Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 238

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 238

by Thenaruvi Tamil Novels
38 views

அத்தியாயம் 238: மனசாட்சி இல்லாத மிருகம் (பார்ட் 2)

ரித்திகாவுடன் வெளியே சென்று கொண்டு இருந்த சித்தார்த், “இப்படி குதிக்கிறது சூப்பரா ஜாலியா இருக்கு. நம்ப இந்த மாதிரி வேற எங்கேயாவது போய் குதிக்கிற கேம் இருந்தா, குதிச்சு குதிச்சு விளையாடலாமா..???” என்று ஆர்வமான குரலில் கேட்டான். “இங்க இதே மாதிரி வேற கேம் இருக்கான்னு தெரியலையே..!!!” என்று ரித்திகா சித்தார்த்திடம் சொல்லி கொண்டு இருக்க; “இங்க நிறைய டிராப் அவுட் ஜோன், ட்ராக்லின் கேம்ஸ் எல்லாம் இருக்கு. வாங்க ஒவ்வொன்னா போய் பாக்கலாம். அவன் வயசுக்கு எல்லாத்துலயும் போய் அவனால ஏறி குதிக்க முடியும் உன்னாலயும், என்னாயும், முடியுமான்னு தான் தெரியல.” என்றான் வருண் ரித்திகாவிடம் .

“உங்களுக்கு தான் வயசு ஆயிடுச்சு. எனக்கெல்லாம் அந்த அளவுக்கு ஒன்னும் வயசாகல. நீங்க வேணா ஜான்வி மேடம் பேரன்ட்ஸ் மாதிரி அங்க உக்காந்து வெயிட் பண்ணுங்க. நான் சித்தார்த் கூட போய் எல்லா கேம்ஸையும் விளையாடிட்டு வரேன். எனக்கும் ரொம்ப ஜாலியா தான் இருக்கு. நான் இந்த மாதிரி கேம்ஸ் எல்லாம் விளையாடுனதே இல்ல.” என்று உற்சாகமான குரலில் சித்தார்த்தின் கையை பிடித்து கொண்டு சொன்னவள், விளையாட செல்வதற்கு தயாராக இருந்தாள். 

ரித்திகா சொன்னதைக் கேட்டு கடுப்பான வருண், “எனக்கு மட்டும் என்ன வயசு ஆயிடுச்சு..?? என்னாலையும் நல்லா விளையாட முடியும். நானும் உங்க கூட வரேன்.” என்று வீம்பிற்கு சொன்னவன்  ரித்திகாவையும் , சித்தார்த்தையையும், அழைத்துக் கொண்டு சென்றான்.

பிரவீனின் வீட்டில்…

பிரவீனின் அறையில் சுய நினைவின்றி பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த லக்ஷனாவை செக் செய்து கொண்டு இருந்தார் பிரவீனின் ஃபேமிலி டாக்டர். லக்ஷனாவின் இந்த நிலையை பார்க்கும்போது அவருக்கே அவளை நினைத்து மிகவும் பரிதாபமாக இருந்தது. அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது பிரவீன் தான் என்று அவருக்கே தெரியும் போது, லக்ஷனாவிற்கு என்ன ஆனது என்று வாயைத் திறந்து கேட்பதற்கு கூட அவருக்கு தைரியம் வரவில்லை அதனால், அவளுக்கு தேவையான ட்ரீட்மென்ட் அனைத்தையும் செய்துவிட்டு அவள்   மிகவும் வீக்காக இருந்ததால், அவளுக்கு குளுக்கோஸ் டிரிப்ஸ்சை போட்டுவிட்டு, வெளியில் தெரிந்த அவளுடைய காயங்களை சுத்தம் செய்து ட்ரெஸ்ஸிங் செய்துவிட்டு, “இனிமே இவங்கள கொஞ்சம் கேர்ஃபுல்லா பாத்துக்கோங்க. ஆல்ரெடி இவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. இந்த ட்ரிப்ஸ் முடிஞ்ச உடனே கரெக்டா இத பார்த்து கழட்டி விட்டுருங்க. வெளியில இருக்கிற காயம் பெருசா தெரியலனாலும் கொஞ்சம் ஆழமா தான் இருக்கு. சோ அது சீக்கிரம் கியூர் ஆகுறதுக்கும், பெயின் இருந்தா சாப்பிடறதுக்கு பெயின் கிலர்ஸும், சில வைட்டமின் டேப்லெட்சும் எழுதி தரேன் அதெல்லாம் அவங்களுக்கு கரெக்டா குடுங்க.” என்று அபர்ணாவை பார்த்து சொன்ன டாக்டர் அவளிடம் பிரிஸ்கிரிப்ஷனை எழுதியும் கொடுத்தார். 

அதை பெற்று கொண்ட அபர்ணா, “நான் இவங்கள பக்கத்துல இருந்து நல்லா பாத்துக்குறேன் டாக்டர். இந்த ட்ரிப்ஸ் ஐ எப்படி கழட்றதுன்னு மட்டும் எனக்கு சொல்லிக் கொடுத்துட்டு போங்க.” என்று டாக்டரிடம் தனக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கேட்டுக்கொண்டு அவரை அனுப்பி வைத்தாள். அந்த டாக்டரின் பின்னே வேகமாக சென்ற பிரவீன், “இங்க நடந்ததை இந்த வீட்டை கேட்ட விட்டு வெளியில் போகும் போது அப்படியே மறந்துட்டு போயிடுங்க. உங்களுக்கு சேர வேண்டியது டைரக்டா உங்க பேங்க் அக்கவுண்டுக்கு வந்துரும்.” என்று கடுமையான குரலில் சொன்னான். 

அவன் பேசிய விதத்தில் பயந்து போன அந்த டாக்டர், “இத்தனை வருஷமா உங்க ஃபேமிலிக்கு நான் ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கேன். உங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்கு தெரியாதா சார்..??? யாராவது நான் இங்க ஏன் வந்தேன்னு கேட்டா தேவி மேடத்துக்கு ஜென்ரல் செக்கப் -ன்னு தான் சொல்லுவேன்.” என்று தயங்கி தயங்கி சொன்னார். “அந்த பயம் இருக்கட்டும்.” என்று சொன்ன பிரவீன் மீண்டும் தன்னுடைய அறைக்குள் சென்று விட்டான். 

மீண்டும் பிரவீன் அந்த அறைக்குள் வருவதை பார்த்து கடுப்பான அபர்ணா, “ப்ளீஸ் பிரவீன் அண்ணா, அவங்க சரியாகற வரைக்கும் நீங்க இந்த ரூம் பக்கமே வராதீங்க. அவங்களுக்கு மயக்கம் தெளியவே கொஞ்ச நேரம் ஆகும்னு டாக்டர் சொன்னாரு. அதுவரைக்கும் ஆவது அவங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்.” என்று எரிச்சலான குரலில் சொன்னாள். 😒 

அவளுக்கு தன்னுடைய பிரவீன் அண்ணனை மிகவும் பிடிக்கும் தான். அவன் பேசிய வார்த்தைக்கு இதுவரை அவள் மறுவார்த்தை பேசியது இல்லை எனினும், அவன் தன் முன்னே செய்யும் இது போன்ற தவறை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முதன் முறையாக தன்னுடைய தங்கை தன் மீது கோபப்படுவதை பார்த்த பிரவீன், சிறு சிறுவ வருத்தத்துடன் தன்னுடைய அறையில் இருந்து வெளியே சென்று கெஸ்ட் ரூமில் தங்கிக் கொண்டான்.

ரித்திகாவின் வீட்டில்…

வருனும், ரித்திகாவும், இங்கே இருந்து கிளம்பி சென்று வெகு நேரம் ஆன பின்பு தான் விஷ்ணு தூக்கத்தில் இருந்து கண் விழித்தான். தூங்கும் அவனை தொந்தரவு செய்து எழுப்ப வேண்டாம் என்று நினைத்த ரித்திகாவின் பெற்றோர்களும் அவனை இதுவரை எழுப்பி இருக்கவில்லை. அவன் எழுந்து அமர்ந்து இருப்பதை கவனித்த சுதாகர், “என்ன விஷ்ணு மத்தியானம் தான் சீக்கிரமா எந்திரிப்பேன்னு நினைச்சேன். அதுக்குள்ள எந்திரிச்சிட்ட..!!!” என்று சொல்லி நக்கல் அடித்தார். 😂 😂 😂

“நானும் ஆப்டர்நூன் தான் வேக் அப் ஆகலாம்ன்னு இருந்தேன். பட் நான் அப்படி பண்ணா மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் ஸ்கிப் ஆகிடும்ல்ல… நான் எப்படி அதை மிஸ் பண்ணுவேன் அதான் சீக்கிரமா எந்திரிச்சிட்டேன்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 😁 😁 😁 😁

 அவன் சொன்னதைக் கேட்டு தானும் சிரித்த சுதாகர், “அது சரி போய் பிரஷ் பண்ணிட்டு வா. சாப்பாடு ரெடியா இருக்கு சாப்பிடலாம். இல்லைனா காபி டீ பூஸ்ட் ஏதாவது வேணும்னா உள்ள போய் அம்மாகிட்ட கேளு போட்டு தரவா. ஷாலினியும் கிச்சன்ல தான் இருக்கா.” என்றார். அவர் சொன்னதைக் கேட்டு கிச்சனுக்குள் சென்ற விஷ்ணு அங்கே முன்னே நின்று கொண்டு இருந்த ஷாலினியின் இடுப்பை லேசாக கிள்ளியவன் எதுவும் தெரியாதவனை போல் ரேவதியின் அருகே சென்று, “குட் மார்னிங் அம்மா. ஒரு காபி கிடைக்குமா…??” என்று உரிமையாக கேட்டான். ☕

ரேவதியின் முன்பே அவன் செய்த வேலையால் கடுப்பான ஷாலினி, இவன் பண்ற வேலைக்கு உனக்கெல்லாம் பச்ச தண்ணி கூட கொடுக்க கூடாது மா. இவனுக்கு எல்ல்லாம் காபி ஒன்னு தான் கேடு.” என்று எரிச்சலான குரலில் சொன்னாள். 😒 அவள் தன்னை ரேவதியிடம் குறை கூற தொடங்கிய உடனே தன்னுடைய முகத்தை அப்பாவி குழந்தையை போல வைத்து கொண்ட விஷ்ணு, “பாருங்க அம்மா இவ எப்ப பாத்தாலும் என்னை திட்டிக்கிட்டே இருக்கா. இவ வர வர மனசாட்சி இல்லாத மிருகமா மாறிக்கிட்டே இருக்கா. தூங்கி எந்திரிச்சு வந்து காபி கேட்டது ஒரு குத்தமா..???” என்று சோகமான குரலில் கேட்டான். 😰

விஷ்ணுவின் நடிப்பை நம்பிய ரேவதி, “ஏன் டி இவன திட்டிட்டே இருக்க…???” என்று ஷாலினிடம் கேட்டாள். “அம்மா உங்களுக்கு அவன பத்தி தெரியாது. அவன் சரியான திருட்டு பையன். அவன் என்ன பண்ணான்னு சொன்னா, நீங்களே அவனை திட்டுவீங்க.” என்று எரிச்சலான குரலில் சொன்னாள் ஷாலினி. 😒 “அப்படி அவன் உன்ன என்ன டி பண்ணிட்டான்…??” என்று ரேவதியும் அவள் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல் கேட்டாள். ரேவதி ஷாலினியை பார்த்து பேசிக்கொண்டு இருக்க ரேவதியின் பின்னே நின்று கொண்டு இருந்த விஷ்ணு சொல்லாதே என்று தன்னுடைகண்களால் ஷாலினி இடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.

அதனால் அவன் பிழைத்துப் போகட்டும் என்று நினைத்த ஷாலினி, “ஒன்னும் இல்ல பரவால்ல விடுங்க.” என்று ரேவதியிடம் சொல்லிவிட்டாள். அதனால், “உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்ல. விஷ்ணு நீ போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாப்பா. நான் உனக்கு காபி போட்டு வைக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு காபி போட தொடங்கினாள் ரேவதி. 

ரெப்ரெஷ் ஆகிவிட்டு அங்கே வந்த விஷ்ணு தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர் ஒருவருக்கு கால் செய்து தன்னுடைய அம்மாவிடம் கேட்டு தனக்கான ஆடையை வாங்கி கொண்டு வரும்படி  சொன்னவன் அதை பெற்று கொண்டு குளித்து தயாராகி சாப்பிடுவதற்காக அமர்ந்து ஷாலினியுடன் இணைந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான்.

அப்போது ரேவதியிடம் சொல்லிவிட்டு ஒரு பையை தன் கையில் எடுத்துக்கொண்டு தான் மளிகை சாமான்கள் ஐ வாங்கிவிட்டு வருவதாக சொல்லி வெளியே கிளம்பு முயன்றார். அப்போது அவரை தடுத்த ஷாலினி, “அப்பா.. அப்பா.. இருங்க. நானும் சில ஐட்டம்ஸ் எல்லாம் வாங்கணும். அதனால நானும் உங்க கூட வரேன். நம்ம ரித்திகா அக்காவோட ஸ்கூட்டியை எடுத்துட்டு போலாம். நீங்க தனியா பஸ்ல போக வேண்டாம்.” என்று பாசத்துடன் சொன்னாள். 

அதனால், “சரி மா நீ சாப்பிட்டு வா. நம்ப சேந்தே போகலாம்.” என்று சொன்ன சுதாகர் சோபாவில் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டார். சுதாகர் ஐ பார்த்த விஷ்ணு, “எதுக்கு அப்பா நீங்க அடிக்கிற வெயில்ல இப்படி வெளியில போய் கஷ்டப்படுறீங்க..??? உங்களுக்கு என்ன வேணும்னு ஒரு லிஸ்ட்டை மட்டும் எழுதி தாங்க. நானும், ஷாலினியும், ரித்திகா அக்காவோட ஸ்கூட்டியை எடுத்துக்கிட்டு போய் வாங்கிட்டு வந்துறோம்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 😁 😁 😁

அவனுடைய அந்த சிரிப்பின் அர்த்தத்தை நன்றாக புரிந்து கொண்ட சுதாகர், “பரவால்ல விஷ்ணு. எங்க வீட்டுக்கு கெஸ்ட்டா வந்த உன்ன இந்த மாதிரி எல்லாம் வேலை வாங்குனா, உங்க அம்மா எங்களை பத்தி என்ன நினைப்பாங்க..???? நானும் ஷாலினியுமே போய் வாங்கிட்டு வந்துடறோம்.” என்று உறுதியான குரலில் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு ஷாக் ஆனவனை போல் நடித்த விஷ்ணு  தன்னுடைய நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு அவன் பர்பாமென்ட்ரி ஸ்டார்ட் செய்தவன், “என்ன அப்பா நீங்க என்ன பாத்து பொசுக்குன்னு உங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட் என்று சொல்லிட்டீங்க நான் இந்த வீட்டு பையனா தான் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கேன் போல… நீங்க என்ன ஒரே செகண்ட்ல பிரிச்சு பேசிட்டீங்க… இது எனக்கு எவ்வளவு வருத்தமா இருக்கு தெரியுமா….???” என்றவன், தன்னுடைய கண்களில் இருந்து வராத கண்ணீரை பிடித்து விட்டு எம். ஜி. ஆர்.’ சிவாஜி ஐ எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு பெரியதாக நடித்த வைத்தான்.

அவன் பேசியதை கேட்டு லேசாக புன்னகைத்த சுதாகர் “சரிப்பா நீயும், ஷாலினியுமே, போயிட்டு வாங்க. அதுக்கு ஏன் இவ்ளோ லெந்தியா டயலாக் பேசுற…???” என்று கிண்டலாக கேட்டார். அப்போதும் அவரைக் கண்டு வெட்கமின்றி புன்னகைத்தான் விஷ்ணு.

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured