Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 176

மூர்கனின் காதலி CH 176

by Thenaruvi Tamil Novels
10 views

அத்தியாயம் 176

Meeting hallல் அனைவரும் தங்களுக்குள் “மேகாவால எப்படி விஷ்வா சாரோட இடத்துல இருந்து எல்லாத்தையும் manage பண்ண முடியும்..??” என்று பேசிக் கொண்டு இருக்க, அதைக் கேட்டு தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற முடிவிற்கு வந்த மேகா அதை பற்றி மகேஷிடம் சொன்னாள். அதை அவள் சொல்லும்போது அவளுக்கு விஷ்வாவை பற்றிய ஞாபகம் வர, அவள் கண்கள் கலங்கிவிட்டது. இம்முறை அவளை எப்படி இதற்கு சம்மதிக்க வைப்பது என்று மகேஷ்ற்க்கே தெரியவில்லை. இருப்பினும் அதை அவன் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், “ப்ளீஸ் மேகா இப்போ இருக்கிற situationஜ புரிஞ்சுக்கோ. நீ இப்ப முடியாதுன்னு சொல்லிட்டா, அடுத்து எல்லாரும் விஷ்வா சார் எங்க..?? அவர வர சொல்லுங்கன்னு தான் கேப்பாங்க. எப்படி நம்ம உடனே அவரை கண்டுபிடிச்சி இங்க கூட்டிட்டு வர முடியும்..?? நமக்கு வேற வழி இல்ல.
நீ இப்போதைக்கு சும்மா எல்லார் முன்னாடியும் ஓகே சொல்லு. மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். முதல்ல அழுகுறத நிறுத்து. Try to control yourself. நீ இப்படி இருக்கிறத யாராவது நோட் பண்ணாங்கனா, இன்னும் பிரச்சனை பெருசாகும். நான் சொல்றத புரிஞ்சுக்க try பண்ணு. Situation out of controlல போயிட்டு இருக்கு.” என்று தொடர்ந்து ஏதேதோ சொன்னான்.

மேகாவின் கலங்கிய கண்களுக்கு அவள் முன்னே இருந்த அனைவரின் முகங்களும் blurஆக தெரிய, அவளது மன கண்களில் விஷ்வாவின் பாவமான முகம் தெரிந்தது. “பாட்டியோட death, சௌபர்ணிகா அக்கா baby abortionன்னு அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் எல்லாமே விஷ்வாவோட மனசை எவ்ளோ பாதிச்சிருந்தா.. இருக்கிற எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயோ யார்கிட்டயும் சொல்லாம ஓடி போயிருப்பான்.. அப்படி போகும்போது கூட என் மேல நம்பிக்கை வச்சு, என் பேர்ல power of attorney எழுதி வச்சிருக்கான். அப்போ அவன் இங்க இல்லைனாலும், நான் எல்லாத்தையும் நல்லா பாத்துக்குவேன்னு அவன் நெனச்சி இருக்கான்.
என்ன இருந்தாலும் விஷ்வா இப்படி செஞ்சிருக்க கூடாது தான். பட் அதுக்காக என்னால அவனை ஏமாத்த முடியாது. அவனுக்காகவாவது ‌ நான் இந்த responsibilityஐ எடுத்துக்கிட்டு தான் ஆகணும்.” என்று நினைத்த மேகா யாருக்கும் தெரியாமல் கீழே குனிந்து தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு சட்டென எழுந்து நின்றாள்.

“என் husband அவருக்கு கொஞ்சம் space வேணும்னு நினைச்சு tour போயிருக்காரு. அது அவரோட தனிப்பட்ட விருப்பம். அதை நான் value பண்றேன்.

நீங்களும் பண்ணுவீங்கன்னு நம்புறேன். இந்த MV Techஓட founder and chairman விஷ்வாவா இருந்தாலும், இங்க இருக்கிற நீங்க எல்லாரும் தான் இந்த கம்பெனியோட pillars. என் Husband இங்க இல்லாத இந்த நேரத்துல, அவர் இடத்துல இருந்து நான் எல்லாத்தையும் பாத்துக்கணும் என்றது அவரோட விருப்பமா இருக்கும்போது, கண்டிப்பா அதுதான் என்னோட விருப்பமாகவும் இருக்கும். And it’s my duty too. இத்தனை நாள் நீங்க அவருக்கு கொடுத்த அதே support and guidanceஐ எனக்கும் கொடுப்பீங்கன்னு நம்புறேன். விஷ்வா இங்க இருந்தாலும், இல்லைன்னாலும் as usual இங்க நடக்க வேண்டியது எல்லாம் கரெக்டா நடக்கணும். அதுதான் அவரோட ஆசை. நான் அதை fulfill பண்றதுக்கு உங்க cooperation எனக்கு வேணும். நீங்க நினைக்கிற மாதிரி இதையெல்லாம் பண்ற அளவுக்கு எனக்கு experience இல்லாம இருக்கலாம். But I think, with all your support it’s not impossible. Thanks.” என்று சொல்லிவிட்டு அமர்ந்தாள்.
அவள் பேசி முடித்தவுடன் அந்த இடமே புயல் அடித்து ஓய்ந்ததை போல அமைதியானது. மேகாவின் பேச்சில் இருந்த தெளிவையும் உறுதியையும் பார்க்கும்போது அப்படியே ஒரு நொடி அவர்களுக்கு விஷ்வாவை பார்ப்பதை போல இருந்தது.

இருக்காதா பின்ன..?? இத்தனை நாட்கள் அவனுடன் அவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறாள். அவன் சாயல் அவளிடம் இல்லாமல் எப்படி..?? அந்த மீட்டிங் தொடர்ந்து நடந்தது. அவர்களது office administration and current projects தொடர்பாக discuss செய்து கொண்டிருந்தார்கள்.‌
நேரம் செல்ல செல்ல நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மேகா, அவள் தலைக்கு மேலே விஷ்வா** கொடுத்த பொறுப்பு கனமாக இருந்தாலும் கூட, அவனுக்காக அதை சுகமான சுமையாக ஏற்றுக் கொண்டு, அனைவரின் கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் சொன்னாள்.

மீட்டிங் முடிவில் அனைவருக்கும் மேகாவின் மீது ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. MV Techன் புதிய chairman மேகா தான் என்ற விஷ்வாவின் எண்ணத்திற்கு அனைவரும் வழிமொழிந்தார்கள்.‌ எப்படியோ அந்த சூழ்நிலையை மகேஷ் அங்கே இருந்து சமாளித்திருக்க; தயாளனும், அரவிந்தும் விஷ்வாவைத் தேடி தங்களது ஆட்களுடன் தெருத்தெருவாக அலைந்து கொண்டு இருந்தார்கள். அப்படியே நேரம் உருண்டோடியது.

Trainல் விஷ்வாவின் அருகே அமர்ந்திருந்த இளம்பெண் காதில் air buds அணிந்து ஏதோ ஒரு பாடலை கேட்டுக் கொண்டிருந்தள். அப்போது அவளுக்கு ஒரு call வர, அதை attend செய்து “சொல்லுங்க பாட்டி.. எப்படி இருக்கீங்க..?? டைமுக்கு கரெக்டா சாப்பிடுறீங்களா..?? இல்ல நான் அங்க இல்லைன்ற தைரியத்துல எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு வேலை வேலைன்னு தாபாவே கதின்னு இருக்கீங்களா..??” என்று அவள் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டாள்.

“ஏய் என்னடி.. நீ பத்திரமா train எரிட்டியா? எப்ப ஊருக்கு வருவேன்னு கேட்கலாம்னு நான் உனக்கு call பண்ணா‌.. என்ன பேசவே விடாம நீ இப்படி அடுக்கடுக்கா கேள்வியா கேட்டுட்டு இருக்க..?? என்ன பண்ணிட்டு இருக்க நீ…?? மொதல்ல அத சொல்லு. அங்கிருந்து கிளம்பிட்டியா இல்லையா..??” என்று அவளது பாட்டி மறுமுனையில் கோபமாக கேட்க, “அதெல்லாம் எல்லா வேலையும் முடிச்சிட்டு பத்திரமா நான் train ஏறிட்டேன் பாட்டி.‌ இனிமே நமக்கு தமிழ்நாட்டுல எந்த வேலையும் இல்ல.
நாளைக்கு இந்நேரம் எல்லாம் நான் மும்பைக்கு வந்துருவேன். நீங்க என்ன பண்றிங்க..?? Chottu இன்னைக்காவது வந்தானா…??” என்று கேட்டாள் அவள். இப்படியே அவர்கள் இருவரும் தொடர்ந்து phoneல் பேசிக் கொண்டிருந்தார்கள்.‌

‌டாக்டர் தனக்கு கொடுத்த மாத்திரைகளை போட்டுக் கொண்டு தன் தலையில் இருந்த capஐ முகத்தின் மீது போட்டுவிட்டு அப்படியே சீட்டின் பின்புறத்தில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த விஷ்வா அவள் நொடிக்கு நொடி பாட்டி பாட்டி என்று சொல்லிக் கொண்டே இருந்ததால், சட்டென கண் விழித்து நேராக அமர்ந்து அவளைப் பார்த்தான். அவன் முகத்தில் இருந்த cap கீழே விழுந்துவிட்டது. அவன் திடீரென அசைந்ததால் அவளும் அவனைப் பார்த்தாள். அவன் முகத்தை அவளால் காண முடிந்தது.
ஆனால் அவன் பார்க்கவே விசித்திரமாக இருந்ததால் அவன்தான் விஷ்வா என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் “இவன் ஆளு பார்க்க கொஞ்சம் ஒரு மார்க்கமா இருந்தாலும், என் கண்ணுக்கு என்னவோ அழகாதான் தெரியுறான். இவன கொஞ்சம் grooming எல்லாம் பண்ணி alter பண்ணா பாக்க செம handsomeஆ இருப்பான். இவன வச்சு photoshoot பண்ணா நல்லா இருக்குமே..‌‌ ஆனா அதுக்கு இந்த சிடுமூஞ்சிக்காரன் ஓகே சொல்லனுமே.. try பண்ணிதான் பார்ப்போமே..!! Let’s see what will happen.” என்று நினைத்தவள், “நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன் பாட்டி bye.” என்று சொல்லி அந்த அழைப்பை துண்டித்துவிட்டு விஷ்வாவைப் பார்த்தாள்.

அவனும் அவளையே பார்க்க, “என்ன மிஸ்டர்.. என்னவே இப்படி குறுகுறுன்னு பாக்கறீங்க..?? ஒரு பொண்ண அவ permission இல்லாம இப்படி எல்லாம் ரொம்ப நேரமா வச்ச கண் வாங்காம பாத்துட்டு இருக்க கூடாது. அது offence. தெரியாதா உங்களுக்கு..??” என்று கேட்ட அந்தப் பெண் தன் புருவங்களை உயர்த்தி அவனை பார்த்தாள். “நான் எதுக்குடி உன்னை பாக்கணும்..??” என்று நினைத்த **விஷ்வா** கீழே விழுந்து கிடந்த தனது capஐ எடுத்து மீண்டும் அணிந்து கொண்டு ஜன்னல் பக்கமாக திரும்பி அமர்ந்து கொண்டான்.

“யாரு சாமி நீ.. வாய தொறந்து எதுவுமே பேச மாட்டியா..??” என்று அவனைப் பார்த்து தனக்குள் கேட்டுக் கொண்டவள், “ஒருவேளை இவன் deaf and dumbஆ இருப்பானோ..??” என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அருகில் அமர்ந்து இருந்த மற்றொரு இளைஞன் அவள் மீது உரசியபடி “இப்படி எல்லாம் கூடவா மேடம் governmentல rules போடுறாங்க..?? ஒரு அழகான பொண்ண பாத்தா.. என்ன மாதிரி handsome boysக்கு அவள பாத்துக்கிட்டே இருக்கணும்னு தோணும். அப்போ அவளும் நம்மள பார்த்தா, கொஞ்சம் பேசி பார்த்தா என்னனு தோணும்.
பதிலுக்கு அவளும் ரெண்டு வார்த்தை பேசிட்டா, பழகி பார்க்கலாம்னு தோணும். பழக்கமும் ஆயிடுச்சின்னா, அப்புறம் என்ன..?? உடனே கசமுசா தான்.” என்று சொல்லிவிட்டு கண்களில் காம தீ கொழுந்துவிட்டு ஏரிய‌ அவளை பார்த்து ஈழித்து வைத்தான்.

அவன் இதுவரை பேசியதை எல்லாம் கேட்டு பத்ரகாளியாக மாறி இருந்த அந்த பெண் வெகுண்டெழுந்து அவன் சட்டையை பிடித்து இழுத்தவள் அவனை நிற்க வைத்து பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று விட்டு, “என்னடா சொன்ன… ஒரு பொண்ணு உங்கள பாத்துட்டா.. ஏதோ ரெண்டு வார்த்தை பேசிட்டா.. உங்கள நம்பி உங்க கூட பழகுனா.. உங்களுக்கு உடனே அவ கூட கசமுசா பண்ண தோணுமா..?? எப்படிடா தோணும்…?? எப்படி தோணும்..?? அப்ப உன்ன மாதிரி ஆம்பளைங்க எந்தப் பொன்னையும் ஒரு friendஆவோ, sisterஓவோ பாக்க மாட்டீங்க..
நீங்க இப்படி கீழ்த்தனமான புத்தியோட இருக்கிறதுனால நாங்க அய்யய்யோ நம்ம இப்படி நேரா roadஐ பார்த்து நிமிர்ந்து நடந்து போனா, oppositeல வர்றவன் நம்ம அவனைப் பார்க்கிறோமோன்னு தப்பா நினைச்சுக்குவானோ.. friendlyயா ஏதோ ரெண்டு வார்த்தை பேசிட்டா உடனே advantage எடுத்துக்குவானோன்னு பயந்து பயந்து வாழணுமா..?? ஆக மொத்தம் நீங்க எப்படி வேணா இருப்பீங்க. ஆனா நாங்க.. உங்கள பாத்து பயந்து வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சிக்கணுமா..?? மவனே இன்னொரு தடவ இப்படி எந்த பொண்ணுகிட்டயும் பேசணும்னு நினைக்கிறதுக்கு கூட உனக்கு தைரியம் வரக்கூடாது.” என்றவள் தொடர்ந்து, சரமாரியாக அவனை அடித்தாள்.

அங்கே பக்கத்து சீட்டில் தன் கணவனுடன் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணும் “நல்லா அடிமா. இவனுங்கள மாதிரி இருக்கிற ஒரு சில பசங்கனால தான், நமக்கு எந்த பசங்கள பார்த்தாலும் பயமா இருக்கு. இவனுங்களுக்கு பொண்ணுங்கன்னா ரொம்ப சாதாரணமா தெரியுது.” என்று சொல்லி அவளை ஏற்றி விட, அங்கே இருந்த வேறு இரண்டு ஆண்களும் அவளுடன் சேர்ந்துக்கொண்டு heroism காட்ட அந்த இளைஞனை அடிக்க முன் வந்தார்கள்.

“ஐயையோ என்ன எல்லாரும் ஒன்னு கூடுறாங்க..!!” என்று நினைத்து பதறிய அந்த இளைஞன், “ஐயோ அக்கா சாரி.. இனிமே நான் என் girlfriendகிட்ட கூட இப்படி எல்லாம் பேச மாட்டேன்.” என்று பயந்த குரலில் சொல்லிவிட்டு தன் bagஐ தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடினான்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured