Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 173

மூர்கனின் காதலி CH 173

by Thenaruvi Tamil Novels
25 views

அத்தியாயம் 173

காளீஸ்வரன் ஆறுதல் சொல்வதற்காக விஷ்வாவின் அருகில் செல்ல, அதுவரை உணர்ச்சிகள் இன்றி சிலை போல அப்படியே நின்று கொண்டிருந்த விஷ்வா தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தான்

அதனால் ஷாக்காகி அவர் “டாக்டர்.. டாக்டர்..!!” என்று கத்த, அடுத்தடுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக ஏதாவது தவறாக நடந்து கொண்டே இருந்ததால், யாருக்கு என்னாகுமோ என்று நினைத்து அனைவரும் பயத்தின் உச்சத்திற்கே சென்றார்கள். பயந்து போய் ஆபீஸில் இருந்து அடித்துப் பிடித்தது ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்திருந்த மகேஷ்,

மற்றவர்களுடன் சேர்ந்து உடனே அவர்கள் இருந்த அதே ICU wardல் விஷ்வாவையும் admit செய்யச் சொன்னான்.‌ அங்கே அடுத்தடுத்த அறையில் விஷ்வா, மேகா, சௌபர்ணிகா என அனைவருக்கும் treatment நடந்து கொண்டிருந்தது.
முதலில் மேகா அட்மிட் செய்யப்பட்டிருந்த ரூமில் இருந்து வெளியே வந்த டாக்டர் “இவங்களுக்கு பெருசா எதுவும் இல்ல. நீங்க சொன்ன மாதிரி பயத்துல தான் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. நாங்க check பண்ணதுல அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்கன்னு தெரிஞ்சது. அதனால trips போட்டு விட்டிருக்கோம். அது முடிஞ்ச உடனே, அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சுன்னா நீங்க அவங்கள தாராளமா உடனே discharge பண்ணி கூட்டிட்டு போயிடலாம்.” என்று சொல்லிவிட்டு சென்றார்.

அவரைத் தொடர்ந்து சௌபர்ணிகாவின் ரூமில் இருந்து வெளியே வந்த டாக்டர் “patientஓட condition கொஞ்சம் criticalஆ தான் இருக்கு. Already அவங்க ரொம்ப weakஆ இருந்திருக்காங்க. இதுல heavy blood lossஆகி அவங்க health condition இன்னும் மோசமாயிடுச்சு. And அவங்க baby..!!” என்று ஏதோ சொல்ல வர, “சீக்கிரம் சொல்லுங்க டாக்டர். என் குழந்தைக்கு என்ன ஆச்சு..??” என்று அவசரமான குரலில் கேட்டான் சேரன்.

“சாரி மிஸ்டர் சேரன். உங்க குழந்தைய எங்களால காப்பாத்த முடியல. இப்போ நாங்க உங்க wifeஐ காப்பாத்த தான் போராடிட்டு இருக்கோம். உடனே அவங்களுக்கு blood ஏத்தி ஆகணும்.‌ நாங்க blood bankல கேட்டு இருக்கோம். இருந்தாலும், delay பண்ணாம உங்க sideலயும் நீங்க arrange பண்ண try பண்ணுங்க.” என்று டாக்டர் சொல்ல, அவன் குழந்தை இப்போது உயிருடன் இல்லை என்று கேள்விப்பட்ட உடனேயே சேரனின் முகம் மாறிவிட்டது.

“என் குழந்தையே இல்ல.. இதுக்கு மேல அவ இருந்தா என்ன.. செத்தா எனக்கு என்ன..?? கொஞ்சம் கூட குழந்தையை மேல அக்கறை இல்லாம பொறுப்பா என் குழந்தை ஏன் பாத்துக்காம.. அந்த செத்துப்போன கிழவியை நினைச்சு feel பண்ணிட்டு இருந்துட்டு அநியாயமா என் குழந்தைய கொன்ன கொலைக்காரி அவ.” என்று நினைத்த சேரன் அமைதியாகவே இருக்க, “இங்க என் friends நிறைய பேர் இருக்காங்க டாக்டர். அக்கா என்ன blood groupன்னு மட்டும் சொல்லுங்க. நான் உடனே அவங்களுக்கு blood arrange பண்ணி கொடுக்கிறேன்.” என்று சொன்னான் ரிஷி. “ஓகே சார். Labல இருந்து report வரட்டும்.‌ நான் பாத்து சொல்றேன்.” என்ற டாக்டர் மீண்டும் சௌபர்ணிகா இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

