாதத்தைதான் மிதித்தது அவ‌ள் பாதம். அதில் அடியில் புதைந்த அவன் உள்ளங்காலில் அந்த கூர்மை   ஆழ‌மாய் இறங்க, அத‌ன் இர‌த்த‌ம் த‌ரையை ந‌னைக்க‌, அவ‌ள் த‌டுமாறி விழும் முன் அவ‌ளை அள்ளி தூக்கியிருந்தான் அவன்.

அதில் திடுக்கிட்டு அதிர்ந்து துள்ளிய‌ப‌டி, “விடு” என்று க‌த‌றி அழுத‌வ‌ளை மெத்தையில் தூக்கி போட்டான். அதில் திடுக்கிட்டு அதிர்ந்து எழுந்து அம‌ர்ந்த‌வ‌ள் கால்க‌ளை ம‌ட‌க்கி ப‌ய‌த்துட‌ன் பின்னால் ந‌க‌ர‌, ச‌ட்டென்று அவ‌ள் முக‌த்த‌ருகே வ‌ந்திருந்த‌வ‌ன், அதில் திடுக்கிட்டு பின்னால் சாய்ந்த‌வ‌ளின் பிட‌றியை இறுக்கி பிடித்து இழுத்து அவ‌ள் விழி பார்த்து, “இன்னொரு தெட‌வ‌ விட்டிரு வேண்டா போயிரு வ‌ராத‌ங்குற‌ வார்த்த இந்த‌ வாயில‌ இருந்து வ‌ந்த‌து..” என்று  அழுத்தி கூறியபடி அவள் கழுத்தில் கத்தியை வைக்க, அவளோ அதிர்வாய் கழுத்தை விரிக்க, “சாவடிச்சிருவேன்” என்றான் அழுத்தமாக.

அதில் மேலும் க‌த‌றி அழுத‌வள், “ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டு, “என‌க்கு க‌ல்யாண‌ம் ஆக‌ போகு..” என்று கூறும் முன் அவ‌ள் இத‌ழ்க‌ளை க‌வ்வி வேக‌மாய் சுவைத்தான்.

அதில் அவ‌ள் கூற‌ வ‌ந்த‌ வார்த்தை தொண்டைக்குள் அடைத்திருக்க, இறுக்கி விழி மூடி க‌த‌றி அழுத‌வ‌ளின் க‌ண்ணீர் அவ‌ன் இத‌ழுக்குள் புகுந்து அதையும் சேர்த்து குடித்து முடித்து வில‌கிய‌வ‌ன், “நா இருக்குற‌ வ‌ரைக்கும் எவ‌னையும் உன்ன‌ நெருங்க‌விட‌ மாட்டேன்.” என்று அத்த‌னை அழுத்த‌மாய் அவ‌ன் கூற‌, அவ‌ளோ க‌த‌றி அழுதாள்.

அதில் அவள் தாடைக்கு கீழ் கத்தி முனையை வைத்து அவளை நிமிர்த்தியவன், “என்ன‌விட்டு போக‌ணுன்னு யோசிக்க‌ கூட‌ கூடாது நீ. புரியுதா?” என்று அழுத்தி கேட்க‌, அவ‌ளோ எதுவும் கூறாது க‌த‌றி அழ‌, மேலும் அழுத்தி நிமிர்த்தி, “புரியுதா?” என்று அவ‌ன் கேட்க‌, அதில் எச்சில் விழுங்க அழுதபடியே மெல்ல‌ த‌லைய‌சைத்தாள்.

அதில் அப்ப‌டியே அவள் பிடறியில் இருந்த தன் பிடியை மெதுவாய் த‌ள‌ர்த்தி மெல்ல‌ மெத்தையில் சாய்த்த‌வ‌ன், “குட்” என்ற‌ப‌டி அவ‌ள் இத‌ழில்  முத்த‌மிட்டான். அதில் இத்த‌னை நேர‌ம் இருந்த‌ வ‌ன்மை ச‌ற்றும் இல்லாது முழு மென்மை ம‌ட்டுமே இருக்க‌, அவ‌ளோ அழுதப‌டியே சிறு விய‌ப்பாய் அவ‌னை பார்த்தாள்.

அவ‌னோ முழு மென்மைய‌ாய் அவ‌ள் விழிக‌ளை பார்த்தப‌டியே அவ‌ள் தேக‌த்தில் புதைந்து, “இப்போ.. விட்டத கன்ட்டினியூ பண்ணலாமா..” என்று கிறக்கமாய்  அவ‌ள் க‌ழுத்தில் புதைய‌ வ‌ர‌, ச‌ட்டென்று எதையோ த‌ள்ளிவிட்டிருந்தாள் அவ‌ள்.

அதில் அவ‌ன் திடுக்கிட்டு அந்த பக்கம் திரும்ப‌, ப‌ட்டென்று இந்த பக்கம் அவ‌ன் த‌லையை பல‌மாய் தாக்கிய‌து ஒரு பொருள். அதில் பொத்தென்று அவ‌ன் மெத்தையில் விழ‌, அவ‌ளோ வேக‌மாய் அந்த‌ பொருளை வீசிவிட்டு எழுந்து அம‌ர‌, அதில் மெதுவாய் சொருகிய‌ அவ‌னின் இமைக‌ள் மெல்ல‌ முழுதாய் மூடிய‌து.

அதில் வேக‌மாய் பின்னால் ந‌க‌ர்ந்த‌வ‌ளின் கால்க‌ளும் கைக‌ளும் பதற்றத்தில் உத‌ற‌ ஆர‌ம்பிக்க‌, அவ‌ச‌ர‌மாய் க‌ட்டிலைவிட்டு இற‌ங்கிய‌வ‌ள், ந‌டுக்க‌மாய் அவ‌னை பார்த்த‌ப‌டியே பின்னால் ந‌க‌ர்ந்து அப்ப‌டியே திரும்பி அங்கிருந்து ஓட‌ ஆர‌ம்பித்தாள்.

அதை அறியாம‌ல் இங்கு அசைவே இல்லாம‌ல் கிட‌ந்த‌ இவ‌னின் த‌லையிலிருந்து மெதுவாய் வ‌ழிந்த இர‌த்த‌ம் அந்த‌ மெத்தையை ந‌னைத்‌து.

இங்கே வேக‌மாய் வெளியில் ஓடி வ‌ந்த‌வ‌ள் மெயின் டோரை தாண்டிய‌துமே அப்ப‌டியே நின்றாள். வான‌ம் இருள் சூழ்ந்திருக்க‌, ப‌த‌ற்ற‌மாய் சுற்றியும் பார்த்தாள். முழு இரவாகியிருக்க, இந்த‌ நேர‌த்தில் எங்கு செல்வ‌து எப்ப‌டி செல்வ‌து என்று பத‌றிய‌வ‌ளின் ம‌ன‌ம், இப்பொதைக்கு இந்த‌ அர‌க்க‌னிட‌மிருந்து த‌ப்பினால் போதும் என்று தோன்ற, வேக‌மாய் சென்று அந்த‌ பெரிய‌ கேட்டை ஏற‌ ஆர‌ம்பித்தாள். ஏற்க‌ன‌வே ஏறிய‌து என்ப‌தால் இப்போது ச‌ற்று வேக‌மாக‌வே ஏறிவிட‌, அத‌ன் உச்சிக்கு சென்று அத்த‌னை ப‌ய‌த்துட‌ன் மூச்சு வாங்கிய‌வ‌ள், அடிப்ப‌ட்டாலும் ப‌ர‌வாயில்லை இங்கிருந்து த‌ப்பிவிட‌ வேண்டும் என்று விழியை இறுக்கி மூடி  ப‌ட்டென்று குதித்துவிட்டாள்.

அடுத்த‌ நொடி பொத்தென்று ஒரு பூ குவிய‌லுக்குள் விழ பூக்க‌ள் எழும்பி சித‌றிய‌து. அதில் வேக‌மாய் எழுந்து த‌லையை உத‌றிவிட்டு பார்த்த‌வ‌ளுக்கு, இது எங்கிருந்து வ‌ந்த‌து என்று சுத்த‌மாக‌ புரிய‌வில்லை. அதை யோசிக்கும் ம‌ன‌நிலையிலும் அவ‌ள் இல்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் அவள் உடல் நடுங்க, உட‌னே எழுந்து ஓட‌ ஆர‌ம்பித்தாள்.

அப்போது த‌ன் சேலை சிக்கிய‌ மூங்கில் மர‌ம் எதிரில் வ‌ர‌, திடுக்கிட்டு அப்ப‌டியே நின்றாள். அதில் வெட்ட‌ப்ப‌ட்டிருந்த‌ மூங்கிலை பார்த்த‌தும், அதை வாசித்த‌ப‌டியே அவ‌ன் அந்த‌ ம‌ர‌த்தின் மீது அம‌ர்ந்திருந்த‌துதான் க‌ண்முன் வ‌ர‌, அங்கே அவ‌ள் பார்த்த‌ க‌ட‌லும் க‌ண்முன் வ‌ந்த‌து. அதில் அவ‌ள் ம‌ன‌ம் அத்த‌னை வேக‌மாய் துடிக்க‌, இந்த‌ ப‌க்க‌ம் வேண்டாம் என்று திரும்பி வேறு ப‌க்க‌ம் ஓடினாள்.

அந்த‌ அமைதியான‌ இருண்ட காட்டிற்குள் வேக‌மாய் ஓடிக் கொண்டிருந்த‌ இவ‌ளின் கால் ப‌தியும் இட‌மெல்லாம் ச‌ருகு ச‌த்த‌ம் சலசலவென்று கேட்டு, அங்கிருந்த வ‌வ்வால்க‌ளின் சிவ‌ந்த‌ க‌ண்க‌ளை திற‌க்க‌,  அங்கே கூட்ட‌மாய் தொங்கிக் கொண்டிருந்த‌ வ‌வ்வால்க‌ள்  ஆப‌த்தென்று சித‌றி ச‌ட‌ச‌ட‌வென‌ ப‌ற‌ந்தது.

அதில் இவ‌ள் திடுக்கிட்டு ப‌ய‌ந்து திரும்பி பார்க்க‌, ச‌ட்டென்று கால் த‌டுக்கிவிட்டு பொத்தென்று பின்னிருந்த ம‌ர‌த்தில் சாய்ந்தாள். அந்த‌ நொடி அவ‌ளுக்கு அத்தனை மூச்சு வாங்க‌ ஆர‌ம்பிக்க‌, அந்த‌ நிச‌ப்த‌த்தில் அவ‌ளின் மூச்சு ச‌த்த‌த்தையும் தாண்டி வேறு ஏதோ ஒரு ச‌த்த‌ம் மிக நெருக்கத்தில் கேட்ட‌து. அதில் அவ‌ள் மெதுவாய் பார்வையை ந‌க‌ர்த்தி திரும்பும் முன், ச‌ட்டென்று அவ‌ள் க‌ழுத்தை ஏதோ அழுத்திய‌து. அதில் அவ‌ள் திடுக்கிட்டு நிமிர்ந்து ம‌ர‌த்தில் புதைந்துவிட‌, அவ‌ளின் விரிந்த க‌ழுத்தை மெதுவாய்  சுற்ற‌ ஆர‌ம்பித்த‌து ஒரு ம‌லைப்பாம்பு.

அதில் அதிர்ந்து விழி விரித்த‌வ‌ள் ப‌ய‌ந்து ச‌த்த‌மாய் அல‌ற‌, அடுத்த‌ நொடி அவ‌ள் மூச்சு குழ‌லே அடையும் அள‌வு இறுக்கியிருந்த‌து அந்த பாம்பு. அதில் க‌த்த‌ வ‌ந்த‌ வார்த்தை தொண்டையில் அடைத்து, மூச்சு திண‌ற‌ ஆர‌ம்பிக்க‌, அப்ப‌டியே அவ‌ள் உட‌ல் முழுக்க‌ சுற்றியிருந்த‌து அந்த‌ பாம்பு. அதில் அவ‌ள் ப‌ய‌ந்து அசைய‌ முய‌ல‌ முய‌ல‌ அது மேலும் மேலும் இறுக்க‌த்தை கூட்டி சில‌ நொடியிலேயே அவள்  உடலை முழுதாய் சுற்றியிருக்க‌, இவ‌ளுக்கோ அசைய‌ முடியாது உட‌லெல்லாம் அத்த‌னை வ‌லித்த‌து.

“காப்..” என்று அவ‌ள் வாய் அசையும் வார்த்தை தொண்டையை தாண்டாது அது இறுக்கிக் கொண்டிருக்க‌, அவ‌ள் உள்ள‌ங்கை விர‌ல்க‌ள் விரிந்து க‌ர‌த்தை அசைக்க‌ முடியாது சிக்கிக் கொண்ட‌து. அவ‌ள் உட‌லெல்லாம் விய‌ர்த்து வ‌லி எடுக்க‌, மூச்சுக்காக‌ அத்த‌னை போராடிய‌வ‌ளின் க‌ண்க‌ளெல்லாம் இருட்டிக் கொண்டு வந்து முழுதாய் ம‌ய‌க்க‌த்திற்கு செல்லும் நேர‌ம், அது த‌ன் அக‌ண்ட‌ வாயை அகல விரித்து அவ‌ளை விழுங்க‌ வ‌ர‌,  ச‌ட்டென்று அத‌ன் வாயுக்குள் பாய்ந்திருந்த‌து அவ‌னின் க‌த்தி.

அதில் தெறித்த‌ இர‌த்த‌ம், அவ‌ள் முக‌த்தில் தெளிக்க‌, அதில் திடுக்கிட்டு அவ‌ள் இமைக‌ள் பிரிய‌ முய‌லும் முன், ச‌ட்டென்று அது அவ‌ளை விட்டிருக்க‌, இவ‌ளும் பொத்தென்று அங்கிருந்த‌ குள‌த்தில் விழுந்தாள்.

அடுத்த‌ நொடி அன்றிரவு தண்ணீரில் விழுந்த நினைவுக‌ள் திற‌க்க‌, அந்த‌ மின்ன‌ல் இர‌வு, சிவ‌ப்பு புட‌வையில் மூச்சிரைக்க‌ ஓடிய அமீராவின்  பின்னால் துர‌த்தி வ‌ந்த‌ அந்த‌ மிருக‌ம், அத‌ன் ப‌ற்க‌ளில் வ‌ழிந்த‌ இர‌த்த‌மும் எச்சிலும், இவ‌ள் முக‌த்தில் வ‌ழிந்த‌ விய‌ர்வை, அடுத்து வ‌ந்த‌ மின்ன‌லில் “ஆ…!” என்று அல‌றிய‌ப‌டி இவள் த‌ண்ணீருக்குள் விழுந்து சித‌ற, த‌ண்ணீர் இர‌த்த‌மான‌து வ‌ரை அனைத்தும் அவ‌ள் க‌ண்முன் வ‌ந்து நிற்க‌, வான‌த்து மேக‌ங்க‌ள் வில‌கி முழுதாய் தெரிந்த‌ அந்த‌ இர‌த்த‌ நில‌வு இவ‌ள் விழியில் ப‌திய‌ அப்ப‌டியே அவ‌ள் விழிக‌ள் அன்று மூடியிருந்த‌து.

அவையெல்லாம் கண்முன் வந்தபடியே இப்போதும் அவ‌ள் விழிக‌ள் மெல்ல‌ மூட‌, அத‌ற்குள் சட்டென்று த‌ண்ணீருக்குள் நுழைந்த‌ அவ‌ன் க‌ர‌ங்க‌ள் அவ‌ளை மேலே இழுத்திருந்தது. அதில் த‌ண்ணீரை பிளந்துக்கொண்டு மேலே வ‌ந்தவ‌ள், பொத்தென்று அவ‌ன் மீதே வ‌ந்து விழ‌, அவ‌ளை அணைத்து பிடித்து அப்ப‌டியே த‌ரையில் கிட‌த்தினான்.

அவள் முகத்தில் படர்ந்திருந்த ஈர கூந்தலை அவன் விரல்கள் விலக்க, இன்னுமே அரை ம‌ய‌க்க‌த்தில் கிடந்த அவளின் தொண்டை குழி குழிந்து மூச்சுக்காக‌ போராட‌, ச‌ட்டென்று அவ‌ள் இத‌ழ்க‌ளை சிறை செய்து த‌ன் மூச்சை அவ‌ளுக்கு கொடுக்க‌ துவ‌ங்கினான்.

அதில்தான் அவ‌ளின் தொண்டை நிர‌ம்பி அவ‌ன் சுவாச‌ம் அவ‌ள் சுவாச‌ப்பையில் நிறைய‌, இழுத்து மூச்சுவிட்ட‌வ‌ளின் ஈர‌ இமைக‌ள் மெதுவாய் பிரிய‌, அவ‌ள் முன் தொங்கிக் கொண்டிருந்த‌து அவ‌னின் R என்ற‌ க‌ருப்பு செயின்.

அதில் மெதுவாய் அவ‌ள் க‌ர‌ம் அதை பிடிக்க‌, அன்று அந்த‌ த‌ண்ணீருக்குள் இர‌த்த‌ வெள்ள‌த்தில் மய‌க்க‌த்திற்கு சென்றுக் கொண்டிருந்த‌வ‌ளை வாரி அணைத்து தூக்கிய‌ அந்த‌ அக‌ண்ட‌ மார்பில் இதே செயின் தொங்கிய‌து அவ‌ள் க‌ண்முன் வ‌ர‌, அவ‌ள் விர‌ல்க‌ள் தானாய் அவ‌ன் ச‌ட்டையை மெல்ல‌ வில‌க்கிய‌து.

அங்கே அவ‌னின் மார்பிலிருந்த காயத்தில் கட்டுப்போட்டிருக்க, அப்படியே அருகில் விலக்க அவன் இத‌ய‌த்தில் “அம்மு” என்று ப‌ச்சை குத்தியிருந்தது. அன்று பார்த்த‌ அதே மார்பு என்று விய‌ந்த‌வ‌ளின் விர‌ல்க‌ள் தானாய் அந்த‌ பெய‌ரை  வ‌ருட‌, “அம்மு!” என்ற அவ‌னின் ப‌த‌றிய‌ அழைப்பு அப்போதே அவ‌ள் செவியை அடைந்த‌து.

அதில் அவ‌ள் மெல்ல‌ பார்வையை நிமிர்த்தி அவ‌னை பார்க்க‌, அத்தனை ப‌த‌ற்ற‌மாய் அவ‌னின் முக‌ம். “அம்மு என்ன பாரு. ப்ரீத் பண்ணு.” என்று அவ‌ன் த‌ன் க‌ன்ன‌த்தை த‌ட்டிக் கொண்டிருக்க, அவ‌ன் முக‌த்தில் முத‌ல் முறையாய் அவ‌ள் பார்த்த‌ ப‌த‌ற்ற‌ம் இது.

அதில் அவ‌ள் ஈர‌ இத‌ழ்க‌ள் மெதுவாய் பிரிந்து, “யார் நீ?” என்று கேட்க‌, அவ‌ள் இத‌ழ் அசைவை உண‌ர்ந்த‌வ‌ன், வேக‌மாய் குனிந்து அவ‌ளித‌ழுருகே காதை வைக்க‌, அவ‌ன் காது ம‌ட‌லை உர‌சிய‌ அவ‌ளின் இத‌ழ்க‌ள் மீண்டும் க‌டின‌ப்ப‌ட்டு பிரிந்து, “உன‌க்கும்.. என‌..க்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்?” என்று சோர்வாய் வார்த்தையை உதிர்க்க,  அவ்வித‌ழ்க‌ளை மெதுவாய் சுவைத்தது அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் அவ‌ள் விழிக‌ள் சோர்வில் மெதுவாய் மூடி திறக்க‌, அவள் கன்னம் மெதுவாய் பற்றியவன், “நீ என் உயிருடி” என்று கூற, அவ‌ள் முக‌த்தில் விழுந்த‌து அவ‌னின்  க‌ண்ணீர் துளிகள்.

        – நொடிகள் தொடரும்….

You may also like

Leave a Comment

About Me

Featured