அத்தியாயம் 224: நீ என் ரூம் மேட்டா இருப்பியா (பார்ட் 2)
ஸ்டடி ரூமில் இருந்த வருண், அவன் ஏற்கனவே ரித்திகா விடம் கேட்க முடிவு செய்து இருந்ததை எப்படி அவளிடம் கேட்கலாம் என்று யோசித்து கொண்டே இருந்தான். இதற்கிடையில் இதை அவளிடம் கேட்டே ஆக வேண்டுமா என்ற கேள்வியும் அவனுக்குள் எழுந்தது. அதனால் கேட்கலாமா வேண்டாமா என்று இருமனதாக யோசித்துக்் கொண்டு இருந்தான்.
ஆதித்யாவின் அறையில்…
கையில் சாப்பாட்டு தட்டுடன் அவனுடைய அறைக்கு வந்த சோபியா, அதை தன் கையாலேயே அவனுக்கு ஊட்டியும் விட்டாள். எப்போதும் எலியும் பூனையும் போல தன்னிடம் சண்டை பிடித்துக் கொண்டே இருப்பவளிடம் இன்று நிறைய மாற்றங்களை உணர்ந்த ஆதித்யா, ஒரு வேளை இன்று அவளாக தன்னிடம் அவளுடைய காதலை வெளிப்படுத்தப் போகிறாரோ என்று நினைத்து உள்ளம் மகிழ்ந்தான். 💭😍
ஆதித்யா: ஆர்வம் நிறைந்த கண்களுடன் அவளை பார்த்தவன், “என்ன சோபி இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷல் அகேஷனா..?? எப்பயும் நானா வந்து உன்கிட்ட பேசினா கூட என்னை அவாய்ட் பண்ற மாதிரியே பேசுவ.. இன்னைக்கு என்ன எல்லாமே டிஃபரண்டா இருக்கு..!!! என்கிட்ட ஏதாவது சொல்லப் போறியா..???” என்று கேட்டான்.
சோபியா: “ஆமா ஸ்பெஷல் லொகேஷன் தான்.” என்று கேஷுவலாக சொன்னாள்.
ஆதித்யா: அவள் சொன்னதைக் கேட்டு இன்னும் குஷியானவன், “அப்படி என்ன ஸ்பெஷல் இன்னைக்கு..??” என்று ஆர்வமாக கேட்டான். 😍
சோபியா: என்னோட சிஸ்டர் நான்சி இருக்காள்ல.. அவளுக்கு இன்னிக்கி குழந்தை பிறந்திருக்கு. அவளையும் குழந்தையையும் பார்க்க வந்தவங்க எல்லாரும் அடுத்து எனக்கு எப்போ மேரேஜ் -ன்னு கேட்டுட்டு இருக்காங்க. ஆல்ரெடி அக்கா இருக்கும்போது தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பேசிட்டு இருந்தாங்க. இப்ப அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தையே பிறந்திருச்சு ஆனா நான் மட்டும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு எல்லாரும் கேக்குறாங்க.
சிலர் எனக்கு ஏதோ பிசிக்கலி குறை இருக்கு. நான் இன்னும் கொஞ்ச நாள்ல பையனா மாறிடுவேன்னு என்னென்னமோ எல்லாம் பேசிட்டு இருக்காங்க. நான் பார்க்கிற வேலை சரி இல்லையாம், என்னோட கேரக்டர் சரி இல்லையாம் இந்த மாதிரி நான் கேட்காத பேச்சு இல்ல. ஆனா அஸ் யூசுவல் இது எதையுமே நான் கண்டுக்கல பட் என்னோட அப்பா, அம்மா, இதையெல்லாம் கேட்டு ரொம்ப செக்ஸாகி இருக்காங்க. இப்ப நான் என்ன பண்ணட்டும் ஆதி..??
ஆதித்யா: ஒரு நொடி கூட யோசிக்காமல், “இதுக்கு என்ன பண்றது.. கல்யாணம் தான் பண்ணனும். 👰 நானும் நம்ம ட்ரெய்னிங் சென்டர்ல ட்ரைனிங் எடுத்துகிட்ட காலத்துல இருந்து உன் பின்னாடி சுத்தி; என்ன எப்ப கல்யாணம் பண்ணிக்க போற..?? எனக்கு எப்போ ஓகே சொல்ல போறேன்னு கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ தான் எனக்கு எந்த ஆன்சர் -ம் சொல்ல மாட்டேங்கறியே…!!! இப்ப கூட ஓகேன்னு ஒரு வார்த்தை சொல்லு. நம்ம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்.
சோபியா: அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், “நீ நாளைக்கு எங்க வீட்டுக்கு வரியா நான்சியோட பேபியை பாக்குற மாதிரி..???” என்று கேட்டாள்.
ஆதித்யா: “வரேன் டி. பட் அஸ்யூஸ்வல் நீ இன்னும் நான் கேட்ட கொஸ்டினுக்கு ஒழுங்கா ஆன்சர் ஏ பண்ணல. உனக்கும் என்ன பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும் சரியா…!!! ஆனா இன்னும் எத்தனை வருஷத்துக்கு என்ன இப்படியே கெஞ்ச விடலாம்ன்னு இருக்க நீ.?? நீ இப்படியே பண்ணிக்கிட்டு இரு. கடைசில உனக்கும் எனக்கும் 60 ஆவது கல்யாணம் தான் நடக்க போகுது பாரு.” என்று சிறு எரிச்சலுடன் சொன்னவன், தன்னுடைய முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டான். 😒
சோபியா அவன் முகத்தை தன் பக்கம் திருப்பியவள், அதான் நான் உன்னை என்னோட வீட்டுக்கு வர சொன்னேன்ல்ல அப்புறம் என்ன லூசு…??” என்று கேட்டாள்.
ஆதித்யா அவள் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல், “நீ உன்னோட தங்கச்சி குழந்தையை பாக்குறதுக்கு தானே என்ன வர சொல்ற…!!! நான் அங்க வந்து என்ன மேரேஜ் ப்ரோபோசல் ஆ பண்ண முடியும்..????” என்று அவசரமான குரலில் வேகமாக கேட்டவன், தன்னுடைய முகத்தை பின் மீண்டும் சோகமாக வைத்துக் கொண்டான். 😞
சோபியா: கேஷுவலாக அவனைப் பார்த்தவள், “உனக்கு தைரியம் இருந்தா, நீ போய் பொண்ணு கேளு.” என்றாள்.
ஆதித்யா: “ஆமா நான் போய் கேட்டா மட்டும் அப்படியே இந்த ராசா உடனே எங்க பொண் ஐ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போ அப்படின்னு சொல்லி உடனே கொடுத்துடுவாங்களாக்கும்…!!!” என்று சொல்லி சலித்துக் கொண்டான்.
சோபியா: இதற்கு மேலும் தன்னுடைய வார்த்தைகளால் இவனுடன் விளையாடி இவனுடைய பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று நினைத்தவள் மனம் இறங்கி, “நான் உன்கிட்ட நிறைய சொல்லணும் அட்லீஸ்ட் அதை இன்னைக்காவது சொல்லலாம்னு நினைக்கிறேன். சொல்லட்டா..??” என்று கேட்டு புதிர் போட்டாள்.
ஆதித்யா: “சொல்லு மூனு நல்ல வார்த்தையா சொல்லு.” 😍 என்றான்.
சோபியா: “நீயும் நானும் கேர்ள்ஸ் வெர்சஸ் பாய்ஸ் டீம் ஃபைட் அன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணனும்னு தானே நீ நெனச்சுக்கிட்டு இருக்க..???” என்று கேட்டாள்.
ஆதித்யா: “ஆமா அன்னைக்கு தானே நீயும் நானும் சாம்பியன்ஷிப் கப் அடிச்சோம்…!! அந்த கப் ஐ கூட நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேன் சோபி.” என்று ஆர்வமான குரலில் சொன்னான்.
சோபியா: அதுக்கு முன்னாடியே நான் உன்னை பார்த்து இருக்கேன் ஆதித்யா.
ஆதித்யா: “எங்க பார்த்த..???” என்று குழப்பமான குரலில் கேட்டான். 🙄
சோபியா: “உங்க பாய்ஸ் ஹாஸ்டல் சுவர் ஐ ஏரி குதிச்சு உள்ள வந்து தான்.” என்று சாதாரணமாக தன்னுடைய தோள்களை குலுக்கி கொண்டு சொன்னாள்.
ஆதித்யா: “அடிப்பாவி என்ன டி சொல்ற..!!! எனக்காக அப்பவே செவுரை எல்லாம் ஏறி குதிச்சு வந்தியா..???” 🏚️என்று ஆச்சரியம் தாங்க முடியாமல் தன்னுடைய வாயை பிளந்து கொண்டு அவளை பார்த்து கேட்டான். 😮
சோபியா: ஆமா. நான் அங்க ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் தான் நீ அங்க வந்த. நீ அங்க வர்ற வரைக்கும் நான் தான் எல்லாத்தையும் டாப் -லா இருந்தேன். நீ அங்க வந்து கொஞ்ச நாளிலேயே என்னோட இடத்தை புடிச்சுக்கிட்ட அதனால உன்கிட்ட அப்படி ஸ்பெஷலா என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு உன்னோட டெக்னிக்ஸ் விட பெட்டரா நான் ப்ராக்டிஸ் பண்ணி என்ன இம்ப்ரூ பண்ணனும் அதற்காக யாருக்கும் தெரியாம பாய்ஸ் ஹாஸ்டலுக்குள்ள வந்தேன்.
அதுவும் கரெக்டா நீ ப்ராக்டிஸ் பண்ற டைமுக்கு அப்பப்ப வந்து பார்த்துட்டு போவேன். நீ அங்க வர்ற வரைக்கும் என்ன விட பெஸ்ட்டா நான் யாரையும் பார்த்ததில்லை ஆதி. அதனாலேயே எனக்கு உன்னை பார்த்த உடனே பிடிச்சிருச்சு. அந்த செகண்ட்ல இருந்தே நான் உன்னை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன். நீ என்னை விட பெஸ்ட் -ன்னு எனக்கே தெரிஞ்சாலும், அத எப்பயுமே என்னோட ஈகோ அக்செப்ட் பண்ண விடாது. சோ, அட்லீஸ்ட் நான் உனக்கு ஈக்குவலா ஆவது இருக்கணும்னு தான் எப்பவுமே ஹார்டு வொர்க் பண்ணுவேன்.
நான் ஆசைப்பட்ட மாதிரியே கேர்ள்ஸ்ல நான் ஆசைப்பட்ட மாதிரியே கேர்ள்ஸ்ல டாப் ரேங்க் நானும் பாய்ஸ்ல டாப் ரேங்க் நீயும் வாங்கிட்டு அந்த ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் ஐ விட்டு வெளிய வந்தோம். நீ எப்போ ஓகே சொல்ல போறன்னு கேட்கும் போதெல்லாம் ஓகே சொல்லணும்னு தான் தோணும் ஆனா நான் உனக்காக ஒரு சர்ப்ரைஸ் பிளான் பண்ணி இருந்தேன். நம்ப பேர்ல நான் ஒரு அப்பார்ட்மெண்ட் ஹவுஸ் வாங்கி இருக்கேன். அதோட இ. எம். ஐ. இன்னும் 7 மந்த்ஸ்ல முடிய போது.
அது ஃபுல்லா கட்டி முடிச்சதுக்கு அப்புறமா உன்னை கூட்டிட்டு போய் அங்க வச்சு உன் கிட்ட ப்ரபோஸ்் பண்ணலாம்னு இருந்தேன். பட் நான் சொன்னேன்ல என்னோட வீட்ல ரொம்ப பிரஷர் பண்றாங்க ஆதி. அம்மாவும் அப்பாவும் கை நிறைய ஸ்லீப்பிங் பில்ஸ் எடுத்து வச்சுக்கிட்டு நான் மேரேஜ்க்கு ஓகே சொல்லலைனா, அதை போட்டுக்கிட்டு செத்துருவேன்னு என்னை பயமுறுத்துறாங்க. அதான் என்னோட சர்ப்ரைஸ் ஐ பிரேக் பண்ணிட்டு இப்பவே சொல்றேன். ஐ லவ் யூ ஆதி. அண்ட் ஐ வாண்ட் டு லிவ் வித் யூ. இப்ப நீ சொல்லு என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்க போற..???” என்று காதல் நிறைந்த கண்களுடன் அவனைப் பார்த்து கேட்டாள். 😍
அவள் சொன்னதைக் கேட்டு ஆனந்த கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிய ஆதித்யா, தாவி அவளை கட்டி பிடித்துக் கொண்டு, “ஐ லவ் யூ சோபி. ஐ லவ் யூ சோ மச். வாடி இப்பவே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்றான். 😍 🤗 👩❤️👨 🥰
சோபியா: தானும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டவள், “சீக்கிரமா பண்ணிக்கலாம். நாளைக்கு முதல் வேலையா என்னோட பேரன்ட்ஸ் கிட்ட வந்து பேசு. அவங்க லவ் மேரேஜ்ன்னு நோனு எல்லாம் சொல்ல மாட்டாங்க. பட் மேரேஜ் மட்டும் கிறிஸ்டியன் வெட்டிங் ஸ்டைல்ல நடக்கணும்னு எதிர்பாப்பாங்க. அது உனக்கு பரவாயில்லையா..???” என்று கேட்டாள்.
ஆதித்யா: அவளிடம் இருந்து பிரிந்தவன், “எனக்கு உன்னை விட்டா வேற யாரு இருக்கா சோபி..??? எனக்கு நீ வேணும். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட சேர்ந்து வாழணும் அவ்வளவு தான் என்னோட ஆசை. அத இப்படி தான் பண்ணனும் எல்லாம் எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. உன்னோட ஃபேமிலி தான் இனி என்னோட ஃபேமிலி. எனக்குன்னு இருக்கிறவங்க நீங்க மட்டும் தான். அவங்களுக்கு எப்படி பிடிக்குமோ அதே மாதிரி பண்ணிக்கலாம் எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே. உன்னை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை நானா இருந்தா மட்டும் போதும் டி.” என்று உணர்ச்சி பொங்க கேப் விடாமல் பேசினான். 😍
வருணின் அறையில்….
ரித்திகா இன்னும் தூங்காமல் தன்னுடைய மொபைல் போன் ஐ தான் நோண்டிக் கொண்டு இருந்தாள். தன்னுடைய அறைக்குள் வந்தவுடன், அந்த அறையின் கதவை சாற்றி தாளிட்ட வருண் வந்து ரித்திகாவின் அருகில் கட்டிலில் அமர்ந்தான். வருண் மெதுவாக அவளிடம் பேச்சுக் கொடுக்க தொடங்கினான்.
வருண்: நீ இன்னும் தூங்கலையா..??
ரித்திகா: இல்லைங்க தூக்கம் வரல. அதான் சும்மா போனை பார்த்துட்டு இருக்கேன்.
வருண்: நீ எப்பயாவது ரொம்ப நாளா தூக்கம் வராம இருந்திருக்கியா..???
ரித்திகா : சேச்சே…!! எப்பயுமே நான் படுத்த உடனே தூங்கிடுவேன். இன்னைக்கு மத்தியானம் அப்பா அம்மா இங்க வந்திருந்தப்ப, சித்தார்த் நம்ப ரூம்லையே தூங்கிட்டான். அதனால அவங்க இங்க இருந்து கிளம்பினதுக்கு அப்புறமா நானும் அவன் கூட சேர்ந்து ரொம்ப நேரம் நல்லா தூங்கிட்டேன். அதான் இப்ப எனக்கு தூக்கம் வரல.
வருண்: உனக்கு இன்சாம்னியான்னா என்னனு தெரியுமா..???
ரித்திகா : “அது ஒரு வியாதி தானேங்க.!!! அது இருக்கவங்களுக்கு எப்பயுமே தூக்கமே வராதுன்னு சொல்லுவாங்க. ஆனா ஒருத்தரால எப்படி தூங்காம இருக்க முடியும்னு எனக்கு தெரியல.” என்று ஆச்சரியமான குரலில் சொன்னாள்.
வருண்: “எனக்கு இன்சாம்னியா இருக்கு ரித்திகா . ஹய் டோசேஜ் ஸ்லீப்பிங் பில்ஸ் போடாம என்னால தூங்கவே முடியாது.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.
ரித்திகா : “என்னங்க சொல்றீங்க..??? அப்ப நீங்க தூங்கவே மாட்டீங்களா..??? தூங்காம இருந்தா உடம்பு கெட்டுப் போயிடுமேங்க… ஆனா நேத்து நீங்க நல்லா தூங்குனீங்க… அப்போ நேத்தும் மாத்திரை போட்டுட்டு தான் தூங்குனீங்களா..??? அந்த மாதிரி டேப்லெட் ஐயும் ரெகுலரா சாப்பிடக்கூடாது. டாக்டர் யாரையாவது கன்சல்ட் பண்ணிங்களா… அவங்க என்ன சொல்றாங்க..??” என்று அக்கறையுடன் விசாரித்தாள்.
வருண்: டாக்டர் ஐ எல்லாம் எப்பவோ பார்த்தாச்சு. நீ சொன்ன மாதிரி அவரும் இப்படி தான் அந்த டேப்லட்சை அடிக்கடி எடுத்துக்க கூடாதுன்னு சொன்னாரு. பட் நேத்து நான் டேப்லட் சாப்பிடாமயே நல்லா தூங்கிட்டேன்.
ரித்திகா: “டேப்லட் சாப்பிடாமயே தூங்கிட்டிங்களா.. அது எப்டி..???” என்று புரியாமல் கேட்டாள்.
வருண்: நானும் இத பத்தி தான் யோசிச்சு ஏன் அப்படின்னு டாக்டர் கிட்ட கேட்டேன்.
ராகவி: அதுக்கு டாக்டர் என்ன சொன்னார் ..???
வருண்: அதுக்கு நீ தான் ரீசனாம்.
ரித்திகா: அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள், “நானா… நான் என்னங்க பண்ணேன்..??? என்று கேட்டாள். 😟
வருண்: “பதறாத நான் உன்னை ஒன்னும் தப்பா சொல்லல. நம்ப தனியா இருக்கிறதுக்கும், யார் கூடயாவது இருப்பதற்கும் டிஃபரன்ஸ் இருக்குல்ல…. நேத்து நான் உன் கூட படுத்து தூங்குனதால தான் கம்பபர்டபுலா, நிம்மதியா, தூங்கினேன்னு டாக்டர் சொன்னாரு.
இனியும் நான் அதவே கண்டின்யூ பண்ணா, இன்சாம்னியால இருந்து ஈசியா வெளியில வந்தரலாம்னும்ன்னு சொன்னாரு. சோ, வாட் எவர். நீ அபிசியல் ஆ என்னோட வைஃப். உன் கிட்ட நான் இத கேட்கிறது தப்பில்லைன்னு எனக்கு தோணுது. நீ என்னோட பிரண்டா, என்னோட ரூம் மேட் ஆ இருப்பியா..?? நேத்து மாதிரியே நம்ம டெய்லியும் தூங்கலாமா..???” என்றவன் இறுதி வார்த்தைகளை மட்டும் தயங்கி தயங்கி கேட்டான்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)