Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 174

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 174

by Thenaruvi Tamil Novels
13 views

அத்தியாயம் 174: அழகிய குடும்ப புகைப்படம் (பார்ட் 1)

வருண் ரெசார்டில்… 

வருனும், ரித்திகாவும், ராஜா மற்றும் ராணியின் காஸ்ட்யூம் அணிந்து இருந்ததால் பேக்ரவுண்ட் கூட அந்த காலத்தை ஒத்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஆர்ட் டைரக்டர்கள் அனைத்தையும் பக்காவாக ரெடி செய்து வைத்து இருந்தனர். ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் அந்த செட் ஐ சுற்றிப் பார்த்த ரித்திகா , அது நிஜமான அரண்மனை போலவும் அதில் தான் மகாராணியாக இருப்பது போலவும் கற்பனை செய்து பார்த்தவளால் தன்னுடைய ராஜாவாக வருணை நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

அரண்மனையின் தூண்கள் போல செட் அமைத்து இருந்தவர்கள், ஒரு உண்மையான அரண்மனையின் தரை தளத்தின் காட்சி எப்படி இருக்குமோ அதை அப்படியே தத்ரூபமாக வடிவமைத்து இருந்தனர். அவை அனைத்தையும் பார்த்து ரசித்த படியே வருணின் அருகே வந்து நின்றாள் ரித்திகா . ரித்திகாவை தான் கண்டு கொள்ளாததை போல் நடித்த வருண், ஓர கண்ணால் அவளை பார்த்தான்.  தலை முதல் கால் வரை அவளை பார்த்த வருண், உண்மையில் வாயடைத்து போய் விட்டான் என்று சொன்னால் அது மிகை ஆகாது. 

வருணின் கையில் இருந்ததைப் போல அவளுடைய கையிலும் ஒரு வாழ் இருந்தது. அதை அவள் நேர்த்தியாக பிடித்து இருந்தாள். மையிட்ட அவளுடைய கண்களில் ஒரு வசீகரமும், கம்பீரமும் பிரகாசித்தது. 😍 அவள் அணிந்து இருந்த புடவைக்கு  அவளுடைய எலுமிச்சை நிற இடுப்பு அவனுடைய கண்களுக்கு விருந்தாக இருந்தது. 😍 அதில் சில நொடிகள் அவனுடைய  பார்வை நின்று கொண்டு இருக்க, “டேய் வருண் என்ன டா பண்ற..??? அப்படி என்ன டா உனக்கு இவ ஹிப் மேல ஒரு விக்னஸ்…?? பாக்க வேணாம்… பாக்க….வேணாம்ன்னு.. நினைச்சாலும் எதுக்கு நீ அங்க பாக்குற..?? எவ்ளோ பெரிய ஆள் நீ..?? உனக்கு இந்த ரித்திகா எல்லாம் ஒரு ஆளா..?? அதுக்குள்ள நீ உன் ஜானுவ மறந்துட்டியா..?? இப்ப என்ன நீ இவள கல்யாணம் பண்ணிக்கிட்டே  இவ கூட ஜாலியா சேர்ந்து வாழ போறியா..?? எப்படி டா உனக்கு உன் ஜான்விக்கு துரோகம் பண்ண மனசு வருது..???” என்று அவனுடைய மனசாட்சி அவனை தட்டிக் கேட்க, அடுத்த நொடியில் அவள் மீது இருந்த தன்னுடைய பார்வையை விளக்கிக் கொண்டான் வருண். 

இதுவரை அவன் செய்து கொண்டு இருந்த செயல் தன்னையே அவனை வெறுக்க செய்தது. அவனுடைய இதயம் ரித்திகாவின் பக்கம் சென்றாலும், ஜான்வின் மீது அவனுக்கு இன்னும் இருக்கும் காதல் அவனை அதை செய்ய விடவில்லை. இப்படியே அவன் ரித்திகாவை யும், ஜான்வியையும், பற்றி யோசித்துக் கொண்டு இருக்க, “சார் நீங்க ரெடினா நம்ப டேக் போலாம்.” என்று ஒரு போட்டோ கிராபர் வருணை பார்த்து சொல்ல, “ம்ம்ம்… நான் ரெடி தான்.” என்று சலிப்பான குரலில் சொன்ன வருண், கையில் ஒரு வாழ் உடன் மேலே சென்று நின்றான். 

ரித்திகா அவன் அருகே வந்து நின்றாள். அவர்கள் இருவரையும் பார்த்த கேமரா மேன், “நீங்க ரெண்டு பேரும் அப்படியே சண்டை போட்டுக்கிற மாதிரி நடுவுல வாழ் ஐ வச்சுட்டு போஸ் குடுங்க. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குற மாதிரியும் இருக்கணும் உங்களுக்கு நடுவுல ஒரு ரொமான்ஸ் இருக்கணும். உங்க கண்ணுல லவ் தெரியணும்.” என்று சொல்ல அது அவர்களுக்கு புரிந்ததோ புரியவில்லையோ தெரியவில்லை. ஆனால் அனைத்தும் புரிந்தது போல என்ற ராகவி தன்னுடைய தலையை வேகமாக ஆட்டினாள். 

அந்த போட்டோ கிராபர் சொன்னதை கேட்டு விஷமாக புன்னகைத்த்த வருண், தன் கையில் இருந்தா வாழ் ஐ ரித்திகாவின் கழுத்துக்கு நேராக நீட்டினான். தான் இப்படி செய்தால் ரித்திகா அதை கண்டு பயப்படுவாள் என்று அவன் நினைத்து இருந்தான். ஆனால் அவன் நினைத்ததற்கு நேர் மாறாக அவனை சாதாரணமாக பார்த்த ரித்திகா, சிறிதும் தயக்கம் இறி தன் கையில் இருந்த வாழ் லை வருணின் கழுத்தின் அருகே வைத்தாள். 

அதனனல், அதிர்ந்த வருண் அவளை முறைத்துப் பார்த்தான். 😒 🤨 ஒரு வேளை அவன் இந்த போட்டோ ஷூட்டிற்காக தான் தன்னை பார்த்து முறைக்கிறான் போல என்று நினைத்துக் கொண்ட ரித்திகா, அவளும் அவனை கம்பீரமாக பார்த்தாள். அந்தப் பார்வை  வருணை ஏதோ செய்தது. அதனால் அவளுடைய கழுத்தில் இருந்து அந்த கத்தியை சிறிது விலக்கியவன் அவள் அருகே தன்னை அறியாமல் மெது மெதுவாக சென்று கொண்டு இருந்தான். இந்த காட்சிகளில் ஒன்றைக் கூட வீணாக்க கூடாது என்று நினைத்த கேமரா டீம், சிலர் அந்த காட்சிகளை போட்டோக்களாகவும், சிலர் பல ஆங்கிள்களில் அதை வீடியோவாகவும் எடுத்து கொண்டு இருந்தனர்.

அங்கே இருந்த ஆர்ட் டைரக்டருக்கு ஒரு வேலை தான் இப்போது இந்த சூழ்நிலைக்கு பொருந்தும் படி ஏதேனும் ஒரு பாடலை ப்ளே செய்தால் இவர்கள் அதற்கு ஏற்றார் போல் நடிக்க கூடும் என்று நினைத்தவர், 

நான நான நான நான நான நானா     
   
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா   
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா   
என் காதில் காதல் சொல்லுவானா     
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்     
தள்ளாடும் என்னைத் தாங்குவானா     
வா என்று கட்டளை இட்டானா   
முத்தத்தில் கைவிலங்கிட்டானா     

கைதாகினால் தேவ சேனா (நானா)

அந்தப் பாடல் தன்னுடைய செவிகளை எட்டிய உடனே ஒரு பெர்ஃபார்மர் ஆக மாறிய ரித்திகா , அதற்கு ஏற்றார் போல் லிப் சின்ங்க் உடன் அங்கு இருந்த தூண்களின் நடுவே ஓடி ஆடி  வருணை பார்த்து அந்த பாடலை பாடினாள். அந்த காட்சியை பார்த்த செண்பகமும், விஷ்ணுவும், ரித்திகா என்ன தான் இந்த காட்சியோடு ஒன்றி போய் இந்தாலும், வருண் அந்த அளவிற்கு அவளுக்கு ஒத்துழைக்க போவதில்லை என்று தான் நினைத்தனர். 

ஆனால் அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ரித்திகாவை  உணர்ச்சிகள் நிறைந்த கண்களுடன் பார்த்த வருண், அந்த பாடல்களின் வரிகளுக்கு ஏற்ப அவளுடன் இணைந்து பெர்ஃபார்ம் செய்தான். இடையிடையே பி. ஜி. எம்.  வரும்போது எல்லாம் அவளுடன் இணைந்து ஆடினான். அதை வாயைப் பிளந்து கொண்டு பார்த்த விஷ்ணு, “என்ன அம்மா நடக்குது இங்க..??  என் வருண் அண்ணன் தானா இது..??? இவருக்கு டான்ஸ் ஆட தெரியும்ன்றதே எனக்கு ஷாக்கா இருக்கு. இதுல இவ்ளோ அழகா பெர்பார்ம் பண்றாரு. இத்தனை நாளா இந்த டேலண்ட் எல்லாத்தையும் இவரு எங்க அம்மா வச்சிருந்தாரு..??” என்று செண்பகத்திடம் கேட்டான். 

செண்பகம்: “இப்ப நீ பாக்குறது நம்ப ஒரிஜினல் வருண் இல்லையே டா. நீ சின்ன பையன்றதுனால நீ பெருசா அவன கவனிக்கலைன்னு நினைக்கிறேன். உன் வயசுல இருக்கும்போது எல்லாம் அவன் அப்படியே உன்ன மாதிரி தான் இருப்பான். அவனுக்கு பாட்டு, டான்ஸ்னா, ரொம்ப பிடிக்கும். படிக்கிற காலத்துல பசங்க எல்லாரையும் செட்டு சேர்த்துக்கிட்டு மியூசிக் பேண்ட்லாம் வச்சிருந்தான். 

ஆனா அப்போ தான் நம்ம கம்பெனி பொறுப்பெல்லாம் அவன் தலையில வந்து விழுந்துடுச்சு. அப்போ அதுல இருந்து எல்லாம் வெளியில வந்து பிசினஸ்குள்ள போனவன் தான். அப்புறம் கொஞ்ச வருஷத்துல ஜான்வியும் போயிட்டா. என் பையன் ஆளே மாறிட்டான். நான் என்னான்னு சொல்றது எல்லாம் விதி. பல வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு தான் நானே இவனை இப்படி பார்க்கிறேன். இதே மாதிரியே என் மகனும் மருமகளும் ரொம்ப வருஷத்துக்கு சந்தோஷமா வாழனும். எனக்கு அத தவிர வேற எந்த ஆசையும் இல்ல டா.” என்று கலங்கிய கண்களுடன் விஷ்ணுவிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

விஷ்ணு: “எனக்கு இங்க வர்ற வரைக்கும் கூட நிறைய டவுட் இருந்துச்சு மா. ஆனா எனக்கு இப்ப இவங்க ரெண்டு பேரையும் பார்த்தவுடனே நம்பிக்கை வந்திருச்சு. அடுத்த வருஷமே நீங்க ஒரு பேரனையோ, பேத்தியாயோ, கூட எதிர்பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன்.” என்று உற்சாகம் நிறைந்த குரலில் சொன்னவனுக்கு அப்போது தான் சித்தார்த்தின் ஞாபகம் வர, “ஏன்மா சித்தார்த்தும் நம்ம கூட தானே வந்தான்.. எங்க அவனை ஆளையே காணோம்… நான் வரும்போது அவனை பாத்தது.. அதுக்கப்புறம் பாக்கவே இல்லை.” என்று குழப்பமான செண்பகத்திடம் கேட்டான். 

செண்பகம்: அவன் ரொம்ப நேரமா தூங்கிட்டு இருந்தான் டா. அவன் இவ்வளவு நேரம் தூங்குற ஆள் இல்லையே என்ன ஆச்சுன்னு இப்ப தான் போய் நானும் பார்த்துட்டு வந்தேன். அவனுக்கு லேசா காய்ச்சல் அடிக்குது. சுகந்தி அவனை சாப்பிட வச்சு மருந்து குடுத்து திருப்பி தூங்க வச்சுட்டா. வருண் கிட்டயும் ரித்திகாகிட்டயும் இத பத்தி சொன்னா, அவங்க உடனே சூட்டே வேணாம் கிளம்பி போகலாம்னு சொல்லிடுவாங்க. அதான் நான் அவன் தூங்கிட்டு இருக்கான்னே சொல்லுன்னு சுகந்தி கிட்ட யார் கேட்டாலும் சொல்ல சொல்லி சொல்லிட்டேன்.

விஷ்ணு: “அவன் இங்க வந்து மட்டும் என்ன பண்ண போறான்… விடுங்க அம்மா அவன் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று சொல்ல சிறிது நேரம் தங்களுடைய குடும்பத்தை பற்றி அவனும் செண்பகமும் பேசிக் கொண்டு இருந்தனர். அவற்றை எல்லாம் கவனித்த ரேவதிக்கு இன்னும் நாராயணன் குடும்பத்தினரை பற்றி அவள் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. 

இவர்களுடன் அவள் தன்னுடைய அதிக நேரத்தை செலவிடுவதால், இன்னும் அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டு புரிந்து கொண்டவள், “கடவுளே இந்த குடும்பத்துல எல்லாரும் ரொம்ப நல்லவங்களா தான் இருக்காங்க. என்ன எங்க மாப்பிள்ளை மட்டும் தான் இன்னும் அவரோட செத்துப்போன பொண்டாட்டியவே நெனச்சு கவலைப்பட்டு இருக்காரு. அவரோட மனசு மட்டும் எப்படியாவது மாத்தி அவரையும் என் பொண்ணையும் சேர்ந்து சந்தோஷமா வாழ வச்சிரு பா. அதை தாண்டி எனக்கு வேற எதுவுமே தேவை இல்லை. விஷ்ணுவோட வாய் முகூர்த்தம் பழிக்கணும். அடுத்த வருஷம் இந்நேரம் எல்லாம் என் பொண்ணு எங்களுக்கு ஒரு வாரிசை பெத்து கொடுக்கணும்.” என்று வேண்டிக் கொண்டாள்.

அந்த பாடல் முடியும் வரை அங்கு அவர்கள் போட்டு இருந்த அரண்மனை செட்டிங்கில் வைத்து வருணையும், ரித்திகாயும், போட்டோ எடுத்தவர்கள் பின் அவர்களை அழைத்துக் கொண்டு அங்கு இருந்த செயற்கை நீர் வீழ்ச்சியின் அருகேயும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த பெரிய ஊஞ்சலின் அருகேயும் நிற்க வைத்து போட்டோக்களை எடுத்து குவித்தனர். 

அந்த அழகிய ஊஞ்சலை பார்த்தவுடன், ரித்திகாவிற்கு அதில் சென்று தான் அமர வேண்டும் என்று ஆசையாக இருந்தது. 😍 அதனால் அவள் அதையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அதை கவனித்த ஒரு போட்டோ கிராப்பர், “மேடம் நீங்க வேணா ஊஞ்சல் -ல உக்காருங்க. சார் உங்களுக்கு ஊஞ்சல் ஆட்டி  விடட்டும். நீங்க அப்படியே பின்னாடி திரும்பி அவர லவ் ஓட பாத்தீங்கன்னா, பிக்கு சூப்பரா வரும்.”  என்று தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருக்கும் வருணை கவனிக்காமல் ரித்திகாவை பார்த்து அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டு இருந்தான். 

ஆனால் வருணை கவனித்துக் கொண்டு இருந்த செண்பகம், “அந்த தம்பி சொல்ற மாதிரி பண்ணாலும் நல்லா தான் பா வருண் இருக்கும்.” என்று சொல்ல, “உங்களுக்கு எல்லாமே நல்லா தான் அம்மா இருக்கும்.” என்று நக்கலாக சொன்ன வருண் அந்த ஊஞ்சலின் பின்னே சென்று நின்றான். அவனையும் அந்த ஊஞ்சலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்த ரித்திகாவிற்கு இப்போது தான் அந்த ஊஞ்சலில் சென்று அமரலாமா வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. 

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured