அத்தியாயம் 177
அதுவரை நடப்பதை பார்த்துக் கொண்டு சிலை போல அமர்ந்திருந்த விஷ்வா “இவனுக்கு இதெல்லாம் தேவைதான்.” என்று நினைத்து லேசாக சிரித்தான்.
அதை கவனித்த அந்த பெண் “பார்றா.. இவனுக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா..??” என்று நினைத்தவள், “hello Mr. Strange.. நீங்க எப்பவும் இப்படி தானா.. இல்ல இன்னைக்கு மட்டும் தான் இப்படி differentஆ weirdஆ behave பண்றீங்களா..??” என்று அவனைப் பார்த்து கேட்டாள். விஷ்வா அவளுக்கு பதில் சொல்லவில்லை.
அதனால் “Nice to meet you. I am Sonali Gupta. Your name..??” என்று கேட்டுவிட்டு, கை குலுக்குவதற்காக அவன் முன்னே தன் ஒற்றை கையை நீட்டினாள். அவளிடம் தனது original பெயரை சொல்ல விரும்பாமல் “விக்கி..!!” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்ன விஷ்வா பின் அவளை கண்டுகொள்ளாமல் மீண்டும் தனது பழைய positionல் அமர்ந்து கொண்டான். அதை பார்த்து கடுப்பான சோனாலி “இதோ பாருடா.. இவனுக்கு ரொம்ப ஓவர் திமிரு தான். சரியான சீன் partyயா இருப்பான் போல.. இருக்கட்டும் இருக்கட்டும். நீ யாரா இருந்தாலும் உன் பருப்பு என்கிட்ட வேகாது ராசா. அந்த விக்கியா.. இல்ல இந்த சோனாலியான்னு பாத்துரலாம். எப்படியாவது உன்னை convince பண்ணி என் upcoming photoshootல உன்ன modelஆக்கி participate பண்ண வைக்காம விடமாட்டேன்.” என்று சபதம் எடுத்துவிட்டு, வேகமாக சென்று அவன் அருகில் அமர்ந்தாள்.
மீட்டிங் முடிந்தவுடன் அங்கே இருக்க பிடிக்காமல் அனைவரும் சென்ற பிறகு மேகா வேகமாக வெளியே செல்ல, தானும் அவளை பின்தொடர்ந்து சென்ற கௌத்தம் “என்னாச்சு மேகா.. உன் முகமே சரியில்ல.. நெஜமாவே விஷ்வா நீயும், advocate சாரும் சொன்ன மாதிரி world tour தான் போயிருக்காரா.. இல்ல அவருக்கு வேற ஏதாவது problemஆ..?? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. நான் உனக்கு help பண்ண readyஆ இருக்கேன்.” என்று விஷ்வாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான்.
“மகேஷ் அண்ணா சொன்ன மாதிரி விஷ்வா லெட்டர் எழுதி வச்சுட்டு காணாம போனத பத்தி நம்ம யார்கிட்டயும் சொல்லக்கூடாது. அது அவனுக்கு safe இல்ல. And அவன் reputationஐ நம்மளே damage பண்ற மாதிரி வேற இருக்கும்.” என்று நினைத்த மேகா, “Thanks for your care கௌத்தம். பட் நீ நினைக்கிற மாதிரி **விஷ்வாவிற்கு** எந்த problemம் இல்ல.
அவர் கொஞ்சம் upsetஆ இருந்தாரு. அதான் solo trip போயிட்டு வாங்க mind refreshingஆ இருக்கும்னு சொல்லி நான்தான் அவரை அனுப்பி வச்சேன். You don’t worry. He is perfectly alright. எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது. இந்த மீட்டிங்காக தான் ஆபீஸ் வந்தேன். நான் வீட்டுக்கு போறேன் Bye. See you tomorrow.” என்று சொல்லிவிட்டு எங்கே தன்னையும் மீறி அழுது விடுவோமோ என்ற பயத்தில் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
இத்தனை நாட்களாக அவளை அருகில் இருந்து நன்றாக கவனித்து இருந்த கௌத்தமிற்கு தன்னிடம் அவள் பொய் சொல்கிறாள் என்று கண்டுபிடிக்க சிரமமாக ஒன்றும் இல்லை. அதனால் “அவனுக்காக என்கிட்டயே பொய் சொல்லி சமாளிச்சுட்டு போறியாடி..?? இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கிறேன். நீ என்ன அவன பத்தி சொல்றது.. அவன் எங்க இருந்தாலும் நானே அவனை தேடி கண்டுபிடிக்கிறேன். அவன் அப்படியே நிஜமாவே world tourக்கு போயிருந்தாலும் பரவால்ல. இந்த உலகத்தோட எந்த மூலையில அவன் இருந்தாலும், உனக்காக நான் அவனை கண்டுபிடிச்சு கொல்லுவேன். உன்ன விட்டு பிரிஞ்ச விஷ்வா, அப்படியே மொத்தமா மேல போய்ட்டான்னு தான் இருக்கணும். மறுபடியும் அவன இங்க வர விடமாட்டேன்.” என்று நினைத்து வில்லத்தனமாக புன்னகைத்த கௌத்தம் தனது ரூமிற்கு சென்று யாரிடமோ phoneல் seriousஆக பேசத் தொடங்கினான்.
ஆபீஸில் இருந்து தனியாக விஷ்வாவின் காரை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்த மேகா, நேராக தனது ரூமிற்கு சென்று ஓரமாகக் கிடந்த sofaவில் அமர்ந்து கதறி அழ தொடங்கி விட்டாள்.
அந்த அறையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவளுக்கு அவனுடனான அழகிய moments எக்கச்சக்கமாக இருந்தது. அங்கே இருக்கும் ஒவ்வொரு நொடியும், அதிகமாக அவளுக்கு அவனை ஞாபகப்படுத்த “ப்ளீஸ் விஷ்வா சீக்கிரம் என்கிட்ட வந்துரு. நீதான் என் strength. நீதான் என் weakness. உனக்கு ஆபிஸ்க்கு வந்து வேலை செய்ய பிடிக்கலைன்னா கூட பரவாயில்லை.
இப்போ நான் மீட்டிங்ல சொல்லிட்டு வந்த மாதிரி, மத்தவங்க எல்லார்கிட்டயும் கேட்டு எல்லாத்தையும் சீக்கிரமா கத்துக்கிட்டு நானே MV Techஐ பாத்துக்கும். But நீ என் பக்கத்துல இல்லாம என்னால எதையும் செய்ய முடியாது டா. எங்க இருக்க நீ..?? நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் விஷ்வா..??” என்று சுவரில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த அவர்களது 3 திருமணங்கள் நடந்த போதும் எடுக்கப்பட்ட மூன்று விதமான photosகளிலும் அவளுடன் நெருக்கமாக நின்று கொண்டிருந்த விஷ்வாவைப் பார்த்து கேட்டாள். ஆனால் அங்கே வெறும் photoவாக மற்றும் நின்று கொண்டிருந்த அவன் அவளுக்கு பதில் சொல்லவில்லை.
மனமுடைந்த மேகா சுவற்றில் சாய்ந்து அவள் விஷ்வாவால் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்தையும் நினைத்து கண்ணீர் சிந்த, பாத்ரூமில் இருந்து ஒற்றைத் துண்டுடன் வெளியில் வந்த விஷ்வா “மேகா.. ஏய்… மேகா.. நான் கூப்பிடறது உனக்கு கேக்குதா இல்லையாடி..?? போய் சீக்கிரம் என் shortsஐ எடுத்துட்டு வா.” என்று சொல்வதைப் போல அவளுக்கு கேட்டது. அதனால் “நீ வந்துட்டியா விஷ்வா..??” என்று நினைத்து மகிழ்ந்த மேகா “இரு நான் போய் எடுத்துட்டு வரேன்.” என்று வேகமாக சொன்னபடி அவன் பக்கம் திரும்பினாள்.
அங்கே விஷ்வா இல்லை. அதனால் ஏமாற்றம் அடைந்தவள், “நீ சரியாகி திரும்பி வர்றதுக்குள்ள.. உன்ன நினச்சு நினைச்சு நான் பைத்தியம் ஆயிடுவேன் போல டா. ஐயோ கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது…??” என்று தன் அடி தொண்டையில் இருந்து சத்தமாக கத்தினாள். முகத்தை மூடிக் கொண்டு தரையில் அமர்ந்து அவள் கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தாள். அப்போது அவளுக்கான உணவுடன் அங்கே வந்த சாராவும், அணுவும் அவளிடம் “நீங்க காலையில இருந்து எதுவுமே சாப்பிடல மேடம். ப்ளீஸ் இப்பவாவது கொஞ்சம் சாப்பிடுங்க. விஷ்வா சார் சீக்கிரம் வந்துருவாரு. நாங்க எல்லாரும் அவரை தேடிட்டு தான் இருக்கோம்.” என்று சொல்லி அவளை சாப்பிட வைக்க போராடிக் கொண்டிருந்தார்கள்
வீட்டில் அணியும் சாதாரண pyjama setஐ அணிந்திருந்த சௌபர்ணிகா பதட்டமாக “மேகா.. விஷ்வா.. விஷ்வா…!!” என்று சத்தமாக கத்திக்கொண்டு அந்த ரூமிற்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்தவுடன் அங்கிருந்த மற்ற மூன்று பெண்களும் எழுந்து நிற்க, அந்த அறை முழுவதும் “விஷ்வா… நீ எங்க இருக்க..?? உன்ன காணோம் அப்படி இப்படின்னு இங்க லூசுத்தனமா எல்லாரும் உளறிட்டு இருக்காங்க. நீ எங்கடா இருக்க..?? அக்கா கூப்பிடுறேன்ல.. சீக்கிரமா இங்கே வா…!!” என்றபடி சௌபர்ணிகா விஷ்வாவை கலங்கிய கண்களுடன் தேடினாள்.
தன் நிலமையை காட்டிலும், சௌகர்ணிகாவை இப்படி பார்ப்பது மேகாவிற்கு இன்னும் கஷ்டமாக இருந்தது.
அதனால் ஓடி சென்று அவளை அணைத்துக் கொண்ட மேகா “உங்க தம்பி யார்கிட்டயும் எதுவும் சொல்லாம எனக்கு மன நிம்மதி வேணும்னு லெட்டர் எழுதி வச்சுட்டு எங்கயோ போயிட்டான் அக்கா. இப்போ அவன் எங்க இருக்கான், என்ன பண்ணிட்டு இருக்கான்னு யாருக்கும் தெரியல. தயாளன் அண்ணாவும், அரவிந்த் அண்ணாவும் அவங்க ஆளுங்கள வச்சு விஷ்வாவைத் தேடிட்டு இருக்காங்க…!!” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு அழ, ஷாக்காகி “என்னடி சொல்ற.. விஷ்வா கானா போய்ட்டானா..?? அவன் எங்க போனான்.. ஐயோ என் தம்பி எங்க போனான்னு தெரியலையே.. ஏற்கனவே விஜய் என்ன விட்டுட்டு போயிட்டான். அப்புறம் பாட்டி, என் குழந்தைன்னு எனக்கு பிடிச்சவங்க எல்லாரும் என்ன ஒவ்வொருத்தரா விட்டுட்டு போயிட்டாங்க. நான் இவனுக்காக தானே உயிரோடவே இருக்கேன்.. இப்போ இவனும் என்னை விட்டுட்டு போயிட்டானா..?? ப்ளீஸ் மேகா.. இதெல்லாம் பொய்ன்னு சொல்லு. என்னால என் தம்பிய பாக்காம இருக்க முடியாது. உனக்காக அவன் என்ன வேணாலும் செய்வான். நீ அவன்கிட்ட பேசு. அவன இங்க வர சொல்லு. நான் இப்பவே அவனை பாக்கணும்.” என்று உடைந்த குரலில் சொன்ன சௌபர்ணிகா அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதாள்.
அவள் பைத்தியம் பிடித்தவளை போல மீண்டும் மீண்டும் “விஷ்வா.. விஷ்வா.. நான் விஷ்வாவைப் பாக்கணும்.” என்று அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளை அப்படி பார்த்த பிறகுதான் “எனக்கு தெரியும். எங்க இருந்தாலும் என் விஷ்வா safeஆ தான் இருப்பான். எனக்காகவாவது அவன் அவனை நல்லா பாத்துக்குவான். நம்ம அவனை நினைச்சு அழுதுட்டு இருக்கிறதை விட, இப்போ சௌபர்ணிகா அக்காவை நார்மல் ஆக்குறது தான் முக்கியம். விஷ்வா இடத்தில இருந்து நான்தான் இவங்கள நல்லா பாத்துக்கணும்.” என்று நினைத்து தன்னை நிதான படுத்திக் கொண்ட மேகா, “அக்கா.. அக்கா ஒன்னும் இல்ல ப்ளீஸ் ரிலாக்ஸ். விஷ்வா இப்படி தனியா tour போகப் போறதா ரெண்டு நாளைக்கு முன்னாடியே என்கிட்ட சொன்னான். நான் இப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன்.
அதான் அவன் யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி போயிட்டான். அவன் எங்கயோ ஒன்னும் தெரியாம தொலைஞ்சு போகலையே.. அவன் நினைச்ச மாதிரியே அவனோட peace of mindஐ தேடி world tour போயிட்டான். அவன் இப்படி irresponsibleஆ இருக்கிறதுக்கு நாம அவன் மேல கோபம் தான் படனும். நீங்க எதுக்கு இப்படி சின்ன குழந்தை மாதிரி அழுகுறீங்க..?? உங்க தம்பி வரட்டும்.. இதுக்காக நம்ம ரெண்டு பேரும் அவன் கிட்ட சண்டை போடலாம். ஓகேவா..??” என்று கேட்டாள்.
“நெஜமாவே அவன் சும்மா tour தான் போயிருக்கானா..??” என்று அப்போதும் நம்பாமல் சௌபர்ணிகா சிறு விசும்பல்களுடன் கேட்க, “ஆமாக்கா. நானே சொல்றேன்ல.. என்னை நம்ப மாட்டீங்களா நீங்க..?? உலகம் முழுக்க சுத்திட்டு வர்றதுன்னு சும்மாவா…?? அவன் எங்க போனாலும், கடைசியில எல்லா பக்கமும் சுத்தி முடிச்சு tiredஆகி இங்க தானே வரணும்.. அப்ப பாத்துக்கலாம் அவன.” என்று பொய் பொய்யாக சொல்லி அவளை சமாதானப்படுத்தினாள் மேகா.
தொடரும்..