Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 172

மூர்கனின் காதலி CH 172

by Thenaruvi Tamil Novels
23 views

அத்தியாயம் 172

கௌத்தம் சென்ற பிறகு கலங்கிய கண்களுடன் காளீஸ்வரனை பார்த்த மேகா “இப்பதான் உங்களுக்கு என் ஞாபகம் வந்துச்சா அண்ணா…??” என்று உடைந்த குரலில் கேட்க, “ஞாபகம் எல்லாம் எப்பயும் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன… நீ பண்ற சில விஷயங்கள் தான் சரியில்ல. அதான் சில இடத்துல மனச கல்லாக்கிகிட்டு உன்னை ஒதுக்கி வைக்க வேண்டியதா இருக்கு. மத்தபடி, உன்னை முழுசா தொலைச்சு தலை முழுகனும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்ல.‌ என் பேச்சைக் கேட்டு எல்லாரும் ஒழுங்கா இருந்தா, நானும் எல்லார்கிட்டயும் அன்பா, பாசமா இருப்பேன்.

ஆனா நம்ம பாத்து பாத்து வளத்த கெடாவே மாருல பாயும் போது என்ன பண்றது..?? குத்து வாங்கிட்டு அசிங்கப்பட்டு கீழே விழுந்து சாகவா முடியும்…??” என்று குத்தலாக கேட்டார் அவர்.
“ஐயோ உங்ககிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது அண்ணா. விடுங்க, உங்களுக்கு உங்க நியாயம். எங்களுக்கு எங்க நியாயம். என்ன பொறுத்த வரைக்கும் நீங்க எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் தான். ரொம்ப தூரம் travel பண்ணி வந்ததுல எல்லாரும் tiredஆ இருப்பீங்க. முதல்ல வந்து சாப்பிடுங்க.” என்று மேகா சொல்லிக் கொண்டு இருக்க, அப்போது தயாளனுடன் கீழே வந்தான் அரவிந்த்.

“பார்றா.. மீசை வந்து இருக்காரு.. வா.. நம்ம போய் நிலாவை அவர் உனக்கு ‌கல்யாணம் பண்ணி குடுப்பாரா மாட்டாரான்னு ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு வரலாம். அங்க மதுரையில நம்ம பாஸ் அவளை பொண்ணு கேட்டதுக்கு அப்படியே பாஞ்சு வந்து உன் நெஞ்சிலே மிதிச்சாருல்ல.. இது நம்ம ஏரியா. இங்க இவர் என்ன பண்றாருனு பார்த்திடலாம்.” என்ற தயாளன் அரவிந்தின் கையை பிடித்து இழுக்க, “டேய் சும்மா இருடா.. தேவையில்லாத வேலை பாக்குற நீ. ஏற்கனவே எல்லாரும் சோகமா ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில உட்கார்ந்து இருக்காங்க.‌ இதுல என் பேரை சொல்லி புது பிரச்சனையை இழுத்து விட பாக்குறியா நீ..??
மேகா மேல கோவமா இருந்த அவங்க அண்ணன் இப்பதான் ஏதோ மனசு மாரி, அவங்கள பார்க்க வந்திருக்காரு. மறுபடியும் மறுபடியும் என்னால அவங்களுக்குள்ள எந்த issuesம் வந்துட கூடாது. அவர் இங்க இருந்து கிளம்பற வரைக்கும், நான் அவர் கண்ணுலயே படமாட்டேன். நீயும் என்ன பத்தி தெரியாம கூட யார்கிட்டயும் பேசிடாத.” என்ற அரவிந்த் வேகமாக liftல் ஏரி தனது ரூமிற்கு சென்று விட்டான்.

மேகா சாப்பிட சொல்லி அனைவரையும் dining tableல் அமர வைக்க, காளீஸ்வரன் மட்டும் பிடிவாதமாக “எனக்கெல்லாம் எதுவும் வேணாம். நான் வெளியே போய் சாப்பிட்டுக்குறேன். இவங்க வேணா ரெண்டு நாள் இங்க இருந்துட்டு பொறுமையா அப்புறம் ஊருக்கு வரட்டும். நான் உன்ன பாக்க தான் வந்தேன். பாத்துட்டேன், உன் புருஷனையும் பார்த்து ஒரு வார்த்தை பேசிட்டு நான் கிளம்புறேன்.” என்று சொல்லி அடம்பிடித்தார்.

அவர் விஷ்வாவைப் பற்றி பேசியவுடன் மீண்டும் சோகமான மேகா “அவர் என்கிட்டயே சரியா பேச மாட்டேங்கிறாரு அண்ணா. கதவை பூட்டிக்கிட்டு இப்ப Study roomல இருக்காரு. அவரா வெளியே வந்தா தான் உண்டு. நம்ம வெளியே இருந்து கத்தி கூப்பிட்டா கூட அவருக்கு கேட்காது.” என்று சொல்ல, காளீஸ்வரனின் முகம் மாறிவிட்டது.

தான் இவ்வளவு சொல்லியும் தன் அண்ணன் அமைதியாக இருப்பதால், “என்னாச்சு அண்ணா..??” என்று மேகா கேட்க, “இதுக்குத்தான் அவன் கொஞ்சம் ஆள் சரியில்ல அவனை கல்யாணம் பண்ணிக்காதன்னு தலையால அடிச்சுகிட்டேன்.. கேட்டியா நீ..?? பெரியவங்க ஒன்னு சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். அத கேக்காம உங்க இஷ்டத்துக்கு ஆடினா, வாழ்க்கை இப்படித்தான் நல்லா கிளுகிளுன்னு இருக்கும். அங்க ஒருத்தி இப்படித்தான் திமிரு பிடிச்சு காதல் கன்றாவினு பெனாத்திட்டு இருக்கா. அவளுக்கும் நல்ல புத்தி சொல்லி எவ்வவளோ திருத்தப் பார்க்கிறேன். அந்த அறிவு கெட்ட கழுதை திருந்த மாட்டேன்னு அடம்பிடிக்குது.
என்னத்த சொல்றது.. எல்லாத்தையும் நான் நல்லதுன்னு நினைச்சு தான் செய்கிறேன். ஆனா கடைசியில உங்க கண்ணுக்கு நான்தானே வில்லனாண் தெரிகிறேன்…!! நீ எல்லாத்தையும் உன் இஷ்டப்படி செஞ்ச. நானும் வேற வழி இல்லாம விட்டுட்டேன். இப்ப பாரு நீ தானே கஷ்டப்பட்டு நிற்கிற..!!” என்று கோபமாக சொன்னார் காளீஸ்வரன்.

அவர் சொன்னதை முற்றிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது என்பதால், மேகா அமைதியாகவே இருந்தாள். சூழ்நிலையை சகஜமாக்க நினைத்த கலைச்செல்வி “சரி விடுங்க. ரெண்டு பேரும் எதுக்கு நடந்ததை பத்தி பேசிட்டு இருக்கீங்க…?? யாருக்கு யாருன்னு கடவுள் முடிவு பண்ணி இருக்கிறாரோ, அவங்க கூட தான் சேர முடியும். கடவுள் கையில நம்ம எல்லாரும் வெறும் பொம்மை தானே..!! அவதான் இவ்வளவு தூரம் சொல்றாள்ல… சாப்பிடுங்க மாமா. நம்ம இங்க வரைக்கும் வந்துட்டு, இப்படி பட்டும் படாமல் பேசிட்டு கிளம்பி போயிட்டா, நாளை பின்ன இவ எப்படி நம்ம வீட்டுக்கு முன்ன மாதிரி உரிமையா வருவா..?? குடும்பத்துக்குள்ள சண்டை நட்டுகிறது அப்புறம் சேர்ந்துகிறது எல்லாம் சகஜம் தானே! அதுக்கெல்லாம் வீராப்பா முறுக்கிட்டு இருக்க முடியுமா? நீங்க சாப்பிடாம நாங்க மட்டும் எப்படி சாப்பிடுறது? வாங்க மாமா சாப்பிடலாம். காலையில நேரமா எந்திரிச்சதனால பசிக்குது.” என்றாள். அவளை முறைத்துப் பார்த்த காளீஸ்வரன் “போனா போய் தொலையுது.” என்று நினைத்து சாப்பிட தொடங்கினார்.

அதனால் மற்றவர்களும் அவருடன் சேர்ந்து சாப்பிட தொடங்கினார்கள்.
தனது அறையில் சேரனின் அரவணைப்பில் சாப்பிட்டுவிட்டு ஓரளவிற்கு நார்மலாகி இருந்த சௌபர்ணிகா “நான் refresh ஆகிட்டு கீழ போறேன். மேகா எப்படியும் இன்னிக்கி ஆபீஸ் போயிருக்க மாட்டா. நான் போய் அவ கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன். எனக்கு என்னமோ இப்பெல்லாம் அவ கூட இருக்கும்போது, பாட்டி கூட இருக்கிற மாதிரியே ஒரு feel வருது.” என்று அவனிடம் சொல்லிவிட்டு restroomக்கு‌ சென்றாள். அவள் tapஐ திறந்துவிட்டு அங்கே இருந்த சிறிய கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். “இப்போ எனக்கு முழுசா குணமாயிடுச்சு. உனக்கு புடிச்சதெல்லாம் நானே என் கையால செஞ்சு கொடுக்கிறேன் சரியா..?? உன் குழந்தையை எப்ப பாக்க போறோம்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு சௌபர்ணிக்கா.” என்றெல்லாம் போன வாரம் பாட்டி அவளிடம் சொன்னது இப்போது அவளுக்கு ஞாபகம் வர, அவள் கண்களில் பெருக்கெடுத்தது கண்ணீர்.

அதனால் உடனே சோகமே உருவாக மாறிய சௌபர்ணிகா தன் வயிற்றை தொட்டு பார்த்து “என் குழந்தை பொறக்கறதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம் பாட்டி..?? ஏன் என்ன இவ்வளவு சீக்கிரம் விட்டுட்டு போனீங்க..??” என்று கண்ணாடியை பார்த்து புலம்பியவளுக்கு திடீரென தலை சுற்றுவது போல இருந்தது. அதனால் அவள் தன் தலையை பிடித்துக் கொண்டு வேகமாக வெளியில் செல்ல திரும்ப, அவள் tapஐ திறந்து வைத்திருந்ததால் கீழே இருந்த bucket நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் கால் வைத்து வழுக்கி ever silver tapன் மீது விழுந்து தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்த tiles தரையில் உருண்டாள். விழுந்த வேகத்தில் அவள் “அம்மா..!!” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்த, அவள் வயிற்று பகுதியிலும் தலையிலும் பலமாக அடிபட்டிருந்ததால் அவள் உடலில் இருந்து அதிகப்படியான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது.

அவள் கத்தியதைக் கேட்டு பதறியடுத்துக் கொண்டு அங்கே சென்ற சேரன், இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சௌபர்ணிகாவை பார்த்து அப்படியே ஒரு நொடி ஸ்தம்பித்து நின்று விட்டான். ஒருபுறம் அவளுக்கு என்னானதோ என்ற பதட்டம் அவனை வாட்ட, “என் குழந்தைக்கு என்னாச்சு..??” என்று யோசிக்கும்போது கூடுதலாக அவனை பயம் தொற்றிக் கொண்டது. பின் தன்னை சுதாரத்துக் கொண்டு வேகமாக அவளை தூக்கிக் கொண்டு liftல் ஏறி கீழே சென்ற சேரன் “யாராவது சீக்கிரம் வாங்க.. help.. help.. விஷ்வா..‌‌ மேகா.. டேய் அரவிந்த்.. ரிஷி யாராவது வந்து தொலைங்கடா.” என்று கத்திக் கொண்டே hallஐ நோக்கி ஓடினான்.

அவன் கத்தியது dining areaல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தெளிவாக கேட்டது.
அதனால் காளீஸ்வரன், மேகா உட்பட அனைவரும் ஹாலிற்கு ஓடி வந்தார்கள். ஏற்கனவே மனதளவில் சோர்ந்து போயிருந்த மேகா சௌபர்ணிகாவை அந்த கோலத்தில் பார்த்தவுடன் அவளுக்கும் அவள் வயிற்றில் இருந்த குழந்தைக்கும் எனது என்று நினைத்து பயந்து “அக்கா..!!” என்று கத்தியவள், மயங்கி விழுந்துவிட்டாள். அவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்த ரிஷி “ஐயையோ.. என் இந்த வீட்ல மட்டும் எப்படி எல்லாம் அடுத்தடுத்து நடக்குதோ தெரியல. அந்தக் கடவுளுக்கு கொஞ்சம் கூட எங்க மேல இரக்கமே இல்ல” என்று நினைத்து நொறுங்கிப் போனவன், வேகமாக அவர்களை நோக்கி ஓடினான்.

ஒரு பக்கம் மேகாவின் முகத்தில் தண்ணீர் தெளித்த வெற்றி “மேகா கண்ண திறந்து பாருமா. நான் பேசுறது கேக்குதா..?? மேகா..!!” என்று சொல்லி அவள் கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருக்க, ரிஷி சேரன், சாரா, மகதி என அனைவரும் சௌபர்ணிகாவுடன் ஒரு காரில் ஹாஸ்பிடல்லை நோக்கி விரைந்தார்கள்.

“அந்தப் பிள்ளையை அப்படி பார்த்ததுல இவ பயந்து போய் மயங்கி விழுந்துட்டா போல..!! தண்ணி தெளிச்சும் மயக்கம் தெளியலைன்னா, இவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறது தான் நல்லது.” என்று காளீஸ்வரன் சொல்ல, மேகாவை தூக்கிக்‌ கொண்டு தங்களது ஜீபீற்க்கு ஓடினான் வெற்றி. ரிஷியின் காரை பின் தொடர்ந்து மேகாவுடன் காளீஸ்வரனும், வெற்றியும், கலைச்செல்வியும் தங்களது ஜீப்பில் ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள்.

விஷ்வா இன்னும் study roomல் இருந்ததால் அவனை intercomல் தொடர்பு கொண்ட அரவிந்த் அவனை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றான். ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த விஷ்வா; தன் அக்கா, மனைவி என இருவருமே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்ததால் இன்னும் மனதளவில் நொறுங்கிப் போனான்.

அவனை அந்த நிலையில் பார்க்க காளீஸ்வரனுக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அதனால் அவர் ஆறுதல் சொல்வதற்காக விஷ்வாவின் அருகில் செல்ல, அதுவரை உணர்ச்சிகள் இன்றி சிலை போல அப்படியே நின்று கொண்டிருந்த விஷ்வா தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தான்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured