Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 2

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 2

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 2: சித்தார்த்தின் ரித்திகா (பார்ட் 1)

நம் கதையின் நாயகியான ரித்திகாவுக்கு ஈரோட்டில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த பள்ளியில் சேர்வதற்காக ரித்திகா; தன்னுடைய பிற வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு பஸ்ஸில் ஈரோட்டுக்கு சென்று கொண்டிருக்க…ரித்திகாவின் தாய் ரேவதியும், தந்தை சுதாகரும்.. தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த சொந்த வீட்டை காலி செய்து விட்டு… தங்கள் பொருட்கள் அனைத்தையும் லாரியில் எடுத்துப் போட்டுக்கொண்டு தாங்களும் ஈரோடுக்கு கிளம்பினர். செல்லும் வழியில் ரித்திகாவும், அவளுடைய தாய் ரேவதியும், தொலைபேசியில் செல்ல சண்டை போட்டுக்கொண்டனர். அதை நிறுத்தும் பொருட்டு; ரித்திகாவின் தந்தை சுதாகர், தன் மனைவி ரேவதியை செல்லமாக கண்டித்தார்.

எப்போதும் போல் ரித்திகாவும், ரேவதியும், சண்டை பிடித்துக் கொண்டிருப்பதும்; வழக்கம் போல் தன்னுடைய மகளுக்கு ரித்திகாவின் அப்பா சுதாகர் சப்போர்ட் செய்வது என அழகாய் தொடங்கியது அவர்களின் புதிய பயணம்.ரித்திகாவுடன் மொபைல் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டு போன் பேசிக் கொண்டிருந்த சுதாகரும், ரேவதியும் சீரியஸ் மோடிற்கு வந்தனர்.

ரித்திகா: “என்ன மா.. போனை ஸ்பீக்கர்ல போட மாட்டேன்னு சொன்ன.. இப்ப மட்டும் எப்படி போட்ட?” என்று நக்கலாக கேட்டாள்.சுதாகர்: “எல்லாம் உங்க அப்பாவோட பவர் தான் பாப்பா. உங்க அம்மாவா அப்படியே கண்ணாலயே மிரட்டி ஸ்பீக்கர்ல போட வச்சுட்டேன். பத்தியா?” என்று பெருமையாக சொல்ல…

ரேவதி: “ஆமா நான் அப்படியே பயந்துட்டேன். போங்க அங்கிட்டு …” என்று சிலிர்த்துக் கொண்டார்.ரித்திகா: சிரித்துக் கொண்டே பேசியவள், “அப்பா, அம்மாக்கு முன்னாடி உங்க சூப்பர் பவர் எல்லாம் எப்படி வேலை செய்யும்ன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றாள்.சுதாகர்: “என்னா மா நீ? அப்பா உனக்கு தானே சப்போர்ட் பண்ணேன். நீ அப்பாவயயே கலாய்க்கிற பாத்தியா… போ மா..” என்றார்.

இதை கேட்டவுடன், ரித்திகா சிரிக்க.. மூன்று பேரும் இணைந்து சிரித்தனர்.இவர்கள் பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டே லாரியை ஓட்டிக் கொண்டிருந்த மணி தன் மனதிற்குள்ளே.. “இந்த சுதாகர் சார்ரு வாத்தியா இருக்கும் போதும் சரி.. அப்புறம் ஸ்கூலுக்கு ஹெட்மாஸ்டர் ஆனதுக்கப்புறம் சரி… இந்த பிள்ளைகளை எல்லாம் போட்டு எப்படி எல்லாம் மிரட்டுவாரு.., பிள்ளைங்களை மட்டுமா? புள்ளைய பெத்தவங்க கூட இவர் கிட்ட பேச பயப்படுவாங்க. ஆனா இப்ப பாரு அவரோட பொண்டாட்டி, புள்ளைங்க கிட்ட மட்டும் எப்படி எல்லாம் மனுசன் சிரிச்சி.. சிரிச்சி… பேசுறாரு.. யப்பா…” என்று நினைத்தான் மணி.

ஃபோனில் ரித்திகாவுடன் பேசிக் கொண்டிருந்த சுதாகர்”பஸ் ஏறிட்டல.. பஸ் டைம்க்கு வந்துருச்சுல? இல்ல ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா?” என்று கேட்க,

ரித்திகா: “அதுலாம் ஏறிட்டேன் பா. நான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தத்துக்கும், பஸ் எடுக்கறதுக்கும் கரெக்டா இருந்துச்சு. உடனே போய் ஏறிட்டேன்.” என்றாள்.

சுதாகர்: “ஓ…!! சரி..! சரி…! மா நல்லது.”ரேவதி: “உன்ன சாப்பிட்டு கிளம்ப சொன்னனே சாப்டியா?”

ரித்திகா: “அதுலாம் நல்ல ரெஸ்டாரன்ட் ஆ பாத்து நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டு தான் கிளம்பினேன். நீங்க சாப்பிட்டீங்களா?”

ரேவதி: “அதெல்லாம் எப்பவோ சாப்பிட்டாச்சு. நீயும் உன் அப்பாவும் சாப்பிடற விஷயத்துல எல்லாம் கரெக்டா இருப்பீங்களே.. அப்புறம் என்ன? சாப்பிடாமலாம் இருக்கவா போறீங்க..?” என்று நக்கலாக சொன்னாள்.

ரித்திகா: “போதும் மா. சும்மா எங்க ரெண்டு பேரையும் மட்டும் கண்ணு வைக்காதே. நாங்க ரெண்டு பேரும் எதை வாங்கி சாப்பிட்டாலும் நீயும் தானே பங்கு கேட்கிற?”ரேவதி: “பின்ன நீங்க மட்டும் சாப்பிடுவீங்க.. நான் மட்டும் சும்மா பார்த்துட்டு இருப்பனா?” என்றார் குழந்தை போல.இவர்கள் பேசி கொண்டிருப்பதை கேட்டு கொண்டிருந்த சுதாகர், சத்தமின்றி சிரித்தார்.ரித்திகா: “பின்ன என்ன? நீ எங்களை சாப்பிட்டாலும் திட்டுற, சாப்பிடலனாலும் திட்டுற.. நாங்க என்ன தான் பண்றது?”

ரேவதி: “நீ ஒன்னும் பண்ண வேணாம் வாய மூடு. அப்புறம், நீ இங்க வேலை பார்த்த ஸ்கூல்ல உன்னோட சர்டிபிகேட் எல்லாம் இருந்துச்சே அதெல்லாம் கரெக்டா பாத்து வாங்கிட்டியா?”

ரித்திகா: “நீ இப்ப தானே மா என்ன வாய மூட சொன்ன? இப்ப நீ கேக்குற கேள்விக்கு நான் பதில் சொல்லனுமா? சொல்ல கூடாதா? அதையும் நீயே சொல்லிரு.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

ரேவதி: “அடியே.. ஓவர் ஆ பேசாதடி. ஒழுங்கா கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.”ரித்திகா: சிரித்துக் கொண்டே.. “அதெல்லாம் எல்லாத்தையும் கரெக்டா வாங்கிட்டேன் மா. ஒரு ப்ரோப்லமும் இல்லை” என்றாள்.

ரேவதி: “அப்ப ஓகே…!! நீ அந்த ஸ்கூலுக்கு போயிட்டு நம்ம தங்க போற வீட்டோட அட்ரஸ் அண்ட் கீ யை கேட்டு வாங்கிட்டு எனக்கு கால் பண்ணு. நாங்க டைரக்டா அந்த அட்ரஸ்கே வந்துடுறோம்” என்றார்.

ரித்திகா: “ஓகே மா.. நான் அங்க போயிட்டு கால் பண்றேன். பாய்.” தன் பெற்றோர்களுடன் பேசிவிட்டு.. தன் மொபைலை எடுத்து தன்னுடைய ஹான்ட் பாகில் போட்டுவிட்டு, ஜன்னலில் சாய்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் ரித்திகா. அப்போது தன் மனதிற்குள்ளே தன்னுடன் பேசிக் கொண்டாள்.

“அன்னைக்கு இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வரும் போது கூட நமக்கு வேலை கிடைக்குன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை. நம்ம கூட அன்னைக்கு எத்தனை பேர் இன்டர்வியூக்கு வந்தாங்க ஆனா நம்ம செலக்ட் ஆனது எல்லாம் துர்கா அம்மா ஒட ஆசிர்வாதம் தான். நாளைக்கு ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி போய் துர்கா அம்மாவை நேர்ல பாத்து தேங்க்யூ சொல்லிட்டு அப்புறம் தான் போகணும். நமக்கு கிடைச்சது ரொம்ப பெரிய லக் தான் தேங்க்யூ துர்கா மா.” என்று சொன்ன ரித்திகா; பேருந்தின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி நேரத்தை கடத்தினாள்.அப்படியே சில மணி நேரம் கடந்து இருக்க, ஈரோடு பேருந்து நிலையத்தை வந்தடைந்தாள் ரித்திகா.

அங்கே ஒரு ஆட்டோவை தேடி கண்டுபிடித்த ரித்திகா, தான் போக வேண்டிய ஸ்கூலின் அட்ரஸை  அந்த ஆட்டோகாரரிடம் கொடுத்து விட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். 40 நிமிட பயணத்திற்கு பின் அந்த ஆட்டோ ஒரு பள்ளியின் முன் வந்து நின்றது.அங்கே வந்த ரித்திகாவை, பெரியதாக இருந்த J.V. Matriculation & Higher Secondary School என்ற பெயர் எழுதப்பட்டிருந்த பெரிய வளைவு வரவேற்றது. ஆட்டோ காரருக்கு பணம் கொடுத்து விட்டு.. திரும்பிய ரித்திகா, அந்த பெரிய கேட்டை நோக்கி நடந்தாள்.அங்கே இருந்த செக்யூரிட்டி ஆபீசுக்கு சென்ற ரித்திகா; அங்கே இருந்த செக்யூரிட்டியிடம் தான் இங்கே ஆசிரியராக பணியாற்ற சேர்வதற்காக வந்திருப்பதாக சொல்லி… தனக்கு பள்ளியில் இருந்து வந்திருந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டர் ஐ அவரிடம் காண்பித்தாள். அதை பார்த்த செக்யூரிட்டி “உன் பேரு ரித்திகாவா மா?” என்று கேட்டார்.ரித்திகா: “ஆமா..!!! அண்ணா” என்றாள்.

செக்யூரிட்டி: “உன்னோட ஐடி ப்ரூப் ஏதாச்சும் இருந்தா காமி மா.”ரித்திகா தன்னுடைய ஹான்ட் பாகில் இருந்த ஆதார் கார்டை எடுத்து அவரிடம் காட்டினாள்.அவளுடைய ஆதார் கார்டை வைத்து அவளை வெரிஃபை செய்த செக்யூரிட்டி ஆபீஸ் அட்மின் மானசாவிற்கு கால் செய்தார். ஃபோனை  எடுத்து பேசிய மானசா; செக்யூரிட்டி ரித்திகாவை பற்றி சொன்னதை கேட்டு விட்டு அவளை உள்ளே அனுப்பும் படி சொன்னாள்.

செக்யூரிட்டி: “நீங்க இப்ப உள்ளே போகலாம் மேடம். உங்கள ஓ.ஏ மேடம் உள்ளே வர சொன்னாங்க. நேரா போய் லெப்ட்ல கட் பண்ணி ரைட்டா போனீங்கன்னா ஆபீஸ் இருக்கும். அங்க போய் மானசா மேடமே பாருங்க.” என்றார்.

ரித்திகா: “ஓகே அண்ணா தேங்க்யூ” என்று சொன்னவள்; சிரித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.அந்த செக்யூரிட்டிக்கு ரித்திகா பேசிய விதம் பிடித்ததால், அவள் மேல் ஒரு மரியாதை ஏற்பட்டது.செல்லும் வழியில் உயரமாகவும், பிரம்மாண்டமாகவும், கட்டப்பட்டிருந்த அந்த ஸ்கூலை பார்த்து ஆச்சரியப் பட்டுக் கொண்டே… “இன்டர்வியூ இவங்க ஆன்லைனிலேயே வச்சிட்டதால இந்த ஸ்கூல் எப்படி இருக்கும்ன்னு அப்ப பாக்க முடியல. ஆனா ஆன்லைன் இன்டர்வியூ எத்தனை பேர் இருந்தாங்க. நம்மளே அவ்ளோ நேரம் வெயிட் பண்ணுனோம் நம்ம டர்ன் வருரதுக்கு. எவ்வளவு நேரம் ஆச்சி. நான் இண்டர்நெட்டில் பார்த்ததை விட இந்த ஸ்கூல் ரொம்ப பெருசா இருக்கு. ஆனா நம்ம கூட வேலை பார்க்க போறவங்க தான் எப்படி இருக்க போறாங்களோ தெரியல. எப்படி இருந்தால் என்ன ஃபேஸ் பண்ணி தானே ஆகணும். வா பாத்துக்கலாம் பயமே ஜெயம்…!!!!”இவ்வாறு தன் மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டு ஆபீசை வந்தடைந்தாள் ரித்திகா.

அங்கே மேலே ஆபீஸ் அட்மின் என்று போடப்பட்டு இருந்த ரூமுக்குள் கதவை தட்டிவிட்டு, “மே ஐ கம் இன் மேடம்?” என்று கேட்டு கொண்டே உள்ளே சென்றாள் ரித்திகா.மானசா: ஒரு பைலை புரட்டியபடி “எஸ். கம் இன்.” என்றாள்.ரித்திகா உள்ளே வர.. அவளை தலை முதல் கால் வரை பார்த்த மானசா, அவளை எடை போட்டாள்.

மானசா: “Take your seat.”

ரித்திகா: “Thank you mam.”மானசா: “What’s your name?”

ரித்திகா: “My name is Rithika.” மானசா: “Where are you from?”

ரித்திகா: “I am from Karur.”

மானசா: “ஓகே..!! ரித்திகா உங்களுடைய பெர்சனல் அண்ட் புரோபஷனல் டீடெய்ல்ஸ் எல்லாத்தையுமே எங்க வெரிஃபிகேஷன் டீம் ஆல்ரெடி வெரிஃபை பண்ணிட்டாங்க. இது உங்களுடைய ப்ரொபைல் ஃபார்ம் இத பொறுமையா படிச்சு பார்த்துட்டு ஃபில் பண்ணுங்க.இதுல உங்களுடைய வொர்க்கிங் கான்ட்ராக்டும் அட்டாச்டு ஆ இருக்கும். அதையும் படிச்சி பாத்துட்டு சைன் பண்ணுங்க. நீங்க இங்க கண்டிப்பா 3 years வொர்க் பண்ணனும். உங்களுக்கும் உங்க ஃபேமிலிக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பண்ணி கொடுக்கிறோம். உங்களுக்கோ, உங்க ஃபேமிலிக்கோ, எதாச்சு ஹெல்த் இஸ்யூஸ் வந்துச்சுன்னா நீங்க நாராயணன் குரூப்க்கு கீழே இருக்கிற எந்த ஹாஸ்பிடல்ல வேணாலும் பிரீ செக்கப் பண்ணிக்கலாம். உங்களுக்கு லீவ் வேணும்னா அதுக்கான ஃபார்ம் வாங்கி ஃபில் பண்ணி நீங்க அப்ளை பண்ணனும். எமர்ஜென்சி லீவ் வேணும்னா.. ஸ்கூல் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணனும் அவ்வளவுதான்.இது உங்க ப்ரொபைல் ஃபைல். இந்த ஃபைல்ல அந்த ஃபார்மையும் உங்களுடைய ஒரிஜினல் சர்டிபிகேட்டையும் வெச்சு முன்னாடி இருக்கிற ஆபீஸ் கிளர்க் கிட்ட கொண்டு போய் கொடுத்துருங்க.

நீங்க தங்க போற வீட்டோட அட்ரஸும் அதுலையே இருக்கு செக் பண்ணிக்கோங்க மிஸ் ரித்திகா;” என்றாள்.இதுவரை மானசா கூறிய அனைத்தையும் தெளிவாக கேட்ட ரித்திகா அதை அப்படியே செய்தாள். ஜாயினிங் ப்ரொசீஜர் அனைத்தையும் செய்துவிட்டு, தாங்கள் தங்க போகும் வீட்டிற்கான அட்ரஸை நோட் பண்ணி அதை தன்னுடைய தாய்க்கு சொல்வதற்காக வெளியே வந்து… போனை எடுத்து விட்டு அதை பார்த்துக் கொண்டே.. நடந்து வந்தாள் ரித்திகா.ரித்திகா நடந்து வந்து கொண்டிருக்கும் போது.. அவளை சிறு குட்டி கைகள் அணைத்துக் கொண்டது. ஒரு நிமிடம் அதிர்ச்சியான ரித்திகா, அவள் கீழே குனிந்து பார்க்க… அவளுடைய கால்களை ஐந்து வயதே ஆன ஒரு சிறுவன் அணைத்து கொண்டிருந்தான்.

அந்த சிறுவனை பார்த்த உடன் ஏனோ ரித்திகாவுக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது. அந்த சிறுவனுக்கும் ரித்திகாவை பிடித்து விட்டது போல… இனி விடவே மாட்டேன் என்பது போல அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான். அந்த சிறுவனை தூக்கி தன் இடுப்பில் உட்கார வைத்து அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள் ரித்திகா.அழகான முகம் அதில் திருநீர் வைத்திருந்தான்; கொழுகொழுவென்று இருந்தான் அவன்; தன்னுடைய குண்டு கண்களை உருட்டி உருட்டி ரித்திகாவை பார்ப்பதது மிகவும் அழகாக இருந்ததால் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த சிறுவனை பார்த்த.ரித்திகா: “ஓய்..!!! குட்டிப் பையா உன் பேரு என்ன?”அந்த சிறுவன் ரித்திகாவை உற்றுப் பார்த்தான். அவள் சுடிதார் அணிந்து இருந்ததால், அவள் பார்ப்பதற்கு ஒரு ஆசிரியர் போல் தெரியவில்லை. எனவே அவளைப் பார்த்து பயப்படாத அந்த சிறுவன், “என் பேரு சித்தார்த் உன் பேரு என்ன?” என்ற தன்னுடைய மழலை குரலில் கேட்டான்.ரித்திகா: “உன் பேரு சித்தார்த்தா..? என் பேரு ரித்திகா” என்றாள்.

சித்தார்த்: “உன் பேரு ரித்திகா.. எனக்கு உன் பேரு ரொம்ப புடிச்சிருக்கு” என்றான்.அதை கேட்ட ரித்திகா.. அவனுடைய கன்னத்தை லேசாக பிடித்து கிள்ளியபடி சிரித்தாள். ரித்திகாவின் அப்பா முதல் நண்பர்கள் வரை அவளை எவ்வளவோ பேர் “ரித்திகா” என்று அழைத்திருக்கிறார்கள்; ஆனால் அவளை சித்தார்த் அப்படி அழைக்கும் போது ஏதோ ஒரு புது வித உணர்வை உணர்ந்தாள். அவளுக்கு சித்தார்த் தன்னை அப்படி கூப்பிடுவது மிகவும் பிடித்திருந்தது. சித்தார்த்தையும் பிடித்து இருந்தது. சித்தார்த் பார்ப்பதற்கு குட்டி முருகன் போல் இருப்பதாக நினைத்தாள் ரித்திகா.

நேசம் தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured