அத்தியாயம் 193
ஜானகி பிரதாப்பின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. சுத்தி சுத்தி ஒரே கன் ஷாட் சவுண்டா கேட்குது. யார் யாரை சுடுறாங்க, வெளிய என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது. நம்ம ஃபேமிலில இருக்கிறவங்க யாருக்காவது ஏதாவது ஆயிட்டா என்ன பண்றது? இப்ப தான் அர்ஜுன் கோமால இருந்து சரியாகி வந்ததுக்கு அப்புறம் நாமலே கொஞ்சம் சந்தோஷமா இருக்கோம். அதுக்குள்ள இவ்ளோ பெரிய ஆபத்துல வந்து மாட்டிக்கிட்டோமே! போலீஸ் எல்லாம் வந்து நம்மள காப்பாத்த மாட்டாங்களா?” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள்.
தன் கையில் இருந்த துப்பாக்கியை இறுக்கமாக பிடித்த பிரதாப் “கொஞ்ச நேரம் சும்மா இரு ஜானகி. இப்படி எல்லாம் நடக்க போகுதுன்னு எனக்கே அர்ஜுன் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் சொன்னான். இப்படி குடும்பத்தில இருக்கிற மொத்த பேரையும் கூட்டிட்டு வந்து வெச்சு வெளிநாட்டில வந்து ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு நானும் அவன் கிட்ட அத்தனை தடவ சொல்லிப் பார்த்தேன்..
ஆனா உன் பையன் எங்க கேட்டான்? எல்லாமே நான் பிளான் பண்ணிட்டேன். எல்லாமே என் கண்ட்ரோல்ல தான் இருக்கு நான் பாத்துக்குறேன்னு சொல்லி இப்ப இங்க கொண்டு வந்து நம்ம நிறுத்தி வச்சிருக்கான். பிரச்சனை வரப்போகுதுன்னு தெரிஞ்சா அந்த இடத்தை விட்டு போறது தானே புத்திசாலித்தனம்! ஆனா இவன் எல்லாரையும் வச்சுக்கிட்டு டெரரிஸ்ட் கும்பல உள்ள விட்டு அவங்கள புடிக்கணும்னு பெரிய ஹீரோ மாதிரி என்னென்னமோ பண்ணிட்டு இருக்கான்.. யாருக்காவது ஏதாவது ஆகட்டும்.. சத்தியமா சொல்றேன் நான் அவனை என் பையனுக்கு கூட பாக்க மாட்டேன். என்ன நடக்குதுன்னு பாரு நீ!” என்று கோபமாக சொன்னார்.
தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் அர்ஜுனுக்கு தவறாக ஏதேனும் நடந்துவிட்டால் என்ன செய்வது என நினைத்து சித்தார்த் ஆருத்ரா இருவரும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்கள். தனக்கும் அதே கவலை இருந்தாலும் கூட அவர்களிடம் தான் தைரியமாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ள வேண்டும் என நினைத்த தேன்மொழி “உங்க அப்பாவுக்கு எதுவும் ஆகாது. அவர் கான்ஃபிடன்ட்டா எதுவும் ஆகாது நான் பார்த்துக்கிறேன்னு சொல்றாருன்னா, கண்டிப்பா அவர் கிட்ட ஏதாவது பிளான் இருக்கும். நீங்க பயப்படாதீங்க. இப்படி அடிக்கடி பேசி சத்தம் போட்டு நம்ம இருக்கிற இடத்தை நீங்களே அந்த டெரரிஸ்ட் கும்பலுக்கு காட்டிக் கொடுத்திராதீங்க.” என்று சொல்லி தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தாள்.
ஆனால் அவள் சொல்வதை எல்லாம் கேட்காமல் தாங்கள் மறைந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்ற சித்தார்த் “நான் போய் அப்பா என்ன பண்றாருன்னு பாக்குறேன். அவருக்கு யாரோட ஹெல்ப்பாவது தேவைப்பட்டா என்ன பண்றது?” என்று கேட்டுவிட்டு வெளியில் செல்ல முயற்சி செய்தான்.
உடனே பதறி அடித்துக் கொண்டு தானும் எழுந்து நின்ற தேன்மொழி “ஐயோ சித்தார்த் அவசரப்படாத. உங்க அப்பாவுக்கு எதுவும் ஆகாது. ப்ளீஸ் நீ எங்கயும் போகாத இங்கயே இரு.” என்றபடி அவன் கையை பிடித்து இழுத்தாள். ஆனால் அவனோ பிடிவாதமாக அங்கே இருந்து வெளியில் செல்ல போராடிக் கொண்டு இருக்க, ஒரு பக்கம் எதிரிகளை ஒரு கை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற தன் அப்பாவே இன்னும் திரும்ப வரவில்லை. இதில் தன் அண்ணன் வேறு அங்கே சென்று பார்த்து வருகிறேன் என்று பிரிவாதம் பிடிக்கிறானே என நினைத்து “வேண்டாம் ப்ளீஸ் யாரும் போகாதீங்க! எனக்கு பயமா இருக்கு.” என்று சொல்லி அழ தொடங்கி விட்டாள் ஆருத்ரா.
இப்படி ஒரு பக்கம் தேன்மொழி குழந்தைகள் இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தவிக்க, தங்களது ஆட்களை அர்ஜுனின் ஆட்கள் சுற்றி வளைத்து கொசுவை பேட்டில் அடித்துக் கொள்வதைப் போல துப்பாக்கியில் சரமாரியாக தங்கள் ஆட்களை சுட்டுக் கொண்டு இருப்பதால் எப்படியாவது அர்ஜுனனின் குடும்பத்தில் இருந்து ஒருவரையாவது பிடித்து விட வேண்டும் என வெறி கொண்டு அங்கும் இங்கும் யாரேனும் கிடைப்பார்களா என தேடிக் கொண்டு இருந்தார்கள்.
அப்போது அந்த பக்கமாக வந்த இருவருக்கு தேன்மொழி மற்றும் சித்தார்த் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. அதனால் அந்த தீவிரவாதிகள் எப்படியாவது இவர்களை பிடித்து அவர்களை பனயமாக வைத்து இங்கே இருந்து தப்பித்து விடுவது என முடிவெடுத்து பதுங்கி பதுங்கி மெதுவாக அவர்கள் அருகில் சென்றார்கள்.
அதேபோல இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து வந்ததற்கு குறைந்தபட்சம் தாங்கள் உயிரோடு செல்லவில்லை என்றாலும் அர்ஜுனையாவது எப்படியாவது கொன்று விட வேண்டும் என நினைத்து 5 தீவிரவாதிகள் கூட்டமாக சேர்ந்து பிளான் போட்டு அர்ஜுனை அட்டாக் செய்ய முயற்சி செய்தார்கள்.
என்ன தான் செக்யூரிட்டி டீமில் உள்ளவர்களுக்கு அர்ஜுனையும் அவனுடைய குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டியது கடமையாக இருந்தாலும் கூட, அங்கே இருப்பவர்களின் முக்கியமானவன் அர்ஜுன் தான் என்பதால் சிசிடிவி கேமராவில் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அங்கே களத்தில் இருந்த அர்ஜுனனின் பாடி கார்டுகளுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து அவனை காப்பாற்ற சொன்னார்கள். இந்த கலவரத்தில் யாரும் தேன்மொழி மற்றும் சித்தார்த்தின் அருகில் இருவர் அவர்களை பிடிப்பதற்காக சென்றதை கவனிக்கவே இல்லை.
பிரிட்டோ சந்தோஷை நோக்கி தன் கையில் இருந்த துப்பாக்கியை நீட்டியபடி இருக்க, எப்படியோ நல்லபடியாக அவன் தன்னிடம் வந்து சேர்ந்து விட்டான் என்று நினைத்து சந்தோஷத்தில் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டிருந்த ஜனனி இன்னும் கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தாள். சந்தோஷ் பிரிட்டோவை பார்த்து முறைக்க, அவனை நோக்கி இருந்த தன் துப்பாக்கியை கீழே இறக்கிய பிரிட்டோ “சாரி ப்ரோ கோச்சுக்காதீங்க! நீங்க தான் வரீங்கன்னு எனக்கு தெரியாது. யாரோ அட்டாக் பண்ண வராங்கன்னு நினைச்சு தான் கன்னை உங்க முன்னாடி பாயிண்ட் பண்ணிட்டேன்.” என்றான்.
அவன் அப்படி பேசியவுடன் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்ட சந்தோஷ் “இட்ஸ் ஓகே ப்ரோ பரவால்ல. நீங்க என் வைஃப்க்கும், குழந்தைகளுக்கும் ஹெல்ப் பண்ணிருக்கீங்க.. அதுக்கு நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். நீங்க போங்க.. போய் சீஃப்க்கு ஹெல்ப் பண்ணுங்க. நான் இவங்கள பார்த்துக்கிறேன்.” என்றான்.
தயக்கத்துடன் தன் கையில் இருந்த ஜனனியின் குழந்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட பிரிட்டோ தனக்கு எதிரில் அவனுக்கு அருகில் நின்று கொண்டு இருந்த ஜனனியையும் அவளது மற்றொரு குழந்தையையும் ஒரு பார்வை பார்த்தான். தீர்க்கமான குரலில் “ஜனனி மேடம் கூட இருக்க சொல்லி சீஃப் எனக்கு ஆர்டர் பண்ணி இருக்காரு. நான் உங்களுக்கு பாதுகாப்பா இங்கயே இருக்கேன்.” என்றான்.
ஏற்கனவே தனக்கு தெரியாமல் அர்ஜூன் எப்படி இப்படி ஒரு பிளானை போட்டு தன்னை அதில் சம்பந்தம் படுத்தாமலே இவர்களை எல்லாம் இந்த இடத்திற்கு கையில் துப்பாக்கியுடன் அழைத்து வந்தான் என நினைத்து சரியான கோபத்தில் இருந்த சந்தோஷ் இப்போது பிரிட்டோ வேறு தன் பேச்சைக் கேட்காமல் பேசுவதால் இன்னும் கடுப்பாகி, “எனக்கு என் பொண்டாட்டியையும் பிள்ளையும் பாத்துக்க தெரியாதா? என்னை விட உங்களுக்கு இவங்க மேல அக்கறை வந்திருச்சா? அங்க எங்க பார்த்தாலும் டெரரிஸ்டா இருக்கானுங்க. அவங்க கண்ணுல படாம இங்க வர்றதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? நான் இருக்கும் போது நீங்க எதுக்கு தேவையில்லாம இங்க இருக்கணும்? பிரதாப் சார் கூட இருந்து நீங்க அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க அதான் கரெக்டா இருக்கும்.” என்று அதிகாரமாக சொன்னான்.
இப்போது அவனை முறைத்து பார்த்த பிரிட்டோ “சாரி சார், நீங்க என்ன சொன்னாலும் என்னால சீஃப்போட ஆர்டர மீற முடியாது. நான் இங்க இருக்கிறதுல உங்களுக்கு ஏதாவது பிராப்ளமா ஜனனி? இப்போதைக்கு உங்களையும் குழந்தைகளையும் பத்திரமா பாத்துக்கறது தான் என்னோட டியூட்டி.” என்று தன் நெஞ்சை நிமித்திக் கொண்டு கேட்டான்.
பிரிட்டோவின் திறமைகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்து இருந்த ஜனனி என்ன தான் சந்தோஷும் trained fighterஆக இருந்தாலும் பிரிட்டோ போன்ற ஒருவன் தங்களுடன் இருப்பது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து, “இல்ல பிரிட்டோ, நீங்க கோவப்படாதீங்க. ப்ளீஸ் நீங்க இங்க எங்க கூடயே இருங்க. அண்ணா என்ன சொன்னாலும் கரெக்டா இருக்கும். சந்தோஷ் கூட நீங்களும் என் பக்கத்திலேயே இருந்தா, எனக்கு இன்னும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.” என்று சொல்லி விட்டாள்.
இப்போது தனது மனைவியும் தன் பேச்சைக் கேட்கவில்லையே என நினைத்து சந்தோஷின் முகம் ஆத்திரத்தில் அஷ்ட கோணலானது. ஆனால் எப்போதும் போல இப்போதும் அப்பாவியான ஜனனி அவனை கவனிக்கவில்லை. ஆனால் பிரிட்டோவின் கண்கள் சந்தோஷின் மீது மட்டும் தான் இருந்தது.
தேன்மொழி சித்தார்த் ஆருத்ரா மூவரும் ஒரு இடத்தில் பதுங்கி இருக்க, அவர்களை நோக்கி வந்த இருவரும் அவர்களுக்கு இரு பக்கமும் நின்று அவர்களை வேறு எங்கும் செல்ல விடாமல் லாக் செய்தார்கள். வெளியில் செல்ல திரும்பிய சித்தார்த் அந்த கருப்பு நிற யூனிபார்ம் அணிந்து முகமூடியுடன் இருப்பவர்கள் தங்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்திருப்பதைக் கண்டு ஷாக் ஆனான்.
அர்ஜுனனின் குடும்பத்தில் யார் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் வந்த அவர்களுக்கு அவனது மனைவியும், குழந்தைகளும் கண்ணில் பட்டவுடன் உள்ளுக்குள் ஒரே சந்தோஷமாக இருந்தது. அவர்கள் கண்களில் இவர்களை இன்று பிடித்து தங்கள் வசப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தார்கள்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)