அத்தியாயம் 213: வருணும் பிரவீனும் நண்பர்கள் (பார்ட் 2)
சில நொடிகளுக்கு பின் அவள் தன்னுடைய கண்களை திறந்து பார்க்கும் போது அந்த லிஃப்ட் நார்மலாக இருந்தது மற்றும் அவள் இறங்க வேண்டிய தரைதலத்திற்கும் வந்து இருந்தது. அதனால் வேகமாக அதில் இருந்து இறங்கி வெளியே வந்தவள், ஹாலில் யாரும் இல்லாததால் தோட்டத்தில் யாராவது வேலை செய்து கொண்டு இருப்பார்கள் என்று நினைத்து அந்த பக்கம் சென்றாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்ததை போல் அங்கு ஈ மற்றும் காக்காவை தவிர அங்கே வேறு யாரும் இல்லை. அங்கேயும் இருட்டாக இருந்ததால் அவளுக்கு லேசாக பயமாக இருந்தது அதனால் மீண்டும் தன்னுடைய அறைக்கே சென்று விடலாம் என்று நினைத்து அவள் திரும்பி செல்ல போக, அப்போது ஒரு மொபைல் போனின் வெளிச்சம் அவளுடைய கண்களுக்கு தென்பட்டது. அந்த வெளிச்சத்தை வைத்து அங்கே யாரோ இருப்பதை உணர்ந்த ரித்திகா, அது யார் என்று தெரிந்து கொள்வதற்காக அந்த வெளிச்சத்தின் அருகே சென்றாள்.
ஆராதனா தான் இயர் போனில் பாட்டு கேட்டு கொண்டு அங்கே அமர்ந்து இருந்தாள். அப்போது அவளுக்கு தன் அருகே யாரோ ஒருவர் வருவதை போன்ற ஒரு உணர்வு எழ, அதனால் யார் என்று அவள் திரும்பிப் பார்த்தாள். திடீரென்று அவள் தன்னை நோக்கி திரும்பியதால் பயந்து போன ரித்திகா, ஒரு அடி பின்னே சென்றாள் ரித்திகா. வந்தது ரித்திகா தான் என்று உணர்ந்து கொண்ட ஆராதனா, “ஓ நீங்க தானா..!!!” என்று கேஷுவலாக கேட்டாள்.
ஆராதனா: ம்ம்ம்… எனக்கு மூட் ஆப் ஆ இருந்துச்சுன்னா, நான் எப்பவும் இப்படி தான் யாரும் இல்லாத டார்க்கான இடத்துல வந்து உட்காந்துக்குவேன். சாரி நான் உங்களை பயமுறுத்திட்டேன் போல…
ரித்திகா: இட்ஸ் ஓகே. நீங்க ஸ்டில் மூட் ஆஃப்ல தான் இருக்கீங்களா..???
ஆராதனா: எஸ் அத விடுங்க. கல்யாணம் ஆன புது பொண்ணு.. உங்க ரூம்ல இருக்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?? வருண் அண்ணா இன்னும் வீட்டுட்டுக்கு வரலையா..???
ரித்திகா: அவர் இன்னும் வரல. செண்பகம் அம்மாவும் என்னை எந்த வேலையும் செய்ய விட மாட்டேங்கிறாங்க. அதான் போர் அடிக்குதுன்னு அப்படியே இந்த பக்கம் நடந்து வரும்போது உங்களைப் பார்த்தேன்.
ஆராதனா: “அதான் பிராத்தனா வீட்ல இருப்பாளே.. அவ ஒருத்தி இருந்தாலே போதும். அவ சரியான வாயாடி. அவ கூட பேசினா, டைம் போறதே தெரியாது. நீங்க மட்டும் அவகிட்ட ஒன்ஸ் பேசி பழகிட்டிங்கனா, அவ உங்ககிட்ட நல்லா பேச ஸ்டார்ட் பண்ணிடுவா. அப்புறம் பாருங்க உங்கள விடாம உங்க கூடயே சுத்திக்கிட்டு இருப்பா.” என்று உற்சாகமான குரலில் சொன்னவள், சில நொடிகள் இடைவெளி விட்டு; “ஒரு காலத்துல என் கூடையும் அவ அப்படி தான் இருந்தா.” என்று வலி நிறைந்த குரலில் சொன்னாள். 😣 💔
ரித்திகா: இப் யூ டோன்ட் மைண்ட்… கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங்…??
ஆராதனா: எஸ் சூர்.
ரித்திகா: “எனக்கு இந்த வீட்ல இருக்கிற எல்லாரையும் தெரியும். ஆனா உங்களுடைய நேம் ஐ தவிர உங்களை பத்தி எனக்கு வேற எதுவும் தெரியாது. நான் பார்த்த வரைக்கும் செண்பகம் அம்மா கூட உங்ககிட்ட சரியா பேசுறதில்லை. சோ, உங்களை பற்றி வேற யார்கிட்ட கேக்குறதுன்னு தெரியல. அதான் நான் உங்ககிட்ட கேட்கிறேன்.” என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
ஆராதனா: இதைக் கேக்குறதுக்கு நீங்க ஏன் இவ்ளோ தயங்குறீங்க ரித்திகா..?? நீங்க வருண் அண்ணா ஓட வைஃப். இந்த வீட்ல அவருக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, அதே உரிமை உங்களுக்கும் இருக்கு. சாரி நீங்க என்ன விட சின்ன பொண்ணா இருக்கறதுனால, உங்களோட பெயரை சொல்லி கூப்பிட்டேன். இனிமே நான் உங்களை அக்கான்னு கூப்பிடறேன் அதான் கரெக்டா இருக்கும்.
ரித்திகா: இட்ஸ் ஓகே. அவ்ளோ ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாமே…!!! ப்ளீஸ் நீங்க என்ன என் பெயரை சொல்லி கூப்பிடுங்க. அண்ட் அங்க வெளிச்சத்துல போய் உக்காந்து பேசலாமா..?? எனக்கு இருட்டுன்னா கொஞ்சம் பயம்.
“ம்ம்…. வாங்க..!!” என்று லேசாக சிரித்துக்கொண்டே சொன்ன ஆராதனா ரித்திகாவை அழைத்துக்கொண்டு நல்ல வெளிச்சமாக இருந்த இடத்தில் போடப்பட்டு இருந்த மர பெஞ்சில் ரித்திகா உடன் வந்து அமர்ந்தாள். பின் தன்னுடைய தலைமுடியை தூக்கி கொண்டே போட்டபடியே ரித்திகாவை பார்த்த ஆராதனா, “சொல்லுங்க உங்களுக்கு என்ன பத்தி என்ன தெரியணும்..???” என்று கேட்டாள். “எல்லாமே தான்.” என்று மெல்லிய குரலில் சொன்னாள் ரித்திகா.
ஆராதனா: பெருமூச்சு ஒன்றை விட்டவள், “என்னுடைய அப்பா பேரு பிரசாத். இப்ப இருக்கிற பிரசாத் குரூப்ஸ் ஓட பவுண்டர். நவ் அந்த கம்பெனியோட சேர்மேனா இருக்கிறது என்னோட அண்ணா பிரவீன். உங்க மேரேஜ் அப்போ உங்கள கடத்துனது பிரவீன் ஆ இருக்கும்ன்னு தான் எல்லாரும் சந்தேகப்படுறாங்க. அது உண்மையா கூட இருக்கலாம் எனக்கும் அவன் உங்களை கடத்தி இருக்க சான்ஸ் இருக்குன்னு தான் தோணுது.” என்று சலிப்பான குரலில் சொன்னாள்.
ரித்திகா: “அப்படி அந்த பிரவீனுக்கு நாராயணன் குடும்பத்து மேல என்ன தாங்க கோபம்..?? எதுக்காக அவன் இப்படி எல்லாம் பண்றான்..?? நீங்க அவனோட ஓன் சிஸ்டர் தானே அப்படி இருந்தும் அவனுக்கு சப்போர்ட் பண்ணாம ஏன் நாராயணன் குடும்பத்தோட இருக்கீங்க..??” என்று குழப்பமாக கேட்டாள். 🙄
ஆராதனா: அவன் அப்படி இருக்கறதுக்கு முதல்ல என்னோட அப்பா தான் ரித்திகா காரணம். கடைசியில அவருக்குள்ள இருந்த நெகடிவிட்டீசே அவரை கொன்னுடுச்சு. நாராயணன் அங்கிள் ரொம்ப நல்லவரு. அவரோட ஃபேமிலி எங்களோட ஃபேமிலி எல்லாமே பரம்பரை பரம்பரையா ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவங்க. அந்த காலத்திலேயே அவங்க ரொம்ப ரிச் ஆக இருந்ததுனால அவங்களோட அப்பா அம்மா அவங்கள அப்ராடுக்கு அனுப்பி வைச்சு நல்லா படிக்க வச்சாங்க.
அப்படி எங்க அப்பா அப்ராட்ல படிச்சிட்டு இருக்கும்போது தான் நாராயணன் அங்கிள் கூட பிரண்டாகி இருக்காரு. அவங்க யூனிவர்சிட்டில படிக்கும்போதே இந்தியாவுக்கு திரும்பி வந்து பெருசா ஏதாவது பிசினஸ் பண்ணனும்னு பிளான் பண்ணி இருக்காங்க. அதே மாதிரி இந்தியாவுக்கு வந்து சென்னைக்கு போய் அவங்க நினைச்ச மாதிரியே பிசினஸ்ம் ஸ்டார்ட் பண்ணாங்க. அந்த டைம்ல கிருஷ்ணன் அங்கிள் அவங்களுக்கு பிரண்டாகி இருக்காரு. அவரோட பொண்ணு தான் க்ரிஷா கிருஷ்ணன். இப்போ அவ நாராயணன் குரூப்ஸ் ஓட டெக்னிக்கல் டீம் ஹெட்டா வொர்க் பண்றா.
ஸ்டார்டிங்ல எல்லாமே ரொம்ப நல்லா தான் போச்சு. அவங்க மூணு பேரும் பிசினஸ் பார்ட்னர்ஷிகி நல்லபடியா பிசினஸ் பண்ணிட்டு இருந்திருக்காங்க. கிட்டத்தட்ட 3 ஃபேமிலியும் ஒரே ஃபேமிலியா இந்த ஒரே வீட்ல தான் வாழ்ந்தோம். பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்ணும்போது, என்னோட தாத்தாவும் சரி, கிருஷ்ணன் அங்கிளோட அப்பாவும் சரி பெருசா அவங்கள நம்பி இன்வெஸ்ட் பண்ண ரெடியா இல்ல.
பட் நாராயணன் அங்களோட ஃபேமிலி அவர முழுசா நம்புனாங்க. அதனால நாராயணன் குரூப்ஸ் ஓட ஷேர் தான் ஹாய் ஆ இருந்துச்சு. கிருஷ்ணன் கார்ப்பரேஷன் அண்ட் பிரசாத் குரூப்ஸ் ரெண்டுமே நாராயணன் குரூப்ஸ் ஓட பார்ட்னர்ஷிப்ல இருந்துச்சு. என்ன தான் நாராயணன் குரூப்ஸ் ஓட 70% நாராயணன் அங்கிள் கிட்ட தான் இருந்துச்சுனாளும் அவர் எங்க அப்பாவையும், க்ரிஷாவோட அப்பாவையும், அவருக்கு கீழ தான் இவங்க இருக்கணும்னு நினைச்சதே இல்ல. நாராயணன் அங்கிள் மாதிரி கிருஷ்ணன் அங்கிள்ளும் ஓர்ரொம்ப நல்லவரு.
எனக்கு அபர்ணான்னு ஒரு சிஸ்டர் இருக்கா. வருண் அண்ணா, ஹரி, விஷ்ணு, பிரவீன், க்ரிஷா, நான் எல்லாருமே ஒன்னா தான் வளர்ந்தோம். சின்ன வயசுல பிரவீனுக்கு வருணை அண்ணாவை ரொம்ப பிடிக்கும். அவங்க ரெண்டு பேரும் தான் க்ளோஸ் பிரண்ட்ஸாஸ் ஆ இருப்பாங்க. என்னோட அப்பா தான் பிரவீன் ஐ வருண் அண்ணாவுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டாரு. எங்க அப்பாவுக்கு நாராயணன் குரூப்ஸ் கூட ஒட்டிக்கிட்டு பிசினஸ் பண்ணி சம்பாதிக்கிறதுல விருப்பம் இல்ல. அண்ட் அவரோட அப்பா கிட்ட அவரால தனியா பிசினஸ் பண்ணியும் நிறைய ஏர்ன் பண்ண முடியும்னு ப்ரூவ் பண்ண நினைச்சாரு..
சோ நாராயணன் அங்கிளுக்கு தெரிஞ்சும் தெரியாமலும் லீகலா இல்லிகளா தனியா அவர் நிறைய பிசினஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணாரு. அட் த சேம் டைம் அவருக்கு நாராயணன் குரூப்ஸ் ஓட இருந்த டை யப் ஐயும் அவர் பிரேக் பண்ணல. எங்க அப்பாவோட கெட்ட நேரம் அவர் ஸ்டார்ட் பண்ண என்ன பிசினஸ்மே சரியா போகல. அந்த லாஸ் ஐ டேக்கில் பண்றதுக்காக நாராயணன் அங்கிள் ஐ சீட் பண்ணி அவருக்கு தெரியாமல் நிறைய பணத்தை திருடிட்டாரு.
அவர் அவ்வளவு பணத்தை திருடியும் நாராயணன் குரூப்புக்கு எதுவுமே ஆகல. ஆனா இவரோட கம்பெனி டோட்டலா லாஸ்ல போய்கிட்டு இருந்திருக்கு. என்னோட அப்பா அவரோட கம்பெனி ல இருந்து இவ்ளோ பணத்தை ஏமாற்றி இருக்கிறான்னு கூட தெரியாம அப்பயும் எங்க அப்பா கம்பெனியை லாஸ்ல இருந்து நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்னு நாராயணன் அங்கிள் எங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணாராம். அத நெனச்சு எங்க அப்பா சந்தோஷப்படறதுக்கு பதிலா நாராயணன் அங்கிள் மேல கோபத்தையும், வெறுப்பையும், தான் வளர்த்துக்கிட்டாரு. 😡 🔥
அவரால அவரை விட நாராயணன் அங்கிள் எல்லாத்துலையும் பர்ஃபெக்ட்டா இருக்காருன்றத நம்பவும் முடியல. ஏத்துக்காவும் முடியல. அவர் மட்டும் இல்ல சின்ன வயசுல இருந்து வருண் அண்ணா கூட ஸ்டடிஸ்ல இருந்து ஸ்போர்ட்ஸ் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் வரைக்கும் எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருந்தாங்க. அண்ட் நாராயணன் அங்கிலுக்கு மூணு பசங்க ஒரு பொண்ணு. எங்க அப்பாவுக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணு. நாளைக்கு நாராயணன் அங்கிளுக்கு அப்புறமும் வருண் அண்ணாவும் அதுக்கப்புறம் இருக்கிற பசங்களும் நாராயணன் குரூப்ஸ் ஐ மேல மேல கொண்டு போய்விடுவார்கள் என்று நினைச்சாரு ஆனா பிரவீன் மட்டும் படிக்காம இப்படி முட்டாளா சுத்திட்டு இருக்கான் என்று அவனை டெய்லியும் புதுசு புதுசா அத படி இத படின்னு சொல்லி டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருப்பாரு.
பிரவீன் வருண் அண்ணாவை விட கொஞ்சம் பெரிய பையனா இருந்தாலும் அவன் எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சாலும், எந்த ஒரு விஷயத்தை கத்துக்கணும்னு ட்ரை பண்ணாலும், அதுல வருண் அண்ணாவை விட பெஸ்ட்டா அவனால வரவே முடியல. அதனால எங்க அப்பாவுக்கு நாராயணன் அங்கிள் மேல வந்த வெறுப்பு மாதிரி பிரவீனுக்கு வருண் அண்ணாவை பீட் பண்ணி அவன் தான் டாப்ல இருக்கணுன்ற எண்ணம் டெவலப்வலப் ஆகிடுச்சு. 😒 அதனால அவன் அவர் மேல இருந்த பிரண்ட்ஷிப்பை மறந்துட்டு பிரண்டா நடிக்க ஆரம்பிச்சிட்டான். பட் இது எதுவுமே தெரியாத நாராயணன் அங்கிளோட ஃபேமிலி எங்க எல்லார் மேலயும் ரொம்ப பாசமா இருந்தாங்க. நாங்க எல்லாரும் ஒண்ணா வளர்ந்ததுனால சின்ன வயசுல இருந்தே நானும் ஹரியும் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டோம்.
நாங்க ஆல்ரெடி பேமிலி பிரண்ட்ஸா இருந்ததுனால, நாராயணன் அங்கிளும் எங்க லவ் ஐ அக்சப்ட் பண்ணிட்டாரு. அட் தி சேம் டைம் க்ரிஷாவும் ஹரிய லவ் பண்ணிருக்கா போல. நாங்க எல்லாரும் பிரண்ட்ஸா ஒரே கேங்கா இருந்ததுனால, அவ இவன லவ் பண்ணது எங்க யாருக்குமே தெரியல. அவளும் கடைசி வரைக்கும் யார்கிட்டயும் சொல்லல. எங்களோட டீனேஜ் டைம்ல ஒரு நாள் எங்க பிரைவேட் பார்ட்டி அப்போ ஹரி என்கிட் பப்ளிக்கா ப்ரொபோஸ் பண்ணுனான். நாங்களும் எங்க லவ்வ பத்தி எங்க பிரண்ட்ஸ் குரூப்ல சொல்லாம இருந்ததுனால அவங்களுக்கும் அதுவரைக்கும் நாங்கள் லவ் பண்றது தெரியாது.
திடீர்னு ஹரி எனக்கு அத்தனை பேர் முன்னாடி ப்ரொபோஸ் பண்ணதுனால அதை பார்த்து வெக்ஸ் ஆன க்ரிஷா, உடனே ஸ்விம்மிங் பூல்ல விழுந்து சூசைட் அட்டெம்ட் பண்ணிட்டா. அப்பவும் ஹரி தான் அவளை காப்பாற்றி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணான். அவ அப்படி பண்ணதுக்கு அப்புறம் தான் சின்ன வயசுல இருந்தே அவளும் என்னை மாதிரியே ஹரிய அவளும் லவ் பண்ணி இருக்கான்னே எங்க எல்லாருக்குமே தெரியும். ஹரி என்ன தான் லவ் பண்றான்னு அவளுக்கு தெரிந்ததுனால, கம்ப்ளீட் ஆ அவர் டிப்ரஷன் குள்ள போய்ட்டா. கிருஷ்ணன் அங்கிளுக்கு அவருடைய பிசினஸ் ஐ விட அவரோட ஒரே பொண்ணு தான் பெருசா தெரிஞ்சா. அதனால அவளுக்கு இங்கயே இருந்தா ஏதாவது ஆயிடும்னு அவளை கூட்டிக்கிட்டு இங்க இருந்து அமெரிக்கா போயிட்டாரு.
அதுக்கு அப்புறம் தான் ரித்திகா எங்க வாழ்க்கையில எல்லாமே தப்பு தப்பா நடக்க ஆரம்பிச்சது. அந்த பார்ட்டி நைட்டுக்கு அப்புறமா நாங்க யாருமே ஒரு நாள் கூட சந்தோஷமா இல்ல.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)