அத்தியாயம் 218
காலை பொழுது அழகாக விடிந்தது. கதிரவனின் இளம் கதிர்கள் ஜன்னல் வழியாக வந்ததை வைத்து தூக்கத்தில் இருந்து கண் விழித்த மகா அவளுக்கு அருகில் படுத்திருந்த அவ்வளவு கணவன் மகேஷை “மாமா பொழுது விடிஞ்சிடுச்சு மாமா.. இன்னும் என்ன தூக்கம்? எந்திரிங்க.. கிடைக்குதல்ல போய் பார்க்கணும்!” என்று சொல்லி எழுப்பி விட்டாள்.
“அட நானே என்னைக்காவது தான் நானே தூக்கம் வந்து கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்குறேன். உனக்கு அது புடிக்கலையாடி? எதுக்கு அதுக்குள்ள என்னை எழுப்பி விட்டு டார்ச்சர் பண்ற?” என்று சலிப்புடன் அரை தூக்கத்தில் கேட்ட மகேஷ் எப்படியும் இதற்கு மேல் அவனுக்கு இனி தூக்கம் வராது என்பதால் எழுந்து அமர்ந்தான்.
உடனே அவனை ஒட்டிக் கொண்டு சென்று அவனது மடியில் படுத்தபடி அவனை கட்டிப் பிடித்துக் கொண்ட மகா “என்ன மாமா கடைசியில இப்படி ஆகிப்போச்சு!” என்று சோர்வான குரலில் சொல்ல, அவளை இன்னும் தன் பக்கம் இழுத்த மகேஷ் “அப்படி என்ன நடந்துச்சு இப்ப? எதுக்கு நீ இப்படி சலிச்சிக்கிற?” என்று கேட்டான்.
“இன்னும் என்ன நடக்கணும்? நான் பொறந்து வளர்ந்ததுல இருந்து இந்த சென்னைக்குள்ளேயே இருந்துட்டேன் . உங்கள கல்யாணம் பண்ணி வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகலாம்னு பார்த்தேன். எங்க அப்பா அப்படி சொல்லி தான் உங்கள எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு. நாமளும் கல்யாணம் முடிஞ்சு உடனே ரஷ்யாவுக்கு போனோம். அப்புறம் பாரிஸ் போனோம். என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் நான் போட்ட ஸ்டேட்டஸை பாத்துட்டு பரவாலடி உனக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. இப்படி பத்து பைசா செலவு இல்லாம நீயும் உன் ஹஸ்பண்டும் ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கு எல்லாம் போறீங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க.. இப்ப தேன்மொழி மேடம் இந்தியா போகணும்னு சொல்லி மறுபடியும் இங்கயே வந்துட்டாங்க. மறுபடியும் அவங்க ரஷ்யா போவாங்களோ மாட்டாங்களோ தெரியல.. அவங்க இங்கயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டா, புது ஆளுங்க அவங்க கூட இருக்கிறது பாதுகாப்பு இல்லைன்னு நம்மளையும் இங்க தான் இருக்க சொல்லுவாங்க.. மறுபடியும் என் வாழ்க்கை இப்படி சென்னைக்குள்ளேயே முடிஞ்சு போகப்போகுதுன்னு நினைச்சாலே எனக்கு கவலையா இருக்கு மாமா! என்னத்த சொல்ல! என் ஆசையெல்லாம் அப்படியே பகல் கனவா போயிடுச்சு.” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டாள் மகா.
அவள் பேச பேச அவளை ஆச்சரியமாக பார்த்த மகேஷ் “ஏண்டி எவ்ளோ நடந்திருக்கு.. கஷ்டப்பட்டு எல்லாரும் உயிர் பொழச்சு வந்திருக்காங்க.. இந்த நேரத்துல உனக்கு வெளிநாட்டுக்கு போக முடியலைன்றது தான் வருத்தமா இருக்கா? அன்னைக்கு அப்படி நடந்ததில இருந்து தேன்மொழி அர்ஜுன் சார் கிட்ட பேசவே இல்ல. நானே அவ வாழ்க்கை என்ன ஆகுமோன்னு நெனச்சு கவலையில இருக்கேன். இப்ப உனக்கு உன் கவலை தான் பெருசா இருக்கு இல்ல!” என்று கேட்க, “ஆமா ஆமா ரொம்ப தான்!” என்று சொல்லிவிட்டு தனது உதட்டை சுழித்த மகா “என்னை ஏதாச்சும் சொல்றது நான் மட்டும் உங்களுக்கு அப்படியே குளுகுளுன்னு இருக்குமே.. எனக்கு முன்னாடில இருந்தே அவங்க ரெண்டு பேரையும் நீங்க தான் பாக்குறீங்களே.. அவங்கள பத்தி உங்களுக்கு தெரியாதா? அதெல்லாம் தேன்மொழி மேடம் எவ்வளவு கோபமா இருந்தாலும் அர்ஜுன் சார் அவர்களை ஈஸியா சமாதானப்படுத்திடுவாரு. என்ன ஆனாலும் எவ்வளவு நாள் ஆனாலும் அவர் அவங்களை தனியா இங்க விட்டுட்டு இருக்கவே மாட்டாரு. அவங்க ரெண்டு பேரும் எப்படியும் சீக்கிரம் சேர்ந்துவிடுவார்கள் எனக்கு அதுல எல்லாம் எந்த டவுட்டும் இல்ல. அதான் மறுபடியும் வெளிநாட்டுக்கு போக முடியலயேன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றாள்.
அவள் சொல்வதும் சரி தான் என்று நினைத்த மகேஷ் “சரி அவங்க கதையை விடு நாம கதைக்கு வருவோமா? லாஸ்ட் 10 டேசாவே எப்பயும் ரொம்ப சீரியஸா இருந்து ஒரே கடுப்பா இருக்குடி. இனிமே ஐயா ஃபுல் ரொமான்டிக் மூட்ல தான் இருக்க போறேன். நீ எல்லாத்துக்கும் ரெடியா இரு.” என்று சொல்லிவிட்டு தனது ஆள்காட்டி விரலால் அவனது மடியில் படுத்து இருந்த மகாலட்சுமியின் இதழ்களை வருடி அவளது கீழ் உதட்டை தனது இரண்டு விரல்களால் பிடித்து இழுத்தான்.
அப்போதுதான் தான் அவனிடம் வந்து வசமாக சிக்கிக் கொண்டதை உணர்ந்த மகாலட்சுமி “அய்யய்யோ பொழுது விடிஞ்சு போச்சு இப்ப என்ன பண்றீங்க? என்ன விடுங்க!” என்று அவசரமான குரலில் சொல்லிவிட்டு அவனை விட்டு விலக முயற்சி செய்ய, அவளது இடுப்பை வளைத்து பிடித்து அவளை அசைய விடாமல் செய்த மகேஷ் அவளை கட்டிலில் தள்ளி அவள் மீது பாய்ந்து தனது இதழ்களை அவளது இதழ்களின் மீது பொருத்தினான்.
“ம்ம்.. ம்ம்... என்னை விடுங்க மாமா வேலை கிடக்குது! பெரியம்மா தேடுவாங்க!” என்று மூச்சு வாங்க தாழ்ந்த குரலில் சொன்ன மகா சுவாசத்திற்கு திணற, “ஆஹான்.. இவ்ளோ சீக்கிரமா என்னை எழுப்பி விட்டில.. இன்னைக்கு நீ லேட்டா போய் உங்க பெரியம்மா கிட்ட திட்டு வாங்கு. இதுதான் நான் உனக்கு கொடுக்கிற பனிஷ்மென்ட்.” என்ற மகேஷ் அவள் மீது படர்ந்தான்.
விடியற்காலை நேரத்தில் குழந்தை அழுததால் எழுந்த விஜயா அர்ஜுன் தேன்மொழிக்கு அருகில் வந்து படுத்திருப்பதை பார்த்துவிட்டு “மாப்பிள்ளை நம்ம பொண்ண விட்டு இருக்க முடியாம மறுபடியும் இந்தியாவுக்கே கிளம்பி வந்துட்டாரு போல இருக்கு.. அவங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். அவங்களுக்கு நடுவுல குழந்தை இருக்க வேண்டாம். இன்னைக்கு முழுசா நாமலே இவனை பாத்துக்கலாம்.” என்று நினைத்து சக்தியை தூக்கிக் கொண்டு தனது ரூமிற்கு சென்று விட்டாள்.
அதனால் குழந்தையின் அழுகுரல் இல்லாமல் அங்கே இருந்தவர்கள் அனைவரும் நிம்மதியாக படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார்கள். தூக்கம் தெளிந்து கண் விழித்த தேன்மொழி தனது முகத்தின் மீது ஏதோ குத்துவதைப் போல உணர்ந்தாள். அதனால் முழுவதாக அவள் தன் கண்களை திறந்து திடுக்கிட்டு தன் தலையை உயர்த்தி பார்க்க, இவ்வளவு நேரமாக அவள் வசதியாக அர்ஜுனின் வெற்று மார்பில் தலை வைத்து நிம்மதியாக படுத்து உறங்கி இருந்திருக்கிறாள் என இப்போது தான் அவளுக்கு புரிந்தது.
“இவன் எப்ப இங்க வந்தான்?” என்று யோசித்த தேன்மொழி அர்ஜுனின் வெளி போயிருந்த முகத்தைக் கண்டாள். அவன் சரியாக தூங்காததால் அவனது கண்களுக்கு கீழே கருவளையம் வந்திருக்க, அவனது சவரம் செய்யப்படாத தாடி பெரிதாக வளர்ந்து இருந்தது. எப்போதும் ட்ரிம் செய்யப்பட்டு கச்சிதமாக இருக்கும் அவனது மீசை கூட இப்போது ஏதோ கிராமத்தான் போல பெரிதாக புதர் போல வளர்ந்து கிடந்தது.
அவனது தலைமுடி அவனது சோல்டர் வரை பரவி கிடக்க, பார்ப்பதற்கு அவன் மிகவும் சோர்வானவனாக தெரிந்தாலும் அப்போதிலும் ஹிந்தி ஆக்டர் போல அவன் க handsomeமாகவே இருந்தான். ஒரு நொடி அவள் அவனது நிலையைக் கண்டு வருத்தப்பட்டாலும், அடுத்த நொடி அவளுடைய கண்கள் அவனது கவர்ச்சியான கட்டுடலை பார்வையால் பருகியது. அவனது பழக்கப்பட்ட ஆண்மை பொருத்திய வாசனை இதுவரை அவளுக்குள் இருந்த மன குமுறல்கள் அனைத்தையும் மயில் இறகால் வருடி மென்மையாக ஆற்றுவதைப் போல அவளுக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது.
அதேசமயம் அவளுக்கு அவனால் அவள் அனுபவித்த அத்தனை துன்பங்களும் ஏதோ படம் போல கண் முன்னே வந்து செல்ல, அது அத்தனை நேரம் அவனை ஆசையுடன் பார்த்துக் கொண்டு இருந்த அவள் முகத்தை வேதனையில் இறுக்கியது. அங்கே தனக்கு அருகில் ஆருத்ரா படுத்து இருப்பதையும் சித்தார்த் இன்னும் தூங்கிக் கொண்டு இருப்பதையும் கவனித்த தேன்மொழி “சம்டைம்ஸ் உன்ன மாதிரி ஒருத்தன் என் லைஃப்ல வராம இருந்திருந்தா நான் ஒரு நிம்மதியான நார்மல் லைஃப்ல சந்தோஷமா இருந்து இருப்பேன்னு தோணுது அர்ஜூன்.” என்று நினைத்தவள், தனது கண்களின் ஓரமாக வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு தன்மீது இருந்த அவனது கையை வெடுக்கென எடுத்துவிட்டு அவசரமாக கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள்.
பின் அவளது கண்கள் முதலில் சக்தியை தான் தேடியது. அங்கே சக்தி விஜய்யா இருவருமே இல்லாததால், “அம்மா அவனை அவங்க ரூமுக்கு தூக்கிட்டு போய்ட்டாங்க போல!” என்று நினைத்த தேன்மொழி நேராக விஜயாவின் ரூமிற்கு சென்றாள்.
மீண்டும் வருவாள் 💕