அத்தியாயம் 223: நீ என் ரூம் மேட்டா இருப்பியா (பார்ட் 1)
நாராயணன் பேலஸுல்….
செண்பகம், சித்தார்த், ரித்திகா, வருண், விஷ்ணு, ஹரி, சீதா மற்றும் அவளுடைய குடும்பத்தினர் என அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது வருணை பார்த்த செண்பகம், “இன்னைக்கு ரித்திகாவோட அம்மாவும், அப்பாவும், இங்க வந்து இருந்தாங்க்க வருண். நாளைக்கு நாள் நல்லா இருக்காம். அதனால உன்னையும் ரித்திகாவையும் மறு வீட்டுக்கு வரச் சொல்லி அழைச்சிட்டு போயிருக்காங்க. நீ ரித்திகாவை நாளைக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துரு. முடிஞ்சா நீங்க அங்க ரெண்டு நாள் இருந்துட்டு கூட வாங்க.” என்று சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள்.
அதுவரை அமைதியாக தன்னுடைய தட்டை பார்த்து சாப்பிட்டு கொண்டு இருந்த ரித்திகா, வருணின் பதில் என்னவென்று தெரிந்து கொள்வதற்காக அவனுடைய முகத்தையே உற்றுப் பார்க்க தொடங்கினாள். “இப்ப தான் அம்மா இந்த மேரேஜ் டென்ஷன் எல்லாம் முடிஞ்சு கொஞ்சம் நிம்மதியா, ஃப்ரீ ஆ இருக்கேன். அதுக்குள்ள அகைன் வெளியில போணுமா..?? அதுவும் நாளைக்கே…!!!” 💆 என்று சலிப்பான குரலில் கேட்டான் வருண்.
செண்பகம்: “உன் மாமியார் வீடு என்ன வெளிநாட்டிலயா இருக்கு..!! இங்க இருக்கிற வீட்டுக்கு போறதுக்கு எதுக்கு இப்படி சலிச்சிக்கிற நீ..??? எப்படியும் ஆபீஸ்க்கு போக தானே போற.. அத இங்க இருந்து போறதுக்கு, அங்க இருந்து போ. அவ்ளோ தானே..!!! சும்மா ரீசன் சொல்லாம அவளை கூட்டிகிட்டு நாளைக்கு அங்க போயிட்டு வா வருண். என்ன கல்யாணமே நிறைய பிராப்ளம்ஸ்க்கு நடுவுல தான் நடந்துச்சு. அதனால அவங்க பொண்ண பக்கத்துல வச்சு பாத்துக்கணும்னு ரித்திகாவோட அம்மா அப்பாவுக்கும் மட்டும் ஆசை இருக்காதா..??? கல்யாணத்துக்கு அப்புறம் பொறந்த வீட்டுக்கு பொண்ணு புருஷனோட போனா தான் நல்லா இருக்கும்.” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
வருண்: “அங்க போறதுக்கு ஒன்னும் இல்ல மா. நாளைக்கே அங்க போனுமான்னு தான் யோசிக்கிறேன்.” என்று இழுத்தான்.
சீதா: செண்பகம் ஏதோ பேச வருவதற்குள் தான் முந்தி கொண்டவள் ஓர கண்ணால் ரித்திகாவை பார்த்த படியே, “ஏங்க அண்ணி கல்யாணத்தை தான் அவன் இஷ்டத்துக்கு பண்ணாம நீங்களே உங்களுக்கு புடிச்ச மாதிரி எல்லாத்தையும் பண்ணிட்டீங்க. மறு வீட்டுக்கு போறதுக்கு அப்படி என்ன இப்ப அவசரம் வந்திருச்சு..??? அவன போக சொல்லி மிரட்டிட்டு இருக்கீங்க..!!! இப்ப என்ன ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு தான் அவன் போயிட்டு வரட்டுமே.” என்று தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக எதையோ சொல்லி வைத்தாள்.
செண்பகம்: சீதாவை தீர்க்கமான பார்வை பார்த்தவள், “இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் அவனுக்கு நீ சப்போர்ட் பண்ணாத சீதா. கல்யாணம் முடிஞ்சு அதே ஜோர்ல உடனே போனா தான் அதுக்கு பேரு மறு வீடுன்ரோம் வருண் ரித்திகாவை விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கட்டான். என்னோட ஆசையையும், பிடிவாதத்தையும், தாண்டி அவனோட விருப்பம்னு ஒன்னு இதுல கொஞ்சம் கூட இல்லைனா, அவன் கண்டிப்பா இத யார் சொன்னாலும் செஞ்சிருக்க மாட்டான்.
அது என்ன விட நல்லா உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். இதே மாதிரி தான் அவன் ஜான்விய லவ் பண்றேன்னு வரும்போது நான் அது வேணாம்னு சொல்லி நம்ம தர்ஷினிய கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். அப்ப மட்டும் என்னை என் பேச்சைக் கேட்டு உடனே அவன் தர்ஷினிய கல்யாணம் பண்ணிக்கிட்டானா என்ன..??” என்று கேட்டாள்.
சீதா: “என்னமோங்க அண்ணி…!!! எனக்கு தோணுனத நான் சொன்னேன். அப்புறம் நீங்களாச்சு… உங்க பையன் ஆச்சு. நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன் கிளம்புறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து எழுந்து சென்று விட்டாள்.
தன்னுடைய அறையில் இருந்து கார்டன் ஏரியாவிற்கு செல்வதற்காக வெளியே சென்று கொண்டு இருந்த தர்ஷன், இவர்களின் பேச்சுவார்த்தையை கேட்டுவிட்டு அங்கே இருந்த தர்ஷணியை ஒரு கணம் நின்று திரும்பி பார்த்தான். அவன் தன்னை பார்ப்பதை கவனித்த தர்ஷினி, பாதி சாப்பாட்டில் தன்னுடைய கையை கழுவி விட்டு அப்படியே அவளும் எழுந்து சென்றாள். அவளுக்கு இப்போது தன்னுடைய வாழ்க்கை அனைவருக்கும் ஒரு கேலிக்கூத்தாகிவிட்டதைப் போல் தோன்றியது. தனக்கு என்று ஒரு மனசாட்சியும், உணர்வுகளும், இருக்கிறது என்று நினைத்து அதை யாரும் பெரியதாக எப்போதும் எடுத்துக் கொள்வதில்லையே என்ற வருத்தம் அவளுள் இருந்து கொண்டே இருந்தது.
தர்ஷினியின் மன வேதனையை அவள் தன்னிடம் சொல்லாமலேயே புரிந்து கொண்டான் தர்ஷன். ஆனால் பாவம் அவளுக்காக தான் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு இடையில் தர்ஷனியை வேதனை நிறைந்த கண்களுடன் தர்ஷன் பார்த்துவிட்டு செல்வதை ரித்திகா கவனிக்க தவறவில்லைை. அதனால் இந்த வீட்டில் தனக்கு தெரியாமல் நிறைய நடக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
ஒரு மணி நேரத்திற்கு பின்…
இறுதியாக அவள் தூங்க செல்வதற்கு முன்பாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று செக்யூரிட்டி கேமரா முதல் இன்று செக்யூரிட்டிக்காக எந்த எந்த பாடி கார்டுகள் நிற்கிறார்கள் என்பது வரை அனைத்தையும் பார்த்துவிட்டு சோர்வான முகத்துடன் உள்ளே வந்தான் ஆதித்யா. 😓 அப்போது டைனிங் ஹாலில் சாப்பிட்டு கடைசி மாடியில் இருக்கும் தன்னுடைய அறைக்கு செல்வதற்காக லிப்ட் இன் அருகே சென்று கொண்டு இருந்த சோபியா, வெளியில் இருந்து வந்த ஆதித்யா சாப்பிடாமல் நேராக லிப்டின் அருகே வருவதை கவனித்தாள்.
அதனால் அவள் உள்ளே போகாமல் அவன் தன் அருகே வருவதற்காக காத்திருந்தாள். சோபியாவை கேஷுவலாக பார்த்த ஆதித்யா, “குட் நைட் பேபி.” என்று சொல்லிவிட்டு லிப்ட் இன் உள்ளே செல்ல முயன்றான். அவனுடைய கையைப் பிடித்து வெளியே இழுத்த சோபியா, “நான் உன்ன பாத்துட்டு லிப்டுகுள்ள போகாம உனக்காக வெயிட் பண்ணா, நீ கேஷுவலா குட் நைட் சொல்லிட்டு நீ பாட்டுக்கு போற..!!! என்ன துளிர் விட்டு போயிடுச்சா உனக்கு..???” என்று அவனைப் பார்த்து முறைத்த படி கேட்டாள். 😒
ஆதித்யா: “அட அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல டி. எனக்கும் ஓவர் நைட் உட்கார்ந்து உன் கூட பேசணும்னு தான் ஆசை. ஆனா என்ன பண்றது ரொம்ப டயர்டா இருக்கே..!! இன்னைக்கு மார்னிங் நான் போரோ கிளாக் எந்திரிச்சு வெளிய போனேன். இப்ப வரைக்கும் ஒர்க் இருந்துச்சு. ரித்திகா மேடம் ஐ கடத்தினவங்களை காலைல இருந்து அடிச்சு அடிச்சு நான் டயர்டு ஆயிட்டேன். அந்த பரதேசி நாய்ங்க வாயில இருந்து ஒரு வார்த்தை கூட வர மாட்டேங்குது. எப்படி கேட்டாலும் எனக்கு தெரியல தெரியலன்னு தான் சொல்லிட்டு இருக்கானுங்க.
நீ ஃப்ரீயா இருந்தின்னா, நம்மளோட டார்க் ரூம் பக்கம் வந்து அவங்கள ரெண்டு காட்டு காட்டிட்டு போ. அவனுங்கள அடிச்சு அடிச்சு எனக்கே போர் அடிக்குது டி. இதுல நம்ம க்ரிஷா மேடம் ஐ வேற யாரோ மர்டர் பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க அதுல சந்தோஷ் கத்தி குத்து வாங்கிட்டு ஹாஸ்பிடல்ல கிடக்கிறான். அவங்கள கொலை பண்ண ட்ரை பண்ணது யாருன்னு வேற விசாரிச்சிட்டு இருக்கேன்.” என்று பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு சலிப்பான குரலில் சொன்னான்.
சோபியா: அவளுடைய மார்புக்கு குறுக்காக தன்னுடைய கைகளை கட்டிக்கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் அவன் பேசியது அனைத்தையும் அமைதியாக கேட்டுவிட்டு, “சாப்டியா..???” என்று ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டாள்.
ஆதித்யா: அவள் அதைக் கேட்ட விதத்திலேயே தன் மீது அவள் வைத்திருக்கும் பாசத்தையும் அக்கறையையும் அதிகமான காதலையும் புரிந்து கொண்டவன், “இன்னும் இல்ல. பட் பரவாயில்ல சோபி. எனக்கு சாப்பிடற மூடு எல்லாம் இல்ல. என்னான்னு தெரியல எப்பயும் இருக்கிறதை விட இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு டி. விட்டா அப்படியே போய் படுத்து தூங்கிடுவேன் உடனே.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே இரண்டு, மூன்று முறை கொட்டாவி விட்டான்.
சோபியா: “ஓகே..!!! நீ உன்னோட ரூமுக்கு போய் ரெஃப்ரெஷ் ஆகு. நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு மேல வரேன். நான் வரத்துக்குள்ள தூங்கிறாத. நீ தூங்கினாலும் உன் மண்டை மேல ரெண்டு தட்டி தட்டி உன்னை எழுப்பி அப்பயும் சாப்பிட சொல்லுவேன்.” என்று ஹாஸ்டல் வார்டனை போல் அவனைப் பார்த்து சொன்னாள்.
ஆதித்யா: அவள் பேசிய வார்த்தைகளில் தனக்காக ஒளிந்திருக்கும் அன்பை புரிந்து கொண்டவன் தனக்கு இருக்கும் உடல் சோர்வு அனைத்தையும் மறந்து அழகாக புன்னகைத்து விட்டு, “ஓகே மேடம்.” என்று சொன்னவன், லிப்டில் ஏறி தன்னுடைய அறைக்கு சென்றான்.
வருணின் அறையில்…
வருண் அவனுடைய ஸ்டடி ரூமில் இருந்தான். அதனால் அவன் வருவதற்குள் குளித்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்த ரித்திகா, குளித்துவிட்டு டவளுடன் வெளியே வந்து தன்னுடைய வார்ட்ரோவில் எந்த ஆடையை போடலாம் என்று தேடிக்கொண்டு இருந்தாள். அவளுடைய வாட்றோபில் இரவு நேரத்தில் உடுத்துவதற்காகவே பிரத்தியோகமான நிறைய மிருதுவான சாட்டின் துணியால் செய்யப்பட்ட ஷர்ட் மற்றும் பண்டுகள் இருந்தன. அதில் இருந்த ஒரு பிங்க் நிற ஆடை பிரகாசமாக அவளுடைய கண்களுக்கு தெரிந்தது. 😍 அதனால் அதை எடுத்து அணிந்து கொண்ட ரித்திகா, ட்ரெஸ்ஸிங் டேபிள் இன் முன்னே வந்து நின்று கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்தை பார்த்தாள். அந்த ஆடை அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.
அதனால் கண்ணாடியில் தன்னை பார்த்து ரசிக்கப்படியே தன்னுடைய நீண்ட கூந்தலை பின்னி முடித்த ரித்திகா, இரவு நேரத்தில் எதற்கு மேக்கப் என்று நினைத்து தன்னுடைய முகத்தில் எதுவும் பூசவில்லை. ஆனால் திருமணத்திற்கு பின்பு நெற்றியில் குங்குமம் வைக்காமல் இருக்க கூடாது என்று அவளுடைய அம்மா அவளிடம் சொல்லிவிட்டு சென்றது அவளுக்கு ஞாபகம் வர குங்குமத்தை மட்டும் எடுத்து தன்னுடைய நெற்றியில் வைத்துக் கொண்டாள்.
பின் கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு நேற்று இரவு நடந்த சம்பவங்கள் தான் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது. இந்த திருமண வாழ்க்கையின் ஒவ்வொரு இரவும் அவளுக்கு ஏதோ ஒரு ரோலர் கோஸ்ட் ரைடில் செல்வதை போல மிகவும் பதட்டமானதாகவும், பயம் நிறைந்ததாகவும், இருந்தது. அவளுக்கு இது எப்படி இருந்தாலும் அவளால் பாதியில், “என்னை இறக்கிவிட்டுருப்பா ப்ளீஸ்…!!!” என்று சொல்லி கத்தி கதறி இதில் இருந்து இறங்கி அவளால் ஓடிவிட முடியாதே..!! அதனால் இன்னைக்கு என்ன நடக்க காத்திருக்கோ என்று நினைத்தவள், ஒரு தலையணையை எடுத்து கட்டிப்பிடித்து அமர்ந்த படி தன்னுடைய மொபைல் போனை எடுத்து நோண்ட தொடங்கினாள். 🤳
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)