அத்தியாயம் 171: பிரவினை வெறுக்கும் லக்ஷனா (பார்ட் 2)
அந்த போட்டோ கிராபருக்கு இது ஒரு கப்புல் சூட் என்பது போலவே தோன்றவில்லை. ஏனென்றால் ரித்திகாவும், வருணிக்கும், நடுவே இருவர் சென்று நிற்கும் அளவிற்கு அங்கே இடைவெளி இருந்தது. மூன்று கேமராக்களுடன் அனைத்து ஆங்கில்களிலும் அவர்களை நோக்கி என்ன பயன்..?? போஸ் கொடுக்க வேண்டியவர்கள் ஒழுங்காக போஸ் கொடுக்கவில்லை என்றால் போட்டோ எப்படி ஒழுங்காக வரும்..??? என்று நினைத்து ரித்திகாவையும் வருணையும் பார்த்து திருத்துருவென்று முழித்தனர் அங்கு இருந்த போட்டோ கிராபர்கள். ஆனால் அவர்களுக்கு வருனிடம் ரித்திகாவின் அருகே சென்று அவனை நிற்க சொல்ல தைரியம் இல்லை. அதனால் ரித்திகாவை பார்த்தார்கள். “மேடம் நீங்க கொஞ்சம் சார் பக்கத்துல போய் நில்லுங்க. அப்ப தான் போட்டோ நல்லா வரும்.” என்று ரித்திகாவிடம் ஒரு போட்டோ கிராப்பர் தங்கி தயங்கி சொல்ல, பயத்துடன் வருணை பார்த்தாள் ரித்திகா .
எங்கே தான் இந்த போட்டோ கிராபரின் பேச்சைக் கேட்டு அவன் அருகே சென்று நின்றால் அவன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்று நினைத்தவள், தயங்கி நின்றாள். வருண் அங்கு இருந்த அனைவரையும் கண்களால் முறைத்து பார்த்தே பயமுறுத்திக் கொண்டு இருந்தான். 😒 🙁 ஆனால் அவனுடைய முறைப்பு எல்லாம் செண்பகத்தையும், விஷ்ணுவையும், எதுவும் செய்து விடவில்லை. வருணின் அருகே சென்ற விஷ்ணு, “அண்ணா குரூப் போட்டோ எடுத்தா கூட, எல்லாரும் பக்கத்துல பக்கத்துல தான் நிப்பாங்க. இது கப்புல் போட்டோ சூட். அண்ணி பக்கத்துல பேய் நில்லுங்க. அப்ப தான் ஜோடியா பார்க்க இரண்டு பேரும் பாக்க அழகா இருப்பீங்க.” என்று அவனைப் பார்த்து சிரித்த முகத்துடன் சொல்ல தன் பங்கிற்கு செண்பகமும், “ஆமா நான் இந்த போட்டோவ தான் இன்விடேஷன்ல போடலாம்னு இருக்கேன். ரெண்டு பேரும் நல்லா போஸ் குடுங்க.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள். 😁 😁 😁
வெகு நாட்களுக்குப் பின்பு தன்னுடைய அம்மாவை இவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்த வருணாள், செண்பகத்தை மறுத்து பேச முடியவில்லை. அதனால் ரித்திகாவை ஒரு உணர்ச்சியற்ற பார்வை பார்த்தவன், அவள் அருகே சென்று நின்றான். இப்போது பொசிஷன் சரியாக இருந்ததால் கேமராவை பார்த்து ஃபார்மாலிட்டிக்காக புன்னகைத்தாள் ரித்திகா. 😁 😁 😁 வருணின் முகத்தில் புன்னகையின் சாயல் துளியும் தெரியவில்லை. வேண்டா வெறுப்பாக அவள் அருகே நின்று கொண்டு இருந்தான். அதனால் சிறு தயக்கத்துடன், “சே சீஸ்.” என்று சத்தமாக அந்த போட்டோ கிராபர் கத்தினான்.
