Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 209

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 209

by Thenaruvi Tamil Novels
43 views

அத்தியாயம் 209

டாக்டர் கொடுத்த மருந்துகளை ஜனனியின் குழந்தைகளான வர்ணிகா மற்றும் ஸ்வஸ்திகாவிற்கு கொடுத்து அவர்களை தூங்க வைத்த லிண்டா சோகமே உருவாக ஒரு ஓரமாக அமர்ந்து தன் கையில் இருந்த பாலை  சுவற்றில் அடித்து தனியாக விளையாடிக் கொண்டு இருந்த தன் மகன் மகிழனை பாவமாக பார்த்தாள்‌.

அவன் அருகில் சென்று அமர்ந்த லிண்டா “வெளிய சித்தார்த்தும் ஆருத்ராவும் இருப்பாங்களே.. நீ போய் அவங்க ரெண்டு பேர் கூடயும் விளையாடலாமே மகிழ்.‌.. ஏன் இங்க வந்து தனியா ஒக்காந்து இருக்க?” என்று கேட்க,

அதுவரை தனது அனைத்து எமோஷன்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கே அமர்ந்து இருந்த மகிழன் தன் கையில் இருந்த பாலை தூக்கி எறிந்துவிட்டு லிண்டாவின் மடியில் படுத்துக் கொண்டு “சித்தார்த் அண்ணாவும் ஆரூ அக்காவும் என் கூட விளையாட வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க மம்மி. ஆரு அக்கா அழுதுகிட்டே இருக்கா. சித்தார்த் அண்ணா யார் கூடவும் பேசவே மாட்டேங்கிறான்.  அவங்கள பார்த்தா எனக்கும் அழுகா அழுகையா வருது. அதனால தான் நான் இங்க தனியா வந்து விளையாடிட்டு இருக்கேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு மம்மி. பிக் மம்மி ஏன் இன்னும் வீட்டுக்கு வரல?  அவங்களுக்கு என்ன ஆச்சு? நானும் சித்து அண்ணா கிட்ட கேட்டு கேட்டு பார்க்கிறேன்.. அவன் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறான். இனிமே கிளாரா ஆன்ட்டி வர மாட்டாங்கன்னு ஆரு அக்கா சொன்னா. எல்லாருக்கும் என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் இப்படி sadஆ இருக்காங்க? இவங்க எல்லாரையும் பார்க்கும்போது எனக்கும் sadஆ இருக்கு. எனக்கு அழுக அழுகையா வருது மம்மி.” என்று தனது மழலை குரலில் சொல்லிவிட்டு அழுதான்.

இன்னும் தானே நடந்த அனைத்திலும் இருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் போது இந்த குழந்தையை என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் வெறுமனே தன் மடியில் படுத்து கிடந்த மகிழனின் கேசத்தை மெதுவாக வருடிய லிண்டா “கிளாரா ரொம்ப நாள் வாழ போறது இல்லைன்னு ஏற்கனவே அவங்களோட தலையில எழுதி இருந்துச்சு. இப்ப இல்லைன்னாலும் இன்னும் கொஞ்ச நாள்ல அவங்களோட டிசிஸ் அவங்கள மொத்தமா கொன்னு இருக்கும். ஆனா அவங்களோட டெத் இவ்ளோ சீக்கிரம் இந்த மாதிரி மோசமான சுச்சுவேஷன் நடந்திருக்கக் கூடாது.

எப்பையுமே கிளாரா இந்த குடும்பத்துக்கு லாயலா இருந்திருக்காங்க. பிரிட்டோவும் அப்படித்தான். கொஞ்ச நாளாவது அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழட்டும்னு தானே நாங்க எல்லாரும் சேர்ந்து அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்.. அதுக்குள்ள ஏன் இப்படி ஆகணும்?

அவங்க சாகணும்னு விதி இருந்தாலும் இந்த சின்ன புள்ளைங்க கண்ணுக்கு முன்னாடியே சாகணும்? சித்தார்த் அவன் அம்மா சாகுறதையும் கண்ணுல பாத்துட்டான். இரண்டாவது அவனுக்கு அம்மாவா வந்த தேன்மொழி உயிருக்கு போராடுறதையும் கண்ணுல பாத்துட்டான். எப்பயும் ஷேடோ மாதிரி அவங்க கூடயே இருந்து அவங்கள ப்ரொடெக்ட் பண்ணிட்டு இருந்த கிளாரா சாகுறதையும் கண்ணுல பாத்துட்டான்.

நடக்கிறது எல்லாத்தையும் பார்த்து பார்த்து இந்த சின்ன வயசுலையே அவனோட மனசு இறுகி போயிடுச்சோ என்னமோ தெரியல..  சோகத்திலும் பயத்திலையும் மகிழனும், ஆருத்ராவும்மாவது மனசு விட்டு அழறாங்க. பாவம் சித்தார்த்துக்கு அது கூட முடியாம போயிடுச்சு.

கடவுளே.. எப்படியோ ஒரு வழியா எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துருச்சு. இதுக்கு அப்புறமாவது எங்களை கொஞ்சமாவது ஹாப்பியா இருக்க விடுங்க. இந்த குழந்தைகளோட லைஃப்ல இவ்ளோ சைல்ட்ஹூட் ட்ராமாஸ் தேவையில்லை. ஃபியூச்சர்ல அவங்க நினைச்சு பார்த்து cherish பண்ற மாதிரி அவங்களுக்கு நிறைய ஹாப்பி மெமரிஸ் குடுங்க. நான் உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்!” என்று நினைத்து கண்ணீர் சிந்தினாள்.

தனக்கு ஆறுதல் சொல்லாமல் தன் அம்மாவும் தன்னுடன் சேர்ந்து அழுததால் தன் தலையை தூக்கி அவளை பார்த்த மகிழன் “என்ன மம்மி நீங்களும் அழறீங்களா ! நான் உங்களை அழ வச்சுட்டனா? சாரி மம்மி!” என்று சொல்லிவிட்டு லிண்டாவை கட்டிப்பிடித்துக் கொண்டான்.

“இல்ல இல்ல பேபி.. மம்மி உன்னால அழல. இங்க பாரு மம்மி சொல்றதை கேளு.. டைனிங் டேபிள்ல ஃபுட் ரெடியா இருக்கு. நீ வெளிய போய் சித்தார்த் அண்ணாவையும், ஆருத்ரா அக்காவையும் கூட்டிட்டு போயி டைனிங் டேபிள்ல உட்கார வை. உனக்கு பசிக்குதுன்னு சொல்லி அவங்களயும் சாப்பிட சொல்லு. அங்க சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்னு சொல்லு. அப்ப தான் அவங்க சாப்பிடுவாங்க.  நீங்க மூணு பேரும் சாப்பிட ஸ்டார்ட் பண்ணதுக்கு அப்புறமா மம்மி வரேன் ஓகேவா?” என்று கேட்க, உடனே தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்ற மகிழன் “ஓகே மம்மி!” என்று சொல்லிவிட்டு வெளியே ஓடினான்.

அவன் சென்ற பிறகு நேராக அர்ஜுன் இருந்த ரூமிற்கு சென்று கதவை தட்டிய லிண்டா “ஏன் ப்ரோ இப்படி எல்லாம் பண்றீங்க? நீங்க கோமால இருந்து ரெக்கவர் ஆகி முழுசா ரெண்டு வருஷம் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படி குடிச்சுக்கிட்டே இருந்தா எப்படி? உங்கள ஆல்கஹால் பக்கம் போகவே கூடாதுன்னு டாக்டர் சொன்னதை எல்லாம் மறந்துட்டீங்களா?

இதெல்லாம் தேன்மொழிக்கு தெரிஞ்சா கண்டிப்பாக அவங்க இதுக்காகவும் சேர்த்து உங்க மேல கோவப்படுவாங்க. ஆல்ரெடி அவங்களோட கண்டிஷன் கிரிட்டிக்கலா இருக்கு. நீங்க இப்படியே இருந்து உங்களுக்கு ஏதாவது ஆயிட்டா, அது எல்லாத்தையும் தாங்குற சக்தி எங்களுக்கு இல்ல ப்ரோ. ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணி எங்களை மெண்டல் டார்ச்சர் பண்ணாதீங்க.

வெளிய வாங்க ப்ளீஸ்.‌ ஆருத்ரா அழுதுகிட்டே இருக்கா. அவ கிட்ட ஏதாவது பேசுங்க. அவள சமாதானப்படுத்த ட்ரை பண்ணுங்க. நீங்க தான் எங்க எல்லாரையும் பார்த்துக்கணும். நீங்களே இப்படி எல்லாம் பொறுப்பில்லாம பண்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்ல.” என்று தனது தொண்டை தண்ணிர் வற்றும் அளவிற்கு வெளியே நின்று அவனிடம் கெஞ்சி பார்த்தாள்.

ஆனால் உள்ளே இருந்து ஒரு ரெஸ்பான்ஸும் வரவில்லை. நன்றாக குடித்துவிட்டு அர்ஜுன் தரையில் மட்டையாகிக் கிடந்தான். தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்று கூட அவனுக்கு தெரியாது. இதில் லிண்டா பேசுவது எல்லாம் அவன் காதில் எங்கே விழுக போகிறது?

அங்கே ஹாஸ்பிடலில் தேன்மொழி ஒரு பக்கம் அவளும் தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்து மற்றவர்களையும் அவள் கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் மயக்கம் தெளிந்து இருந்த பிரிட்டோ தன்னை கட்டிப்பிடித்து அழுது கொண்டு இருந்த ஜனனியின் தோள்களை பிடித்துக் கொண்டு “கடவுள்ன்னு நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் நான் எதுவும் செஞ்சுடல ஜனனி. இது என்னோட டியூட்டி. நான் அதைத்‌ தான் செஞ்சிருக்கேன். நீங்க எனக்காக இவ்ளோ எமோஷனல் ஆகி அழ தேவையில்லை. அதான் எனக்கு கான்சியஸ் வந்துருச்சுல.. மத்தது எல்லாம் தானா சரி ஆயிடும்.” என்று மெல்லிய குரலில் சொன்னான்.

உடனே அவனை விட்டு பிரிந்த ஜனனி “நீங்க சொன்னது எல்லாமே கரெக்டு தான் பிரிட்டோ. ஆனா நீங்க சொல்ற அளவுக்கு இது எனக்கு சாதாரண விஷயம் இல்லை. எனக்கு நீங்க ஒரு நியூ லைஃப் கொடுத்து இருக்கீங்க. என் குழந்தைங்க கிட்ட அவங்க வளர்ந்ததுக்கு அப்புறம் நான் எல்லாத்தையுமே அவங்களுக்கு சொல்லுவேன். லைஃப் லாங் நாங்க உங்களுக்கு கடன்பட்டு இருக்கோம்.” என்றாள்.

தங்களுக்கானவர்களை நல்ல முறையில் நடத்துவதில் அர்ஜுனனின் குடும்பத்தினரை மிஞ்ச யாராலும் முடியாது என்று பிரிட்டோவிற்கும் நன்றாக தெரியும். அவர்கள் அவனையும் அந்த குடும்பத்தில் ஒருத்தனாக தான் பார்த்தார்கள். அதனால் தான் அவன் அவர்களுக்காக தன் உயிரைக் கூட கொடுக்க தயாராக இருந்தான்.

“அட ஜனனி நடந்தது எல்லாத்தையும் மறந்துட்டு உங்க வாழ்க்கைய பாருங்க. இத போய் தெரிஞ்சுக்கிட்டு பாவம் அந்த குழந்தைக்கு என்ன பண்ண போறாங்க? இதையெல்லாம் கெட்ட கனவு மாதிரி நினைச்சு மறந்திடனும். லைஃப் லாங் எல்லாத்தையும் மனசுல வச்சு கஷ்டப்பட்டு இருக்க கூடாது. நீங்க அதை விடுங்க.. ஆமா கிளாரா எங்க? நான் ரொம்ப நேரமா அவள பாக்கவே இல்ல. எனக்கு கான்ஷியஸ் வந்துருச்சுன்னு அவளுக்கு இன்னும் தெரியாதா? அவ ஏன் இன்னும் வந்து என்ன பாக்கவே இல்ல?” என்று ஆச்சரியமாக கேட்டான் பிரிட்டோ.

அவன் தன் கண்களை திறந்தவுடன் முதலில் பார்க்க விரும்பியது கிளாரா வை தான். ஆனால் அவனுக்கு முன் வந்து நின்றதோ ஜனனி. அவளை பார்த்தவுடன் அவனுக்கு குழந்தைகளைப் பற்றிய ஞாபகம் வந்ததால் இவ்வளவு நேரமாக அவன் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தாலும் அவனது இதயம் முழுவதும் கிளாராவை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தது.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured