Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 171

மூர்கனின் காதலி CH 171

by Thenaruvi Tamil Novels
27 views

அத்தியாயம் 171

விஷ்வா எப்போது தூங்கி எழுவான் என்று அவனை பார்த்தபடி அமர்ந்திருந்த மேகா, அவன் எழுந்தவுடன் வேகமாக அவன் அருகில் சென்று “எந்திரிச்சிட்டியா.. சீக்கிரம் போய் refresh ஆகிட்டு வா. Breakfast readyஆ‌ இருக்கு.” என்று சொல்ல, எழுந்து அமர்ந்த விஷ்வா refresh ஆகிவிட்டு வந்து அவள் முன்னே அமர்ந்தான். இப்போதும் மேகா அவனுக்கு ஊட்டி விட, அமைதியாக சாப்பிட்டு முடித்த விஷ்வா அவள் சாப்பிடாமல் எழுந்து செல்வதை பார்த்துவிட்டு “நீயும் சாப்பிடு.” என்றான். மூன்று நாட்களுக்கு பிறகு இப்போதுதான் அவன் அவளிடம் இரண்டு வார்த்தை பேசுகிறான்.

அதனால் மகிழ்ந்த மேகா சட்டென அவன் புறம் திரும்பி “நான் மத்தவங்க கூட சேர்ந்து கீழயே சாப்பிட்டேன்.” என்று சொல்ல, ம்ம்.. என்றான் அவன். “நீ இப்ப ஓகேவா..?? நார்மல் ஆயிட்டியா..??” என்று கேட்டவள் அவன் முகத்தை ஆராய்ச்சி பார்வை பார்க்க, “தெரியல.” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்ன விஷ்வா எழுந்து அவர்களது ரூமை விட்டு வெளியே சென்றான். ஓடி சென்று அவன் கையை பிடித்துக் கொண்ட மேகா “எங்க போற? உனக்கு எங்க போகணும்னு சொல்லு. நானும் வரேன். என்னால உன்னை தனியா விட முடியாது.” என்றாள்.

அவள் கையை எடுத்து விட்ட விஷ்வா “நான் கட்டுன தாலி உன் கழுத்துல தொங்கிட்டு இருக்குன்னு எனக்கு ஞாபகம் இருக்கு.‌ இன்னும் முழுசா நான் பைத்தியம் ஆகல. So ஏதாவது பண்ணிக்கிட்டு செத்துட மாட்டேன். Don’t worry. போய் வேற வேலை இருந்தா பாரு. I need some space.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னவன், நேராக தனது study roomக்கு சென்று அதன் doorஐ உள்ளே இருந்து லாக் செய்து விட்டான். “நான் உன்ன disturb பண்ணணும்னு நினைக்கல. உன்ன protect பண்ண try பண்றேன் விஷ்வா. உன்ன பத்திரமா பாத்துகிறது தான் என் வேலை.” என்று நினைத்த மேகா வேகமாக கீழே சென்று தயாளனிடம் “Study roomல CCTV camera இருக்கா அண்ணா..??” என்று கேட்டாள்.

“ம்ம்..‌ இருக்கே. ஏன் கேக்குற..??” என்று அவன் கேட்க, “அவர் அங்க போய் doorஐ லாக் பண்ணிக்கிட்டாரு. என்கிட்ட நல்லா தான் பேசிட்டு போனாரு. இருந்தாலும் அவர் இன்னும் நார்மல் ஆகல. அவரை தனியா விட எனக்கு பயமா இருக்கு. அதான் கேமரா இருந்தா அவர் என்ன பண்றாருன்னு அவரை disturb பண்ணாம monitor பண்ணிட்டே இருக்கலாம்னு கேட்டேன்.” என்றாள் மேகா. “ஆமா.. அதுவும் கரெக்ட் தான். இப்ப கூட மகேஷ் கால் பண்ணி அவர தனியா விட்டுறாதீங்கன்னு சொன்னான். வா.. அவர் என்ன பண்றாருன்னு பாக்கலாம்.” என்ற மகேஷ் அவளை surveillance room-ற்க்கு அழைத்துச் சென்றான்.

அங்கே ஒவ்வொரு சிஸ்டமில் ஒவ்வொரு இடத்தில் இருக்கும் camera record செய்யும் live footage ஓடிக் கொண்டிருக்க, அதை security teamல் உள்ளவர்கள் monitor பண்ணி கொண்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களை வெளியே செல்ல சொல்லிவிட்டு study roomல் உள்ள camera record செய்யும் காட்சியை play செய்தான் தயாளன். அங்கே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த விஷ்வா திடீரென ஓரமாக கிடந்த large size drawing boardல் பேப்பரை வைத்து அவனுக்கு அருகில் இருந்த table drawerஐ திறந்தான். அதற்குள் பல வண்ணங்களில் paint இருக்க, அதை எடுத்து வைத்து எதையோ paint செய்ய தொடங்கினான் விஷ்வா.

கேமராவில் தெரிந்த அந்த காட்சியை ஆச்சரியமாக பார்த்த மேகா, “இவருக்கு painting எல்லாம் பண்ண தெரியுமா அண்ணா..??” என்று கேட்க, “ம்ம்.. பாஸ் நல்லா painting, drawing, pencil sketching, எல்லாமே பண்ணுவாருமா. ஆனா அவர் என்ன draw பண்ணாலும் அத secretஆ வச்சுக்குவாரு. யார்கிட்டயும் காட்ட மாட்டாரு. நீ வேணா இங்கயே உக்காந்து அவர் என்ன paint பண்றாருன்னு பாரு.” என்றான் தயாளன். சரி என்ற மேகா அங்கே இருந்த chairல் அமர்ந்துவிட, வெளியே சென்று விட்டான் அவன். வெகு நேரமாக ஏதோ dialogues இல்லாத ஊமை documentary filmஐ பார்ப்பதைப் போலவே விஷ்வா paint செய்வதை பார்த்துக் கொண்டிருந்த மேகா, ஒரு கட்டத்தில் தன்னை அறியாமல் அப்படியே chairல் அமர்ந்தவாறு உறங்கி விட்டாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு அங்கே வந்த security ஒருவன், தூங்கிக் கொண்டிருந்தவளை “மேடம்.. மேடம்..!!” என்று கூப்பிட்டு எழுப்பி விட்டான்.‌ அதனால் பதறிப்போன மேகா “என்னாச்சு விஷ்வா..!!” என்று சத்தமாக கேட்க, “ஒன்னும் ஆகல மேடம் பதட்டப்படாதீங்க. விஷ்வா சார் இன்னும் painting தான் பண்ணிட்டு இருக்காரு. அங்க பாருங்க..!!” என்றான் security.

அதை பார்த்துவிட்டு பெருமூச்சு விட்ட மேகா, “அப்புறம் எதுக்கு என்னை எழுப்பி விட்டீங்க..??” என்று கேட்க, “உங்கள பாக்குறதுக்கு கௌத்தம்னு ஒருத்தர் வந்திருக்காரு. அதான் உங்ககிட்ட inform பண்ண வந்தேன்.” என்றான் அவன். “அவர ஹால்ல wait பண்ண சொல்லுங்க. நான் வரேன்.” என்ற மேகா கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரிந்த விஷ்வாவின் உருவத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே சென்றாள்.

அவளைப் பார்த்தவுடன் வேகமாக எழுந்து சென்று அவளை அணைத்துக் கொண்ட கௌத்தம் “How are you மேகா..?? உன்ன பாக்கவே நீ ரொம்ப tiredஆ இருக்கிற மாதிரி தெரியுது..!! சரியா சாப்பிடறது இல்லையா நீ..?? ரெண்டு நாள்லயே இப்படி ஒல்லி ஆயிட்ட..!!” என்று அக்கறையுடன் கேட்க, இப்போது அவன் தன் நண்பன் ஸ்தானத்தில் இருப்பதால் உள்ளுக்குள் இருந்த ஆதங்கத்தில் ஒரு ஆறுதலுக்காக தானும் அவனை அணைத்துக் கொண்ட மேகா, “நான் இப்ப கொஞ்சம் பரவால்ல தான் கெளத்தம். இந்த நேரத்துல என்னை பார்க்க தான் இவ்வளவு தூரம் வந்தியா நீ..??” என்று கேட்டாள்‌.

அவள் கண்களைப் பார்த்த கெளத்தம், “Yes, ஏன் நான் வரக்கூடாதா..‌?? மீனாள் மேடமோட funeralல‌ விஷ்வா சார் disturbedஆ இருந்ததுனால நீயும் ரொம்ப dullஆ இருந்த. அப்புறம் ரெண்டு நாளா நீ ஆபீஸ்க்கும் வரல. என் கால் மெசேஜ் எதுக்கும் நீ respond பண்ணல. எனக்கு உன்ன நெனச்சு கவலையா இருந்துச்சு. அதான் உடனே உன்னை பார்க்க கிளம்பி வந்துட்டேன். நீ எப்போ ஆபிஸ் வருவ..??” என்று கேட்க, “எனக்கு இப்போதைக்கு ஆபீஸ் வர்ற ஐடியாவே இல்ல கெளத்தம். விஷ்வா எப்போ நார்மல் ஆகிறாரோ, அப்பதான் என்னாலயும் நார்மலாகி என் routine workஐ பாக்க முடியும். அதுவரைக்கும் என்ன ஆனாலும் சரி, நான் என் விஷ்வா கூட தான் இருப்பேன்.” என்று சொல்லும்போதே மேகாவின் கண்கள் கலங்கியது.

அவள் விஷ்வாவை பற்றி பேசுவதை கேட்க அவனுக்கு கடுப்பாக இருந்தாலும் வெளியில் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, அவள் தோள்களில் கை வைத்து அவளை அழைத்துச் சென்று sofaவில் அமர வைத்த கௌத்தம் “ப்ளீஸ் மேகா.. இப்படி அழுகாத. என்னால நீ அழறதை பார்க்க முடியல. மீனாள் மேடம்க்கு இப்படி ஆகும்னு யாருமே எதிர்பார்க்கல. அதனால அவங்க deathஐ accept பண்ண எல்லாருக்கும் கொஞ்சம் டைம் ஆகத்தான் செய்யும். பட் அவங்களுக்காக விஷ்வா இப்படி மத்தவங்கள கண்டுக்காம இருந்து, உங்கள hurt பண்றது ரொம்ப தப்பு. இந்த மாதிரி நேரத்துல விஷ்வா தான் இன்னும் strongஆ இருக்கணும்.” என்றான்.

அவன் தன் friend என்பதால் ஏதோ கலைச்செல்வியிடம் பேசுவதைப் போல சாதாரணமாக, “உண்மை தான் கௌத்தம். விஷ்வா emotionally கொஞ்சம் weak தான். நானும் அவரை சரி பண்ண எவ்வளவோ try பண்ணிட்டு தான் இருக்கேன். I hope சீக்கிரம் அவர் நார்மல் ஆகிட்டா நல்லா இருக்கும். I miss My விஷ்வா Badly.” என்று சொல்ல,

“அதுவும் நல்லதுக்கு தான். சீக்கிரமா அவனை முழுசா பைத்தியக்காரனாக்கி உன்ன அவன் கிட்ட இருந்து பிரிச்சு.. அவன நடு தெருவுல சட்டையை கிழிச்சுக்கிட்டு அலைய விடுறனா இல்லையான்னு பாரு.” என்று வன்மத்துடன் நினைத்த கௌதம், “Don’t Worry மேகா. எல்லாமே சீக்கிரம் சரியாயிடும். உனக்கு என்ன help வேணும்னாலும் என்கிட்ட கேளு. நான் பண்றேன். I’m here for you. உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.” என்றான்.

Depressionல் இருந்த மேகாவிற்கு அவன் வார்த்தைகள் கொஞ்சம் ஆறுதலாக இருக்க, “தேங்க்ஸ் கௌத்தம்.” என்றாள். அப்போது காளீஸ்வரனுடன் வெற்றியும் கலைச்செல்வியும் அங்கே வந்தார்கள்.

“யாரு இவன்.. இவ பக்கத்துல ஒட்டிக்கிட்டு இப்படி நடு வீட்ல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கான்..?? ஒரு கல்யாணமான பொண்ணுகிட்ட, எப்படி பேசணும் பழகணும்னு இவனுக்கு அறிவு இருக்காதா..?? அவனுக்கு தான் அந்த அறிவு இல்லனா, இவளுக்குமா புத்தி கெட்டு போச்சு..?? இவன் ஆளும்.. பார்வையும்.. ஒன்னும் சரியில்லையே..!!” என்று நினைத்த காளீஸ்வரன் கௌத்தமை குருகுருவென பார்க்க, “மேகா..!!” என்று சத்தமாக அழைத்த கலைச்செல்வி கலங்கிய கண்களுடன் அவளை நோக்கி ஓடிச் சென்றாள்.

அவளும் வெற்றியும் தன் அண்ணனுடன் வந்திருப்பதை பார்த்தவுடன் பார்த்தவுடன் தானும் emotionalஆன மேகா, “நீ அண்ணாவையும் கூட்டிட்டு வருவன்னு நான் நினைச்சு கூட பாக்கல கலை. தேங்க்ஸ் டி.” என்று சொல்லிவிட்டு கலங்கிய கண்களுடன் கலைச்செல்வியை அணைத்துக் கொண்டாள்.

“ச்சே.. மேகா கூட இன்னும் closeஆக எனக்கு கிடைச்ச நல்ல Chanceஐ இவங்க வந்து கெடுத்து விட்டுட்டாங்க.” என்று நினைத்து சலித்துக் கொண்ட கௌத்தம் “ஓகே மேகா, I think you are busy now. நான் அப்புறமா Freeஆ இருக்கும்போது உன்னை வந்து பார்க்கிறேன், take care. bye.” என்று சொல்லிவிட்டு entranceஐ நோக்கி நடக்க தொடங்கினான். தன் குடும்பத்தினரை பார்த்த சந்தோஷத்தில் இருந்த மேகா, அவனைப் பார்த்து தன் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured