Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 219

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 219

by Thenaruvi Tamil Novels
7 views

அத்தியாயம் 219

இரவு முழுவதும் தேன்மொழியின் அருகாமையில் சுகமாக உறங்கிக் கொண்டு இருந்த அர்ஜுன் அவள் எழுந்து சென்றவுடன் தன் கண்களை கூட திறக்க முடியாமல் அரை தூக்கத்தில் ஒற்றை கையால் பெட்டில் அப்படியும் இப்படியும் தடவி அவளை தேடினான்.  அவனது கைகளுக்கு அவள் கிடைக்காததால் சட்டென தன் கண்களை திறந்து பார்த்தான்.

அவனுக்கு அருகில் கொஞ்சம் கேப் விட்டு ஆருத்ரா உறங்கிக் கொண்டு இருந்தாள். “அதுக்குள்ள அவ எங்க போனா? ஒருவேளை ரெஸ்ட் ரூம்ல இருப்பாளோ!” என்று யோசித்த அர்ஜுன் தன் கண்களை தேய்த்தவாறு  எழுந்து அமர்ந்தான். அவனது உடலில் யாரோ பத்து பேர் சேர்ந்து அவனை அடித்து போட்டதை போல ஒரு கடும் வலியை உணர்ந்தான் அர்ஜூன். இத்தனை நாட்களாக அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவு அது.

அப்போதும் அவனுக்கு உடனே சென்று தனது ஹனி பேபியை பார்க்க வேண்டும் என்று நான் தோன்றியது. அதனால் எழுந்து ரெஸ்ட் ரூம் பக்கம் சென்று பார்த்தான். அங்கே யாரும் இல்லாததால் “இப்ப தான் பொழுதே விடிஞ்சிருக்கு. அதுக்குள்ள எங்க போன இவ?” என்று யோசித்தபடி அந்த ரூமில் இருந்து வெளியே சென்ற அர்ஜுன் இதற்கு முன் அவனும் தேன்மொழியும் தங்கியிருந்த ரூமிற்கு சென்று பார்த்தான்.

அங்கேயும் அவள் இல்லாததால் அவளை தேடிக் கொண்டு அங்கேயும் இங்கேயும் சுற்றித் திரிந்த அர்ஜுன் மகேஷ் வெளியில் செல்வதை பார்த்துவிட்டு அவனைப் பிடித்து நிறுத்தி “நீ தேன்மொழியை பாத்தியா?” என்று கேட்டான். ஏதோ பேயை பார்த்ததை போல அவனை ஆச்சரியமாக பார்த்த மகேஷ் “என்ன நடக்குது இங்க? மகா சொன்ன மாதிரி அர்ஜுன் சார் அதுக்குள்ள கிளம்பி தேன்மொழிக்காக வந்துட்டாரா? இப்போ இது எல்லாத்தையும் பார்க்கும்போது சியா மேடமை லவ் பண்ணதை விட இவர் தேன்மொழியை ரொம்ப லவ் பண்ற மாதிரி தெரியுது. எப்படியோ இவங்க ரெண்டு பேரும் ஹாப்பியா இருந்தா சரி தான்.” என்று நினைத்தவன், “குட் மார்னிங் chief! தேன்மொழி மேடம் விஜயா மேடம் இருக்கிற ரூம் பக்கம் போறதை இப்ப தான் நான் பாத்தேன். நீங்க வேணும்னா அங்க போய் பாருங்களேன்!” என்றான்.

“ம்ம்.. சரி நீ போ நான் பாத்துக்குறேன்!” என்ற அர்ஜுன் விஜயாவின் ரூமை நோக்கி நடந்தான். தன் மகளுக்கு பிடித்தவாறு ருசியான உணவுகளை சமைக்க வேண்டும் என்று நினைத்த விஜயா கிச்சன் பக்கம் சென்று விட, சக்தி தூங்கிக் கொண்டு இருந்ததால் அவன் எழுந்து கொள்வதற்கு குளித்து ரெடியாகிவிடலாம் என்று நினைத்த தேன்மொழி அவளது ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.

அவளை பார்த்தபடி உள்ளே சென்ற அர்ஜுன் அவள் வேறு புறமாக திரும்பி நின்று வேலை பார்த்துக் கொண்டு இருந்ததால் அப்படியே பின்னே இருந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு “ஐ அம் சாரி டி‌. நீ என் மேல கோபப்படுறது நியாயம் தான். பட் ப்ளீஸ் அதுக்காக என்ன விட்டு தூரமா போகணும்னு நினைக்காத. என்னால நீ இல்லாம இருக்க முடியலடி.” என்று உடைந்த குரலில் சொன்னான்.

அவன் பேச பேச எமோஷனலான தேன்மொழி அவன் பேசி முடிக்கும் போது வந்த ஆத்திரத்தில் அவன் கையை தன் மீது இருந்து எடுத்துவிட்டு அவசரமாக அவன் பக்கம் திரும்பி அவனது மார்பில் கை வைத்து தனது ஒட்டுமொத்த பலத்தையும் கொண்டு அவனை தள்ளி “இனிமே என் பக்கத்துல வர வேலை வச்சுக்காத!” என்று அவனை எச்சரிக்கும் தோரணையில் சொன்னாள்.

அவள் அவ்வளவு சீக்கிரமாக தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள மாட்டாள் என அர்ஜுனுக்கும் ஏற்கனவே தெரியும் என்றாலும் அவள் அப்படி சொல்லும் போது அவன் இதயம் வலித்தது. “ப்ளீஸ் ஹனி.. இந்த ஒரே ஒரு தடவை மட்டும் என்ன மன்னிச்சிடு. இதுக்கப்புறம் இந்த மாதிரி நடக்காம நான் பாத்துக்கிறேன். இந்த மாதிரி எல்லாம் தப்பா நடக்கும்னு எனக்கு மட்டும் எப்படி தெரியும்? நான் எல்லாமே ரெடியா தான் வச்சிருந்தேன். அப்பயும் என்ன மீறி இப்படி நடந்துருச்சுடி. ஐ ப்ராமிஸ்.. இனிமே எப்பயும் இந்த மாதிரி நடக்காது. கண்டிப்பா உன்கிட்ட சொல்லாம நான் எதுவும் பண்ண மாட்டேன்.” என்று கெஞ்சும் குரலில் சொன்ன அர்ஜுன் அவள் கையை பிடிக்க சென்றான்.

“வேண்டாம். Don’t touch me!” என்ற தேன்மொழி இரண்டடி பின்னே சென்று நின்று கொண்டு கோபத்தில் சிவந்த கண்களுடன் அவனைப் பார்த்தாள். அவளையும் மீறி அவள் கண்கள் அப்போது கலங்க, இந்த அளவிற்கு தான் அவளை கஷ்டப்படுத்தி இருக்கக் கூடாது என நினைத்து கில்ட்டியாக உணர்ந்த அர்ஜுன் “ஐயோ ப்ளீஸ் தேன்மொழி என்ன படுத்தாதடி. சத்தியமா என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல. நீயே சொல்லு.. நான் என்ன பண்ண நடந்தது எல்லாத்தையும் மறந்து மன்னிச்சி நீ என்னை ஏத்துக்குவ? எதுவா இருந்தாலும் நான் கண்டிப்பா செய்றேன். I swaer! Please trust me.” என்றான்.

அவன் பேச பேச தேன்மொழியின் கோபம் தான் அதிகரித்தது. வேகமாக அவன் அருகில் சென்று அவனது சட்டையை தனது இரண்டு கைகளாலும் இறுக்கி பிடித்துக் கொண்டு அவனை தனக்கு அருகில் இழுத்த தேன்மொழி “எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு இப்படி எல்லாம் வந்து நீ என் கிட்ட பேசிட்டு இருக்க அர்ஜுன்? என்ன சொன்ன இப்ப.. இனிமே இப்படி எல்லாம் நடக்காதுன்னு நீ எனக்கு ப்ராமிஸ் பண்றியா? உன்னோட ப்ராமிஸ்க்கு எல்லாம் ஏதாச்சும் வேல்யூ இருக்கா என்ன? அப்படி ஒன்னும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலையே..

நீ செகண்ட் டைம் நம்ம மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி நடந்தது எல்லாத்தையும் சொல்லி என் கிட்ட ப்ரொபோஸ் பண்ணும் போது எனக்கு உன்ன பாத்தாலே எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா? இப்படி ஒருத்தன் கூட எப்படி நம்மளால வாழ முடியும்ன்னு தான் எனக்கு தோணுச்சு. பட் அப்ப கூட நான் உன்னை விட்டு போகணும்னு நினைக்கவே இல்ல.

நீ என்னை எவ்வளவு தூரம் ஹர்ட் பண்ணாலும் அகைன் அண்ட் அகைன் நான் உன்ன தான் சூஸ் பண்ணேன். பட் எனக்காக நீ என்ன பண்ண அர்ஜுன்? எனக்கு பண்ணி கொடுத்த பிராமிசை பிரேக் பண்ணிட்ட.. இனிமே இந்த மாதிரியான வேலையை எல்லாம் பண்ண மாட்டேன்.. பிசினஸ்ல மட்டும் போக்கஸ் பண்றேனு நீ எனக்கு பிராமிஸ் பண்ணி குடுத்தியா இல்லையா?” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தி கேட்டாள்.

அவளுக்கு அவன் மீது எந்த அளவிற்கு கோபம் இருக்கிறதோ அதைவிட அதிகமாக அவனால் அவள் மனதில் ஏற்பட்ட காயம் அவளை வாட்டி வதைத்ததால் அவளையும் மீறி அவளது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அவள் கேட்பதைப் போல இனி தான் இந்த மாதிரியான எந்த இல்லீகள் வேளையிலும் ஈடுபட மாட்டேன் என அர்ஜுன் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தான் தான். ஆனால் அந்த நொடியில் இருந்து இன்று வரையிலும் அதை அவன் ஒரு நாள் கூட காப்பாற்றியது இல்லை.

அதனால் அவள் கேட்கும் கேள்வி நியாயமானது தான் என நினைத்து அர்ஜுன் எதுவும் பேச முடியாமல் சைலண்டாகவே இருக்க, “இவ்ளோ நேரம் பெரிய இவன் மாதிரி டயலாக் பேசிட்டு இருந்தில டா.. இப்ப பேசு.‌ உன் வாயில என்னத்த வச்சிருக்க? உனக்கு வாய திறந்து பேச தெரியாதா? நான் இப்ப உன் கிட்ட பேசாம இருக்க தானே உனக்கு பிரச்சனை.. இப்ப தான் நான் பேசுறேன்ல.. பதிலுக்கு நீயும் பேசு! எதுக்கு இப்படி சைலன்டா இருக்க?” என்று கேட்ட தேன்மொழி அவனது சட்டையை விட்டுவிட்டு அவனை அலட்சியமாக பார்த்தாள்.

அப்போதும் அர்ஜுன் அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாகவே இருந்தான். அவனது மௌனம் இன்னும் அவளை கோபப்படுத்த, “என்ன மிஸ்டர் அர்ஜுன் உங்களால வாய தொறந்து பேச முடியலையா? எப்படி பேசுவீங்க? உங்க பக்கம் சொல்றதுக்குன்னு நியாயமா ஏதாவது இருந்தா தானே உங்களால் பேச முடியும்.. உன்னால நானும் என் பிள்ளைங்களும் செத்துப் பொழச்சி வந்திருக்கிறோம் அர்ஜுன்!

கிளாரா மட்டும் நடுவுல வரலன்னா இந்நேரம் எங்கள யாராவது ஒருத்தர் செத்து போயிருப்போம். சக்தியை  டெலிவர் பண்றதுக்குள்ள நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உனக்கு தெரியுமா? நடந்த பிரச்சனையில அவனுக்கு எதாவது ஆகியிருந்தா உன்னால என் பையனை எனக்கு திருப்பி தர முடியுமா? சொல்லு அர்ஜுன் முடியுமா?

உனக்கு… இன்னொன்னு தெரியுமா? இந்த கையால.. என்னோட இந்த கையால நான் ஒருத்தனை கொலை பண்ணி இருக்கேன். லிட்டரலி நான் இப்ப கொலைக்காரி. உன்னை கல்யாணம் பண்ணதுக்கு என்னை எங்க கொண்டு வந்து நிறுத்தி வச்சு இருக்கேன்னு பாரு அர்ஜூன்.. உனக்கு இப்ப சந்தோஷமா இருக்கா?

அப்படி என்ன நான் உன் கிட்ட கேட்டுட்டேன்? எனக்கு இவ்ளோ லக்சரியான லைப் வேணும்னு சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நான் ஒரு செகண்ட் கூட நினைச்சு பார்த்தது கூட இல்ல. இது எல்லாம் எனக்கு தேவையுமே இல்லை. நான், என் ஹஸ்பண்ட், என்னோட குழந்தைங்கன்னு ஒரு சேஃப் அண்ட் ஹேப்பியான லைஃப் வாழனும்னு தான் ஆசைப்பட்டேன்.

அதைக் கூட உன்னால குடுக்க முடியாதுன்னா நீ எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட? உன் கூட இருக்கிறதுனால எப்ப யாருக்கு என்ன ஆகுமோன்னு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டே வாழணுமா? வெளிய போனா தான் ஆபத்துன்னு பாத்தா, நீ இருக்கிற இடம் வீடா இருந்தா கூட அங்க நிம்மதியா பாதுகாப்பா இருக்க முடியுதா எங்களால?

இந்த மாதிரி இம்சையை எல்லாம் என்னால லைஃப் லாங் அனுபவிச்சிட்டு இருக்க முடியாதுன்னு தான் அன்னைக்கே நான் உன் கிட்ட அத்தனை தடவ இது எல்லாத்தையும் விட்டுடு விட்டுடு கெஞ்சினேன். பட் ஒரு செகண்ட் கூட நீ என்ன பத்தி யோசிச்சு பாக்கல இல்ல? சரி எங்களை விடு முதல்ல உன்னை பத்தி யோசிச்சியா?

உனக்காக உன்னை நம்பி இத்தனை பேர் இருக்கும்போது இவங்க எல்லாரையும் தாண்டி உன்னால அப்படி ஒரு ரிஸ்கை எப்படிடா எடுக்க முடிஞ்சது? உனக்கு ஏதாவது ஆகி இருந்தா.. அதை எங்களால தாங்க முடியுமா? மத்தவங்கள விடு.. நான் என்ன பண்ணுவேன்? எனக்கு என் ஹஸ்பண்ட் வேணும்னு நான் நினைக்கிறது தப்பா அர்ஜுன்? சொல்லு வாயை திறந்து ஏதாவது பேசித் தொலை!” என்று கத்தி கேட்டுவிட்டு முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதாள்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured