Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 131

மூர்கனின் காதலி CH 131

by Thenaruvi Tamil Novels
54 views

அத்தியாயம் 131

அரவிந்த் தன் மனதில் இருப்பதை தான் வெண்ணிலாவிடம் சொல்ல விரும்புவதாக அவளிடம் தெரிவிக்க, “இப்போ.. என்ன சொல்ல போறாரு இவரு..??” என்று நினைத்து குழப்பமாக அவனைப் பார்த்தாள் வெண்ணிலா.

“நிலா.. உன்ன first time அரண்மனையில பார்த்தப்பவே எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. நீ யாரு, உன் character எப்படி, உனக்கு என்ன பிடிக்கும்னு எல்லாம் தெரிஞ்சுக்கறதுக்காக நானா பல reasons create பண்ணி உன் கிட்ட பேச try பண்ணிட்டு இருந்தேன். தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம், எனக்கே தெரியாம கொஞ்சம் கொஞ்சமா நான் உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். Yes, I’m in love with you நிலா. Will you be my personal வெண்ணிலா in my sky..??” என்ற அரவிந்த் தனது இரு கைகளையும் அவள் முன்னே விரித்து மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.

முதலில் வாயடைத்து போய் நின்ற நிலா அவன் சொன்னதை கேட்க கேட்க தன் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழத் தொடங்கி விட்டாள்.

அதை பார்த்துவிட்டு பதறி அடித்துக்கொண்டு எழுந்து நின்ற அரவிந்த் “எம்மா… ஏய்ய்ய்.. இப்ப எதுக்குமா இப்படி அழுகிற…?? உனக்கு என்னை பிடிக்கலைன்னா பரவால்ல. அதுக்காக இப்படி எல்லாம் கதறி கதறி அழுகாத ப்ளீஸ்.. எனக்கு நீ அழுகிறத பார்க்க கஷ்டமா இருக்கு. நீ இப்படி என் முன்னாடி நின்னுகிட்டு அழுகிறத யாராவது பார்த்தா என்னதான் தப்பா நினைச்சு எல்லாருமா சேர்ந்து குமுரி டின்னு கட்டிடுவாங்க. அழுவாதமா.. இந்தாடி சொல்றேன்ல… அழுகாதடி…!!” என்று கெஞ்சும் குரலில் சொல்ல, “வாய மூடு. எனக்கு உன்ன பிடிச்சிருக்குடா அரவிந்த்.” என்ற நிலா சட்டென அவனை அணைத்துக் கொண்டாள்.
அதனால் freezeஆன அரவிந்த் அப்படியே நின்றுவிட, சந்தோஷத்தில் அவன் கண்கள் கலங்கியது. அதை கவனித்த நிலா, “இப்ப சார் எதுக்கு அழுகிறீர்களாம்..??” என்று கிண்டலாக கேட்க, “கண்ணu வேர்க்குதுடி.” என்ற அரவிந்த் தானும் அவளை அணைத்துக் கொண்டான்‌.

ஒரு நொடி அவனது அனைப்பு தந்த பூரிப்பில் சொக்கிப் போய் நின்ற நிலா, “அச்சச்சோ.. யாராவது பார்த்தா சங்குதான்.” என்று நினைத்து சட்டென அவனைவிட்டு விலகி நின்றாள். “என்னடி ஆச்சு மறுபடியும் என் மேல கோபமா..??” குழப்பமாக அரவிந்த் கேட்க, “நம்ம எங்க இருக்கோம்னு சுத்தி நல்லா பாருங்க. யாராவது நம்மள இப்படி பார்த்தா, நம்ம ரெண்டு பேருக்கும் பால் ஊத்தி சங்கு ஊதிருவாங்க.” என்று பயந்த குரலில் சொன்னாள் அவள்.

“ஆமாமா.. முதல்ல மனுஷனுக்கு உயிர்தான் முக்கியம். இனிமே நம்ம எப்பவும் 2 arm distanceலயே இருப்போம்.” என்று அவனும் பயந்த குரலில் சொல்ல, “அச்சச்சோ ரொம்பதான். இதுக்கே நீங்க இப்படி பயந்தா, எப்படி எங்க அப்பாகிட்ட போய் என்ன கட்டித்தர சொல்லி கேப்பீங்க..?? நாளைக்கு வேற யாரோ என்ன பொண்ணு பாக்க வராங்கன்னு சொன்னாரு.” உடனே கேட்டாள் வெண்ணிலா.

அவள் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. அதனால் சோகமாக அரவிந்த் தலைகுனிய, “அப்போ எனக்காக நீங்க துணிஞ்சு எதுவும் செய்ய மாட்டீங்க அப்படித்தானே..!! தைரியமில்லாத உங்களுக்கெல்லாம் எதுக்கு லவ்..?? நீங்க சும்மா கொலுசு சத்தம் கேட்டதுக்கே பேய் வருதுன்னு நெனச்சு பயந்தவர் தானே.. அப்பவே எனக்கு உங்கள பத்தி புரிஞ்சிருக்கணும். நீங்க ஒரு பயந்தாங்கோலின்னு தெரிஞ்சும், நான் எப்படி உங்கள லவ் பண்ணேன்னு தெரியல.” என்று கோபமாக சொன்ன நிலா அவனை திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து வேகமாக படிகளில் இறங்கி கீழே சென்று விட்டாள்.

“ஏய் நிலா நில்லுடி.” என்று அரவிந்த் அவளை கூப்பிட்டு பார்த்தும், அவள் நிற்கவில்லை. அதனால் சோகமானவன் “அவ சொல்றதும் நியாயம் தானே.. லவ் பண்ணா மட்டும் போதுமா..?? லவ் பண்ண பொண்ணு கிடைக்கறதுக்காக ஏதாவது பண்ணனும்ல.. முன்னாடியாச்சு அவ மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியாம இருந்துச்சு. இப்போ அவளும் என்னை லவ் பண்றான்னு நல்லா தெரிஞ்சதுக்கப்புறம் நான் எதுவும் பண்ணாம இருக்க கூடாது. போய் இத பத்தி பாஸ்கிட்ட பேசி பார்க்கலாம்.” என்று நினைத்த அரவிந்த் விஷ்வாவை தேடி கீழே சென்றான்.

மேகாவின் வீட்டில் hall-லில் உள்ள sofaவில் அமர்ந்து நிலாவிற்கு காளீஸ்வரன் தான் பார்த்திருக்கும் மாப்பிள்ளை பற்றியும், அவன் வேலை செய்யும் கம்பெனி பற்றியும் விஷ்வாவிடம் சொல்லி அந்த கம்பெனியை பற்றி அவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். தன்னை மூத்த மாப்பிள்ளையாக மதித்து தன்னிடம் அவர்கள் இதைப் பற்றி எல்லாம் கேட்பதால், தான் அறிந்த அனைத்தையும் நேர்மையாக காளீஸ்வரனிடம் சொன்ன விஷ்வா “நீங்க அந்த பையனோட detailsஐ மகேஷ்கிட்ட குடுங்க. நாளைக்கு அவங்க family இங்க நிலாவை பொண்ணு பாக்க வர்றதுக்குள்ள அவன பத்தி நான் எல்லாத்தையும் விசாரிச்சு உங்களுக்கு detailed reportஏ கொடுக்கிறேன்.” என்று உறுதியாக சொன்னான்.

தனது காதலுக்காக விஷ்வாவிடம் help கேட்கச் சென்ற அரவிந்த் நிலாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை பற்றி மும்முறமாக காளீஸ்வரனிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மனமுடைந்து, “என் last hopeஏ நீங்கதான் பாஸ். இப்போ நீங்களும் உங்க மாமா கேட்டதுக்காக opposite sideல இப்படி சேர்ந்துட்டீங்களே.. நான் என்ன பண்றது..?? நிலாவோட அப்பா மட்டும் எங்கள எதிர்த்து நின்னாலே, என்னால அவரை சமாளிக்க முடியாது. இதுல bossம் அவங்களுக்கு support பண்ணா அவ்ளோதான் என் சோலி முடிஞ்சுது.” என்று நினைத்து தன் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சோகமாக சென்று மொட்டை மாடியில் நின்று விட்டான்.

தன் காதல் என்னாகுமோ‌ என்ற பயத்தில் இருந்த வெண்ணிலா நேராக மேகாவின் ரூமிற்கு சென்று ‌“அக்கா.. இன்னைக்கு உங்க birthday தானே வாங்க பக்கத்துல இருக்க துர்க்கை அம்மன் கோவிலுக்கு போயிட்டு வரலாம்.” என்று அவளை அழைக்க, “ரொம்ப Tiredஆ இருக்கு நிலா. நீ வேணா போறதுன்னா போயிட்டு வா. போயிட்டு நானும் என் புருஷனும் நல்லா இருக்கணும்னு எங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா.” என்ற மேகா கொட்டாவி விட்டபடி கட்டிலில் விழுந்தாள்.

“இந்த சேரனை பத்தி யோசிச்சாலே மனசு பாரமா இருக்கு. கோவிலுக்கு போய்ட்டு வந்தா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” என்று நினைத்த சௌபர்ணிகா “வா மேகா.. கோவிலுக்கு தானே போயிட்டு வந்துடலாம். கோவிலுக்கு யாராவது கூப்டா வர மட்டேன்னு சொல்ல கூடாது. எனக்காக வா ப்ளீஸ்.. நம்ம மூணு பேரும் சேர்ந்து அப்படியே எங்கயாவது வெளிய போய்ட்டு வரலாம்.” என்று மேகாவிடம் கெஞ்சி கேட்க, “சரி உங்களுக்காக நான் வரேன்.” என்ற மேகா அவர்களுடன் கிளம்பி புது புடவை கட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்றாள்.

அங்கே அந்த கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள துர்க்கை அம்மனை விளக்கு போட்டு அவர்கள் மூவரும் வழிபட்டு முடித்துவிட்டு வெளி பிரகாரத்திற்கு வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் கும்பலாக சிலர் நிற்க, ஒரு பாட்டி அவர்கள் அனைவருக்கும் அருள் வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். பெண்கள் அனைவரும் ஆர்வமாக தங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆசையில் அவர்களது கையை நீட்டி பாட்டியிடம் தங்களது வாழ்க்கையை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இவங்ககிட்ட நமக்கும் அரவிந்துக்கும் கல்யாணம் ஆகுமான்னு கேட்கலாமா..??” என்று நினைத்த வெண்ணிலா “வாங்க நம்மளும் போய் அந்த பாட்டிகிட்ட நம்ம future எப்படி இருக்கும்னு கேட்டு தெரிஞ்சுக்கலாம்.” என்று சொல்ல, ஆர்வமாக மேகாவும் சௌபர்ணிகாவும் அவளுடன் சென்றார்கள்.

முதலில் அந்த பாட்டியின் முன்னே நிலா தன் கையை ஆர்வமாக நீட்ட, அவளது கை ரேகையை உற்றுப் பார்த்த பாட்டி “உன் மனசுக்குள்ள இப்ப ஆயிரம் குழப்பங்கள் இருக்கும். ஆனா அந்த ஆத்தா மேல பாரத்தை போட்டுட்டு நீ நிம்மதியா வீட்டுக்கு போ. அவ எப்பயும் உனக்கு துணையா இருப்பா. உன் நல்ல மனசுக்கு ஏத்த மாதிரி உனக்கு நல்ல வாழ்க்கை அமையும். நீ எதை பத்தியும் நெனச்சு கவலைப்படாத தாயி.” என்று சொல்ல,

சந்தோஷமாக புன்னகைத்த நிலா “நான் மனசுல நினைக்கிற மாதிரி தான் எல்லாமே நடக்கும்னா.. அப்போ எனக்கும் அரவிந்துக்கும் தான் கல்யாணம் நடக்கும். விஷ்வா மாமா help பண்ணா கண்டிப்பா இந்த பாட்டி சொன்ன மாதிரி எல்லாமே நல்லா தான் நடக்கும். ஆனா அதுக்கு அவர் மனசு வைக்கணுமே..!! ப்ளீஸ் கடவுளே.. நீங்கதான் எப்படியாவது எங்க மாமா மனச முதல்ல மாத்தி அவர எங்க லவ்வுக்கு support பண்ண வைக்கணும். அவர் எங்க பக்கம் வந்துட்டாலே, பாதி பிரச்சனை solve ஆகிடும். அவர் கொஞ்சம் strictஆ சொன்னா அப்பா கேட்டு தான் ஆகணும்.” என்று நினைத்து வேண்டிக் கொண்டாள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured