த்தியாயம் 3: விஜயை அரெஸ்ட் பண்ணுங்க
விஜய் ஒரு night club இல் இரண்டு அழகிய பெண்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஒரு தனி அறையில் உல்லாசமாக இருந்தான். அவனுக்கு இருந்த நல்ல மனநிலையை மோனிஷா கெடுத்து விட்டதால் அங்கே அவளிடம் பாதியில் விட்டு வந்ததை இங்கே ஒன்றுக்கு இரண்டு மடங்காக செய்து முடித்து ஒரே குதுகளத்தில் இன்ப வெள்ளத்தில் தலைகால் புரியாமல் மிதந்து கொண்டு இருந்தான். அங்கேயே நேரம் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட, நாளை முக்கியமான ஒரு ஸ்டோரி டிஸ்கஷன் இருப்பதால் அங்கிருந்து தன் கார் ஐ எடுத்து கொண்டு கிளம்பினான் விஜய்.
எப்போதும் அவனுக்கு Self drive செய்வது தான் மிகவும் பிடிக்கும். அதனால் இப்போதும் அவன் தான் காரை ஓட்டினான். அவனுடன் வந்த பாடி கார்டுகள் அவன் அதிகம் குடித்திருப்பதால் அவனை drive செய்ய வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவன் தன் காரில் ஏறி ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான். அவரை பின் தொடர்ந்து அவனது பாடி கார்டுகள் தங்களது கார்களில் அவனை Follow செய்து கொண்டு சென்றார்கள்.
ஒரு ஆள் அரவமற்ற தார் சாலையில் அவனது கார் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தது. இந்த மாதிரி வேகமாக செல்வது அவனுக்கு தான் காற்றில் மிதப்பதை போலவும், அவனது கார் அவனுடன் ஒட்டிக்கொண்டு இருப்பதைப் போலவும் ஒரு உணர்வை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கனவே அவனுக்கு இருக்கும் போதையில் வேகமாக செல்வதில் அவனுக்கு கிடைக்கும் போதையை வேறு கூடுதலாக ஏற்றிக் கொண்டு இருந்தான் விஜய். எப்போதும் அவனை நாலு பேர் பாதுகாப்பிற்காக சூழ்ந்து கொண்டு இருப்பது அவனது Privacy ஜ கெடுப்பது பிடிக்காது.
அதனால் இன்று தன்னுடைய நாள் என்றும் அதை தனக்கு பிடித்தபடி அவன் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைத்து வேண்டுமென்றே தன் பாடி கார்டுகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு குறுக்குப் பாதைகளில் காரை செலுத்திய விஜய், அவர்கள் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்களா என்று அவ்வப்போது திரும்பி பார்த்துக் கொண்டே வந்தான். அப்படி ஒரு கட்டத்தில் அவன் திரும்பி பார்க்கும்போது அவனுடைய காரின் மீது கவனம் இல்லாமல் போகவே, “சூப்பர் அதான்டா இந்த விஜய்” என்றவன், அவன் ஒட்டிக்கொண்டு இருந்த கார் இன் steering மீது அவன் தஜன் ஒரு கையால் வேகமாக அடித்து விட்டு திரும்பி பார்க்க எதிரில் வந்த ஒரு வயதான சைக்கிளில் டீ காபி விற்றுக் கொண்டு வந்தவரின் மீது அவர் மோதி விட்டான்.
அதில் அவர் இரண்டு மூன்று அடி தூக்கி எறியப்பட்டு தரையில் விழுந்தார். அதனால் சட்டென பதறிய விஜய், தன் கார் ஐ sudden break போட்டு நிறுத்தினான். அந்த ஆக்சிடென்ட் -ஆல் அவனுக்கு எறிய போதை எல்லாம் ஒரே நொடியில் இறங்கி விட்டது போல இருக்க, அவன் வேகமாக காரின் கதவை திறந்து கீழே இறங்கி பார்க்க, அந்த வயதானவர் கீழே விழுந்து அவர் தலையில் பலமாக அடிபட்டு, கிட்டத்தட்ட ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
அவன் அவரின் அருகே நடந்து சென்று அவருக்கு மூச்சு இருக்கிறதா என்று பார்க்க நினைத்தான். ஆனால் அவனது கால்கள் போதையின் காரணமாக தள்ளாட, தன் கன்னத்தில் மாறி மாறி தானே அறைந்து கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். பின் அவன் அவரின் அருககில் சென்று அவரது மூக்கின் முன்னே தன் விரலை வைத்து பார்க்க, இன்னும் அவரது சுவாசம் அவரை விட்டு செல்லவில்லை என்று உறுதியானது. உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து அந்த லொகேஷனை சொல்லி அங்கே வரச் சொன்னான்.
அது அதிக ஆள் நடமாட்டம் இல்லாத சாலையாக இருந்தாலும் அந்த வழியாக சென்ற ஒன்று இரண்டு பேர் கீழே அடிபட்டு கிடப்பவனையும் அங்கே பதட்டத்துடன் நிற்கும் விஜயையும் அடையாளம் கண்டு கொண்டு அவன் வந்து அங்கே என்ன நடந்தது என்று விசாரிக்க தொடங்கினார்கள். அந்த போதையிலும் விஜய், “நான் இந்த பக்கமா சும்மா போயிட்டு இந்தப்ப இவருக்கு ஆக்சிடென்ட் ஆகி கீழ விழுந்து கிடக்கிறத பாத்தேன். அதான் ஆம்புலன்ஸ் – க்கு Call பண்ணிட்டு வெயிட் பண்றேன்.” என்று வாய் கூசாமல் தெளிவாக பொய் சொன்னான்.
அப்போது அங்கே நடுங்கிக் கொண்டு பயத்துடன் வந்த ஒரு சிறுமி, “இல்ல, இந்த அங்கிள் பொய் சொல்றாரு. அந்த தாத்தாவ இவர் தான் இடிச்சாரு. நான் எங்க வீட்டு மொட்டை மாடியில இருந்து பாத்தேன் அதுதான் எங்க வீடு.” என்று அழுது கொண்டே சொல்லி அந்த சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய வீட்டை சுட்டிக்காட்டினாள். அப்போது அந்த சிறுமியை தேடிக்கொண்டு அவளது குடும்பத்தினர்கள் அங்கே வந்துவிட, அப்படியே மெது மெதுவாக கூட்டம் கூடி விட்டது. விஷயம் தன் கையை மீறி செல்வதை உணர்ந்த விஜய் உடனே தன் அசிஸ்டன்ட் தினேஷுக்கு கால் செய்து விஷயத்தை சொல்லி உடனே அவனுக்கு லொகேஷன் அனுப்பி அவனை அங்கு வருமாறு அழைத்தான்.
இந்த கேப்பில் யாரோ ஒருவன் போலீசாருக்கு கால் செய்து விஷயத்தை கொளுத்தி போட்டு விட, அங்கே பலத்த சைரன் சத்தத்துடன் நான்கு ஐந்து போலீஸ் ஜீப் வந்து சேர்ந்தது. அதிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட போலீசார்கள் அங்கே வந்து இறங்கி விஜயிடம் அந்த ஆக்சிடென்ட்டை பற்றி விசாரிக்க தொடங்க, அப்போது சரியாக அங்கே ஆம்புலன்ஸ் -ம் வந்துவிட, உடனே அவர்களிடம், “சார் நீங்க என்கிட்ட எந்த கொஸ்டின் வேணாலும் கேளுங்க. நான் உங்களுக்கு ஆன்சர் பண்றேன். But அவர் உயிருக்கு போராடிட்டு இருக்காரு. முதல்ல அவர ஆம்புலன்ஸ்ல ஏத்தி விடுங்க.” என்று நல்லவனை போல சொன்னான் விஜய்.
அங்கிருந்து அவர்கள் அந்த வயதானவரை தூக்கி ஆம்புலன்ஸ் இல் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.
வந்திருந்த போலீஸார்களுக்கு அவனைப் பற்றி நன்றாக தெரியும் என்பதால் விஜயிடம் பகைமையை வளர்த்து கொண்டு அவன் கையால் சாக அவர்கள் தயாராக இல்லை. விஷயம் எப்படியோ மீடியா வரை சென்று விட்டதால், ஒரு பெரிய நியூஸ் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் தங்களது சேனலின் TRP ஜ அதிகரிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என நினைத்து ஏராளமான நியூஸ் சேனல்கள் அந்த இடத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து இருந்தார்கள்.
விஜயின் அசிஸ்டன்ட் தினேஷ் அவனுடைய ஆட்களை அழைத்துக் கொண்டு அங்கே வருவதற்குள் விஷயம் அவர்களது கையை மீறி ஏற்கனவே சென்றிருந்தது. ஏற்கனவே விஜய் மீது குற்றம் சொன்ன அந்த சிறுமி, தன் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் விஜய் தான் அந்த ஆக்சிடென்ட் செய்தான் என்று தெளிவாக சொல்லிவிட, அப்படியே அந்த செய்தி அனைவரிடமும் பரவி போலீசார் காதுகளுக்கும் சென்றுவிட, இந்த விஷயம் ஏராளமானவர்களுக்கு தெரிந்து விட்டதால் இதைப் பற்றி அவர்கள் விஜய் இடம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.
இதில் அந்த சிறுமியை தூக்கிக் கொண்டு அங்கிருந்த இன்ஸ்பெக்டரின் அருகே வந்து நின்ற அவளது தந்தை, “சார் இந்த ஆக்சிடென்ட்டை யார் பண்ணதுன்னு நாங்க பாக்கல. ஆனா என் பிள்ளைங்க ரெண்டும் மாடியில விளையாடிட்டு இருக்கிறப்ப இவர் ஆக்சிடென்ட் பண்ணத பார்த்திருக்காங்க. கண்ணுக்கு தெரிஞ்சே ஒரு தப்பு நடக்கும்போது அத எங்களால பாத்துட்டு சும்மா இருக்க முடியாது. ஆக்சிடென்ட்ல அடிபட்டு கிடந்தவர் எங்க அப்பாவோட Friend. எனக்கும் அவர ரொம்ப நல்லா தெரியும். அவருக்குன்னு யாருமே இல்ல சார். இந்த வயசுலயும் ஒண்டிக்கட்டையா இருந்து ஏதோ டீ காபி வித்து அதுல கிடைக்கிற காச வச்சு கஞ்சியோ கூலோ குடிச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்காரு. இப்ப நடந்த ஆக்சிடென்ட்ல அவருக்கு கை கால் ஏதாவது முறிஞ்சி இருந்தா இனிமே அவரால அதையும் செய்ய முடியாது. எங்கள மாதிரி ஏழை பாழைகளுக்கு நீங்க தான் சார் நீதி வாங்கி குடுக்கணும். அவர் சார்பா நான் Case குடுக்கிறேன்.” என்று சத்தமாக சொல்லிக் கொண்டு இருக்க, அதை மீடியோ ஆட்கள் தங்களது சேனலில் லைவில் டெலிகாஸ்ட் செய்து கொண்டு இருந்தார்கள்.
பின் பரபரப்பை கூட்டுவதற்காக ஆங்காங்கே செய்தி தொகுப்பாளர்கள் நின்று கையில் மைக்கை பிடித்துக் கொண்டு கேமராவை பார்த்து, “இப்போது தான் சில மணி நேரங்களுக்கு முன்பு கையில் இரண்டு விருதுகளுடன் கம்பீரமாக விருது வழங்கும் விழா மேடைகள் நின்று கொண்டு இருந்த நடிகர் விஜய் குருமூர்த்தி அவர்கள் இப்போது நடுரோட்டில் நின்று கொண்டு இருக்கிறார். இங்கே ஒரு ஆக்சிடென்ட் நடந்து இருக்கும் நிலையில், ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் அதை விஜய் குருமூர்த்தி தான் செய்தார் என்று ஆணித்தனமாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அந்த ஆக்சிடென்ட் செய்தது விஜய் குருமூர்த்தி தானா? அப்படி என்றால் போலீசார்கள் அவர் மீது நியாயமாக சட்டப்படி ஆக்சன் எடுப்பார்களா? அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் நமது செய்தி தொலைக்காட்சியுடன்.” என்று ஆளாளுக்கு ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.
அதில் சிலர் அந்த குடும்பத்தினரிடமும் பேட்டி எடுத்துவிட்டு, அங்கிருந்த போலீஸ்களிடம், “இந்த Case -ல நீங்க நியத்தோட பக்கத்துல நிப்பீங்களா? இல்ல அனாதையான அந்த வயசான தாத்தாவுக்கு என்ன ஆனா என்னனு பணக்காரங்களுக்கு வழக்கம் போல சலாம் அடிப்பீங்களா சார்?” என்று நக்கலாக கேட்க அதனால் கடுப்பான அந்த இன்ஸ்பெக்டர், “கையில மைக் இருந்தா என்ன வேணாலும் கேப்பீங்களா? நீங்க ஒரு அரசு அதிகாரியை இப்படி பொது வெளியில அசிங்கப்படுத்தி பேசுறது எவ்வளவு பெரிய Crime தெரியுமா? இப்ப உங்க எல்லாரையும் arrest பண்ணி உள்ள போட்டுட்டா?” என்று கேட்க, அந்த பத்திரிகையாளர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து விலகினார்கள்.
தன் ஆட்களுடன் அங்கே வந்த தினேஷ் விஜயிடம் நடந்ததை தனியாக அவனை கூட்டி சென்று விசாரித்து தெரிந்து கொண்டு, “விஷயம் பெருசாயிடுச்சு பாஸ். எல்லாத்தையும் நான் இங்க இருந்து பாத்துக்கிறேன். முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க.” என்று பதட்டத்துடன் சொன்னான். அதனால் விஜய் சென்று தன் காருக்குள் அமர்ந்து கொள்ள, தினேஷ் அந்த இன்ஸ்பெக்டரை ஒரமாக அழைத்து சென்று அவரிடம், “இந்த விஷயத்தை ஏதாவது பண்ணி இங்கயே முடிச்சு குடுங்க சார். விஜய் சாருக்கு இருக்கிற Reputation ஜ பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்ல. யாரோ வேணும்னே அவரோட பேர கெடுக்கணும்னு இப்படி எல்லாம் பண்றாங்க.” என்று சொல்ல, “எல்லாம் எனக்கு புரியுது சார். அதுக்கு நான் என்ன பண்றது நீங்களே சொல்லுங்க! இப்பவே நான் இந்த கேஸை ஒழுங்கா விசாரிக்க மாட்டேன்னு Pressல இருக்கிற திமிர்ல அவனுங்க என்கிட்டயே வந்து நேரடியா சொல்றானுங்க. அந்த சின்ன பொண்ணு வேற கரெக்டா விஜய் சார் தான் ஆக்சிடென்ட் பண்ணாருன்னு சொல்லுது. அந்த புள்ளையோட அப்பன் அவருக்கு எதிரா கேஸ் குடுத்தே தீருவேன்னு ஒத்த கால்ல நிக்கிறான். இப்ப எல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு So என்னால எதுவும் பண்ண முடியாது சார். ஒரு formality -காக விஜய் சார் ஜ என் கூட ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க. இத நான் உங்களுக்கு பிரச்சனை வராம சுமுகமா முடிச்சு வைக்கிறேன். ஆனா ஸ்டேஷன் வர கொண்டு போகாம இத முடிக்க முடியாது சார்.” என்று Strict ஆக சொல்லிவிட்டார்.
– காதல் மலரும் 🌹
(பிரத்திலிப்பியில் என்னை மறக்காமல் ஃபாலோ செய்யுங்கள் 🙏)