Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 2

சாபமாய் வந்த என் உயிரே CH 2

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 2: நீ virgin ஆ? 

மோனிஷா ஒருவேளை அவளது தந்தையின் எண்ணம் புரியாமல் இங்கே வந்து மாட்டிக் கொண்டாளோ என்று நினைத்த விஜய் அவளிடம், “எல்லாம் தெரிஞ்சு தான் வந்தியா?” என்று நக்கலுடன் அழுத்தமாக கேட்க, “ஆமா சார் எங்க அப்பா டீடைலா சொல்லி தான் அனுப்பினாரு.” என்று பயந்த குரலில் சொன்னாள் மோனிஷா.

“ஓகே, அப்ப மீட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிடலாம்.” என்ற விஜய், தன் கோட்டை கழட்டி அவன் அமர்ந்து இருந்த சோபாவில் போட்டுவிட்டு எழுந்து மோனிஷாவின் அருகே செல்ல, அவளது இதயம் படபடவென வேகமாக துடித்துக் கொண்டு இருந்ததால் அணிச்சியாக அவளது கால்கள் பின்னோக்கி செல்ல, இப்போது அவனது முகத்தில் ஒரு லேசான புன்னகை இருந்தது. 

என்ன ஆனாலும் அவரை கோபப்படுத்திவிடாதே என்று சொல்லி அவள் அப்பா தன்னை எச்சரிக்கை செய்து அனுப்பியது இப்போது அவளுக்கு ஞாபகம் வர, தொடர்ந்து நகராமல் அவள் அப்படியே ஒரு இடத்தில் நின்று விட, அவளது உடலை இப்போது அவனது கண்கள் மேய்ந்து கொண்டு இருந்தது. அவன் தான் அவளை என்ன தான் அவள் டைரக்டரின் மகளாக இருந்தாலும், அவன் பணம் போட்டு எடுக்கும் படம் என்பதால் லாபமும் முக்கியம் தானே என நினைத்து ஆடிஷன் வைத்து அந்த படத்திற்காக Select செய்தான். 

ஆனால் இப்போது தான் அவளை இத்தனை அருகில் அவன் தெளிவாக பார்க்கிறான். அவளைப் பார்த்தாலே அவள் தன்னைக் கண்டு பயப்படுகிறாள் என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அது தானே அவனுக்கு வேண்டும்! அதனால் அவளது அந்த பயந்த முகத்தையும், ஏசி ஓடியும் அவளுக்கு வியர்த்து வடிவதையும் சில நொடிகள் பார்த்து ரசித்த விஜய், அவள் சரியாக Bed இன் அருகே நின்று கொண்டு இருந்ததால், அப்படியே அவளை அந்த Bed இன் மீது தள்ளிவிட்டு அவள் மீது வேகமாக பாய்ந்தான்.

உண்மையில் விஜய் இவ்வளவு வேகமாக இருப்பான் என்று அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. அதனால் பயத்தில் வெளிப்படையாகவே அவளது உடல் நடுங்கி கொண்டு இருக்க, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அவளுக்கு நன்றாக தெரிந்திருந்தும் விழி விரிய அவனை பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் மோனிஷா. 

ஒரு கனியை கொய்து, அதை தன் இஷ்டம் போல துண்டுகளாக வெட்டி அதை ரசித்து ருசித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது ஒரு ரகம். ஆனால் கொலை பசியில் பறித்ததற்கும் புசித்ததற்கும் நடுவே இடைவெளி இன்றி சாப்பிடுபவர்கள் இன்னொரு ரகம். நம் விஜய் அந்த இரண்டாவது ரகம். அவனுக்கு கொஞ்சி குலாவி முத்தமிட்டு அவளை ரசிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. இன்று இந்த பழம் தானாக நழுவி அவன் வாயில் வந்து விழுந்திருக்கிறது. 

அவனுக்கு இருந்த நல்ல மனநிலையில் தனக்காக Fresh ஆக காத்திருக்கும் அந்த பழத்தை சுவைக்காமல் செல்லும் அளவிற்கு அவன் ஒன்றும் உத்தமன் கிடையாது. அதனால் வந்த வேலையை விரைவில் முடித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க செல்ல வேண்டும் என்று நினைத்தவன் பொறுமை இன்றி அவளது ஆடைகளை கிழித்து எறிய, அடுத்த ஒரு நிமிடத்தில் அவன் முன் அவளது ஆடை இல்லாத உடல் அவனுக்கு காட்சி பொருள் ஆனது. 

தன்னை ஒரு ஆண்மகன் இப்படி காமம் நிறைந்த கண்களுடன் பார்த்து கொண்டு இருக்கிறான் என்று நினைக்கும் போது மோனிஷாவிற்கு ஒருவித கூச்சம் ஏற்பட, அவள் இறுக்கமாக தன் கண்களை மூடிக்கொண்டாள். அவனுக்கு அதைப் பற்றி எல்லாம் என்ன கவலை? அவள் பாதி உடலை மறைத்துக் கொண்டு இருந்த அவளது நீண்ட கூந்தலை நகர்த்திவிட்டு அவன் தன் வேலையை பார்க்க தொடங்கி இருக்க, மோனிஷாவின் உடல் சிலிர்த்து போக, அவர்கள் இருவரும் மோக தாபத்தில் வெந்து கொண்டு இருந்த தருணம், தன் ஒவ்வொரு தொடுகைக்கும் அவளது உடல் React செய்வதை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த விஜய் அவளோடு ஒன்றாக கலக்கவிருந்த தருணம், அவளது இடையே இறுக்கமாக பிடித்து அழுத்தியபடி, “நீ virgin ஆ?” என்று கேட்டான். 

ஒருவித மோனநிலையில் இருந்த மோனிஷாவிற்கு அவனது வார்த்தைகள் தெளிவாக கேட்கவில்லை. இருப்பினும் அவன் தன்னிடம் ஏதோ பேசியது போல இருக்க என்ன என்பது போல அவள் இவனை பதட்டத்துடன் பார்க்க, இப்போது அவளிடம் இருந்து பிரிந்த விஜய் தன் கம்பீரமான குரலில், “நீ virgin ஆ?” என்று மீண்டும் கேட்டான். அவனது அந்த கணீர் குரலில் பயந்து போய் எழுந்து அமர்ந்த மோனிஷாவிற்கு இவன் ஏன் இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறான் என்று குழப்பமாக இருக்க, அவள் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று அவள் நினைத்தாலும் அவன் முன் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர மறுத்து விட்டதால், ஆமாம் என்பது போல தன் தலையை மட்டும் ஆட்டினாள் அவள். 

அதை கண்டவுடன் அவனுக்கு ஏதோ போல் ஆகிவிட, அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. உடனே சென்று அங்கிருந்த Restroom -க்குள் புகுந்து கொண்டவன் சில நிமிடங்களில் குளித்துவிட்டு Bath Robe வெளியே வந்தான். மோனிஷாவிற்கு இந்த நிலைமையில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும்? அவனிடம் ஏதாவது பேசலாமா வேண்டாமா என்று எதுவும் தெரியவில்லை. ஆனா இப்போது ஆடைகள் இன்றி அவன் முன்னே நிற்க அவளுக்கு மிகவும் கூச்சமாக இருந்ததால் அங்கிருந்த பெட்ஷீட் ஜ தன் மீது அவள் சுற்றிக்கொண்டு நிற்க, தன் மொபைல் போன் ஐ எடுத்து வெளியில் இருந்த தன் ஆள் ஒருவனுக்கு கால் செய்து காரில் இருக்கும் தன் ஆடயை கொண்டு வரும்படி சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான். 

இரண்டு நிமிடங்களில் ஒருவன் வந்து அந்த அறையின் காலிங் பெல் ஜ அடிக்க, அவனிடம் தன் ஆடைகளை வாங்கிக் கொண்டு அதை அணிந்து கொண்ட விஜய் டிரெஸ்ஸிங் டேபிளில் உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவன், “மேக்கப் இல்லனாலும் நீ அழகாக தான் டா இருக்க விஜய்.” என்று நினைத்தவன் தன் விரல்களால் தன் முடியை மட்டும் லேசாக கோதி விட்டு அங்கிருந்து அவன் கிளம்பி சென்று விட, அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அவனது பாடி கார்டுகளில் ஒருவன் ஆங்காங்கே சிதறி கிடந்த விஜயின் ஆடைகளை எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு, அங்கே விஜய் வந்து சென்றதற்கான தடயம் வேறு ஏதேனும் இருக்கிறதா என செக் செய்துவிட்டு அங்கிருந்த மோனிஷாவை அவனும் கண்டுகொள்ளாமல் வெளியேறி விட்டான். 

அங்கிருந்து கிளம்பிய விஜய் அவன் ஏற்கனவே நினைத்ததை போல ஒரு நைட் கிளப்க்கு சென்றவன்.  அங்கிருந்த ஒரு பிரைவேட் அறையில் தனக்கு பிடித்த அனைத்து மதுபானங்களையும் வாங்கி அடுக்கி வைத்து அவன் குடித்துக் கொண்டு இருக்க, அவன் முன்னே இரு பெண்கள் அரைகுறை ஆடையில் Hot ஆக ஒரு Item Song -க்கு தங்களது கவர்ச்சியான தங்கள் உடலை வளைத்து நெளித்து ஆடி ஏற்கனவே அவனுக்கு இருந்த போதையை இன்னும் தங்கள் உடல் அசைவுகளால் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள். 

அவன் கழட்டி போட்டுவிட்டு சென்ற Bath Robe ஜ அணிந்து கொண்டு அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்த மோனிஷா, தன் தந்தைக்கு கால் செய்து விஷயத்தை சொல்லி, “அம்மா கிட்ட சொல்லி என்னோட டிரஸ் ஐ யார்கிட்டயாவது குடுத்து விடுங்க.” என்று போனில் சொல்ல மறுமுனையில் இருந்து கோபமாக பேசிய ஸ்ரீகாந்த், “அவன் கேட்டா நீயும் உடனே ஆமான்னு சொல்லிடுவியா?  அவனும் ரொம்ப நல்லவன் மாதிரி பாதியிலயே கிளம்பி போயிருக்கான். எப்படியாவது நீ அவனால பிரக்னன்ட் ஆயிட்டா உன்ன அவனோட 3rd Wife ஆக்கிடலாம்ன்னு plan பண்ணேன், இப்ப எல்லாம் நாசமா போச்சு.” என்று சொல்லி திட்டிக் கொண்டே இருந்தான். 😏 😡

அதனால் இப்போது கோபப்பட்ட மோனிஷா, “இப்ப எதுக்கு அப்பா என்கிட்ட கோவப்படுறீங்க? எனக்கு இப்படி எல்லாம் பண்றதுல்ல சுத்தமா விருப்பமே இல்ல.  ஒரு பேச்சுக்கு உங்ககிட்ட நான் விஜய் சாரோட fan, எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்னு உங்ககிட்ட சொன்னேன். நீங்க தான் உடனே அவர்கிட்ட என்ன இன்ட்ரோ பண்ணி உங்க நெக்ஸ்ட் மூவில என்ன அவர் கூட சேர்ந்து நடிக்க சொன்னீங்க.

அவர் கூட சேர்ந்து நடிக்கறதுக்கு ஒரு Chance கிடைச்சு இருக்கேன்னு நானும் சரின்னு சொன்னேன். அதுக்கப்புறம் நீங்க தான் என்ன பேசி force பண்ணி convince பண்ணி என்னால அவர கல்யாணம் பண்ணிக்க முடியும்னு ஆசைக்காட்டி இங்க அனுப்பி வச்சிட்டீங்க. இப்ப அவர் பாதியில போனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று எரிச்சலான குரலில் சொல்ல, அவளை வைத்து இன்னும் தனக்கு ஆக வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது என்பதால் தன் குரலை தாழ்த்திக் கொண்டு அவளிடம் இப்போது பவ்வியமாக பேசிய ஸ்ரீகாந்த், “சரி விடுமா, எல்லாத்தையும் அப்பா நான் பாத்துக்குறேன். நான் முடிவு பண்ணிட்டேன், நீ அவன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீதான் குருமூர்த்தி Family-யோட முதல் வாரிச பெத்து குடுக்கணும். நெக்ஸ்ட் Week -ல இருந்து சூட்டிங் ஸ்டார்ட் ஆகப்போகுது. அவன் எங்க போய்ட போறான்? இன்னும் நமக்கு நிறைய டைம் இருக்கு.” என்று சொல்ல, அதற்கு சரி என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள் மோனிஷா.

தன் அப்பாவிடம் பேசியதும் மோனிஷாவிற்கு எப்படியாவது இன்னும் சில நாட்களில் தான் விஜய் குரு மூர்த்தியின் மனைவியாகி விடுவோம் என்ற நம்பிக்கையும் ஆசையும் அதிகமாகி விட, இதுவரை யாரோ ஒருவனிடம் இத்தனை நாள் அவள் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த பறி கொடுக்க வேண்டி இருந்திருக்குமே என்று யோசித்து அவளுக்குள் இருந்த கூச்சமும் தயக்கமும் இப்போது காணாமல் போயிருந்தது. அவன் தனக்கானவன் என்று அவள் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.

வேறு யாராவது ஒருவரிடம் தன் மகளுக்கு ஆடைகளை கொடுத்து அனுப்பினால் விஷயம் வெளியில் கசிய வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்த மோனிஷாவின் அம்மா மல்லிகா தானே தன் மகளுக்கான ஆடைகளை கொண்டு வந்து அந்த ஹோட்டல் அறையில் அவளிடம் கொடுத்துவிட்டு, அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு தங்கள் காரில் அங்கிருந்து அவர்களது வீட்டை நோக்கி புறப்பட்டவள், அவர்கள் வீட்டை அடைந்ததும் ஒரு ஆண் ஜ பெண்ணானவள் தன் திறமையான பேச்சை கொண்டும், உடல் அழகைக் கொண்டும், வசீகரமான உடல் மொழியைக் கொண்டும் எப்படி எல்லாம் தங்கள் வலையில் வீழ்த்தி தங்கள் பின் பூனை குட்டி போல சுற்ற வைக்க வேண்டும் என்றெல்லாம் மோனிஷாவிற்கு கிளாஸ் எடுக்க, பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போது எல்லாம் கூட அவள் இத்தனை கவனமாக வகுப்புகளை கவனித்திருக்க மாட்டாள். ஆனால் தன் அம்மா சொல்லும் ஒரு சிறிய விஷயத்தை கூட மறந்து விட கூடாது என்பதற்காக கூர்ந்து கவனித்து அத்தனையையும் தன் மூளைக்குள் பதிய வைத்துக் கொண்டாள் மோனிஷா.

-காதல் மலரும் 🌹 

You may also like

Leave a Comment

About Me

Featured