தொடர்ந்து அவளுக்கும், விஷ்வாவிற்கும் treatment போய்க்கொண்டிருந்தது.‌ கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கழித்து விஷ்வாவின் ரூமில் இருந்து வெளியே வந்த டாக்டர் “மிஸ்டர் விஷ்வா ரொம்ப நாளாவே extreme depressionல இருந்திருக்காரு. அதான் அவரோட family membersஓட health condition மோசமானத அவரால தாங்க முடியாம அவருக்கு mild heart attack வந்திருக்கு. Luckily அவர் ஹாஸ்பிடல்ல இருக்கும்போதே இது நடந்ததுனால, உடனே அவருக்கு treatment கொடுத்து அவரை காப்பாத்தியாச்சு. Again அவருக்கு heart attack வந்துச்சுன்னா, operation பண்ணா மட்டும்தான் அவர காப்பாற்ற முடியும். அதுவும் அவரை on timeல hospitalல admit பண்ணா மட்டும்தான் possible.
So இனிமே அவர் எதுக்கும் stress ஆகாம பாத்துக்கோங்க. நீங்க அவரை சந்தோஷமா வச்சுக்கிற வரைக்கும் தான், அவர் உயிருக்கு guarantee. அவருக்கு நிறைய Medicines கொடுத்திருக்கிறதுனால இப்ப அவர் மயக்கத்துல இருக்காரு. மயக்கம் தெளிஞ்ச உடனே அவர நீங்க discharge பண்ணி கூட்டிட்டு போயிடலாம்.” என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

இப்போது ஹாஸ்பிடலில் இருக்கும் இவர்கள் மூவரையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு மற்றவர்களிடம் இருக்கிறது என்பதால், அனைவரும் அவர்களை நினைத்து சோகத்தில் ஆழ்ந்தார்கள்.‌ மயக்கம் தெளிந்து எழுந்து வந்த மேகா, விஷ்வாவும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருப்பது தெரிந்து இன்னும் சோகமானாள். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவளுக்கு துணையாக அவளுடன் அவளது குடும்பம் இருந்தது. அங்கே நடந்த அனைத்தையும் காளீஸ்வரன் மூலமாக கேட்டு தெரிந்து கொண்ட முத்து உடனே சென்னைக்கு கிளம்பினான்.

இரண்டு நாட்களுக்கு பிறகு..
சௌபர்ணிகா, விஷ்வா இருவருமே ஹாஸ்பிடலில் இருந்து discharge ஆகி வீட்டுக்கு வந்திருந்தார்கள். மேகாவை அப்படியே விட்டுச் செல்ல மனம் வராமல் காளீஸ்வரனும் மற்றவர்களும் அங்கேயே தங்கிவிட, சேரன் சௌபர்ணிகாவை புறக்கணிப்பதை கண்கூடாக கண்ட முத்து “உனக்கு பிடிச்சவன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா இருக்கன்னு நினைச்சனேடி.. உனக்கு ஏன் இந்த நிலைமை..?? உனக்கு வாய்ச்ச புருஷனும் சரி இல்ல. இப்ப குழந்தையும் இல்லாம போயிடுச்சு. இத நீ எப்படி தாங்குவ..?? இப்பவே உன்கிட்ட வந்து உனக்கு நான் இருக்கேன் சௌபரணிக்கான்னு சொல்லனும் போல இருக்கு. ஆனா என்னால எப்படி அத சொல்ல முடியும்..?? கஷ்டமா இருக்குடி. இங்க உன் பக்கத்திலயே இருந்து நீ படுற கஷ்டத்தை எல்லாம் பார்க்கும் போது, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா அதுக்காக உன்னை இங்க இப்படி விட்டுட்டு என்னால போகவும் முடியல.” என்று நினைத்து யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள் கண்ணீர் சிந்தி கொண்டிருந்தான்.

பாட்டி இறந்த பிறகு ஓரளவிற்கு சரியாகி மேகாவிடம் நான்கு வார்த்தைகள் பேசிய விஷ்வா, ஹாஸ்பிடலில் இருந்து வந்தவுடன் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் முற்றிலுமாக அனைவரையும் புறக்கணித்து விட்டான். ஆனால் மேகா அடிக்கடி “நீ சாப்பிடலைன்னா நானும் சாப்பிட மாட்டேன். நான் இப்படியே பட்டினி கிடந்து சாகணும்னு நீ நெனச்சா.. நம்ம ரெண்டு பேரும் இப்படியே இருக்கலாம். நீயும் சாப்பிடாத நானும் சாப்பிடல.” என்று சொல்லி அவனை blackmail செய்ததால் வேறு வழியில்லாமல் பிடித்திருக்கிறதோ இல்லையோ நேரா நேரத்திற்கு அவளுடன் சேர்ந்து சரியாக சாப்பிட்டான் விஷ்வா.

பாட்டி இறந்த துக்கத்தில் இருந்தே இன்னும் மீண்டு வந்திருக்காத சௌபர்ணிகா முன்பாவது சேரனின் அரவணைப்பால் கொஞ்சம் விஷ்வா அளவிற்கு இல்லாமல் நார்மலாக இருந்தாள்.

ஆனால் இப்போது அவன் தன் குழந்தையை சௌபர்ணிகா தான் கொன்றுவிட்டாள் என்று நினைத்து “ஏண்டி என் குழந்தையை கொன்ன..?? சரியான சூனியக்காரி டி நீ. நான் கெட்டவன் தான். ஆனா உன்ன மாதிரி சொந்த குழந்தையை‌ கொல்ற அளவுக்கு நான் கெட்டவன் இல்லடி. நல்லவ மாதிரி நடிச்சு என்னை ஏமாத்தி என் குழந்தைய கொன்னுட்டல்ல.. உன்ன சும்மா விட மாட்டேன் டி. இதுக்கெல்லாம் நீ கண்டிப்பா அனுபவிப்ப.” என்று மீண்டும் தனது உண்மை சுயரூபத்திற்கு சென்று அவளை torture செய்ய தொடங்கி இருந்தான்.
மொத்தத்தில் இவர்களுக்கு நடுவில் மேகாவும் அவளது குடும்பத்தினரும் மாட்டிக் கொண்டு அவர்களை எப்படி சரி செய்வது என்றும் தெரியாமல், அவர்களை கண்டு கொள்ளாமல் விடவும் முடியாமல் இருதலைக் கொல்லி எறும்பாக திண்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்படியே இன்னும் இரண்டு நாட்கள் கடந்துவிட்டது. அதனால் மதுரைக்காரர்கள் அனைவரும் கிளம்பி தங்கள் ஊரை பார்த்து சென்றிருந்தார்கள்.

காலையில் தூங்கி எழுந்த மேகா தன் அருகில் விஷ்வா இல்லாததை கண்டு அதிர்ந்தாள். “எங்க போனான் இவன்..?? எப்பவும் நைட் sleeping pills போட்டா, morning lateஆ தானே தூங்கி எந்திரிப்பான்..!! அப்புறம் எனக்கு முன்னாடியே எந்திரிச்சு எங்க போயிருப்பான்..??” என்று நினைத்து குழம்பி தங்களது பெரிய மாளிகை முழுவதும் அவனை தேடி பார்த்தாள். விஷ்வா எங்கேயும் இல்லை. அதனால் பதட்டமடைந்த மேகா உடனே அவன் mobile phoneற்க்கு call செய்தாள். விஷ்வாவின் phone ring ஆகும் sound அந்த ரூமிற்குள் தான் கேட்டது. “இங்க தான் sound கேக்குது. பட் அவன் இங்க எங்கயுமே இல்லையே..!!” என்று நினைத்து குழம்பிய மேகா சுற்றி முற்றி அவனையும் அவன் mobile phoneஐயும் தேடினாள்.

Dressing tableன் மீது அவனது phone இருக்க, அதற்கு அடியில் ஒரு letter காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. நடுங்கிய கைகளுடன் அதை எடுத்து படிக்க தொடங்கினாள் மேகா.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured