Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 245

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 245

by Thenaruvi Tamil Novels
51 views

அத்தியாயம் 245: எல்லாமே முடிஞ்சிருச்சு


ஹாஸ்பிடலில் ஆதித்யாவுடன் விஷ்ணுவும், ரித்திகாவும், ஷாலினியின் உடல் நிலையை பற்றி தெரிந்து கொள்வதற்காக பரிதவிப்புடன் அவள் இருந்த அறைக்கு வெளியே காத்திருந்தனர். சில மணி நேரங்களுக்கு பிறகு ஷாலினியின் அறையில் இருந்து அந்த மருத்துவமனையின் சீஃப் டாக்டரும், வருண் அனுப்பி வைத்த நாராயணன் மருத்துவமனையின் சீப்   சர்ஜனும், வெளியே வந்தார்கள். 

அவர்களைக் கண்டவுடன் வேகமாக பதட்டத்துடன் அவர்கள் அருகே எழுந்து சென்ற விஷ்ணு, ஷாலினியை பற்றி அவர்களிடம் விசாரித்தான். விஷ்ணுவை அடையாளம் கண்டு கொண்ட நாராயணன் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர், “சார் அவங்களுக்கு தலையில பலமா அடிபட்டு இருந்துச்சு. அதனால நிறைய ஸ்டிச்சஸ் போட்டு இருக்கோம். ஹெவி பிளட் லாஸ் ஆகி இருந்ததுனால ரொம்ப வீக் ஆயிட்டாங்க. இப்ப அவங்களுக்கு கொடுக்க வேண்டிய ட்ரீட்மென்ட் எல்லாத்தையும் கொடுத்து பிளட்டும் ஏத்தி இருகோம். 

அவங்க இங்க வந்தப்ப இருந்ததுக்கு இப்ப அவங்களோட கண்டிஷன் ஸ்டேபிளா தான் இருக்கு. அவங்களுக்கு தலையில அடிபட்டு இருக்கனால ஸ்கேன் பண்ணி பார்த்ததுல.. அவங்களுக்கு எந்த மேஜர் பார்ட்ஸ் -லையும் டேமேஜ் ஆகல. இந்த செகண்ட் வரைக்கும் நாங்க பண்ண ட்ரீட்மென்ட்க்கு அவங்க பாடி பக்கவா react பண்ணி கியூர் ஆயிட்டு இருக்கு. அவங்க இப்படியே இருந்தாங்கன்னா, சீக்கிரம் மயக்கத்துல இருந்து கண் முழிச்சுருவாங்க. 

பட் இது சிவியர் இஞ்சூரின்றதுனால அவங்களோட மூளையில ஏதாவது பிளட் கிலாட் ஆக நிறைய சான்ஸ் இருக்கு. அதுக்கு ஒரு சான்ஸ் இருக்குன்றனால கண்டிப்பா அப்படி நடக்கனும்னு அவசியமில்லை. சோ நம்ம பயப்படத் தேவை இல்லை. அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சு அவங்க நார்மல் ஆனா கூட, மினிமம் 2 ஆர் 3 வீக்ஸ் அவங்க மெடிக்கல் அப்சர்வேஷன் தான் இருக்கணும். அவங்களுக்கு கையிலயும், கால்லையும், கூட நிறைய பிராக்சஸ் இருக்கு. அவங்க கம்ப்ளீட்டா ரெக்கவர் ஆகுறதுக்கு 3 டு 4 மன்த்ஸ் கூட ஆகலாம். இப்போதைக்கு அவங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல. அத மட்டும் தான் எங்களால சொல்ல முடியும்.” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

அவர் பேசியதை கேட்டு பயத்தில் இருந்த விஷ்ணு, அவரிடம் என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான். விஷ்ணுவின் அருகே சென்ற ரித்திகா, “அவளுடைய உயிருக்கு ஒன்னும் ஆபத்திலேயே டாக்டர்..???” என்று கேட்டாள். 

ரித்திகாவை மரியாதையுடன் பார்த்த அந்த டாக்டர், “நோ மிஸ்சஸ் வருண். ஹெர் கண்டிஷன் இஸ் டேபிள் நவ். இனியும் க்ரிட்டிக்கல் ஆகாம நாங்க பார்த்துப்போம். அப்படி ஆனாலும் அவங்கள எங்களால காப்பாத்த முடியும். ஷோ யூ டோன்ட் வரி.” என்று தாழ்மையான குரலில் சொன்னார். 

இறுதியாக டாக்டர் சொன்னதை கேட்ட பின்பு தான் விஷ்ணு ரித்திகா இருவருக்குமே போன உயிர் திரும்பி வந்ததைப் போல்ல் இருந்தது. ஷாலினிக்காக கோயிலில் சென்று கடவுளிடம் பிரார்த்தித்து விட்டு வந்த ரித்திகாவின் பெற்றோர்கள், “நாங்க ஒரு தடவ மட்டும் உள்ள போய் ஷாலினிய பாத்துட்டு வந்துடடுமா..???” என்று அந்த டாக்டரிடம் கேட்டார்கள். 

அதுவரை அமைதியாக இருந்த விஷ்ணு, “எஸ் டாக்டர் நானும் என் ஷாலினிய ஒரு தடவை பார்க்கணும். வேற யாரோ ஒருத்தர் தான் அவளை இங்க அட்மிட் பண்ணி இருக்காங்க. இன்னைக்கு காலையில இருந்து நான் அவளை ஒரு தடவ கூட பாக்கல. ப்ளீஸ் டாக்டர் ஒரே ஒரு தடவை போய் அவளை பார்த்துட்டு வந்துடறேன்.” என்று கெஞ்சும் குரலில் கேட்டான். 

“பொதுவா ஐ. சி. யூ. -ல இருக்கும்போது பேஷண்ட்டா பாக்குறதுக்கு நாங்க யாரையும் அலோ பண்ண மாட்டோம். பட் நீங்க இவ்வளவு கேக்கும்போது என்னால நோ சொல்ல முடியல மிஸ்டர் விஷ்ணு. பேஷன்ட்க்கு இன்பெக்சன் ஆகாம, அவங்களே டிஸ்டர்ப் பண்ணாம, மாஸ்க் போட்டுட்டு போயிட்டு அமைதியா ஒவ்வொருத்தரா போய் பாத்துட்டு வாங்க.” என்று சொல்லிவிட்டு சென்றார். 

அதனால் விஷ்ணு அங்கே இருந்த நர்ஸிடம் ஒரு மாஸ்க் ஐ வாங்கிப் போட்டுக் கொண்டு வேகவேகமாக தன் ஆருயிர் காதலியான ஷாலினியை பார்க்க ஏக்கம் நிறைந்த கண்களோடு கண்ணீரும் தழும்ப உள்ளே சென்றான். 

அங்கே தலையில் பெரிய கட்டுடன், முகத்தில் ஆங்காங்கே சிறு சிறு காயங்களுடன், ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு, இரு கைகளிலும் கட்டு போடப்பட்டு, ஒரு காலிலும் கட்டு போடப்பட்டு, அதை தூக்கி மேலே கட்டி தொங்கவிடப்பட்ட நிலையில் ஷாலினி கிட்டத்தட்ட; அரை உயிராய் கிடந்தாள். 

நேற்று சிரித்த முகத்துடன் தன்னுடன் பேசி தன்னை கிண்டல் செய்து தன்னுடன் விளையாடிக் கொண்டு இருந்த ஷாலினி, இப்போது தன் முன்னே பேச்சு மூச்சின்றி இத்தனை கட்டுகளுடன் கிடப்பவளை பார்க்கும் போதே அவனுடைய மூச்சே நின்று விடும் போல அத்தனை வேதனையை உணர்ந்தான் விஷ்ணு. அவனுடைய கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. 😭 😭 😭 எங்கே தான் போடும் சத்தம் ஷாலினிக்கு தொந்தரவாக இருக்குமோ என்று நினைத்து தன்னுடைய வாயை தன் இரு கைகளாலும் மூடிக்கொண்ட விஷ்ணு, சத்தம் இன்றி தனக்குள் அழ தொடங்கினான். 😭 😭 😭

“ஷாலு சத்தியமா என்னால உன்னை இப்படி பாக்க முடியல டி. உன்ன கல்யாணம் பண்ணி எப்பவுமே உன்ன பத்திரமா என் கைக்குள்ள வச்சு பாத்துக்கணும்னு நினைச்சேன். ஆனா என்னாலேயே உனக்கு இப்படி ஒரு ஆக்சிடென்ட் நடந்துருச்சே…!!! அதுக்காக என் மேல கோபப்பட்டு என்ன விட்டு போயிடாத டி. 

உனக்கு ஏதாவது ஆயிட்டா, சத்தியமா நான் உயிரோட இருக்க மாட்டேன். நீ என் கூட சண்டை போடு. என்னை திட்டு, அடி, என்ன வேணா பண்ணு. ஆனா என்ன விட்டு மட்டும் போயிடாத. நீ என் லைஃப்ல வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஆனா என் லைப்பே நீ தான்ற அளவுக்கு நான் உன்ன லவ் பண்றேன். நீ இல்லாத லைஃபை எனக்கு வாழ தெரியாது டி. ப்ளீஸ் கம் பேக் சூன். ஐ லவ் யூ. ஐ லவ் யூ ஃபார் அவர் அண்ட் ஆப்டர்.” என்று அவளிடம் தன்னால் சொல்ல முடியாதவற்றை தன்னுடைய மனதார அவளுடைய முகத்தை பார்த்து தனக்குள் பேசிக்கொண்டு இருந்தான். 😭 😭 😭

 விஷ்ணுவிற்கு அங்கு இருந்து வெளியே ஷாலினியை தனியாக விட்டு செல்வதற்கு மனமே வரவில்லை. இருப்பினும் தான் சென்றால் தான் வெளியே இருப்பவர்கள் உள்ளே வந்து அவளை பார்க்க முடியும் என்று தன் மனதை கல்லாக்கி கொண்டவன் வெளியே சென்றான். விஷ்ணு வெளியே வந்தபின் ரித்திகா உள்ளே சென்று ஷாலினியை பார்த்துவிட்டு வந்தாள். தன்னுடைய உடன்பிறவா சகோதரி எப்போதும் தன்னுடனே இன்னொரு உயிராய் சுற்றி கொண்டு இருந்த ஷாலினியை இப்படி ஒரு நிலையில் பார்ப்பதற்கு அவளுக்கும் மிகவும் வேதனையாக இருந்தது. 

ஷாலினியை பார்ப்பதற்காக உள்ளே சென்ற ரேவதி, தான் கோவிலில் ஷாலினியின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு கொண்டு வந்த திரு நீரை அவளுடைய நெற்றியில் வைத்து விட்டாள். ரித்திகா உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கும்போது அவர்கள் எவ்வளவு வேதனை பட்டார்களோ ,அதே வேதனையை ரித்திகாவின் பெற்றோர்கள் இப்போது ஷாலினிக்காகவும் அனுபவித்தனர். அவர்களால் ஷாலினியையும், ரித்திகாவயும் , வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. அதனால் தாங்களும் அங்கேயே அவர்களுடன் இருந்துவிட்டனர்.

ரவியின் வீட்டில்.. 

பல லட்சங்களை தன்னிடம் கொடுத்து வைஷாலி அவனிடம் ஒப்படைத்த வேலையை தான் சிறப்பாக செய்து முடித்துவிட்ட வெற்றி களிப்பில் தலை முதல் கால் வரை மூச்சு முட்ட குடித்துவிட்டு தன்னுடைய வீட்டில் போதையில் படுத்து கிடந்தான் ரவி. ரித்திகா சொன்னதால் அவன் மீது சந்தேகப்பட்ட போலீசார் ஷாலினிக்கு ஆக்சிடென்ட் ஆன கேஸில், அவனை கொத்தாக தூக்கி அரெஸ்ட் செய்து தங்களுடைய இடத்திற்கு கொண்டு சென்று விசாரிக்க தொடங்கினர். 

வருணின் அலுவலக அறையில்… 

தனக்கு இருந்த முக்கியமான வேலைகள் அனைத்தையும் விரைவாக முடித்த வருண், சிவாவை அழைத்து அந்த கமிஷனருக்கு கால் செய்து ரவியிடம் விசாரித்ததில் ஷாலினியின் ஆக்சிடென்ட் விஷயத்தில் வைஷாலிக்கும் தொடர்பு இருக்கிறதா..?? என்று அவனை விசாரிக்கும் படி உத்தரவிட்டான். 

அதனால் போனில் அந்த கமிஷனரிடம் பேசிவிட்டு வந்த சிவா வருணிடம், “எஸ் சார். லாவண்யா சொன்னதா ரித்திகா மேடம் சொன்னது எல்லாமே ட்ரு தான். ஏற்கனவே விஷ்ணு சார் ஆள நிறைய அடி வாங்கி ரவி உடம்பு சரி இல்லாம தான் இருந்திருக்கான். அவன்கிட்ட லட்ச லட்சமா கொடுத்து ஷாலினிய கொள்ள சொன்னதே நம்ப வைஷாலி மேடம் தான்னு ஒன்னு ரெண்டு அடி வாங்கினதுக்கு அப்புறமாகவே அதை தாங்க முடியாம ஈஸியா ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டான்னு நம்ம கமிஷனர் சார் சொன்னாரு.

நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு அவர் உங்க கிட்ட கேட்டு சொல்ல சொன்னாரு சார். இப்போ நம்ம வைஷாலி மேடம் மேல ஆக்சன் எடுக்க போறோமா சார்..?? அவங்க ஒரு ஸ்டேட் லெவல் பிளேயர். பப்ளிக் ஃபிகர். அவங்க மேல ஒரு சின்ன பிளாக் மார்க் வந்தா கூட, அத அவங்கள ஈஸியா சரி பண்ண முடியாது.” என்றான் சிவா. 

அவன் பேசியதில் வருணிற்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. சிவாவை ஒரு உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவன், “நான் கூப்பிட்டேன்னு கால் பண்ணி வைஷாலிய இங்கே வர சொல்லு.” என்றான். சிவாவும் வைஷாலிக்கு கால் செய்து வருண் அவளை அழைப்பதாக சொல்ல, ஏதோ பெரிய பிரச்சனை தனக்கு வரப்போவதாக உணர்ந்த வைஷாலி; அதற்குள் தன்னுடைய சதி வேலை வெளிச்சத்திற்கு வந்து விட்டதா என்று நினைத்து பயந்தபடியே கிளம்பி வருணின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.

கோபத்தில் ஒரு கப் காப்பியுடன் தன்னுடைய அறையில் உள்ள சோபாவில் அமர்ந்து இருந்த வருண் வைஷாலியின் வருகைக்காக காத்திருந்தான்.  உள்ளே வந்த வைஷாலி, “என்னை எதுக்கு மாமா கூப்பிட்டீங்க..??” என்று எதுவும் தெரியாதவளை போல் கேட்டாள். “நான் உன்னை எதுக்கு கூப்பிட்டேன்னு உனக்கு தெரியாதா வைஷாலி..???” என்று அவளை பார்த்து முறைத்தபடி கேட்ட வருண், தன் கையில் இருந்த காபியை பின் சாதாரணமாக குடிக்க தொடங்கினான். 😒 🤨

அவன் கேட்ட அந்த ஒரு கேள்வியில் வைஷாலியின் உடம்பெல்லாம் பயத்தில் நடுங்கி விட்டது. 😰 😨 சத்தியமாக வருண் நாராயணனிடம் பொய் சொல்லும் தைரியமோ, உண்மையை மறைக்கும் தைரியமோ, அவளுக்கு இல்லை. இருந்தாலும் வருணிற்கு அது தெரிந்தா இல்லை இன்னும் தெரியாமல் தான் இருக்கிறதா என்று தனக்கு உறுதியாக தெரியாமல்; தானாக சென்று வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்த வைஷாலி, “நீங்க எத பத்தி கேக்குறீங்கன்னு எனக்கு தெரியல மாமா.” என்று உறுதியான குரலில் சொல்லி விட்டாள்.

அதுவரை தான் குடித்து கொண்டு இருந்த காப்பியின் கப்பை தன் முன்னே  இருந்த கண்ணாடி மேஜையில் சத்தமாக வைத்த வருண்; எழுந்து நின்று தன்னுடைய கோட்டை சரி செய்வதுபோல் நிதானமாக தன்னை காட்டிக்் கொண்டவன், திடீர் என்று வைஷாலியின் கன்னத்தில் பளார் என்று அறைந்து “இப்ப நான் உன்கிட்ட எத பத்தி பேசுறேன்னு புரியுதா..???” என்று கோபம் நிறைந்த குரலில் சிங்கமாய் கர்ஜித்தான்.😤 😡 🔥

இதைத் துளியும் எதிர்பார்த்து இருக்காத வைஷாலி உயிரே போகும் அளவிற்கு வலிக்கும் தன்னுடைய கன்னத்தில் தன் கையை வைத்துக்கொண்டு வருணை நம்ப முடியாமல் பார்த்தாள். 😰 😨 இதுவரை தன்னுடைய வருண் மாமாவின் கோபத்தை பற்றி பல சொல்லி அவள் கேள்விப்பட்டு இருக்கிறாள். ஆனால் அப்படி ஒரு கோபம் அவருக்கு தன் மீதே வரும் என்று அவள் துளியும் எதிர் பார்த்து இருக்கவில்லை. 

அதனால் நடுங்கிய குரலில் வருணிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த வைஷாலி, “சா.. சா… சாரி மாமா. என்ன பனிஷ் பண்ணிடாதீங்க ப்ளீஸ். விஷ்ணு மேல இருந்த அன் கண்டிஷனல் லவ்னால தான் இப்படி பண்ணிட்டேன்.” என்று திக்கி திணறி சொன்னாள். 💔

“நீ இப்போ சாரி சொல்லிட்டா, ஷாலினிக்கு நடந்த ஆக்சிடென்ட் இல்லைன்னு ஆயிடுமா.. அவ உடனே நார்மல் ஆகிடுவாளா…??? சொல்லு வைஷாலி..!!!!” என்று அடித் தொண்டையில் இருந்து கத்தினான் வருண். 😤 பயத்துடன் அவனை பார்த்த வைஷாலி, “நான் ஏதோ தெரியாம பண்ணிட்டேன். என்ன இதுல இருந்து காப்பாத்துங்க மாமா. என்ன போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னா, ரொம்ப அசிங்கமா போயிடும். அம்மாவால இது எல்லாத்தையும் தாங்கவே முடியாது. ப்ளீஸ் ஃபார் கிவ் மீ.” என்று நடுங்கிய உடலுடன் அழுது கொண்டே சொன்னவள், தன்னை காப்பாற்றுமாறு வருணின்  காலில் விழுந்து கெஞ்சினாள்.😭 😭 😭

“முதல்ல எந்திரி. செய்யறது எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்ப வந்து தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லி கால்ல விழுகிறது.” என்று தன்னுடைய பல்லை கடித்துக் கொண்டு கேட்டான் வருண். 😡 🔥 தேம்பித் தேம்பி அழுதபடியே அவன் முன்னே அமைதியாக நின்று கொண்டு இருந்தாள் வைஷாலி.

இவளை என்ன செய்யலாம் என்று அமைதியாக யோசித்துப் பார்த்தான் வருண். இன்று நாராயணன் குரூப்ஸ் இந்த நிலைமையில் இருக்கிறது என்றால் அதற்கு வைஷாலியின் அப்பாவும் ஒரு முக்கிய காரணம். அவர் இந்த கம்பெனிக்காக உழைத்து தன் உயிரையே விட்டவர். அந்த நன்றிக்காகவாவது வைஷாலியை தான் எந்த பிரச்சனையிடம் சிக்க விடக்கூடாது என்று நினைத்தவன், “இங்க பாரு வைஷு… இது தான் நான் உனக்கு தர லாஸ்ட் வார்னிங். நான் ஷாலினிக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் கிட்ட பேசிட்டேன் அவர் அவளோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு சொல்லிட்டாரு. அதனால தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகாம நீ இங்க என் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க.

நீ நேஷனல் லெவல் கேம்ஸ் செலக்சன் காக அப்ராட் போய் ப்ராக்டிஸ் பண்ணனும்னு சொன்னில… நீ இங்க இருந்து வேலை பார்த்ததெல்லாம் போதும். நாளைக்கே நீ அமெரிக்கா போற. அங்க போய் உன்னோட வேலை என்னமோ அதை மட்டும் பாக்கிற. நான் உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டே இருப்பேன். முடிஞ்சா அங்கேயே எவனையாச்சும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடு. இல்லேன்னா, நானே உனக்கு எவனாவது ஒரு நல்ல பையனா பாத்து சீக்கிரமா  கல்யாணம் பண்ணி வைக்கிறேன். பட் நீ இனி விஷ்ணுவையும், ஷாலினியையும், பத்தி யோசிச்சு கூட பாக்க கூடாது. அகைன் இந்தியாவுக்கு வரவும் கூடாது. நான் அத்தை கிட்ட பேசுகிறேன்.” என்று உறுதியான குரலில் சொன்னான். 

வைஷாலிக்கு அவனிடம் மறுத்த பேச வேண்டும் என்று தான் தோன்றியது ஆனால் அவனுடைய குரலில் இருந்த உறுதியை கண்டு கொண்டவள், தனக்கு  இப்படி ஒரு தண்டனை கிடைத்ததே குறைந்தபட்சம் தான் என்று நினைத்துக் கொண்டு அமைதியாக தன்னுடைய தலையை மட்டும் ஆட்டி அவன் சொன்னதற்கு தான் ஆமோதிப்பதாக சொல்லிவிட்டு அங்கு இருந்து வெளியே சென்று விட்டாள். 

வைஷாலி சென்றவுடன் சிவாவை அழைத்த வருண், அவள் நாளை அமெரிக்கா செல்வதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் பார்க்கும் படி அவனை பணித்தான். வருணின்  அலுவலகத்தில் இருந்து தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து கிளம்பிய வைஷாலி தன்னுடைய கோபத்தை எல்லாம் சாலையிலும் தன்னுடைய காரிலும் காட்டியவள், கரடு முரடாக டிரைவிங் செய்து எங்கு செல்வது என்று தெரியாமல் மீண்டும் சித்தார்த்தின் பள்ளிக்கே வந்து சேர்ந்தாள்.

தான் நினைத்தது எதுவும் சரியாக நடந்திடாத கோபத்தில் இருந்தவள் நேராக கிரவுண்டிற்கு வந்து அங்கே இருந்த மகேஷ் ஐயும் மற்ற மாணவர்களையும் கூட கண்டு கொள்ளாமல் நேராக அங்கே இருந்த ஒரு மாணவனின் கைகளில் இருந்த ஃபுட் பால் ஐ பிடுங்கிக் கொண்டு அதை வைத்து வெறித்தனமாக விளையாடத் தொடங்கினாள்.  அவளுடைய இந்த செயலை பார்த்து அங்கே இருந்த மாணவர்கள் இவளுக்கு ஏதோ பைத்தியம் பிடித்து விட்டதை போல வெறித்தனமாக அவளை பார்த்து கொண்டு இருந்தனர். 

அதை கவனித்த மகேஷ், “டேய் நீங்க எல்லாம் 12 தானேடா…!! போய் படிக்கிற வேலையை பாருங்க. உங்க மேக்ஸ் மிஸ் உங்களுக்கு ஏதோ டெஸ்ட் வைக்கணும்னு சொன்னாங்க. நான் தான் அவங்க கிட்ட சண்டை போட்டு இந்த பீரியட் வேணும்னு வாங்கிட்டு வந்தேன். ஆனா இப்ப யோசிச்சு பாத்தா, படிக்கிறது தான் முக்கியம்ன்னு தோணுது.  போய் எல்லாரும் டெஸ்ட் எழுதுங்க.” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வைஷாலி இடம் பேசுவதற்காக அவள் அருகே வந்தான். 

மகேஷ்: “என்ன ஆச்சு வைஷு உனக்கு.. ஏன் இப்படி பைத்தியம் புடிச்ச மாதிரி பிஹேவ் பண்ற..?? அந்த ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் உன்ன எப்படி பாத்தாங்கன்னு தெரியுமா..???” என்று லேசான கோபத்துடன் கேட்டான். 😒 

வைஷாலி: அவன் பேசியதை கேட்டு கோபத்தில் தன் கையில் இருந்த பாலை தூக்கி தூரமாக எரிந்தவள் தரையில் அமர்ந்து கொண்டு தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு, “அவ்ளோ தான் எல்லாமே முடிஞ்சிருச்சு மகேஷ்.” என்று கோபத்திலும் விரக்தியிடம் மீண்டும் மீண்டும் அதையே சொல்லி கொண்டு இருந்தவள்; யானை தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்வதை போல தன்னுடைய தலையில் அடித்து கொண்டு தானே மண்ணை வாரி தன் தலையில் போட்டு கொண்டு அழுதாள். 😭 😭 😭

இவளை இப்படியே இங்கேயே விட்டால் இவளை பார்ப்பவர்கள் இவளுக்கு முழுதாக பைத்தியமே பிடித்து விட்டது என்று நினைத்து விடுவார்கள் என்று நினைத்து பயந்த மகேஷ், அவளை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கொண்டு விளையாட்டுப் பொருட்கள் வைக்கும் அறைக்கு சென்றான். பின் அவள் மீது இருந்த மண்ணை எல்லாம் கீழே தட்டி விட்டவன், “இப்ப என்ன ஆச்சுன்னு நீ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க டி..??” என்று எரிச்சலான குரலில் கேட்டான் மகேஷ். 😒 

வைஷாலி: அழுது கொண்டே மீண்டும் குத்த வச்சு தரையில் அமர்ந்தவள், “இதுக்கு மேலயும் என்ன டா ஆகணும்..??? எல்லாம் முடிஞ்சிருச்சு. அவ்ளோ தான் மை லைஃப் இஸ் ஓவர். இனிமே என் விஷ்ணு எனக்கு இல்ல. அவன் இல்லாத இந்த வாழ்க்கையில எனக்கு வேற என்ன இருக்கு..?? வருண் மாமா நாளைக்கு என்னை அமெரிக்கா அனுப்பி வைக்கப் போறாரு. நான் அங்க போயிட்டா, என்னால திரும்பி இந்தியாவுக்கு வர முடியுமான்னு கூட தெரியல.

இதுக்கு மேல நான் என்ன பண்ணாலும் வருண் மாமாவுக்கு தெரிஞ்சிரும். அவர் என்ன வாட்ச் பண்ணிக்கிட்டே இருப்பாரு. இனிமே என்னால நிம்மதியா மூச்சு கூட விட முடியாது. என்னோட லைஃப் என் விஷ்ணு என் ஃபிரீடம் எல்லாமே என்ன விட்டு போகப்போகுது. நான் மட்டும் இங்க இருந்து என்ன பண்ண போறன்..?? நானும் அப்படியே எங்கேயாவது போய் தொலையிறேன்.” என்று விரக்தியில் அவனிடம் சொன்னவள், அவன் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் அங்கு இருந்து எழுந்து வெளியே வந்து மீண்டும் தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்துது கிளம்பினாள்.

வைஷாலி இருக்கும் மன நிலையில் அவளை தனியாக விட கூடாது என்று நினைத்த மகேஷ், அவனும் அவள் பின்னே ஓடி வந்தவன்; தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து அவளுடைய காரை பாலோ செய்தான். அழுது கொண்டே காரில் சென்று கொண்டு இருந்த வைஷாலியின் கண்களில் ஒரு பார் தென்பட்டது. அதனால் தன்னுடைய காரை வேகமாக ஓட்டி கொண்டு அங்கே வந்தவள், தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அதற்குள் சென்றாள். 

வைஷாலி வேகமாக வந்துவிட்டதால் அவளுடைய கார் ஐ மிஸ் செய்து விட்டான் மகேஷ். அதனால் அந்த ஏரியாவில் சுற்றி முற்றி அவளை தேடி கொண்டு இருந்தான். நேராக ஒரு உயர்தர பாருக்குள் நுழைந்த வைஷாலி அங்கே தன் கண்ணில் பட்ட ஆல்கஹால் அனைத்தையும் ஆர்டர் செய்து வேகவேகமாக அதை கணக்கு வழக்கின்றி குடிக்க தொடங்கினாள். அவள் இதற்கு முன் ஒரு முறை கூட குடித்ததில்லை என்பதால், சில நொடிகளிலேயே அவளுக்கு போதை தலைக்கேறி விட்டது. 

இருப்பினும் மீண்டும் மீண்டும் தனக்கு இருந்த வேதனையை இந்த ஆல்கஹாலை வைத்து மரக்க நினைத்த வைஷாலி, தலைக்கால் புரியாமல் குடிக்க தொடங்கினாள். வெளியே வைஷாலியை தேடி அலைந்து கொண்டு இருந்த மகேஷ், அவளுடைய கார் ஐ அந்த பாரின் வாசலில் கண்டவுடன் ஒரு வேலை இவள் ஹார்ட் பிரேக் இல் குடிக்க பாருக்கு சென்றிருப்பாளோ என்று நினைத்து, அந்த பார்வுக்குள் வந்து அவளை தேடத் தொடங்கினான்.

மகேஷ் உள்ளே வரும்போது முழு போதையில் குடித்துவிட்டு வைஷாலி தள்ளாடிய படி நடந்து சென்று கவுண்டரில், “நான் இன்னும் குடிக்கணும். என் மனசுல இருக்குற வேதனை எல்லாம் பறந்து போற அளவுக்கு குடிக்கணும். எனக்கு குடுங்க… நிறைய ஆல்கஹால் குடுங்க. நான் இப்படி குடிச்சு குடிச்சு தான் அவன மறக்கனும்” என்று போதையில் உளறிக்கொண்டு இருந்தாள். 🍸🍺🍹

அவளை அந்த நிலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேஷ், வேகமாக அவள் அருகே சென்றவன், “என்ன பண்ற வைஷாலி…!!! உனக்கு அறிவு இருக்கா..?? இல்லையா..???” என்று கோபமான குரலில் கேட்டான். 😡 🔥

இந்த இடத்தில் யாரோ ஒருவர் தன்னுடைய பெயரை சொல்லி அழைத்ததால், அவன் யார் என்று தெரிந்து கொள்வதற்காக திரும்பிப் பார்த்தாள் வைஷாலி. அவளுக்கு இருந்த போதையில் தன் முன்னே இருப்பது யார் என்று கூட அவளால் சரியாக பார்க்க முடியவில்லை. அதனால் மீண்டும் தன்னுடைய கண்களை கசக்கி விட்டு அவள் பார்க்க, அவள் முன்னே இருக்கும் மகேஷ் அவளுடைய கண்களுக்கு விஷ்ணுவைப் போல தெரிந்தான்.

அதனால் மகிழ்ந்த வைஷாலி வேகமாக அவனை கட்டிப்பிடித்துக் கொண்டு, “விஷ்ணு..!!! என் விஷ்ணு மாமா….!! அந்த ஷாலினிய விட்டுட்டு நீ எனக்காக வந்துட்டியா..??? எனக்கு தெரியும். என்னைக்காவது ஒரு நாள் உனக்கு என் லவ் புரியும்னு எனக்குக்கு தெரியும். தேங்க்யூ ஃபார் கம்மிங். மாமா.” என்று போதையில் சொன்னாள். 

முதலில் இவளை அந்த மோசமான இடத்தில் இருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்த மகேஷ் எங்கே தான் இப்போது விஷ்ணு இல்லை மகேஷ் என்று சொல்லிவிட்டால் இவள் தன்னுடன் வர மறுத்து வடுவாளோ என்று நினைத்து அமைதியாகவே இருந்தவன், அவளை வெளியே அழைத்துச் செல்ல முயன்றான். அப்போது அவர்களை வந்து தடுத்த அந்த பாரின் வெயிட்டர், அவள் இதுவரை குடித்த ஆல்கஹாலின் பில்லை அவனிடம் நீட்டினான்.

மகேஷ் அங்கே வருவதற்குள் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான உயர்தர மது பாட்டில்களை தனக்குள் இறக்கி இருந்தாள் வைஷாலி. வைஷாலிக்காக பில் செட்டில் செய்வதற்கு கண்டிப்பாக மகேஷிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் அவளுடைய ஹேண்ட் பேக் இல் இருந்த அவளுடைய டெபிட் கார்ட்டை வைத்து அந்த பில்லை செட்டில் செய்து விட்டு அவளை அழைத்து கொண்டு வெளிய வந்தான் மகேஷ். இன்னும் மகேஷ் ஐ விஷ்ணு என்று நினைத்த வைஷாலி அவனை அனைத்தபடியே இருந்தாள். 🤗

– நேசம் தொடரும்… 

You may also like

Leave a Comment

About Me

Featured