அத்தியாயம் 194
அர்ஜுன் தனக்கு கொடுத்து இருந்த முக்கியமான வேலையை முடிப்பதற்காக இன்டர்காம் மூலம் தனக்கு வந்த இன்ஃபர்மேஷனை பாலோ செய்து ஃபாலோ செய்து தனியாக பதுங்கி இருந்த ஒரு ஐந்து பேர் கொண்ட டெரரிஸ்ட் கும்பலை கொன்று குவித்துவிட்டு தேன்மொழி மற்றும் குழந்தைகள் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள் கிளாரா.
அப்போது அவர்களைப் பார்த்து துப்பாக்கி நீட்டியபடி அவர்களது இரு பக்கமும் இரண்டு டெடரிசிகள் நிற்பதை அவள் கண்டாள். அதில் ஷாக் ஆகி தன் கையில் இருந்த துப்பாக்கியை அதில் ஒருவனை நோக்கி நீட்டிய கிளாரா “stay away!” என்றபடி தேன்மொழி மற்றும் சித்தார்த்தை நோக்கி சென்றாள்.
நடுங்கிய உடலுடன் ஒரு கையில் சித்தார்த்தையும் இன்னொரு கையில் ஆருத்ராவையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த தேன்மொழிக்கு கிளாராவை பார்த்தவுடன் தான் போன உயிர் திரும்ப வந்ததை போல இருந்தது.
ஒரு பாதுகாப்பு அறன் போல தேன்மொழி மற்றும் சித்தார்த்துக்கு முன்னே நின்ற கிளாரா “ஒழுங்கா ஓடிப் போயிரு. இல்லனா உன்னை இங்கயே சுட்டுக் கொன்றுவேன்.” என்று மிரட்டினாள். அவளுக்கு பின்னே அர்ஜுனனின் குடும்பத்தினர்கள் இருக்கும்போது, தன்னை சூடும் ரிஸ்கை கண்டிப்பாக எடுக்க மாட்டாள் அப்படி அவள் செய்தால், மறுமுனையில் இருப்பவன் கண்டிப்பாக அவர்களை சுட முயற்சி செய்வான் என அறிந்து இருந்ததால் அவர்களுக்கு எதிரில் இருந்த டெரரிஸ்ட் தைரியமாக “முதல்ல நீ உன் கையில இருக்கிற கண்ணை தூக்கிப்போட்டு டி.” என்றான் திமிராக.
இருந்த பயத்தில் தேன் மொழியை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டு இருந்த ஆருத்ரா “மம்மி எனக்கு ரொம்ப பயமா இருக்கு. டாடி எப்ப வருவாரு?” என்று கேட்டபடி அழுது கொண்டு இருக்க, சித்தார்த் தங்களுக்கு இருபுறமும் நின்று கொண்டு இருக்கும் டெரரிஸ்டுகளையும் தங்களைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் கிளாராவையும் அமைதியான முகத்துடன் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது மூளைக்குள் இப்போது ஆயிரம் விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
தனக்கு எதிரில் இருப்பவனை தன்னால் உடனே தாக்க முடியாது என்றாலும் கூட, எப்படியாவது தொடர்ந்து அவனிடம் பேசிக் கொண்டே அவன் அருகில் சென்று அவனது கவனத்தை சில நொடிகள் வேறு பக்கம் திசை திருப்பி அவன் கையில் இருக்கும் பிஸ்டலை பிடுங்க வேண்டும் என்று நினைத்த கிளாரா “இங்க பாரு நான் சொல்றத கேளு.. எவனோ ஒருத்தனுக்காக நீ எதுக்காக இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கிற? உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னோட பாஸ் உன்னை காப்பாத்த வருவான்னு உனக்கு தோணுதா?
அவனுக்கு நீங்க யாருமே முக்கியம் இல்ல. ஒழுங்கா இவங்கள விட்டுருங்க. இவங்கள யாருக்கு என்ன ஆனாலும் சீஃப் உங்களை சும்மா விட மாட்டாரு. இங்க இருந்து நீங்களும் உயிரோட போக முடியாது. உங்க ஃபேமிலில ஒருத்தர் கூட உயிரோட மிஞ்ச மாட்டாங்க.” என்றபடி அவன் அருகில் செல்ல முயற்சி செய்தாள்.
கிளாராவை போல அவளுக்கு எதிரி இருந்தவனும் எக்ஸ்பீரியன்ஸ்ட் கில்லராக இருந்ததால் அவளது பிளானை அவன் உடனே புரிந்து கொண்டான். அவளை ஒரு அடி கூட தன் அருகில் வரவிடுவது தனக்கு ஆபத்தாக முடியலாம் என்று அவன் மூளை அவனை எச்சரித்த தருணம், எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் கையில் இருந்த பிஸ்டலால் கிளாரா சுதாரித்துக் கொள்வதற்குள் அவளது நெற்றி பொட்டில் சுட்டு விட்டான்.
அதில் தனது அடி தொண்டையில் இருந்து ஆஆஆஆ! என்று அலறிய கிளாரா தரையில் விழுந்தாள். அவள் தலையில் இருந்து ரத்தம் வழிந்து ஓட தொடங்கியது. அதைக் கண்டு ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தாள் தேன்மொழி. அந்த இடம் முழுவதும் ஏசி ஓடினாலும் அவளுக்கு பயத்தில் வியர்த்து கொட்ட, அவளது கை கால்கள் எல்லாம் கிடு கிடுவென்று நடுங்க தொடங்கியது.
சில நொடிகளுக்கு முன்பு வரை தங்களுக்காக ஒரு போர் வீராங்கனை போல தைரியத்துடன் அவனை எதிர்த்து போராடிக் கொண்டு இருந்த கிளாரா இப்போது உயிருடன் இல்லை என தேன்மொழியால் நம்பவே முடியவில்லை. இதில் அவனது அடுத்த குறி தாங்கள் தான் என்று நினைத்தாலே அவளுக்கு இருந்த பயத்திலும் பதட்டத்திலும் படபடவென்று வந்தது. அவளது இதயம் வேகமாக துடிக்க, அதன் சத்தம் அவளுக்கே கேட்டது.
அவள் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே தரையில் மண்டியிட்டு அழ, அவளுடன் இருந்த சித்தார்த்தும் ஆருத்ராவும் கூட அவள் அருகில் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தார்கள். இப்போது அவர்களுக்கு முன்னே இருந்தவன் அவனுக்கு இடைஞ்சலாக இருந்த கிளாரா அங்கே இல்லாததால் திமிராக அவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டியபடி முன்னே நடந்து வந்தான்.
முன்னும் பின்னுமாக சென்று இவர்கள் மூன்று பேரையும் எப்படியாவது லாக் செய்து விட வேண்டும் என்று தான் அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார்கள் என்பதால், அவர்களுக்கு மறுப்புரம் இருந்தவனும் அவர்களை நோக்கி நடந்து வர தொடங்கினான். தனது கூர்மையான விழிகளால் தங்கள் பின்னே வந்து கொண்டு இருப்பவனை கவனித்த சித்தார்த் அவன் மறைத்து வைத்திருந்த பிஸ்டலை கையில் எடுத்து அவன் தன்னை கவனிப்பதற்குள் சரியாக குறி பார்த்து சிறிதும் தாமதிக்காமல் அவன் கையில் சுட்டான்.
அதில் அவன் ஆஆஆஆ!! என்று கத்தியபடி தன் கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். தன் கூட்டாளியை சித்தார்த் சுட்டுவிட்டதால் அவர்களுக்கு முன்னே இருந்தவன் “உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? இப்ப நீ என் கையால சாகப்போறடா குட்டி பிசாசு.” என்று சொல்லிவிட்டு இப்போது சித்தார்த்திற்கு பிஸ்டலை குறி வைத்தான்.
மீண்டும் ஒருமுறை தனக்கு மிக அருகில் கன் ஷாட் சவுண்ட் கேட்டதால் ஒரு நொடி பயத்தில் கத்தி திடுக்கிட்ட தேன்மொழி தனக்கு எதிரில் இருந்தவன் இப்போது சித்தார்த்தை சுட முயற்சி செய்ததால் மேலும் பதட்டம் அடைந்தாள். அவளுக்கு அந்த நொடி என்ன செய்வது என்றே தெரியவில்லை. எதையும் தன் கண் கொண்டு பார்க்க கூட தைரியம் இல்லாமல் ஆருத்ரா தேன்மொழியை கட்டிப்பிடித்துக் கொண்டு அவளது மடியில் தன் முகத்தை புதைத்து காதுகளை பொத்திக் கொண்டு “மம்மி.. மம்மி.. எனக்கு.. எனக்கு பயமா இருக்கு மம்மி.” என்று கதறி அழுது கொண்டே மூச்சு வாங்க சொன்னாள்.
கிளாரா தனக்கு கொடுத்த துப்பாக்கியை எங்கே வைத்தோம் என்று தேன்மொழியின் மூளை அவசரமாக யோசிக்க, கீழே விழுந்து கிடந்த கிளாராவிற்கு அருகில் அவளது பிஸ்டல் கடந்ததை கவனித்த தேன்மொழி அந்த நொடி அவளுக்கு சித்தார்த்தை காப்பாற்றுவதை தவிர வேறு எதுவும் அவளுக்கு தோன்றாததால் அதை அவசரமாக குணிந்து எடுத்து தனக்கு எதிரில் இருந்தவனை பார்த்து தன் கண்களை மூடிக் கொண்டு சரமாரியாக இஷ்டத்திற்கு சுட்டு தள்ளினாள்.
அவள் இவ்வாறு சுட்டதில் அவன் செத்தானா என்று கூட அவள் கவனிக்கவில்லை. தன் கண்களை பயத்தில் இறுக்கமாக மூடி இருந்த அவளுக்கு தனது நடுங்கும் கரங்களில் இருக்கும் பிஸ்டலில் இருந்து நொடிக்கு ஒரு குண்டு வேகமாக பலத்த சத்தத்துடன் பாய்வது மட்டுமே கேட்டது. அந்த துப்பாக்கியில் உள்ள புல்லட்டுகள் காலியாகும் வரை தொடர்ந்து அவனை சூட் செய்து கொண்டிருந்த தேன்மொழி குண்டு வரும் சத்தம் நின்ற பிறகு தான் சட்டென்று தன் கண்களை திறந்தாள்.
அவளுக்கு எதிரில் இருந்தவன் பல குண்டுகளால் காயப்பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து போய் கிடந்தான். தன் கையில் இருந்த துப்பாக்கியையும் செத்துப் போய் கிடக்கும் அவனையும் மாறி மாறி பார்த்த தேன்மொழி “இப்ப இவனை நானா கொன்றேன்?” என்று தனக்குத் தானே நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டாள். இதற்கு நடுவில் மீண்டும் அவளுக்கு துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டதால் அதில் ஷாக் ஆகி தன் கையில் இருந்த துப்பாக்கியை பதட்டத்தில் கீழே தூக்கிப் போட்ட தேன்மொழி தன் காதுகளை பொத்திக் கொண்டு “அம்மா!” என்று அலறினாள்.
கையில் அடிபட்டு கீழே விழுந்தவன் மீண்டும் தன் துப்பாக்கியை கையில் எடுத்து தன்னையும் தேன்மொழியையும் சுட முயற்சி செய்ததால் சித்தார்த் தான் மீண்டும் அவனிடம் இருந்த பிஸ்டலால் அந்த டெரரிஸ்ட்டை சரியாக அவனது இதயத்திற்கு குறி வைத்து சுட்டுக் கொன்று இருந்தான்.
தேன் மொழியின் அருகில் அமர்ந்து இருந்ததால் அவள் பயத்தில் நடுங்குவதை சித்தார்த்தால் தெளிவாக பார்க்க முடிந்தது. அவளை அப்படி பார்க்க அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தன் உயிரை காப்பாற்றுவதற்காக தேன்மொழி இறுதிவரை போராடியதையும், தனக்காகவும் ஆருத்ராவிற்காகவும் எந்த ஒரு ப்ராக்டிஸ் கூட இல்லாமல் இத்தனை பயத்திலும் அவள் ஒருவனை தன் கண் முன்னே சுட்டுக் கொன்றதை அவன் ஆச்சரியம் நிறைந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் வயதில் சிறியவனாக இருந்தாலும் அவன் வளர்க்கப்பட்ட விதமும் அவன் வாழ்ந்த சூழலும் அவனுக்கு ஏராளமான விஷயங்களை சொல்லிக் கொடுத்து இருந்தது. அவர்கள் இப்படி பிடிபட்டதில் இருந்து தேன்மொழி ஒரு நொடி கூட அவளைப் பற்றி யோசிக்காமல் தன்னையும் ஆருத்ராவையும் காப்பாற்ற தான் முயற்சி செய்தால் என்பதை அவனும் தெளிவாக புரிந்து கொண்டான்.
அந்த நொடி அர்ஜுன் அடிக்கடி அவனிடம் “she is your mom சித்! உன்னோட சியா மம்மி உன் கூட இருக்க முடியாதனால தான் காட் கிட்ட கேட்டு தேன்மொழிய உனக்கு அம்மாவா அனுப்பி வச்சிருக்கான்னு நான் நம்புறேன். தேன்மொழி பாக்குறதுக்கு மட்டும் இல்ல. உங்க மேல பாசம் வைக்கிறதுலையும் நிஜமாவே உங்க சியா மம்மி ஸ மாதிரி தான். She loves you and ஆருத்ரா.
அந்த பாசத்துனால தான் நீ அவளை எவ்ளோ ஹர்ட் பண்ணாலும் அவ திரும்ப திரும்ப உன்ன சுத்தியே வர்றா.. உங்கள பத்தியே யோசிச்சிட்டு இருக்கா.. நீ அவளை உன் அம்மாவா ஏத்துக்கலைன்னா கூட பரவால்ல. அட்லீஸ்ட் அவளையும் ஒரு ஈக்குவல் ஹியூமன் பீயிங்னா ட்ரீட் பண்ணு.” என்று அர்ஜுன் சொன்னதை நினைத்து பார்த்த சித்தார்த் கலங்கிய கண்களுடன் தேன்மொழியை கண்டான்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)