Home FREE NOVELSஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 203

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 203

by Thenaruvi Tamil Novels
62 views

அத்தியாயம் 203

குண்டடிப்பட்டு சுனில் பிரிட்டோ இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக எமர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்யப்பட்டு இருக்க, இன்னொரு பக்கம் மயங்கி விழுந்த ஜன்னனிக்கும் காய்ச்சலில் தவித்துக் கொண்டு இருக்கும் அவளது குழந்தைகளுக்கும் டிரீட்மென்ட் நடந்து கொண்டு இருந்தது. இதற்கு இடையில் தேன்மொழிக்கு பிரசவ வலி வந்து அவள் லேபர் வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள்.  தான் ஒருவனால் தனது குடும்பத்திற்கு இத்தனை பிரச்சனைகளா? என நினைத்து மனம் உடைந்த அர்ஜுன் சோகத்தில் ஒரு ஓரமாக சென்று வெயிட்டிங் ஏரியாவில் இருந்த சேரில் அமர்ந்தான்.

இப்போது எங்கே சென்று யாரை முதலில் பார்ப்பது என்று கூட அவனுக்கு தெரியவில்லை. அவன் தன் முகத்தை மூடிக் கொண்டு இடிந்து போய் அமர்ந்து இருக்க, மீராவை சேஃபாக மற்றவர்களுடன் தாங்கள் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் விட்டு விட்டு வந்திருந்த மைக்கேல் அர்ஜுனின் அருகில் சென்று அமர்ந்து அவனது தோள்களில் கை வைத்து “நீ இப்ப தான் ரொம்ப ஸ்ட்ராங்க்கா இருக்கணும் அர்ஜுன்.” என்றான் மெல்லிய குரலில்.

அவன் குரல் கேட்டவுடன் கலங்கிய தன் கண்களை அவசரமாக துடைத்துக் கொண்ட அர்ஜுன் நேராக நிமிர்ந்து அமர்ந்து அவனை திரும்பி பார்த்து “மத்தவங்க எல்லாரும் எப்படி இருக்காங்க? அவங்க சேஃபா நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு போய்ட்டாங்களா? அங்க பைவ் டைம்ஸ் எக்ஸ்ட்ரா ப்ரொடெக்ஷன் கொடுக்க சொன்னேன். எல்லாம் ரெடியா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

ஆனால் இதற்கு மேலும் யாரேனும் ஒருவருக்கு தன்னால் கஷ்டம் வருவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆறுதலாக அவன் கைகளைப் பிடித்துக் கொண்ட மைக்கேல் “எல்லாரும் நல்லா இருக்காங்க அர்ஜுன். பட் ஆகாஷும், தேன் மொழியோட ஃபேமிலில இருக்குறவங்களும் தேன்மொழியை பாக்குறதுக்காக இங்க வந்திருக்காங்க. எல்லாரும் லேபர் வார்ட்டுல தான் இருக்காங்க. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் குழந்தை பிறக்கப்போகுது. இந்த டைம்ல நீ தேன்மொழி கூட தான இருக்கணும்.‌ அவங்களை தனியா விட்டுட்டு இங்க வந்து என்னடா பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டான்.

கண்களில் குற்ற உணர்ச்சியுடன் அவனைப் பார்த்த அர்ஜுன் “நீ சொல்றது கரெக்ட் தான் மைக். நான் இப்ப என் தேன்மொழி கூட தான் இருக்கணும். பட் நடந்தது எல்லாத்தையும் என்னால அப்படியே மறந்திட்டு என் பொண்டாட்டி பின்னாடி போய் செல்ஃபிஷா நிக்க முடியலடா.‌

என் தங்கச்சியையும், அவளோட குழந்தைகளையும் காப்பாத்த போய் அங்க பிரிட்டோவுக்கு ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு. என் பொண்டாட்டியையும் பிள்ளைகளையும் காப்பாத்துறதுக்காக கிளாரா அவ உயிரையே விட்டுட்டா.. இன்னொரு பக்கம் சுனிலை சந்தோஷ் சுட்டுட்டான்.  சுனில் மட்டும் நமக்கு ஹெல்ப் பண்ணலனா, நம்மளால சந்தோஷ் தான் நமக்கு பின்னாடி இருந்து இது எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கான்னு நம்மளால கண்டுபிடிச்சிருக்கவே முடியாதே..

இது எல்லாத்தையும் நினைச்சு பார்த்தா எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு டா. நம்ம ஆளுங்க யாருக்கும் எதுவும் ஆயிடக் கூடாதுன்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணேன். பட் கிளாராவோட உயிரே போயிடுச்சு. என் தங்கச்சி அவ புருஷன் செத்த சோகத்துல இருப்பா. அவளை என்ன சொல்லி நான் தேத்துறது?

பிரக்னண்டா இருக்கிற தேன்மொழியை ஹேப்பியா வச்சுக்கணும்னு தான் முக்கியமா இந்த ட்ரிப்பயே பிளான் பண்ணேன். பட் இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே டெலிவரி பெயிண்ட் வந்து அங்க அவ அந்த குழந்தையை பெத்தெடுக்க முடியாம துடிச்சிட்டு இருக்கா. எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு நான் அவ முன்னாடி போய் நிற்கிறது? எனக்கு அந்த தைரியம் இல்லடா.” என்று உடைந்த குரலில் விட்டால் அழுது விடுவேன் என்ற நிலையில் சொன்னான்.

அவன் பேசிக் கொண்டு இருக்கும்போது திடீரென அவனுக்கு இந்த மிஷினில் தனக்கு உதவுவதற்காக தங்களது சொந்த குழந்தைகளையும் கூட அழைத்து வந்த தனது ஃபிரண்ட்ஸ் பற்றி ஞாபகம் வர பதட்டத்துடன் மைக்கேலின் கையை பிடித்துக் கொண்ட அர்ஜுன் “ஜேசன் யாதவ் கிரண் ஜூன் எல்லாரும் எங்க? அவங்க எப்படி இருக்காங்க? கிரணோட குழந்தைங்க சேஃபா இருக்காங்களா?” என்று கேட்டான்.

ஆமாம் என்று தலையாட்டிய மைக்கேல் அர்ஜுனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “நான் மறுபடியும் சொல்றேன் அர்ஜுன். இப்ப நீ அதிகமா தேன்மொழியை பத்தி மட்டும் தான் யோசிக்கணும்.‌ உன் சுச்சுவேஷன் எனக்கு புரியுது. பட் இந்த மாதிரி சுச்சுவேஷன்ல எமோஷனல் ஆக கூடாதுன்னு உனக்கே நல்லா தெரியும். We did our best. Clara is already injured. அவளோட ஹெல்த் கண்டிஷனுக்கு இன்னும் ஒரு மாசம் கூட அவ உயிரோட இருந்திருக்க மாட்டா.

உன் ஃபேமிலியை காப்பாத்துறதுக்காக தன்னோட உயிரை பணயம் வைக்கிறது கிளாராவோட சாய்ஸ். அவ தன்னோட சொந்த விருப்பத்துல தான் அதை பண்ணி இருக்கா. நம்ம யாரும் அவளை அப்படி பண்ணச் சொல்லி ஃபோர்ஸ் பண்ணலையே.. And moreover it’s her duty to save your family. அங்க நானோ, இல்ல நீயோ இருந்தா கூட நாமளும் அதை தான் பண்ணி இருப்போம்.  சுனிலுக்கும், பிரிட்டோவுக்கும் கண்டிப்பா சரி ஆயிடும்.‌ சோ கண்டதை யோசிச்சு கில்டி ஃபீலிங்ல சுத்திட்டு இருக்கிறத விட்டுட்டு போய் தேன்மொழி சிஸ்டரை பாரு. She needs you now!” என்று அவனது மூளைக்கு உரைக்கும் படியாக சொன்னான்.

அவன் தன் மூளைக்கு உரைக்கும் படி அப்படி சொன்ன பிறகு தான் மன குழப்பங்களில் இருந்து வெளியே வந்த அர்ஜூன் உடனே எழுந்து லேபர் வார்டை நோக்கி நடக்க தொடங்கினான். தங்கள் அந்த டெரரிஸ்ட் கும்பலை மொத்தமாக வீழ்த்தி இருந்தாலும், அவர்களுடன் தொடர்புடையவர்களோ, இல்லை அந்த கும்பலின் வேறு ஏதேனும் ஒரு முக்கியமான தலைவனோ இன்னும் மீதம் உயிருடன் இருந்தால், அவர்களால் தங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வர வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்த மைக்கேல் அவர்கள் இருக்கும் அந்த மொத்த ஹாஸ்பிடல் ப்ளோரையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒரு படையையே பாதுகாப்பிற்காக இறக்கினான்.

அங்கே லேபர் வார்டில் தான் படுத்து இருந்த தலையணையை தனது இரண்டு கைகளாலும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருந்த தேன்மொழி “ஆஆஆஆ..!! அம்மா..!! ஆஆஆஆ… வலிக்குது! ஆஆஆஆ.. ப்ளீஸ் டாக்டர் ஏதாவது பண்ணுங்க!” என்று சொல்லி கதறி அழுது கொண்டு இருந்தாள்.

அவள் தமிழில் பேசியது அவர்களுக்கு புரியவில்லை என்றாலும் இந்த நேரத்தில் அவள் என்ன சொல்ல முயற்சிப்பால் என அவர்களை புரிந்து கொண்டு “try to push;  come on Mrs Arjun push!” என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் சொல்வதைப் போல எப்படியாவது தனது மொத்த பலத்தையும் போட்டு புஷ் செய்து குழந்தையை வெளியில் வர வைத்து விட வேண்டும்  என தேன்மொழி தன் உயிரைக் கொடுத்து அங்கே போராடிக் கொண்டு இருந்தாள்.

வெளியில் இருந்து நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த விஜயா தன் மகன் ஆதவனின் கைகளை பிடித்துக் கொண்டு “ஐயோ கடவுளே.. என் பொண்ணு இவ்ளோ கஷ்டப்படறாளே! உனக்கு கண்ணில்லையா? ஏன் என் புள்ளைய எப்ப பார்த்தாலும் அழ வச்சுக்கிட்டே இருக்க? மாரியம்மா.. வாராகி அம்மா.. துர்க்கை அம்மா.. முனீஸ்வரா.. பரமேஸ்வரா.. எத்தனை தெய்வங்களை நான் கையெடுத்து கும்பிட்டு இருப்பேன்.. உங்க ஒருத்தங்களுக்கும் சக்தி இல்லையா? ஏன் எங்க குடும்பத்தை இப்படி போட்டு கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கீங்க?” என்று தன் மனக்குமுறலை சொல்லி அழுது புலம்பி கொண்டு இருந்தாள்.

அவர்களின் அருகில் நின்று கொண்டு இருந்த ஆகாஷ் “நீங்க பயப்படாதீங்க ஆன்ட்டி. இது இங்க ரொம்ப ஃபேமஸான ஹாஸ்பிடல். டாக்டர்ஸ் எல்லாருமே highly qualified and experienced. தேன்மொழி அண்ணிக்கும்,  அவங்க குழந்தைக்கும் எதுவும் ஆகாது.” என்று சொல்லி அவர்களை ஆறுதல் படுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

நடக்கும் அனைத்தையும் பார்த்தபடி அவர்கள் அருகில் சென்றான் அர்ஜுன். அவர்கள் அனைவரும் அவனைப் பார்த்தவுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் இப்போது பாரிஸில் இருப்பதால் டெலிவரி ரூமில் ஹஸ்பெண்ட் தன் மனைவியுடன் இருப்பது அங்கே பிரச்சினையாக இருக்காது என்று நினைத்த அர்ஜூன் யாரிடமும் எதுவும் கேட்காமல் லேபர் வார்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று விட்டான்.

வந்து இருப்பவன் யார் என்று தெரியும் என்பதால் அவனைப் பார்த்தும் அங்கே இருந்த டாக்டர்களின் டீமோ, நர்சுகளோ எதுவும் சொல்லவில்லை. கலங்கிய கண்களுடன் தேன்மொழியின் அருகில் சென்ற அர்ஜுன் “தேனு!” என்று மெல்லிய குரலில் அவளை அழைத்தான். அங்கே தான் வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கும்போதும் தன் கணவனின் குரலை கேட்டவுடன் வலியில் கத்துவதை நிறுத்திவிட்டு ஒரு நொடி அவனைப் பார்த்த தேன்மொழி உதடுகள் துடிக்க கண்களில் கண்ணீருடன் “அர்ஜுன்!” என்று அவனை அழைத்தாள்.

உடனே அர்ஜுன் அவசரமாக சென்று அவள் அருகில் அமர்ந்து அவளது கைகளை பிடித்துக் கொண்டு “உனக்கு எதுவும் ஆகாது. நான் ஆகவும் விட மாட்டேன் டோன்ட் வரி.” என்றான். அவன் அந்த வார்த்தைகளை சொல்லி முடிப்பதற்குள் அதுவரை வலியில் கத்திக் கொண்டு இருந்த தேன்மொழி மீண்டும் மயக்கம் அடைந்தாள்.

மீண்டும் வருவாள் 💕

You may also like

Leave a Comment

About Me

Featured