அத்தியாயம் 172
சித்தார்த்தையும், ஆருத்ராவையும் மைக்கேல் வீட்டிற்கு அழைத்து சென்றான். அவன் தன்னிடம் எரிந்து விழுந்ததால் மீரா அவனிடம் பேசுவதை தவிர்த்து விட்டு தனது வேலையை பார்ப்பதற்காக கிச்சனை நோக்கி செல்ல, அவளை திரும்பிப் பார்த்த மைக்கேல் “ஏய் மீரா நில்லு!” என்றான்.
அவன் தன் பெயரை சொன்னவுடன் சந்தோஷமாக அவனை நோக்கி திரும்பிய மீரா “சொல்லுங்க சார்!” என்று கேட்க, “தேன்மொழி வீட்டுக்கு வர லேட் ஆகும். அர்ஜுன் வருவானானே தெரியல. கிளாரா இங்க இருப்பா. இருந்தாலும் சித்தார்த்தையும் ஆருத்ராவையும் கொஞ்சம் பாத்துக்கோ. வீட்ல ஆளுங்க இல்லாத சமயத்துல அடிக்கடி என்னென்னமோ நடக்குது. நீ சமைக்கிற வேலை எல்லாம் பார்க்க வேண்டாம். நான் உங்க ஹெட் செஃப் கிட்ட சொல்லிக்கிறேன். நான் சொன்ன வேலையை மட்டும் செய்.” என்ற மைக்கேல் அவளது பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேக எட்டுக்கள் வைத்து தனது ரூமிற்கு செல்வதற்காக லிஃப்ட்டை நோக்கி சென்றான்.
வாடிய முகத்துடன் தலை குனிந்த மீரா “ஓஹோ இதுக்கு தான் கூப்பிட்டாரா? நான் கூட அப்போ அவர் என் கிட்ட ரூடா பேசினதுக்காக சாரி கேப்பாருன்னு நினைத்தேன். அவர் ஏன் அதெல்லாம் கேட்க போறாரு? அவர் சொன்ன மாதிரி நான் ஜஸ்ட் இந்த வீட்ல வேலை பாக்குற பொண்ணு. இன்னும் கரெக்டா சொல்லணும்னா வேலைக்காரி! அவ்ளோ தானே... அப்ப அவர் என் கிட்ட இந்த மாதிரி தான் பேசுவாரு. வேற என்ன எதிர்பார்க்க முடியும்? அவர் சொன்ன மாதிரி நம்ம வேலை என்னவோ அதை மட்டும் நம்ம பாத்துட்டு சைலன்ட்டா இருந்துட்டு போயிடலாம்.” என்று நினைத்து சித்தார்த் ஆருத்ரா இருவரும் என்ன செய்கிறார்கள் என பார்ப்பதற்காக சென்றாள்.
ஆபீஸில் இருந்த அர்ஜுனுக்கு நடந்த அனைத்தையும் பற்றி தகவல் சென்றது. உடனே செய்யும் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு பிரிட்டோ உடன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக ஹாஸ்பிடலை நோக்கி பறந்தான். அவனது இதயம் படபடவென்று வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. இன்று தான் தேன்மொழிக்கு எந்த ஆபத்தும் வராமல் இனி அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்து அதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்தான். இன்றைய நாள் முடிவிற்கு வரும் முன்னே, இப்படி ஒரு கெட்ட செய்தி தன் காதுகளை வந்தடையும் என அர்ஜுன் துளியும் எதிர்பார்த்து இருக்கவில்லை.
அர்ஜுன் நான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். பிரிட்டோ எவ்வளவு கேட்டும் அவன் அவனை கார் ஓட்ட விடவில்லை. அவனது முகம் இறுக்கமாக இருக்க, அவன் கண்கள் குலமாகி இருப்பதை கவனித்த ப்ரிட்டோ “ஏன் இப்படி அடம் பிடிக்கிறீங்க Chief? நீங்க ரொம்ப எமோஷனலா இருக்கீங்க. சென்னை மாதிரி டிராபிக் அதிகமாக இருக்கிற சிட்டில இப்படி ராஷ் டிரைவ் பண்ணிட்டு போறது யாருக்குமே நல்லது இல்ல. விடுங்க நானாவது ஓட்டுறேன்!” என்று கெஞ்சாத குறையாக கேட்டான்.
ஒரு கையால் தன் கண்கள் ஓரமாக துளிர்த்த நீரை தொலைத்த அர்ஜுன், “தேன்மொழிக்கும், குழந்தைக்கும் எதுவும் ஆகாதுல டா! நம்ம எவ்ளோ கேர்ஃபுல்லா இருந்தாலும் எங்க இருந்தாவது எவனாவது என் குடும்பத்தை கெடுக்கிறதுக்குன்னே எப்படித் தான் வராங்களோ தெரியல.” என்று உடைந்த குரலில் சொன்னான்.
“பயப்படாதீங்க chief. தேன்மொழிக்கு எதுவும் ஆகல. அதான் ஜானகி மேடம் அவங்க மேல கரண்ட் கம்பம் விழுகிறதுக்கு முன்னாடியே தேன்மொழி மேடம் ஐ காப்பாத்திட்டாங்க.. கடைசில அது அவங்க மேல விழுந்திருச்சின்னு சொன்னாங்களே.. இப்ப சோனியா மேடம் தான் எப்படி இருக்காங்கன்னு தெரியல.
தேன்மொழி அவங்களை அப்படி பார்த்த ஷாக்கில மயங்கி விழுந்து இருக்காங்க. பெருசா வேற எதுவும் நடந்திருக்காது. சுஷாந்த் சாருக்கும், சுனில் சாருக்கும் கூட இன்ஃபர்மேஷன் சொல்லியாச்சு. இப்ப அவங்க எல்லாரும் ஹாஸ்பிடல் தான் போயிட்டு இருப்பாங்க. நான் கூட இவங்க ஏதோ ப்ராப்ளம் பண்ண வந்துருக்காங்கன்னு நெனச்சேன் சீஃப்.
பட் இப்படி ஒரு எமர்ஜென்சி சுச்சுவேஷன்ல தேன்மொழியை சோனியா மேடமை காப்பாத்தினதை இன்னும் என்னால நம்பவே முடியல. ஒருவேளை அவங்க பாக்குறதுக்கு சியா மேடம் மாதிரி இருக்கறதுனால அந்த பாசத்துல இப்படி பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.” என்றான் பிரிட்டோ. அர்ஜுனிற்க்கும் அப்படித் தான் தோன்றியது.
வீட்டில் உள்ள அனைவரும் எங்கேயோ வெளியில் சென்று இருப்பதை உணர்ந்த ஆருத்ரா மீராவிடம் “நீங்க குக்கிங் பண்ண போகலையா ஆன்ட்டி? கிளாரா ஆன்ட்டி மட்டும்தான் வீட்ல இருக்காங்க. மத்தவங்க எல்லாரும் எங்க? ஜனனி அத்தை கூட வீட்ல இருக்காங்களா இல்லையான்னு தெரியல. அவங்க ரூம் டோர் ரொம்ப நேரமா லாக்கில இருக்கு.” என்று கேட்க,
“எனக்கே என்ன நடக்குதுன்னு ஒன்னும் தெரியல. இதுல நான் உன் கிட்ட என்னமா சொல்றது?” என்று நினைத்த மீரா “நான் ஜஸ்ட் இங்க குக் மட்டும் தானே மா… என் கிட்ட வெளிய போறவங்க எங்க போறாங்கன்னு சொல்லிட்டா போவாங்க? நானும் உங்க கூட தானே வெளிய வந்தேன்.. நாம திரும்ப வரும்போதே இங்க யாரும் இல்ல. உங்களுக்கு ஏதாவது டவுட்டுண்ணா அர்ஜுன் சாருக்கு கால் பண்ணி கேளுங்க.” என்றாள்.
அப்போது அந்த ரூமிற்குள் நுழைந்த சித்தார்த் “நான் கால் பண்ணி பாத்துட்டேன். டாடி காலை அட்டென்ட் பண்ண மாட்டேங்குறாரு. ஐ திங்க் இங்க ஏதோ தப்பா நடக்குது. எல்லாரும் சேர்ந்து எங்க கிட்ட இருந்து எதையோ மறைக்கிறீங்க. நீங்களும் சேர்ந்து அதை பண்றீங்களா இல்ல உங்களுக்கும் எதுவும் தெரியவில்லையான்னு தான் எனக்கு தெரியல.” என்றான்.
அப்பாவியாக அவனைப் பார்த்த மீரா “நெஜமாவே எனக்கு எதுவும் தெரியாது.” என்று சோகமாக சொல்ல, தனது கருப்பு நிற யூனிஃபார்மிற்க்கு மாறி இருந்த கிளாரா துப்பாக்கியை இடுப்பில் சொருகிய படி அவர்களது அவர்களது ரூமிற்குள் நுழைந்தாள். அவளை சந்தேக பார்வை பார்த்த சித்தார்த் “வீட்ல இருக்கும்போது நீங்க இருக்க ஆண்ட்டி யூனிபார்ம் போட்டு இருக்கீங்க?” என்று கேட்க,
“எப்போ திடீர்னு வெளிய கிளம்பி போக வேண்டிய சிச்சுவேஷன் வரும்னு தெரியாதுல சித்தார்த்.. அதான் யூனிஃபார்ம்ல ரெடியா இருக்கேன். நீங்க பார்க்கில இருந்து பாதியிலயே வந்துட்டீங்க இல்ல.. சோ டிசப்பாய்ன்டெட்டா இருப்பீங்க! சோ உங்களுக்கு ஓகேன்னா நம்ம எல்லாரும் சேர்ந்து கார்டன் ஏரியால விளையாடலாமான்னு கேக்குறதுக்கு தான் வந்தேன்.” என்றாள் கிளாரா.
தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு அவளை குறுகுறுவென்று பார்த்த சித்தார்த் “ம்ம்.. நல்லா சமாளிக்கிறீங்க ஆன்ட்டி. டாடி வரட்டும், இங்க என்ன நடக்குதுன்னு நான் அவர் கிட்டயே கேட்டுக்குறேன். வெளிய போனவங்க வீட்டுக்கு வர வரைக்கும் நம்ம கார்டன் ஏரியாலயே இருக்கலாம். எனக்கு ரூம்குள்ளயே இருக்க ஸ்ட்ரெஸ் ஆகுது.” என்றான்.
உடனே எழுந்து அவன் அருகில் சென்ற ஆருத்ரா சித்தார்த்தின் கையை பிடித்துக் கொண்டு “நீ ஏன் இப்படி பேசுற? உனக்கும் ஏதோ ப்ராப்ளம்னு தோணுதா?” என்று கேட்க, ஆமாம் என்று தலையாட்டிய சித்தார்த் அவள் கையை பிடித்துக் கொண்டு “நம்ம வீட்ல பிராப்ளம் எதுவும் வரலைனா தான் நீ ஷாக் ஆகணும். அடிக்கடி ஏதாவது நடந்துக்கிட்டே தான் இருக்கு! But you don’t worry ருத்ரா! நான் உன் கூட இருக்கேன். உன்ன பத்திரமா பாத்துக்கறேன் ஓகேவா?”
என்று அன்புடன் கேட்டான்.
ஹாஸ்பிடலில் விஐபி வார்டில் அவசர சிகிச்சை பிரிவில் சோனியாவிற்கு ஒரு பக்கம் டிரீட்மென்ட் சென்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மகளிர் மற்றும் மகப்பேறு பிரிவில் மயக்கமாக இருந்த தேன்மொழியை டாக்டர்கள் சோதித்து கொண்டிருந்தார்கள். அந்த ட்ரீட்மென்ட் முடிவதற்கு முன்பாகவே தேன்மொழிக்கு மயக்கம் தெளிந்தது.
பதட்டத்துடன் இருந்த தேன்மொழி தன்னைக் காப்பாற்றுவதற்காக உயிரை பனையம் வைத்த சோனியாவிற்கு என்ன ஆனது என பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் “என்ன விடுங்க டாக்டர். இது எல்லாத்தையும் ரிமூவ் பண்ணுங்க. நான் இப்பவே போகணும். என் கூட வந்தவர்களுக்கு என்ன ஆச்சுன்னு நான் பாக்கணும்.” என்று அடம் பிடித்தாள்.
“அவங்களுக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு மிஸ்ஸஸ் அர்ஜுன். நீங்களும் இப்ப ட்ரீட்மென்ட்ல தான் இருக்கீங்க. பிரக்னண்டா இருக்கிற டைம்ல இப்படி அடிக்கடி ஷாக் ஆகிறது உங்க ஹெல்த்துக்கு நல்லதில்ல.
ஆல்ரெடி இந்த மாதிரி நீங்க ஒரு தடவை மயக்கம் போட்டு விழுந்து இருக்கீங்கன்னு உங்களோட மதர் இன்லா சொன்னாங்க. சோ உங்க பேபியோட கிரௌத் எப்படி இருக்குன்னு ஸ்கேன் பண்றதுக்கு இப்ப தான் நாங்க ரெடி பண்ணிட்டு இருக்கோம். ரிசல்ட் வர வரைக்கும் நீங்க இங்க இருந்து நகரவே கூடாது. அது உங்களுக்கும் உங்க வயித்துல வளர குழந்தைக்கு நல்லதே இல்ல.” என்று சொல்லி டாக்டர் அவளை செல்ல விடாமல் தடுத்து விட்டாள்.
இருப்பினும் நடந்ததை நினைத்து தேன்மொழி சோகத்தில் அழுது கொண்டே இருந்ததால், டாக்டரின் பேச்சையும் கேட்காமல் இப்படி குழந்தையின் உயிரை இவள் பிரச்சனைக்கு உள்ளாக்குகிறாளே என நினைத்து பயந்த டாக்டர் அந்த அறையில் இருந்து வெளியே வந்து அங்கே நின்று கொண்டு இருந்த ஜானகி மற்றும் விஜயாவை பார்த்து “பேஷன்ட் ட்ரீட்மென்ட்க்கு கோ ஆபரேட் பண்ணவே மாட்டேங்கிறாங்க மேடம். சொல்ல சொல்ல கேட்காம நடந்ததை நினைத்து அழுதுட்டே இருக்காங்க. இப்படியே போனா அவங்களோட பிளட் பிரஷர் ரைஸ் ஆகிடும். குழந்தை கிரிட்டிக்கல் ஸ்டேஜ்க்கு போயிட்டா காப்பாத்துறதுக்கு கஷ்டமாயிடும். நீங்க யாராவது உள்ள போய் அவங்க கிட்ட பேசி அவங்கள கொஞ்சம் சமாதானப்படுத்த பாருங்க.” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்போது பிரிட்டோவுடன் அங்கே ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்த அர்ஜுன் டாக்டர் பேசியதை கேட்டுவிட்டு “நான் போய் பேசுறேன் டாக்டர்.” என்றான். அவன் குரல் கேட்டு அனைவரும் அவன் பக்கம் திரும்பி பார்க்க, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தேன்மொழி அட்மிட் செய்யப்பட்டு இருந்த ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் அர்ஜூன்.
அவனை பார்த்தவுடன் கண்ணீருடன் தேன்மொழி எழுந்து நிற்க முயற்சி செய்ய, அவசரமாக அவள் அருகில் சென்ற அர்ஜுன் “வேண்டாம் எந்திரிக்காத.” என்று சொல்லி அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். தானும் அவன் மார்பில் முகம் புதைத்து அவனை கட்டி அணைத்து கண்ணீர் சிந்திய தேன்மொழி “நமக்கு மட்டும் ஏன் அர்ஜூன் இப்படி எல்லாம் நடக்குது?” என்று உடைந்த குரலில் கேட்டாள்.
அதே கேள்வி தான் அவன் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அர்ஜுன் இருக்கமான முகத்துடன் அவள் முன்னே தானும் உடைந்து விடக் கூடாது என்பதற்காக கண்கள் வரை வந்த கண்ணீரை சிரமப்பட்டு இழுத்து பிடித்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)