அப்போதும் வருண் சிரிக்காததால், “பாவம் டா அந்த போட்டோ கிராபர் தம்பி எத்தனை தடவை தான் சே சீஸ்… சீஸ்ன்னு.. கத்திக்கிட்டு இருப்பாரு..??? கொஞ்சம் சிரி.. உன் பல்லுல இருக்குற முத்து எல்லாம் ஒன்னும் நீ சிரிச்சா ஒன்னும் கொட்டி போகாது.” என்று நக்கலாக சொல்ல அதை கேட்டு கடுப்பான வருண் ஈ . ணஈ என்று இழுத்து வைத்தான். 😁 😁 😁 இவ்வளவு தூரம் ஒரு எக்ஸ்பிரஷனை பெறுவதே பெரிய விஷயம் என்று நினைத்த அங்கு இருந்த போட்டோகிராபர்கள் தங்கள் கையில் இருந்த கேமராவில் அவர்களை வேறு வேறு கோணத்தில் படம் பிடித்தனர்.
பிரவீனின் நிச்சயதார்த்த மண்டபத்தில்..
எப்படியோ வரும் வழியாக போட்டோ ஷூட்டை முடித்துவிட்டு லக்ஷனாவை தன்னிடம் இருந்து விடுவித்தான் பிரவீன். நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் வெகு நேரம் இருப்பதால், லக்ஷனாவை சிறிது நேரம் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்குமாறு அவளுடைய அம்மா மங்கை சொல்லி கொண்டு இருந்தாள். பிரவீனின் மீது அதிக கோபத்தில் இருந்த லக்ஷனாவிற்கு தன்னுடைய அம்மாவை பார்க்க கூட மிகவும் வெறுப்பாக இருந்தது. அதனால், “உங்களுக்கு என் மேல ரொம்ப பாசம் இருக்கிற மாதிரி நடிக்காதீங்க மாம். உங்களோட ஆக்டிங் ஸ்கில்ஸ பாக்குறதுக்கு எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. இப்ப நான் ஒரு வேளை சாப்பிடலைனா, ஒன்னும் செத்துப் போயிட மாட்டேன். என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க. அதான் நான் எப்படியோ போனாலும் பரவாயில்லன்னு இந்த கல்யாணத்தை எனக்கு பண்ணி வைக்கிறீங்கல்ல…. அதோட உங்க டூட்டி முடிஞ்சிருச்சுன்னு விட்டுருங்க.” என்று ஆத்திரத்துடன் சொன்னவள், மங்கையின் கையில் இருந்த சாப்பாட்டு தட்டை கீழே தட்டி விட்டாள். 😡 😡 😤
லக்ஷனா கீழே தட்டி விட்டதால் அந்த விலை உயர்ந்த பீங்கான் தட்டு கீழே விழுந்து உடைந்தது. தன்னுடைய மகள் முதல்முறையாக தன்னிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வதை பொறுத்துக் கொள்ள முடியாத மங்கை, “இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் உனக்கு இன்னும் ரியாலிட்டி புரியலையா லக்ஷனா…??? சைல்ட்டிச்சா பிகேவ் பண்ணிட்டு இருக்க..??? ஆமா நீ சாப்பிடலைன்னா எனக்கு என்ன..?? உனக்கு தான் ஏதாவது ஆகும். நான் சொல்றத மட்டும் ஒழுங்கா கேட்டினா, நீயும் நல்லா இருப்ப. உன்னால நம்ம ஃபேமிலியும் நல்லா இருக்கும். நான் இவ்ளோ சொல்லியும், கேட்காம சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சேனா இப்படியே கட. செத்தா சாவு. இத்தனை வருஷம் உன்ன வளர்த்ததற்கு எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லைனா.. நீ இருந்தா என்ன..?? இல்லைன்னா என்ன..??? என்னமோ பண்ணி தொல.” என்று கோபமாக சொன்னவள், அங்கு இருந்து சென்று விட்டாள்.
மங்கை அங்கு இருந்து சென்றவுடன் ஆழ்ந்த மன வருத்தத்தில் இருந்த லக்ஷனா, அங்கு இருந்த அனைத்து பொருட்களையும் ஆத்திரத்தில் கீழே தள்ளி உடைத்து விட்டு கட்டிலில் சென்று படுத்து கொண்டு அழத் தொடங்கி விட்டாள். 😭 😭 😭
ஆனால் பிரவினோ இன்று தனக்கு நிச்சயதார்த்தம் இருக்கிறது என்று கூட கருத்தில் கொள்ளாமல் அவன் இன்று ஏதோ பெரிய சாதனையை செய்து விட்டது போல தன் நண்பர்களுடன் இணைந்து குடித்து அந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருந்தான். தான் திருமணம் கொள்ள ஒரு பெண் வேண்டும் அதனால் அவன் லக்ஷனாவை திருமணம் செய்து கொள்கிறானே தவிர அவளின் மீது அவனுக்கு எந்த தனிப்பட்ட பாசமோ, விருப்பமோ, இல்லை.
விஷ்வாவின் ரெசார்ட்டில்…
ஒரு வழியாக பார்மாலாக வருணையும், ரித்திகாவையும் , வைத்து போட்டோ எடுத்து முடித்தவுடன்; அனைவரும் காலை உணவு உண்பதற்காக சென்று விட்டனர். பின் அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன், அடுத்த போட்டோவிற்காக ரித்திகா வையும், வருணையும் , தனித்தனியாக அவர்களை தயார்படுத்துவதற்காக அழைத்து சென்று விட்டனர்.
ரித்திகாவின் அறையில் அவளுக்கான ப்ழு நிற சிண்டரெல்லா டிரஸ் ரெடியாக காத்து இருந்தது. அதை ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்து ரசித்த ரித்திகா அதை ஆசையாக தொட்டு தொட்டு பார்த்து ரசித்தாள். 😍 தன் மகளுடைய ஒவ்வொரு சிறிய கனவும் இன்று இந்த திருமணத்தினால் நிறைவேறுவதை கண்டு மனம் மகிழ்ந்தாள் ரேவதி. 😍
இந்தப் பக்கம் வருணின் அறையில் அவனுக்கென தயாராக இருந்த பிளாக் கோட் சூட் ஐ பார்த்து கடுப்பான வருண் விஷ்ணுவை முறைத்தவன், “என்ன எத்தனை டிரஸ் ஐ டா மாத்த சொல்லுவீங்க..?? அதான் அப்போ போட்டோ எடுத்தோம்ல அது பத்தாதா..??? இன்னும் எத்தனை போட்டோ எடுக்க போறீங்க..??? நான் அம்மாவுக்காக அமைதியா இருக்கேன்னு என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க.” என்று கடுப்பான குரலில சொன்னான்.
விஷ்ணு: “சும்மா அடிக்கடி இப்படி டென்ஷன் ஆகாதீங்க அண்ணா. அண்ணிய இப்போ சிண்டரெல்லா டிரஸ் போட்டுட்டு கூட்டிட்டு வருவாங்களாம். அப்போ நீங்களும் அவங்களுக்கு ஈக்குவலா பிரின்ஸ் சார்மிங் மாதிரி ஹேண்ட்சம் ஆ மாதிரி இருக்க வேண்டாமா..??? நீங்க ப்ராப்பரா ரெடி ஆகலைன்னா, அண்ணி சூப்பரா தெரியுவாங்க.. அப்புறம் நீங்க அவங்க கூட சுமாரா நிப்பீங்க பாத்துக்கோங்க.” என்று தன்னுடைய வாயை வைத்து கொண்டு தேவை இல்லாதது அனைத்தையும் கரெக்டாக சொன்னான்.
அவன் சொன்னதும் வருணிக்கு சரி என்று தான் பட்டது அது மட்டும் இன்றி அவனுக்கும் ரித்திகாவிற்கு ஏற்கனவே நிறைய வயது வித்தியாசம் இருக்கும் போது இப்படி ரித்திகாவின் முன் அவளை ஈர்க்க முடியாத ஆளாக அல்லது அவளுடன் தன்னை கம்பேர் செய்யுது பார்க்கும்போது தான் சற்று அழகு குறைந்த ஆளாக அவன் தெரிய விரும்பவில்லை. அதனால் வேறு வழி இன்றி போட்டோ சூட்டிற்காக மீண்டும் தயாரானான்.
இரண்டு மணி நேரத்திற்கு பின்….
போட்டோ சூட்டிற்காக கார்டனில் அமைக்கப்பட்டு இருந்த செட்டில் வெகு நேரமாக ரித்திகாவின் வருகைக்காக காத்திருந்தான் வருண். அவளுக்காக அவன் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளின் மீது அவனுக்கு கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 😒 அதனால் நிமிடத்திற்கு நான்கு முறை செண்பகத்திடம், “அம்மா இப்ப அவ வருவாளா இல்ல நான் போட்டுமா எனக்கு என்ன வேற வேலை வெட்டி இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா..???” என்று எரிச்சலுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.
செண்பகம்: கொஞ்சம் நேரம் அமைதியா இரேன் டா. சும்மா எப்ப வருவ எப்ப வருவான்னு கேட்டா.. நான் மட்டும் என்ன பண்றது..??? நானும் உன் கூட தானே இருக்கேன்.. எனக்கு மட்டும் என்ன தெரியும்..?? அவ வரும்போது வருவா. பசங்களுக்கு என்ன சும்மா எதாவது ஒரு பேண்ட் ஷர்ட் எடுத்து போட்டு உடனே ரெடியாயிருவீங்க. ஆனா பொண்ணுங்க அப்படியா..??
அதுவும் நம்ம ரித்திகாவுக்கு நீளமான முடி. அவளோட ஹேர் ஸ்டைல ரெடி பண்றதுக்கே ரொம்ப நேரம் ஆகும். சோ வெயிட் பண்ணு. எல்லாம் முடிஞ்ச உடனே பிரின்சஸ் மாதிரி என் மருமக வருவா.
இப்படி அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்க அங்கே வந்த விஷ்ணு, “அம்மா அண்ணி ரெடி ஆயிட்டாங்க. சீக்கிரம் வந்துருவாங்க. அந்த சின்ட்ரெல்லா டிரஸ்ல அவங்க ஒரிஜினல் சிண்டரெல்லாவை விட ரொம்ப அழகா இருக்காங்க. அண்ணா அவங்கள அப்படி பார்த்தா கண்டிப்பா பிளாட் ஆயிடுவாரு. அவ்ளோ க்யூட்டா இருக்காங்க.” என்று உற்சாகமான குரலில் சொன்னான். 😍 😁 😁 😁
செண்பகம்: “என் மருமக சினிமா ஹீரோயின் மாதிரி. அவளுக்கு எந்த மாதிரி டிரஸ் போட்டாலும் அவ ரொம்ப அழகா இருப்பா. எனக்கே அவள இப்போ அந்த டிரஸ்ல பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள். 😍
“இவங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்ல எதுக்கு அவளை இப்படி ரொம்ப பில்டப் பண்ணிட்டு இருக்காங்க..??? அவ என்ன இன்டர்நேஷனல் மாடலா அவளுக்கு எந்த டிரஸ் போட்டாலும் பர்ஃபெக்ட்டா செட் ஆக..??? அவளே ஒரு சாதாரண டீச்சர் அவளுக்கு இவ்ளோ பில்டப் தேவையா…??? அந்தப் பேரழகி வரட்டும். அவ எப்படி இருக்கான்னு நானும் பார்க்கிறேன்.” என்று நினைத்த வருண் முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் ஆர்வமாக ரித்திகாவின் வருகைக்காக காத்திருந்தான்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)