அத்தியாயம் 232 ரித்திகாவை முத்தமிட்ட வருண் (பார்ட் 2)
அதுவரை தான் தன்னுடைய மொபைல் போனை சீரியஸாக பார்த்து கொண்டு இருப்பதைப் போல் பாவலா செய்து கொண்டு இருந்த வருண், அவர்கள் பேசியது, அங்கு நடப்பது, என அனைத்தையும் தெளிவாக கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அதனால் ரித்திகா தன்னிடம் வந்து தன்னையும் விளையாடச் சொல்லி கேட்பதற்குள் அதை தவிர்த்து விட நினைத்தவன், வராத கால் ஐ எடுத்து பேசுவதைப் போல வேண்டுமென்றே தானாக சிவாவிற்கு கால் செய்து எதை எதையோ பற்றி கேட்டு பேச தொடங்கி விட்டான்.
“இப்ப என்ன டா பண்றது..??” என்பது போல ரித்திகா விஷ்ணுவை பார்க்க, “அவர விடுங்க அண்ணி. நம்ம விளையாடுவோம். நீங்க போய் பேப்பரும், பென்ணும் எடுத்துட்டு வாங்க. நான் போய் சித்தார்த்தையும், அப்பாவையும், கூட்டிட்டு வரேன்.” என்றவன் அனைவரையும் அசெம்பிள் செய்து சில சிறிய சீட்டுகளில் ராணி, ராஜா, திருடன், மந்திரி, சேவகன், போலீஸ் என்று ஒவ்வொரு பெயராக எழுதி அதை மடித்து வைத்துவிட்டு; ஒரு நோட்டில் அந்த கேமில் பார்ட்டிசிபேட் செய்யும் ஒவ்வொரு பிளேயர்களின் பெயரையும் எழுதி அவர்களுக்கு சரியாக மார்க் போடும் உன்னதமான பணியை தானே செய்ய முடிவெடுத்தான்.
ரேவதியும், ஷாலினியும், கூட கையில் டீ மற்றும் போண்டாக்களுடன் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டனர். அவர்கள் தன்னை விட்டுவிட்டு விளையாட தொடங்கிவிட்டதை கவனித்த வருண் சிவாவிடம்; “டேய் நான் உனக்கு அப்புறம் கூப்பிடுறேன். நாளைக்குள்ள நான் சொன்னது எல்லாத்தையும் ரெடி பண்ணிவை.” என்று சும்மா ஃபார்மாலிட்டிக்காக சொல்லிவிட்டு அந்த கால் ஐ கட் தான்.
அவர்கள் ஹாலில் உள்ள சோபாவின் முன்னே தரையில் வட்டமாக அமர்ந்து இருந்தார்கள். ரித்திகாவின் அருகே அமர்ந்து இருந்தான் சித்தார்த். வருண் போன் பேசி முடித்து விட்டதை கவனித்த ரேவதி, ஷாலினியிடம் டீயையும் போண்டாவையும் கொடுத்து விட்டு வருமாறு சொல்லி அனுப்பி வைத்தாள். ஷாலினியிடம் “தேங்க்ஸ்” என்ற வருண் அதை பெற்றுக் கொண்டான். சித்தார்த் தன் கைகளில் உள்ள சீட்டுகளை குலுக்கி கீழே போட விரைந்து வந்து ஒவ்வொருவரும் தங்களுக்கான சீட்டை வேகமாக எடுத்துக் கொண்டனர். அதனால் மீதம் இருந்த சீட்டை எடுத்துக் கொண்டான். சித்தார்த்தின் சீட்டில் போலீஸ் என்று வந்து இருந்தது. அதை எழுத்து கூட்டி படித்த சித்தார்த், “நான் தான் போலீஸ். நான் இப்போ திருடன் யாருன்னு கண்டுபிடிக்க போறேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னான். 😍 😁 😁 😁
விஷ்ணு: “நான் தான் திருடன். எங்க என்ன பிடி பாப்போம்.” என்று வேண்டுமென்றே விளையாட்டுக்காக சொன்னான். 😂 😂 😂
அதனால் ஷாலினியும் வேண்டுமென்று, “இல்ல நான் தான் திருடன்.” என்று சொல்லி சித்தார்த்திடம் விளையாடினாள். 😂 😂 😂 சித்தார்த் அவர்கள் இருவரையும் குழப்பத்துடன் மாறி மாறி பார்த்துக்கொண்டு இருந்தான். 🙄 அதனால் தன்னுடைய மகனுக்கு உதவ முன்வந்த ரித்திகா, “என்ன என் பையன எல்லாரும் சேர்ந்து சீட் பண்ண பாக்குறீங்களா..?? இனிமே நானும் அவனும் ஒரே டீம் நாங்க ஒன்னா விளையாடுறோம். திருடன் யாருன்னு நான் கண்டுபிடிக்கிறேன்.” என்றாள்.
விஷ்ணு: “அண்ணி அதெல்லாம் போங்கு. அப்ப உங்களுக்குள்ளே திருடன் போலீஸ் வந்துடுச்சுன்னா நீங்க என்ன பண்ணுவீங்க..???” என்று லாஜிக்காக ஒரு கேள்வியை கேட்டான்.
ரித்திகா “அதெல்லாம் திருடனும் போலீசும் ஒன்னுக்குள்ள ஒன்னு தானே.. நாங்க சரண்டர் ஆகி கொள்வோம் பரவாயில்லை. இப்ப நான் திருடன் யாருன்னு சொல்றேன்.” என்றவள், ஒவ்வொருவரின் முகத்தையும் ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். பின் விஷ்ணுவை பார்த்து சிரித்தவள், ”டேய் விஷ்ணு நீதானே திருடன்.. எனக்கு தெரியும். உன்னோட திருட்டு முழியை பார்த்தாலே நல்லா தெரியுது டா. உண்மைய சொல்லு.” என்றாள்.
அவளைப் பார்த்து சிரித்த விஷ்ணு; தன் கையில் இருந்து சீட்டை விரித்து கீழே பொதுவாக போட்டவன், “ஆமா அண்ணி நான் தான் திருடன். கரெக்டா கண்டுபிடிச்சீங்க சூப்பர் போங்க.” என்றான். தனக்காக தன்னுடைய அம்மா திருடனை பிடித்துக் கொடுத்ததை நினைத்து மிகவும் மகிழ்ந்தான் சித்தார்த். 😍 😁 😁 😁 அதனால் “சூப்பர் நாங்க திருடனை புடிச்சிட்டோம்.” என்று சொல்லிவிட்டு தன்னுடைய கைகளை தட்டி சிரித்தான். 😍 😂 😂 😂
வருணிற்கு தன்னுடைய மகனை இத்தனை மகிழ்ச்சியாக பார்ப்பதற்கு மிகவும் பிடித்து இருந்தது. அதனால் அவனையே ரசித்து பார்த்து கொண்டு இருந்தான். 😍 அதை கவனித்த சுதாகர், “நீங்களும் வாங்க மாப்பிள்ளை விளையாடலாம்.” என்று வருணை அழைத்தார். ஆனால் அவர் கேட்டதற்கு மறுத்துவிட்டான் வருண். தன்னுடைய அப்பாவுடன் விளையாட வேண்டும் என்ற ஆசை சித்தார்த்திற்கும் இருந்தது. அதனால் அவனும் “வாங்க அப்பா விளையாடலாம்.” என்று அழைத்தான். சித்தார்த்தே சொல்லிவிட்ட உடன் வருணால் அவனிடம் எப்படி மறுபேச்சு பேச முடியும் அதனால் “ஓகே நானும் வரேன்.” என்றவன், சித்தார்த்தின் அருகே சென்று அமர்ந்து கொண்டான்.
இப்போது புதிதாக வருணும் தங்களுடைய கேமில் இணைந்து விட்டதால் அவனுக்காக புதிதாக ஒரு கேரக்டரை உருவாக்கினான் விஷ்ணு. முதலில் ஆர்வம் இன்றி விளையாடிக் கொண்டு இருந்த வருண் தன்னுடைய மகனின் முகத்தில் இருக்கும் புன்னகையை பார்த்து தானும் உள்ளம் மகிழ்ந்தவன், ரித்திகா சொன்னதை போல் தனக்குள் இருக்கும் சிறு குழந்தையை வெளியே கொண்டு வந்து அவனும் சகஜமாக விளையாட தொடங்கினான். 😍 🥰 அதை கவனித்த விஷ்ணு வழக்கம்போல் அவற்றை போட்டோக்களாகவும் சிறிய வீடியோவாகவும் படம்் பிடித்தவன், தன்னுடைய twitter அக்கவுண்டில் வருண் நாராயணன் குரூப்ஸ் இன் அபிஷியல் அக்கவுண்டையும் டேக் செய்து; அந்த போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு, “தி கிரேட் பிசினஸ் மேன் வருண் நாராயணன், தன்னுடைய மாமியார் வீட்டில் இருக்கும்போது கரண்ட் போனதால் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து ராஜா ராணி விளையாடிக் கொண்டு இருக்கிறார்.” என்ற கேப்சன் உடன் பதிவிட்டான். அவன் அதை பதிவிட்ட அடுத்த சில நொடிகளிலேயே அந்தச் செய்தி காட்டுத்தியாக உலகமெங்கும்் பரவியது.
அதில் வந்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வருண் தாங்கள் நினைத்ததை விட குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும் பாசமானவராகவும் இருக்கிறார் என்றும்; இவரைப் போன்ற ஒரு கணவர் கிடைத்ததற்கு ரித்திகா மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்றும், பதிவிட்டு தங்களுடைய அன்பை வருண் மற்றும் ரித்திகாவின் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் ஆக இணைய வழி தெரிவித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் மற்றவர்கள் யாரும் தங்களைப் பற்றி வைரல் ஆகி கொண்டு இருக்கும் இந்த செய்தியைப் பற்றி அறியாமல் மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டு இருந்தனர்.
ஆனால் இளைய தளத்தில் அந்நேரம் ராஜா ராணி விளையாடிய சிஏஓ என்ற ஹாஷ் டேக் பிரபலமாக ட்ரெண்டிங்கில் இருந்தது. இப்படியே அவர்கள் அனைவரும் தொடர்ந்து இரண்டு மணி நேரமாக விளையாடி கொண்டு இருந்தனர். பின் டின்னர் டைம் வந்து விட்டதால் அனைவரும் சாப்பிட முடித்தவுடன்; ரேவதி மற்றும் ஷாலினி, சித்தார்த் ரேவதியின் அறையிலும்; விஷ்ணுவும் சுதாகரும் ஹாலிலும்; வருணும் ரித்திகாவும் மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் ரித்திகா அறையில் படுத்து கொண்டனர்.
ரித்திகாவின் அறையில்…
ரித்திகா உள்ளே வரும்போது அவள் தன்னுடைய அறையின் கதவை சாத்திவிட்டு வந்ததால் வருண் வியர்வையில் நனைந்து இருந்தான். அதை கவனித்த ரித்திகா, கையில் வைத்திருந்த மெழுகுவர்த்தி அதை ஒரு பக்கம் நிற்க வைத்துவிட்டு சென்று ஜன்னலின் கதவை திறந்தாள். அந்த ஜன்னல் பெரியதாகவும் ரித்திகா கட்டிலிற்கு மிக அருகேயும் இருந்தது. வெளியில் இன்னும் கனமழை கொட்டிக்கொண்டு இருந்ததால் கரண்ட் வந்திருக்கவில்லை.
ரித்திகா அந்த ஜன்னலை திறந்து விடவும் ,வெளியே இருந்து மலைச்சாரலும் ஜில்லென்ற காற்றும் வருணையும் ரித்திகாவையும் தழுவி விட்டுச் சென்றது. அப்போது ரித்திகா பிண்ணியிருந்த பின்னலில் இருந்து வெளியே வந்த சிறு சிறு முடிகள் காற்றில் பறந்தன. அவற்றை அப்படி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பார்க்க அவள் தேவதை போல் வருணின் கண்களுக்கு தெரிந்தாள். அப்போது அவனுடைய மனதில், “யாரு டி நீ திடீர்னு என்னோட லைஃப் குள்ள வந்த. இப்பயும் நீ ஏன் வந்தன்னு தான் எனக்கு தோணுது. ஆனா நீ சும்மா இருக்காம ஒரு ஏஞ்சல் மாதிரி உன்னோட மேஜிக் ஐ என்னோட லைஃப்ல ஸ்பிரட் பண்ணி என்னோட டார்க்கா இருந்த லைஃபை கொஞ்சம் கொஞ்சமா கலர்ஃபுல்லா மாத்திக்கிட்டே இருக்க.
பட் இதை எப்படி எடுத்துக்கறதுன்னு எனக்கு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் உண்மை உன்கிட்ட ஸ்பெஷலா என்னமோ இருக்கு. உன்ன பாக்குற வரைக்கும் இந்த மாதிரி ஒரு பீல் எனக்கு யார் மேலயும் வந்ததில்லை. சில சமயம் உன்ன பார்த்தா கடுப்பாகுது. ஆனா சில சமயம் உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும்னு தோணுது. உன்ன எனக்கு புடிக்குதா இல்ல புடிக்கலையான்னே எனக்கு தெரியல. இது சரியா தப்பா இல்ல நான் என் ஜான்விக்கு பண்ற துரோகமா எனக்கு எதுவும் தெரியல.
ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் உன்னோட இந்த முகம் அது என்னை என்னமோ பண்ணுது அதை பாக்கும்போதெல்லாம் என் மனசுக்கு ரொம்ப்ப நிம்மதியா இருக்கு. உன்னையும் சித்தார்த்தையும் ஒண்ணா பாக்கும்போது எனக்கு ஒரு பக்கம் வயிறு எரிஞ்சாலும் இன்னொரு பக்கம் என்னோட ஃபேமிலி கம்ப்ளீட் ஆன மாதிரி தோணுது.” என்று தனக்குள் ரித்திகாவிடம் பேசிய வருண், ஒரு நொடியில் எதைப்பற்றியும் யோசிக்காமல் ரித்திகாவை பிடித்து இழுத்து பெட்டில் அமர வைத்து அவளுடைய உதட்டில் உணர்ச்சி பொங்க முத்தமிட தொடங்கியவன்; அவளை பெட்டில் தள்ளி அவள் மீது படர்ந்தான். 😍 🤗 😗 😘 👩❤️👨 இன்று சாயங்கால வேலையில் இருந்து அவன் ரித்திகாவின் குடும்பத்துடன் ஒன்றி போய் இருந்ததால், அவர்களிடம் இருந்து அவனுக்கு கிடைத்த அன்பும் அரவணைப்பும் வெகு நாளாக அவனுடைய மனதில் இருந்து அனைத்து பாரங்களும் கீழே இறக்கிவிட்டு அவனை ஒரு புது மனிதனாக புத்துணர்ச்சியுடன் உணரச் செய்ததால் ரித்திகாவை கண்டவுடன் அவனுடைய மனம் தடுமாறிி விட்டது. 😍 ☺️ 🥰 🔥
அவனுடைய இந்த வினோதமான திடீர் செய்கைகளால் குழம்பிய ரித்திகா, என்ன நடக்கிறது இங்கே என்பது போல ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் வருணை பார்த்துக்கொண்டே இருந்தாளே தவிர அவளால் வேறு எதுவும் செய்து விட முடியவில்லை.😍
மழையில்… நனைய வைத்தது ஒரு நாள்… 🌧️ ⛈️
அதில்… மயங்கினேன் 😍 ❤️
அலை… கரையை தீண்டிய திருநாள்… ☺️ 🥰
மனம்… கிரங்கினேன்..
நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)